பலா பட்டறை: போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்

போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்நீங்கள் ஏறும் அரசு பஸ் தரமானதுதான் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா? 

ஏகப்பட்ட வரி கொடுத்து வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் தரமானதா?

புயலெனப் பாய்வதாய் சொல்லப்படும் வாகனங்களின் தரம் அதன் கண்டிஷன் அப்ளையில்தானே பல்லிளிக்கிறது?

நீங்களும் நானும் பயணிக்கும் சாலை சாவின் வலை என்பதை மறுக்க முடியுமா?

காசு கொடுத்தால் சுத்தமான? குடிநீர்.

காசுகொடுத்தும் ஏறி இறங்கும் மின்சாரம்.

செத்தும் கொடுத்தாலே சாம்பலாக்கித்தரும் மின்சார இடுகாடுகள்.

தூயது, தரமானது என்றே நம்பி வாங்கப்படும் 916 (கேடி) எம் நகைகள் 

அணுகமுடியா பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு கருவறைக்குள் நுழைய போராட்டம் அறிவிப்பவர்கள்

தமிழ் எவ்வளவு நுணுக்கமான மொழி, மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் மட்டுமே வாழும் ஆட்சி

உலகின் கடைசி மனிதனைப் போல் எச்சில் துப்பி வண்டியில் சீறும் இந்தியாவின் எதிர்காலங்கள்

உயிரிருக்கும் வரை உப்பைச் சரிபார்க்காமல் சோறு போட்டு செத்ததும் படையல் வைத்து பல காரம் வைக்கும் திவசங்கள்..

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, குடி குடியைக் கெடுக்கும். 

பசியால் மயங்கி விழுந்தவனுக்கு அட்லீஸ்ட் ஒரு வாட்டர் பாக்கெட்??

காதைப்பிளக்கும் ஓசையுடன் செல்லும் ஆட்டோக்களை, புகை கக்கும் வாகனங்களை, நடக்க முடியாமல் ஆக்கிரமிக்கும் கடைகளைத் தாண்டி ஆலகால விலைகளுடன் துணிமணிகள் அதை வாங்கவும் ஒரு கடனட்டை, அதைத் திருடியும் ஒரு நூதன மோசடி.. ஹேப்பி தீபாவளி

சாக்லேட்டில் புழு, கோலாவில் பூச்சி மருந்து, தாய் தரும் பாலிலே 20.20 0.15..

என் பாட்டி குடித்த காம்ப்ளானுக்கு அவள் 6000 அடிகள் வளர்ந்திருக்க வேண்டும். நல்லவேளை அவள் விளம்பரங்களில் நடிப்பதில்லை.

திரும்ப வாங்கிப்பீங்களா என்றால் முடியாது என்று தலையாட்டும் தூய தங்கம் விற்கும் வங்கிகள்

100 சதம் கிருமிகளை அறவே கொல்லும். ஆனா ரெண்டு புழு நெளியிதே. ஆமா மச்சி அது மனுஷனும் மனுஷியும்.. 

ஆமாம் மழை நீர் சேகரிப்பு வீட்டில் சரியாக இருக்கிறதா? 

நரகாசுரனை புராணத்திலா தேடுகிறீர்கள்? என்ன தேய்த்தும் போகவில்லை,  நல்ல எண்ணெய் தேய்த்தும் போகவில்லை ஏய் உன் முதுகில் அழுக்கப்பா....

இவனெல்லாம் ஒரு பதிவர் ( நாந்தான் ) இதெல்லாம் ஒரு இடுகை (இதுவும்!) :)))

.

20 comments: