பலா பட்டறை: நன்றிக் காய்ச்சல்..!

நன்றிக் காய்ச்சல்..!

. 

மறித்தெழும் காதல்

ஏதும் செய்ய இயலாதவற்றில்
என் குழந்தையின்
பெயரைக் கேட்ட
முன்னாள் காதலியோடான சந்திப்பும்

நன்றி - மணிஜீ


காமம்

ப்ரயாணங்களின் தனிமையில்
தவளையான மனதின் குரல்கள்
அரவம் வாய் தேடி அலைகிற
ஊஞ்சல்..

நன்றி- கேபிள்ஜிகாற்றடைத்த பைகளில் 

இரண்டையும் வெளிக்காட்டவும்
இரண்டாகவும் இருக்கவும்
ஒன்றை மறைத்து ஒன்றை ஓங்கி
உணர்ந்து இருவேறாகவே நிகழ்வினும்
தன்னுள் தான் புணர்ந்து
தன் இருப்பை பெருக்குவது
ஆன்மாவா? காமமா?

- நன்றி தேவா.கத்தியோடிருங்கள்..

குறிப்புகளெடுக்க முடியாத
தருணங்களில் சட்டெனத் தோன்றும்
கவிதை என்ன யோசித்தும்
நினைவில் வர மறுக்கிறது..
ஆகச்சிறந்த கவிதை
அதுவாகவுமிருந்திருக்கலாம்..

அதன்பின்னே என்னுள்
இருக்கும் கவிஞனை
நானோ, நீங்களோ
கொலை செய்திருக்கவும்
கூடிய வாய்ப்பொன்று
வீணாய்ப் போனது..

நன்றி - சுரேகா


*******


அன்பு நண்பர் சக (பிரபலம் அல்லது பிரபலமில்லாத) பதிவர் ஒரு அற்புதமான மின் நூலை தனது ஒரு இடுகை மூலமாக வெளியிட்டிருந்தார். வியாபார நோக்கமில்லாத எந்த இடத்திலும் யார் வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என் பெயரைக் கூட குறிப்பிடத் தேவையில்லை என்ற ஒரு முன்னுரையோடு!!. 

அனிமேஷன் படங்கள், அதனை தயாரிக்கத் தேவைப்படும் உழைப்பு, புருவம் உயர்த்தி ’வாவ்’ என்று பார்வையாளனை சொல்லவைப்பதின் பின்னால் உள்ள வலிகள்,வியாபாரம் என விரியும் இந்த பிக்ஸார் ஸ்டோரி மின் நூலை இந்த சுட்டியிலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்து படித்து ஷேர் / ரீ ஷேர் செய்யலாம். நான் பெருமையாய் நினைக்கும்/கற்கும் நட்புகளில் ஹாலிவுட் பாலாவும் ஒருவர்.

ஒரு புத்தக வெளியீடு என்பது எப்படி இருக்கவேண்டும் என்ற சூத்திரங்கள்  தயாரிக்கப்படும்/எள்ளப்படும்/திணிக்கப்படும் வேளையில், நிற்க வைத்து நெற்றியில் ஆணி அடித்த வார்த்தைகள் ..

எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கேயே திரும்ப வைக்கப்படுகிறது,
மிகுந்த மன நிறைவுடன்!!


நன்றி பாலா! 
   


.

39 comments: