பலா பட்டறை: நன்றிக் காய்ச்சல்..!

நன்றிக் காய்ச்சல்..!

. 

மறித்தெழும் காதல்

ஏதும் செய்ய இயலாதவற்றில்
என் குழந்தையின்
பெயரைக் கேட்ட
முன்னாள் காதலியோடான சந்திப்பும்

நன்றி - மணிஜீ


காமம்

ப்ரயாணங்களின் தனிமையில்
தவளையான மனதின் குரல்கள்
அரவம் வாய் தேடி அலைகிற
ஊஞ்சல்..

நன்றி- கேபிள்ஜி



காற்றடைத்த பைகளில் 

இரண்டையும் வெளிக்காட்டவும்
இரண்டாகவும் இருக்கவும்
ஒன்றை மறைத்து ஒன்றை ஓங்கி
உணர்ந்து இருவேறாகவே நிகழ்வினும்
தன்னுள் தான் புணர்ந்து
தன் இருப்பை பெருக்குவது
ஆன்மாவா? காமமா?

- நன்றி தேவா.



கத்தியோடிருங்கள்..

குறிப்புகளெடுக்க முடியாத
தருணங்களில் சட்டெனத் தோன்றும்
கவிதை என்ன யோசித்தும்
நினைவில் வர மறுக்கிறது..
ஆகச்சிறந்த கவிதை
அதுவாகவுமிருந்திருக்கலாம்..

அதன்பின்னே என்னுள்
இருக்கும் கவிஞனை
நானோ, நீங்களோ
கொலை செய்திருக்கவும்
கூடிய வாய்ப்பொன்று
வீணாய்ப் போனது..

நன்றி - சுரேகா


*******


அன்பு நண்பர் சக (பிரபலம் அல்லது பிரபலமில்லாத) பதிவர் ஒரு அற்புதமான மின் நூலை தனது ஒரு இடுகை மூலமாக வெளியிட்டிருந்தார். வியாபார நோக்கமில்லாத எந்த இடத்திலும் யார் வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என் பெயரைக் கூட குறிப்பிடத் தேவையில்லை என்ற ஒரு முன்னுரையோடு!!. 

அனிமேஷன் படங்கள், அதனை தயாரிக்கத் தேவைப்படும் உழைப்பு, புருவம் உயர்த்தி ’வாவ்’ என்று பார்வையாளனை சொல்லவைப்பதின் பின்னால் உள்ள வலிகள்,வியாபாரம் என விரியும் இந்த பிக்ஸார் ஸ்டோரி மின் நூலை இந்த சுட்டியிலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்து படித்து ஷேர் / ரீ ஷேர் செய்யலாம். நான் பெருமையாய் நினைக்கும்/கற்கும் நட்புகளில் ஹாலிவுட் பாலாவும் ஒருவர்.

ஒரு புத்தக வெளியீடு என்பது எப்படி இருக்கவேண்டும் என்ற சூத்திரங்கள்  தயாரிக்கப்படும்/எள்ளப்படும்/திணிக்கப்படும் வேளையில், நிற்க வைத்து நெற்றியில் ஆணி அடித்த வார்த்தைகள் ..

எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கேயே திரும்ப வைக்கப்படுகிறது,
மிகுந்த மன நிறைவுடன்!!


நன்றி பாலா! 
   


.

38 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமை ....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமை ....

ஸ்வாமி ஓம்கார் said...

தல...தலைப்பு பிடிச்சுருக்கு :)

நட்புடன் ஜமால் said...

அழகான நன்றிகள்

நல்ல பகிர்வு ஷங்கர்-ஜி

dheva said...

ரொம்ம அருமையா இருக்கு சங்கர்.

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் பாலா....

பாலா said...

இப்படியெல்லாம் சொன்னா மட்டும்.. கவிதை எழுதறதை ஒப்புக்குவேன்னு நினைச்சீங்களா??

நோ வே ஹுஸெ!! :)

--

நன்றி பலா.

பாலா said...

தேங்க்ஸ் சங்கவி.

(இப்படி யாருனா பொண்ணுங்க பேர்ல நமக்கு கமெண்ட் போட்டாதான் உண்டு :( :) )

Paleo God said...

@ புதிய மனிதா : வாங்க. மிக்க நன்றி!

@ ஸ்வாமி ஓம்கார்: சாரி சாமி. அதுக்கு நன்றி கவுண்டமணி அப்படின்னு போட்டிருக்கனும். விட்டுப் போச்சு. :)

@ ஜமால்: நன்றி ஜமால் சாப்.:)

@ தேவா: நன்றிங்க தேவா. :)

@ சங்கவி: நன்றிங்க சங்கவி.

@ ஹாலி : நீங்க எழுதுங்க தல நான் நிறுத்திடறேன்.:)

பின்னோக்கி said...

நல்ல கவிதைகளின் தொகுப்பு.

ஹாலி..பாலி படிச்சுட்டேன். சூப்பர். அவரோட திறமை அவருக்கு மட்டும் தெரிய மாட்டேங்குது. மற்ற அனைவருக்கும் தெரிகிறது :)

க ரா said...

நான் ஒன்னு முடிவு பன்னிட்டேங்க.. எழுதறத நிப்பாடிருலாம்னு.. உங்க எழுத்துக்கெல்லாம் நான் செய்ற நியாயம் இதாதான் இருக்க முடியும் ...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படிக்கு
எப்பவும் பொய்யை மெய்யாக சொல்லும்
இராமசாமி கண்ணண்...

என்னைய ரொம்ப பீல் பண்ண வெச்சுட்டீங்க பலா.. கவிதைகள் அனைத்தும் அருமை :)

ருத்ர வீணை® said...

இந்த காய்ச்சலுக்கு சூடு கொஞம் அதிகமோ ?!!!

அருமை ..

பாலா said...

//சங்கவி said...
கலக்கல் பாலா...//

ஏங்க ஒருவேளை.. இவர் ‘கலக்கல் பலா’-ன்னு அடிக்கறதுக்கு பதிலா தப்பா அடிச்சிட்டாரோ?

Paleo God said...

@ பின்னோக்கி : பாலாவப் பத்தி சரியாக சொல்லிட்டீங்க.

@இராமசாமி : வடபோச்சே! :)

@ருத்ரவீணை: நன்றிங்கோ :)

@ஹாலி : பின்னோக்கி சொல்லி இருப்பதைப் படிக்கவும். ஆணி இல்லை என்றால் உருப்படியாக எழுதவும். (கவிதைதான்!) :)

ஜில்தண்ணி said...

/// பிக்ஸார் ஸ்டோரி ///

இந்த கதைய தரவிறக்கிவிட்டேன்,படிக்கனும் :)

@ஹாலி பாலி

//// இப்படி யாருனா பொண்ணுங்க பேர்ல நமக்கு கமெண்ட் போட்டாதான் உண்டு ////

உங்க ரசிகைகள் சுவேதா கண்ணும்,உஜிலாவுக்கு இருக்குறப்ப ஏன் கவலை படுறீங்க :)

((குறிப்புகள் பகிர்ந்தமைக்கு நன்றி))

பாலா said...

//ஆணி இல்லை என்றால் உருப்படியாக எழுதவும்//

இதுக்கு என்னை..............


[[ நான் மறுபடி கோவிச்சிகிட்டு ஒரு வாரம் இந்த பதிவுலகை விட்டு வெளியேறுகிறேன். நிறைய படிக்கணும்]]

பாலா said...

//உங்க ரசிகைகள் சுவேதா கண்ணும்,உஜிலாவுக்கு இருக்குறப்ப ஏன் கவலை படுறீங்க :)
//

இதுல எங்கிங்க உஜிலா வந்துச்சி? ;)

பாலா said...

ஸாரி.. இந்த முறை நிச்சயம் வெளியேறுகிறேன்.

ஜில்தண்ணி said...

@@@ ஹாலிவுட் பாலா said...

/// இதுல எங்கிங்க உஜிலா வந்துச்சி? ;) ///

நீங்க இருக்கீங்களேன்னு குறிப்புகள் பகிர வந்தாலும் வருவாங்களோன்னு சொன்னேன் :)

Paleo God said...

//நான் மறுபடி கோவிச்சிகிட்டு ஒரு வாரம் இந்த பதிவுலகை விட்டு வெளியேறுகிறேன். நிறைய படிக்கணும்//

ஐயோ நான் உங்கள கவிதைதானே எழுதச் சொன்னேன். :))

--

ஸாரி.. இந்த முறை நிச்சயம் வெளியேறுகிறேன்//

இதெல்லாம் ஓவரு..! :)

பாலா said...

இப்படியே கும்மியடிச்சிகிட்டு இருந்தா நீங்க ஜோதிஜி ஏரியா கேட்ட மாறி

FX முட்டை முட்டையிலேயே நிக்க வேண்டியதுதான்!! :)

ஒழுங்கா.. நீங்களும் ஒரு வாரத்துக்கு பதிவு போடாதீங்க.

ஆக்சுவலி.. நான் ஃபாலோ பண்ணுற யாரும் ஒரு வாரத்துக்கு பதிவு போடக் கூடாது.

க ரா said...

ஹாலிவுட் பாலா said...

இப்படியே கும்மியடிச்சிகிட்டு இருந்தா நீங்க ஜோதிஜி ஏரியா கேட்ட மாறி

FX முட்டை முட்டையிலேயே நிக்க வேண்டியதுதான்!! :)

ஒழுங்கா.. நீங்களும் ஒரு வாரத்துக்கு பதிவு போடாதீங்க.

ஆக்சுவலி.. நான் ஃபாலோ பண்ணுற யாரும் ஒரு வாரத்துக்கு பதிவு போடக் கூடாது.
---
அப்படின்னா நான் இப்ப எழுதிட்டுர் இருக்கற வடை கொத்தி பறவைன்ற கவிதைய என்ன செய்ய :)

Paleo God said...

//ஒழுங்கா.. நீங்களும் ஒரு வாரத்துக்கு பதிவு போடாதீங்க.

ஆக்சுவலி.. நான் ஃபாலோ பண்ணுற யாரும் ஒரு வாரத்துக்கு பதிவு போடக் கூடாது//

ரைட்டு தல! (நற நற) :))

Paleo God said...

@ஜில் யோகேஷ் : சூப்பர். படிச்சிடு சொல்லுங்க.

@இராமசாமி: ஏங்க நாந்தான் ஒரு அல்டிமேட் லின்க் கொடுத்தேனே? இதுதான் உங்க டக்கா? எழுதிட்டு இத நான் எழுதலன்னு சொல்லி மொத வட வழக்கம் போல சாப்ட்டுடுங்க. பாலாக்கு புரியாது! :)

மரா said...

பதிவு சூப்பர் ஷங்கர்..நன்றி.

மரா said...

@ hollywood bala
// ஆக்சுவலி.. நான் ஃபாலோ பண்ணுற யாரும் ஒரு வாரத்துக்கு பதிவு போடக் கூடாது.
---//

சரிங்....ஒரு வாரம் பதிவு போடலீங்..

மதுரை சரவணன் said...

அருமையான கவிதைகளின் தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

vasu balaji said...

கவுஜல்லாம் சூப்பர். ஒய் பதிவர்? பிரில.:))

கலகலப்ரியா said...

எல்லாரும் சொல்ல வேண்டியதெல்லாம் சொன்னா நான் என்ன சொல்றது....

ஜோரா இருக்குதுங்கோ... ம்க்கும்..

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வுகள் ஷங்கர்.

ஜோதிஜி said...

ஆக்சுவலி.. நான் ஃபாலோ பண்ணுற யாரும் ஒரு வாரத்துக்கு பதிவு போடக் கூடாது.


ha ha ha. Thanks to NHM

Paleo God said...

@ மரா : நன்றி சாமி! :)
@ மதுரை சரவணன் : நன்றிங்க நண்பரே :)
@ வானம்பாடிகள் : சார், ஒரு நாள் சந்திப்பில் பகிர்ந்த, படித்த விஷயங்களின் பாதிப்பில் எழுதியது. அதனால அவர்களுக்கு நன்றி. :))
@ கலகலப்ரியா: நன்றிங்க ஜி :)
@ பா.ராஜாராம்: நன்றிண்ணே.
@ ஜோதிஜி: எ.கொ. பாருங்க ஜோ? :)

Unknown said...

அங்க போய் படிச்சுட்டு வர்றேன் ...

'பரிவை' சே.குமார் said...

அழகான நன்றிகள்

நல்ல பகிர்வு ஷங்கர்-ஜி .

Anisha Yunus said...

ஷங்கர்ண்ணா...நீங்களே சொன்னப்புறம் மறுப்பேது? கண்டிப்பா படிச்சிட்டு சொல்றேன். மற்றபடி உங்கள் ஊர், பிள்ளைகள் எல்லாம் நலமா?

சாமக்கோடங்கி said...

ரசிக்க வைத்த கவிதைகள்... நன்றி ஷங்கர் அண்ணே..

ஜோதிஜி said...

தலயை கண்டு பிடித்து கடத்தவும்.

காத்துருக்கேன்.

Paleo God said...

@கே.ஆர்.பி செந்தில் - நன்றிங்க. ;)

@சே.குமார் - நன்றிங்க குமார்.:)

@ அன்னு - எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா. :)

@ பிரகாஷ் - நன்றி பிரகாஷ்.:)

@ ஜோ - அவரா வந்தாத்தான் உண்டு :(