பலா பட்டறை: Dolphin மனிதர்கள்
Showing posts with label Dolphin மனிதர்கள். Show all posts
Showing posts with label Dolphin மனிதர்கள். Show all posts

Dolphin மனிதர்கள்




 

தேவைகளே மனிதனின் பல கண்டுபிடுப்புகளுக்கு ஆதாரம். நெருப்புக்காக just like that நாம் பற்ற வைக்கும் ஒரு தீப்பெட்டிக்காக கற் காலத்தில் என்ன பாடு பட்டிருக்கிறார்கள், அதிலும் அந்த தீயை அணைக்காமல் வைக்க முறை வைத்து காவல் வேறு. இன்றைக்கு சர்வ சாதரணமாய் நாம் பயன்படுத்தும் பொருட்களில் நம்மின் சொகுசு வாழ்க்கைக்காக எத்தனையோ பேரின் தூக்கம் தொல்லைந்த இரவுகள் விலையாக்கப்பட்டிருக்கின்றன. நம் வாழ்க்கையும் இந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிமையானதும் ஆதி மனிதனின் மிக சிறந்த பல இயல்புகள் நம்மில் தொலைந்து விட்டன.  calculator கையில் இருக்கும்போது மூளை கணக்கு பற்றிய சிந்தனை இல்லாது இருப்பது போல, அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் அடிமைகளாகவே நாம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட நீச்சல் குளத்தில் வளர்க்கப்படும் டால்பின்-களை போலத்தான், ஒவ்வொருமுறை டால்பின்கள் சாகசம் பண்ணும்போதும் அவற்றிற்கு வழங்கப்படுவது இறந்த மீன்கள்தாம், மனிதர்களால் வளர்க்கப்பட்ட அவைகளை மீண்டும் கடலில் கொண்டு விட்டால் உயிருள்ள மீன்களை பிடித்து சாப்பிட தெரியாமல் இறந்துபோகும். 

நம்முடைய கண்டுபிடிப்புகளும் ஒருவகையில் அப்படித்தான் தோன்றுகிறது. தேவைகளை விட அதிகமாய் தேவையற்றவைகளை தேக்கி வைத்துக்கொண்டு எல்லா உயிர்களுக்கும் சமமான இப்பூவுலகை நச்சுப்படுத்திகொண்டு இருக்கிறோம்.