பலா பட்டறை: தெய்வம் (சவால் சிறுகதை) III

தெய்வம் (சவால் சிறுகதை) III

கோவில் கட்டி கும்பாபிஷகத்துக்கு தேதி குறிச்சாச்சு இப்பப் போய் இப்படி ஆயிடுச்சே?”

”அதான்டா மாப்ள எனக்கும் கவலையா இருக்கு. தலைவராண்ட போவோம். அந்தாளு எதுனா விவரமா சொல்லுவாப்ல.””

--

யேய் கூச்சல் போடாதீங்கப்பா. ”

”என்னா தலைவரே, தொண்ட தண்ணி வத்தக் கத்தறோம், எங்க உரிமைய நசுக்கறீங்களே?”

”எலேய் யார்ரா இவன்? விட்டா தீக்குளிப்பயாட்டம் பேசறவன்!. ”

”ஏன் குளிக்கனுமா? சொல்லுங்க, அதையும் செஞ்சிடலாம். கோவில் கட்டி நாள் குறிச்சாச்சு. இப்பப் போய் இப்படி நடந்திருச்சுன்னு அவனவன் பொங்கிட்டிருக்கோம். மானம் போவுது. எதுனா செய்யுங்க. ”

”அட இருங்கப்பா என்னைய பேசவே விடாம.. நானும் மூத்த குழுவினரும் இன்னைக்கு  ராத்திரியே ட்ரெயின்லயே மெட்ராஸ் போறோம். நாளைக்கே கோட்டைல முதலமைச்சர சந்திக்கறதா ஏற்பாடு. ஏற்கனவே கலெக்டர் வரைக்கும் போய் தகவல் சொல்லியாச்சு. நாம மட்டும் இல்லைய்யா எல்லா மாவட்ட முண்ணணி தலைவர்கள், முக்கிய புள்ளிங்கல்லாம் வர்றாங்க. எலெக்‌ஷன் நேரம். கோவில் திறப்பு விழாவுக்கு எந்தப் பாதகமும் வராது. நாளைக்கு சந்திப்பு அடுத்த வாரம் கும்பாபிஷேகம். சந்தோஷம்தானே.”

தலைவரே” தூரத்திலிருந்து வந்த குரலைக்கேட்டு தலைவர் திரும்பினார். 

”என்னாப்பா? ”

”மெயின் ரோட்ல கலவரம் ஆரம்பிச்சிடுச்சய்யா? எம்.பி போன் பண்ணினாரு. வீட்டம்மா சொல்லிவிட்டாங்க. எஸ்பி வந்து வெயிட் பண்றாராம். உங்களப் பார்க்கனுமாம்.”

”தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். ஹும் சரி அதுவும் ஒரு வகையில நல்லதுதான். இனி தமிழ் நாட்டுக்கே நம்ம கோவில் பிரபலமாயிடும். ”

”ஆனது ஆச்சி. தலைவரே மத்த ஏரியாவுலயும் சொல்லி ரோட்டுல மரத்தையெல்லாம் வெட்டி போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் சொல்லுங்க. நாமளும் நம்ம பலத்தக் காட்டுவோம்.”

”ஏய் அவசரப்படாதீங்கப்பா நாளைக்கு கோட்டைக்குப் போறோம். விஷயம் பெரிசாச்சுன்னா அங்க உங்க தாத்தனா பதில் சொல்வான்.”

--

லைவர் வீட்டுக்குள் நுழைந்தபோது எஸ்பி ஊஞ்சலில் உட்கார்ந்து மோர் குடித்துக் கொண்டிருந்தார். 

”வணக்கம் எஸ்பி சார்.”

”வணக்கமெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமா? ஏன் இப்படி பப்ளிக்க டிஸ்ட்ரப் பண்றீங்க. அதான் நாளைக்கு முதல்வரப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாச்சே. இன்னும் என்ன சாலை மறியல் வெங்காயம். மொதல்ல அதெல்லாம் நிருத்தச் சொல்லுங்க.”

”சார் அதெல்லாம் நானா ஏற்பாடு பன்றேன். பக்தர்கள் கோவம். நானென்ன செய்யமுடியும்? சொல்லுங்க.”

”என்னது பக்தர்களா? வெளங்கிரும். யாருங்க பக்தன்? ரோட்ல மரம் வெட்டிப் போடறவனா? சரி விடுங்க. கோவில் இந்தூர்லதான் இருக்கு. நீங்கதான் தலைவர். முக்கிய மையமான இங்கேர்ந்து ஒரு அறிவிப்பு செஞ்சா அது பிரச்சனைய தணிக்கும். அட்லீஸ்ட் நாளைக்கு சிஎம் மை சந்திக்கிற வரைக்கும். புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன். ”

”சரிங்க சார். நானும் சொல்றேன். ஆனா இப்ப டைம் கம்மி. நைட்டே மெட்ராஸ் போறதுனால போன்லதான் பேசமுடியும். ”

”என்னமோ பண்ணுங்க. நான் வர்றேன். ”

--

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) "காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.

முகத்தில் சலனம் ஏதுமின்றிப் பார்த்தார் முதல்வர். 

இண்டர்காம் ஒலித்தது. ”சொல்லுங்க.”

“ அய்யா அந்த கோவில் பார்ட்டிங்க வந்திருக்காங்க.”

’வரச்சொல்லுங்க ”

வணக்கம்” என்ற கோரஸ், பழகிவிட்டிருந்த முதல்வர். ’மாண்புமிகு முதல்வருக்குக் கோரிக்கை’ என்ற காகிதத்தை காண்பித்து இந்த மூணும்தானே எடுக்கனும். 

”ஆமாங்கய்யா.”

“ இதுல என்னய்யா ப்ரச்சனை. ”

”அது ரொம்ப நெகட்டிவா இருக்குன்னு ஃபீல் பண்றோமுங்க.”

”சரி பண்ணிடலாம். எலெக்‌ஷன் வருது நல்லாட்சி தொடரனும். ஞாபகம் இருக்கில்ல.”

“ ஐய்யா நம்ம கட்சி தவிர யார் நின்னாலும் டெப்பாசிட் கிடைக்காதுங்க. அட அதுவும் நம்மூர்ல  நம்ம கட்சிக்கு ஒரு ரெக்கார்டுங்க உங்களுக்குத் தெரியாததா. ”
 
”நான் மாநிலம் முழுசுமாச் சொன்னேன்யா. இப்பத்தான் ஸ்ட்ராங்கா ஆயிட்டு வர்றீங்களே.  எதுனா கட்சி கொடின்னு திட்டமிருக்கா? ”

”அய்யோ என்னாத் தலைவரே இது?. வேணுமின்னா வெளில போய் டெல்லிக்கார நியூஸ் அம்மணிகிட்ட நிரந்தர முதல்வருக்கு நன்றின்னு சொல்லிடறோமுங்க.” 

”ஹா ஹா” என்ற முதல்வரின் சிரிப்பு அங்கு மாட்டப் பட்டிருந்த தேசப்பிதாவரைக்கும்  எதிரொலித்தது.

--

த்யம் தியேட்டரின் எதிரில் இருந்த கடையில் மசாலா சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் சிவாவும், பரந்தாமனும். சுண்டலின் சூடா, காரமா தெரியவில்லை. இரண்டு பேர் கண்களிலும் நீர் வந்து கொண்டிருந்தது. 

”ஒம்போது வருஷம் கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைச்சிருச்சின்னு நினெச்சேன். ப்ச் நமக்கு ராசியே இல்லையேப்பா. கடைசி வரைக்கும் சுண்டல் சாப்பிட்டே வாழ்க்கை முடிஞ்சிடும் போல இருக்கே.” 

”விடுங்கண்ணே அதான் அடுத்த படத்துல பார்த்துக்கலாம்னு டைரக்டர் சொல்லிட்டாரே. கண்டிப்பா செய்வாரு. ”

”டேய் சிவா அதில்லடா, படம் கிடைக்கறதில்ல பெரிசு. இந்த மாதிரி காண்ட்ரவர்ஸி ஆகிற படத்துல நம்ம சீன் பேசப்பட்டுச்சின்னா மக்கள்ட ரீச் ஆகிடுவோம். ஜெயிச்சிடலாம். அந்த சான்ஸ் போச்சி. எப்படி சிரிக்கிறா பார் என் வயிறு எரியிது.” என்று அவர் பார்த்த இடத்தில் காமினியின் பெரிய ப்ளக்ஸ் பேனர் ஜொலித்துக் கொண்டிருந்தது.

--

டிகை காமினியின் சிறப்புப் பேட்டி. Xகுளூசிவ். என்று சிமிட்டிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை சூழ்ந்து ஒரு பெரிய கும்பலே மவுண்ட்ரோட் விஜிபி முன்னால் நின்றிருந்தது.

"மிஸ் காமினி"

"சொல்லுங்க"

"தமிழ் நாட்ல ரசிகர்கள் உங்களுக்காக கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப் போறாங்க. உங்க லேட்டஸ்ட் ஹிட் படத்துல மூணு காட்சில நீங்க சோகமா இருக்கறதப் பார்த்து முதல்வர் வரைக்கும் போய் நீக்கி இருக்காங்க. அது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"


"என்னை வாழ வைக்கும் தமிழ் ரசிகர்களுக்கு என் நன்றி."




.(!)(!).

23 comments:

thiyaa said...

ம்உங்களின் ஆசை நிறைவேறட்டும்

Vidhoosh said...

ஸ்ஸ்ஸ்... இந்த அடி அடிச்சா... நேத்து சாப்ட்ட எலுமிச்சை சாதம் கூட வெளியே வந்துரும்..

ஹுஸைனம்மா said...

எப்படிங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க? அவனவன் மூளையை கசக்கி கிரைம் யோசிச்சா, நீங்க நோகாம இப்படி அள்ளுறீங்க?

பின்னோக்கி said...

இதுக்கு யார குறை சொல்றது. போட்டி அறிவிச்ச பரிசலையா ?. இத எல்லாம் எதிர்பார்த்தாரான்னு தெரியலை... :).

சும்மா...ஷங்கர். கதை அருவி மாதிரி கொட்டுது உங்களுக்கு. பொறாமைகள் :)

Madhav said...

Nice story. As of me this is the good one among all 'saval' stories.

R. Gopi said...

\\உங்க லேட்டஸ்ட் ஹிட் படத்துல மூணு காட்சில நீங்க சோகமா இருக்கறதப் பார்த்து முதல்வர் வரைக்கும் போய் நீக்கி இருக்காங்க. அது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"\\

நல்லா இருக்கு. ஆனா ஒரு சந்தேகம். மூணு காட்சியில கடைசிக் காட்சில சோகம் எப்படி இருக்க முடியும்? பாராட்டத்தானே செய்றாங்க.

இல்ல என் tube லைட் மண்டைக்குப் புரியமாட்டேங்குதா?

Paleo God said...

//ஆனா ஒரு சந்தேகம். மூணு காட்சியில கடைசிக் காட்சில சோகம் எப்படி இருக்க முடியும்? பாராட்டத்தானே செய்றாங்க.//

@ Gopi:

//”அது ரொம்ப நெகட்டிவா இருக்குன்னு ஃபீல் பண்றோமுங்க.”//


பக்தர்கள் ஃபீலிங்ஸ படிக்கலையா? :))

Unknown said...

சங்கர் சார் நீங்க கண்டிப்பா எங்க படத்தின் கதை விவாதத்துக்கு வரணும்.. நான் இப்பவே கேபிளிடம் சொல்லிவிடுகிறேன்...

'பரிவை' சே.குமார் said...

aha..haa... Superuuuuuuuuuu...!

நேசமித்ரன் said...

:) mm என்னனம்மோ பண்ணுறீங்கையா

வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Super.

mitravatsala said...

அருமை.

சாந்தி மாரியப்பன் said...

கதையெல்லாம் மோட்டாரு இல்லாத காட்டாறு மாதிரி பொங்கி வர்றதைப்பார்த்தா, பரிசையெல்லாம் இங்கியே மொத்தமா அடிச்சிட்டு வந்து கொட்டிடும் போலிருக்கே :-))

நசரேயன் said...

யோவ் இன்னும் எத்ததனை பாகங்கள் இருக்கு ?

Chitra said...

ஹுஸைனம்மா said...

எப்படிங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க? அவனவன் மூளையை கசக்கி கிரைம் யோசிச்சா, நீங்க நோகாம இப்படி அள்ளுறீங்க?


.....அதானே!

vasu balaji said...

எல்லாம் இந்த தாடியெடுத்ததால வந்த வினை. :))

Anisha Yunus said...

ஷங்கர்ணா அடுத்த கதை எப்போ? :)

நீச்சல்காரன் said...

எனக்கும் Gopi Ramamoorthy போல அதே சந்தேகம் தான் பரவாயில்லை பிரமாதம் தான் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

Unknown said...

மூணு கதையில இதுதான் டாப்பு

poor-me/പാവം-ഞാന്‍ said...

vanakkam...

aru(su)vai-raj said...

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html