.
கேன்சர் (புற்று நோய்) என்பது காதலன் காதலிக்கோ, காதலி காதலனுக்கோ ஒரு சோகப்பாட்டு பாடுவதற்கான பார்முலா என்றுதான் பல காலம் சினிமா என்னை நம்ப வைத்திருக்கிறது. என்னுடைய நண்பர் ஒருவரின் அக்கா ஒரு ஜலதோஷம் கூட இல்லாமல் சாதாரணமாக இருந்து, கேன்சர் என்று கண்டறியப்பட்டு, உடலெல்லாம் சக்கையாகி ஆளே உருத்தெரியாமல் மாறிப்போய் கண்ணெல்லாம் இடுங்கி ”சாப்டியா சங்கர்?” என்று கேட்கும்போதுதான். இது நோய், வலி, கொடுமை எல்லாம் தாண்டி ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கி, நிலைகுலைத்து இறந்துகொண்டே மனதளவில் மற்றவரையும் கொல்லும் ஒரு நோய் என்பது புரிந்தது.
கவனிக்க..
அவர் ஒரு பெண்மணி.
அவருக்கு புகைபிடிக்கும் பழக்கமோ, வேறு எந்தக் கெட்ட பழக்கங்களோ இல்லை.
இத்தனைக்கும் அவரது கணவர் ஒரு பெருங்குடிகாரர். தினமும் குடிப்பவர்களுக்கான உடல் நிலை ப்ரச்சனைகள் தவிர்த்து பெரியதாக அவருக்கு எந்த பாதிப்புமில்லை.
பிறகு ஏன் இவருக்கு வந்தது? என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குறிய கேள்விகள்..
பரம்பரையில் யாருக்காவது இருந்திருக்கலாம் உடன் பிறந்தவர்கள் 6 பேர் மற்ற அனைவரும் நலம். (சொந்த பந்த குடும்பத்தில் வேறு யாரும் அப்படி இறக்கவில்லை)
உணவுப் பழக்க வழக்கம் காரணமாக இருந்திருக்கலாம். ( கூட்டுக்குடும்பம். வீட்டில் எல்லோரும் சாப்பிடுவதையேதான் அவரும் சாப்பிட்டார். தீவிர சைவம் வேறு)
எல்லோரும் போலத்தான் சென்னையில் வாழ்ந்தார். கார்ப்பொரேஷன் தண்ணீரைக் கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தார்.
ஆனாலும் வந்தது.:((
சரி..
வருமுன்னர் காப்பதற்கு என்ன என்ன செய்யவேண்டும்.?
வந்தபின்னர் எப்படி அதை லகுவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.?
திடீரென்று இப்படி ஒன்று வந்தால், இறப்பு நிச்சயமென்றால், பொருளாதார ரீதியில் என்ன பாதுகாப்பு திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
இதைப் பற்றிய உங்களின் குறைந்த பட்ச அறிவு என்ன?
தினசரிகளில் இப்படி பாதிக்கப்பட்டவர்களின் உதவி கேட்கும் விளம்பரம் கண்டு கடந்து போயிருக்கிறீர்களா? அல்லது குறைந்த பட்சம் 100/- ரூபாய் மணியார்டர் செய்திருக்கிறீர்களா?
உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்கலாம், நீங்களே அனுபவித்திருக்கலாம், இந்தக் கஷ்டம் என் எதிரிக்கும் வரக்கூடாது என்று நினைத்திருக்கலாம். அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் அனுபவத்தை, தெரிந்ததை. தெளிந்ததை நீங்கள் எழுத்தாகவோ, குறும்படமாகவோ பகிரலாம்.அது இதைப் பற்றி பெரியதாக தெரியாதவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும். அதற்குப் பரிசுகளும் உண்டு. தெரிந்தவர்களிடமும் எழுதச் சொல்லுங்கள். விவரங்களுக்கு..
![]() |
படத்தைச் சொடுக்கி விவரம் அறியவும். |
இதை வைத்து கதையோ, கட்டுரையோ எழுதும் அளவுக்கு நான் வீரனில்லை என்பதால் கொழந்த என்ற நண்பரின் அனுபவத்தைப் படித்து நான் விக்கித்த அந்த இடுகைகளின் சுட்டிகளை உங்களுக்காக இணைத்துள்ளேன். தயவு செய்து படியுங்கள்.
Link 1
Link 2
==
நேசத்திற்கு நீங்கள் தரப்போகும் ஆதரவிற்கு நன்றி!
**
5 comments:
போட்டி பற்றி ஏற்கனவே தெரியும் என்றாலும் உங்க எழுத்தில் வாசிக்க ஒரு நடுக்கம் வருது. நன்றி ஷங்கர்
நாங்க திருந்த மாட்டோம். விழிப்புணர்வு என்பது விழிகள் இழந்த பெறகு பெறுவது.
மோகன் குமார் சொன்னது முற்றிலும் உண்மை.
ஆமா என்னாச்சு ரொம்பத்தான் எழுத்து நடை மெருகு நடை ஏறிக்கிட்டு இருக்கே. ரொம்ப அதிகமான யோசனையோ?
விளக்கமான நல்ல பதிவு ! பாராட்டுக்கள் ! நன்றி சார்!
வணக்கம் தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... மறக்காமல் எழுத முயற்சிக்கவும்...
நன்றி....
உண்மைதான் வருவது நோயோ பேயோ காலிங் பெல்லை அடுசிட்டு வராது. நாம நல்ல இருக்கும் போதோ நமது மருத்துவ தேவைக்காவது கொஞ்சம் பணம் ,பாலிசினு ஏதாவது சேக்கலாம். என்றோ ஒரு நாள் நாம மரணத்த மணந்தே ஆக வேண்டியதால் நாலு பேருக்கு உதவியா வாழ்ந்தே ஆகணும்.
Post a Comment