பலா பட்டறை: இவரே பதிவுலக பிரம்மா!!

இவரே பதிவுலக பிரம்மா!!


.


டிஸ்கி : 1 - இது சூர மொக்கை எனவே தைரியமானவர்கள் மட்டும் தொடரவும், இளகிய மனது உள்ளவர்கள், உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல இயலாதவர்கள், அதி பயங்கர எதிர்பார்ப்பு உள்ளவர்கள், எல்லாமே நாந்தான் என்ற எண்ணம் உள்ளவர்கள்.....


ஒன் ஸ்டெப் பேக் & அபவுட் டர்ன் இது உங்களுக்கானது அல்ல. ஃபாலோ மீ>>>>>>>>>>>>>>>>>>>>> நாம பிரம்மாவ மீட் பண்றதுக்கு முன்னாடி சில விஷயங்கள் புரிந்துகொள்ளலாம்.முதல்ல நான் எழுதின பதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் வரும் வார்த்தைகளுக்கான அர்த்தம் மொத்த பதிவுலகும் என்பதே.. அது எழுதினதக்கப்புறம் எனக்கு வந்த ஒரு கனவு. அதில் ஒரு ஒளி வெள்ளம், அந்த ஒளியின் ஒலி கேட்ட கேள்வி பதில்கள்தான் கீழே இருப்பது... 


பதிவுலகில் நீ யார்?

நான் ஒரு சாதாரண பதிவர்ங்க.

அப்ப பிரபல பதிவர் இல்லையா?

சத்தியமா இல்லைங்க.

அப்படியா? சரி பிரபலம் என்றால் என்ன?

ப்ராப்ளம் பண்ணாம இருக்கறது, ப்ராபளத்திலேயே இருக்கறது, ப்ராப்ளமாவே இருக்கறது, ப்ராப்ளத்தப் பத்தி எழுதறது, ப்ராப்ளம்....

போதும். போதும். இத்தினி ப்ராப்ளம் இருக்கும்போது ப்ரம்மாக்கு ஏன் கடிதம் எழுதின? 

இல்லைங்க பதிவுலகத்துல ப்ராப்ளம் அதிகமாயிட்டே போகுது. எது சொன்னாலும் ப்ராப்ளமக்கிடறாங்க. ப்ரம்மா யார்னு தெரிஞ்சா எனக்கு ஒரு  சப்போர்ட்டு, போக பஞ்சாயத்து பேச வசதியா இருக்குமேன்னுதான் ஒரு நன்றிய சொல்லிட்டு ப்ராப்ளத்த பின்னாடி சொல்லலாம்னு..

உங்களுக்குன்னு சங்கம் ஏதும் இல்லையா?

அந்தப் ப்ராப்ளத்த ஏன் கேக்கறீங்க?

சரி மொத்தம் எவ்ளோ ப்ராப்ளம் இருக்கு? எத்தினி பஞ்சாயத்து நடந்திருக்கு? 

அய்யோ அதுக்கெல்லாம் ஏதுங்க கணக்கு வழக்கு? பொழுது போய் பொழுது வந்தா பாலிடால்தான்..

என்னது பாலிடாலா?

ச்சே பஞ்சாயத்துதான்னு சொல்லவந்தேன்..

இன்னிக்கு வரைக்கும் பஞ்சாயத்துக்கு ப்ரம்மா வந்திருக்காரா?

இல்லீங்க. அதுக்குத்தான் ஒரு முயற்சி பண்ணலாமேன்னு..

முயற்சியில் பிரம்மா வந்தாரா?

இல்லீங்க திருப்பியும் ப்ராப்ளம்தான்..

என்னா ப்ராப்ளம்?

நாந்தானேய்யா அந்த ப்ரம்மான்னு என்கிட்ட சிலர் கேட்டாங்க.

ம்ம்..

இவரா? இல்லை அவரா? அப்படின்னு பல பேர் கேட்டாங்க..

ம்ம்..

யோவ் நீயே ப்ரம்மான்னு சொல்லிக்கறதுக்கு வெக்கமா இல்லை? ன்னு வம்பிக்கிழுத்தாங்க சிலர்.

அட! ஆமாம்னு ஒத்துக்கிட்டுருக்க வேண்டியதுதானே? 

இல்லீங்க அது ரிஸ்கு!

அதென்ன ரிஸ்கு. பெருமைதானேய்யா?

இல்லீங்க பகுத்தறிவு கோலோச்சும் இடத்துல பிரம்மாவா இருக்கறது நெம்ப கஷ்டம்.. கேள்வி மேல கேள்வி வரும். எனக்கு கேள்வியே கேக்கத் தெரியாது இதுல எங்கேர்ந்து பதில் சொல்றது???

உதாரணமா?

மிச்ச மூணு தல எங்க தல?ன்னு மொத வெட்டு வெட்டுவாங்க? இருக்கற ஒரு தலையும் காணமப் போயிடும்.


என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒளிவெள்ளத்திலிருந்து ஒரு உருவம் காதில் ரத்தத்துடன் ஸ்டைலாக கலர் கலரான ட்ரெஸ்ஸில் நிறுத்துங்க போதும் போதும்னு அலறியபடியே ஓடி வந்தது..

நாந்தான்யா ப்ரம்மா ஆனா எனக்கு இன்னொரு பேரும் இருக்கு.


என்னாதுங்....????!!!!!!!!!!

 Google.(பின்ன எத்தினி பிரச்சனைகளையும், பஞ்சாயத்தையும் பார்த்த ஆலமரம் அது.? எவ்வளவு சுதந்திரம்? பைசா செலவில்லாமல் எவ்வளவு வசதி? அவரில்லைன்னா ஏது பதிவுலகம்? ஏது பஞ்சாயத்து? ஏது பாலிடால்?   என்னிக்காவது ஒரு கேள்வி? ம்ஹும். )ஆகவே நண்பர்களே பதிவுலகின் நிரந்தர ப்ரம்மா கூகிளே என்று சொல்லி இந்தப் ப்ராப்ளத்தை சால்வ் செய்கிறேன். நன்றி வணக்கம்!!!


பின் டிஸ்கி: பதிவுலக பிரம்மாவை அறிமுகப் படுத்தியதால் அவர் எனக்குத் தந்த ஒரு டிப்ஸ் - ஹிட்ஸை ரெட்டிப்பாக்குவது எப்படி? அது இந்த லிங்க்ல இருக்கு விருப்பமிருப்பவர்கள் க்ளிக்கி பயன் பெறுங்கள். ::))

தீபாவளி வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி! :))


வ்வர்ட்டா.!!!!!!!!!!!!!!!!!!!!


.

20 comments:

நாஞ்சில் பிரதாப்™ said...

இது சூர மொக்கை இல்லை ஷங்கர்ஜீ... அதிசூர மொக்கை....:)

நாட்டாமை தீர்ப்பு இன்னிக்குத்தான் சரியா வந்துருக்கு...நெளிஞ்சுப்போன சொம்பை மாத்திட்டிங்களா...:))

ஜாக்கி சேகர் said...

ப்ராப்ளம் பண்ணாம இருக்கறது, ப்ராபளத்திலேயே இருக்கறது, ப்ராப்ளமாவே இருக்கறது, ப்ராப்ளத்தப் பத்தி எழுதறது, ப்ராப்ளம்....--//

விழுந்து விழுந்து சிரிச்சேன்...

மரா said...

:)

மங்குனி அமைச்சர் said...

நோ ப்ராப்..........ளம், நோ ப்ராப்ளம்


நோ ப்ராப்..........ளம், நோ ப்ராப்ளம்

உன்ன பஞ்சாயத் பண்ண கூப்டா
நோ ப்ராப்..........ளம், நோ ப்ராப்ளம்

அங்க சொம்பு நசுங்கிப்போனா
நோ ப்ராப்..........ளம், நோ ப்ராப்ளம்

LK said...

ப்ராப்ள பதிவர் பலா பட்டறை ஷங்கர் வாழ்க

கே.ஆர்.பி.செந்தில் said...

கூகிலாய நமக...

வானம்பாடிகள் said...

அடுத்த தடவ பார்க்கிறப்ப தாடி இருந்திச்சோ அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடியே கையால பிச்சி எறிஞ்சிடுவேன். ப்ப்ப்பீஈஈ கேர்ஃபுல்:))

கலாநேசன் said...

சண்முகம்....

பின்னோக்கி said...

கட..கட..முடுக்..கடுக்...

என் பல்லு கடிக்கிற சவுண்ட் உங்களுக்குக் கேட்கலைல்ல ? :)

இராமசாமி கண்ணண் said...

:)

சிவகுமார் said...

shankar, i am a new blogger. please let me know how to create "you might also like" link?. my blog id is madrasbhavan.blogspot.com. my mail id is madrasminnal1@gmail.com.

மதுரை சரவணன் said...

:-)

மதுரை சரவணன் said...

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

சே.குமார் said...

அதிசூர மொக்கை.

சே.குமார் said...

அதிசூர மொக்கை.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே ,நீங்க ஒரு பிரபல பதிவர் தான் ஒத்துக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

மேட்டர் செம காமெடி நைனா.

நிகழ்காலத்தில்... said...

பிராப்ளம் பண்ணாம ஒத்துகிறேன், நீங்கதான் பதிவுலக பிரம்மாங்கிறத..

:)))))))))

க.பாலாசி said...

இதுதான் மொக்கன்னா கடைசியா கொடுத்த லிங்க் அதைவிட... ச்ச்சோ சாமீ... ஆள விடுங்க...