முகிலன் தொடரை முடித்து விட்டார். ஒன்றும் பாதகமில்லை. மூன்று வெவ்வேறு கிளைக்கதைகள்தான். ஒரு கொலையில் மட்டுமே அவை ஒன்று சேரும். எனவே என் பங்கை படித்து முடித்து விடுங்கள். ::-))
---
அப்படி ஒன்றும் விகாரமான ஒன்றைக் கேட்டுவிட்டதாய் அவனுக்கு தோன்றவில்லை. தான் சாதாரணமாய் நினைத்து நல்லதிற்காய் கேட்ட ஒன்று அடுத்தவர்க்கு எப்படி மனதைக் காயப்படுத்தும் ஒன்றாய் மாறிவிடுகிறது என்பது எப்போதும் ஒரு ஆச்சர்யமாகவே இருந்தது. அம்மாவிடமும் இப்படி அவஸ்தைப்பட்டிருக்கிறான். எதுக்குமா இப்படி புலம்பற உன்னையும் என்னையும் பாத்துக்கற மாதிரி ஒரு பொண்ண நானே கூட்டியாரேன் என்றவனைப் பார்த்து அம்மா ஆடிய ஒரு புலம்பல் நாடகம் தொலைக்காட்சி சீரியலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடுத்த வீட்டு பெண்களை எல்லாம் அவன் வீட்டு ஹாலிற்கு வரச்செய்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சில விஷயங்களை ஏன் செய்தியாக மூளைக்குள் ஏற்றாது மனதில் ஏற்றி அவஸ்தைப்படுகிறார்கள்? என்று ஷானுக்கு வருத்தம் வரும். அன்றைக்கு ஸ்வாதியும் அப்படித்தான்.
”ஸ்வா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”
”சொல்லு ஷான்”
தாத்தாவ ஏன் ஒரு ஹோம்ல சேர்க்கக்கூடாது? குடித்த காபியை அப்படியே டேபிளில் வைத்தவள் கண்களும் உதடுகளும் புருவமும் சுறுக்கி, எப்படி நீ அப்படிச் சொல்லலாம் என்று ஆரம்பித்தவள் நாளைக்கு உனக்கும் இப்படி ஆச்சுன்னா எங்கனா ஆஸ்ரமத்துல கொண்டு போய் நான் விட்டுடட்டுமா? இல்ல எனக்கு இப்படி ஆச்சுன்னா நீ என்ன எங்கனா விட்டுட்டு வேற எவளோடவாவது சல்லாபம் ஆரம்பிச்சுடுவியா? நீயும் நானும் சாப்பாடுதான் சாப்பிடறோம் சஞ்சீவி மூலிகை இல்ல. இந்த நிலம என்னிக்கு வேணாலும் உனக்கும் எனக்கும் வரும், உனக்கு எப்படி இப்படி எல்லாம் கேட்க மனசு வருது சண்முகம்.
புரிந்துவிட்டது சண்முகம் என்று அழைத்ததிலேயே அவள் தள்ளி நின்று விட்டாள். இல்ல ஸ்வா நீ தப்பா புரிஞ்சிகிட்ட, தாத்தாவுக்கு இந்தமாதிரி நிலைமைல அதிகமா மெடிகல் கேர் தேவைப்படும். அதுக்கான ஹோம்கள் இருக்கு என்னோட ஹோட்டல்ல சாப்பிட வற்ற ரெகுலர் கஸ்டமர் ஒருத்தர் அந்த மாதிரி ஒரு ஹோம்ல ட்ரஸ்டியா இருக்கார், செலவே இல்லாமக் கூட கவனிச்சிக்கலாம்னு சொல்லி இருக்கார் அத மனசுல வெச்சித்தான் சொன்னேன்.
ம்ஹூம் அவள் காதில் வாங்கியதாய் தெரியவில்லை. கண்கள் வேறு கலங்கி இருந்தது. அடடா இன்றைக்கு ஹாஸ்பிடல் போய்விட்டு வந்திருப்பாளே அதைக் கேட்க மறந்தேனே? காதலியா? மனைவியா? அம்மாவா? பிள்ளைகளா? யாராய் இருந்தால் என்ன சில நேரங்களும் சூழ்நிலைகளும் உலகமகா எதிரியாவும் வேண்டத்தகாத மனிதராகவும் எதிர் எதிரே நிற்க வைக்கும். எது பேசினாலும் தவறாய் போகும். ஷான் அது புரிந்து அமைதியாய் இருந்தான். இவளே சமாதானமாகட்டும் விட்டுப் பிடிப்போம் என்று முடிவு செய்தான்.
ஓக்கே எனக்கு டைம் ஆச்சு சொல்லிவிட்டு கிளம்பினாள் ஸ்வாதி. சீயூ, பை, பார்க்கலாம் என்ற சந்திப்பு தொடரும் வார்த்தைகள் எதுவுமில்லாது விருட்டென கிளம்பினாள், வாசல் கடந்து மறைந்தாள்.
அவள் மறைந்ததும் ஷான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். டேபிளில் வைத்திருந்த ஐஸ்வாட்டர் டம்ளர் தண்ணீர் கோடுகளால் டேபிளில் ஒரு கோலம் போட்டிருந்தது. டம்ளரிலிருந்த நீர் அத்தனையும் குடித்தான். நேரம் பார்த்தான். வேலைக்குச் செல்ல கிளம்பினான்.
---
”என்ன சண்முகம் அரை மணி நேரம் முன்னாடியே வந்துட்ட. ”
”ஒண்ணுமில்லண்ணே சும்மாதான். ”
”அந்த கேஸ் என்னாச்சுப்பா?”
”இன்ஸ்பெக்டர் விசாரிச்சிட்டுப் போயிட்டாருண்ணே. தேவைப்பட்டா கூப்பிடறோம்னு சொல்லிட்டார். ”
”சரி உக்காரு லைன முடிச்சிட்டு வந்துடறேன்.” சுப்ரமணி அண்ணன் டிபன் தட்டையும் காபி நிரம்பிய டபராக்களையும் எடுத்துக்கொண்டு லாவகமாய் யார் மீதும் இடிக்காமல் சப்ளைக்குச் சென்றார்.
சர்வர் வேலை என்பது ஒன்றும் சுலபமானதும் கேவலமானதுமல்ல. 7 வரிசை டேபிள்களில் ஐந்தில் நான்கு நபர்களும் இரண்டில் ஆறு நபர்களும் எப்பொழுதுமே நிரம்பி உட்காரும் லைனில் யோசித்துப்பாருங்கள் அனைவரின் தேவைகளையும் சரியாய் பூர்த்தி செய்யவேண்டும். சரியாய் பில் தர வேண்டும். 12 மணி நேரம் நடந்தே குதிகாலிலிருந்து மேலாக ஒரு வலி பரவும் நிரந்தரமாய்.
சிரித்தபடியே இருக்க வேண்டும், சீருடை அழுக்காகக்கூடாது. தட்டைவிட தோசை அளவு பெரியதாக இருக்கும். டேபிளில் படக்கூடாது. சிலர் தோசையை மடிப்பதை விரும்ப மாட்டார்கள். சிலருக்கு சுடுநீர்தான் வேண்டும், பூரிக்கு எத்துனை வகை மசாலா வைத்தாலும் கெட்டிச்சட்டினி இருக்கா? என்று கேட்பார்கள். இப்போதெல்லாம் காபிக்கே நிறைய கேள்விகள் நல்லா ஸ்ட்ராங்கா, கொஞ்சம் லைட்டா, மீடியமா, கொஞ்சம் சக்கரை கம்மியா, வித்தவுட் சுகர், மினி காப்பி என்று லைனில் வரும் முப்பத்தி ரெண்டு வகை மனிதர்களின் பசியை எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டிய வேலை. அதை விட முக்கியம் என்ன கொடுத்தோம் என்று சரியாய் பில் கொடுப்பது.
இடையறாத பாத்திரங்களின் சத்தங்களிலும், சொய்ய்ய் என்ற தோசை வார்க்கும் சத்தங்களின் இடையேயும் சண்முகம் ஸ்வாதியையே நினைத்துக் கொண்டிருந்தான்.
கி கி கி கீ கீ கிகிகி எஸ் எம் எஸ் வந்திருப்பதாய் மோர்ஸ் கோட் சப்தம் சொல்லியது.
மெஸேஜை திறந்தான். அட! ஸ்வாதி நம்பர்.
Sorry my Love!
மூன்றே வார்த்தை எல்லா பிரச்சனைகளுக்கும் அப்பொழுதைக்கு முடிவுரை எழுதி இருந்தது.
.
21 comments:
டக்னு முடிச்சிட்டா மாதிரி இருக்கு..
ஆனாலும் நல்லாருக்கு
ஸ்ஸ்ஸ்....... அப்பா....... தமிழிஷ் problem போல. பேஜ் load ஆகுறதுக்குள்ள ..........
..... சிறந்த முடிவு..... நான் கதையை சொன்னேன்.
நல்ல கதை...
நன்றாக முடித்துள்ளீர்கள் சங்கர்! வாழ்த்துக்கள்!
jugal bandhi superb:)
கதை நன்றாக இருந்தது.
நல்ல கதை...
ஓ...தொடர்கதைதான்.கதை போன வேகத்துக்கும் சுவாரஸ்யத்துக்கும் பட்ன்னு முடிச்சமாதிரி...ஆனா நல்லாயிருக்கு ஷங்கர்.
இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாமோ!!! ஆனாலும் நல்லா இருந்துது.
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
தொடர்கதை நல்லா இருந்தது...
சிறந்த முடிவுடன் கதையை நிறைவு செய்து இருக்கும் விதம் அருமை ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !
ரெண்டு பெரும் அடங்க மாட்டீங்களா?
கதை ரொம்ப டச்சிங்கா இருக்கு..
நல்லாருக்கு விருதுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்!
நல்ல முயற்சி - கதை எழுதிகள்
:)
இரு பதிவுகளிலும் நிறைய இடங்கள் பிடித்திருந்தன.. நன்றாக எழுதியுள்ளீர்கள்... யதார்த்தம் சுடுகிறது... இப்பதிவில் குறிப்பிட்டு -
//ம்ஹூம் அவள் காதில் வாங்கியதாய் தெரியவில்லை. கண்கள் வேறு கலங்கி இருந்தது. அடடா இன்றைக்கு ஹாஸ்பிடல் போய்விட்டு வந்திருப்பாளே அதைக் கேட்க மறந்தேனே? காதலியா? மனைவியா? அம்மாவா? பிள்ளைகளா? யாராய் இருந்தால் என்ன சில நேரங்களும் சூழ்நிலைகளும் உலகமகா எதிரியாவும் வேண்டத்தகாத மனிதராகவும் எதிர் எதிரே நிற்க வைக்கும். எது பேசினாலும் தவறாய் போகும். ஷான் அது புரிந்து அமைதியாய் இருந்தான். இவளே சமாதானமாகட்டும் விட்டுப் பிடிப்போம் என்று முடிவு செய்தான்.//
அருமை..
நல்ல நடை..
வாழ்த்துக்கள்
www.narumugai.com
மிக்க நன்றி நண்பர்களே!! எல்லா புகழும் முகிலனுக்கே!! :-)
Super Ending...Good
Post a Comment