பலா பட்டறை: பறவை மனசு..

பறவை மனசு..



”எத்தினி வருஷம்ணே ஆச்சு நீங்க வந்து? ”

”அது ஆச்சு தம்பி பத்து வருஷம், அட நாள் கண்ணக்கெல்லாம் ஆரு பாக்கறா? எழுந்தோமா வேல செஞ்சோமா, கிடைக்குற கேப்புல பயலுங்ககூட விளாண்டோமான்னு பொழுது போகுது. மொதல்ல உனக்கும் அப்படித்தான் இருக்கும், போகப் போக பழகிடும். ”

”நான் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லண்ணே.”

”அட நான் மட்டும் என்னப்பா? வேண்டிக்கிட்டு இங்கனதான் வேணும்னு வந்தனா? பொலம்பறத நிறுத்து. அது மனசுல சீக்கு புடிச்சுடும். எது கிடைச்சிதோ அத அனுபவி. அங்கிட்டும் இங்கிட்டும் வித்தியாசம் ஒன்னுமில்ல. படிச்சவன் நீயி, உனக்கு நாஞ் சொல்லித்தரவேண்டியதா இருக்கு பாரு.”

”எந்த ஊர்ணே நீங்க?”

” பேச்ச வெச்சி கண்டுபிடிக்க முடியலல்ல?, அது வேறொண்ணுமில்ல, நம்ம பயலுகள்லாம் ஒவ்வொரு ஊரு, அதுல நமக்கு பிடிச்சவன்னு ஒரு குரூப்பு, அட மனசுக்கு பிடிச்சவங்கூட பேசும்போது அவன் வாடையும் எனக்கு வந்துடுது. அப்படியே பழக்கமாயிடிச்சி. ஆமா உன்ன பார்த்தா விசனப்படறவம் மாதிரி தெரியலையே, இம்புட்டு கேள்வி கேக்கற? பீடி குடிக்கிறியா? ”

”பழக்கமில்லண்ணே”

”நல்லதுதான். மருவாதைக்கு சொல்றதா இருந்தா வேணாந்தம்பி, எனக்கு அப்படியெல்லாம் வயசு வித்தியாசம் பாக்கத்தெரியாது. என்னப்பொறுத்தவரைக்கும், படிச்சவன சார்னு சொல்லுவேன் அவ்வளவுதான்”

”பத்து வருஷமா இருக்கீங்களே, எப்படின்ணே முடிஞ்சிது.?”

“எல்லாம் ஒண்ணுதான் தம்பி. இடையில ஒரே முறை போயிருக்கேன். வீட்டுல யாருமே சேர்த்துக்கல, சர்தாம் போங்கடான்னுட்டு ஒரு ஓட்டல்ல ரூம் எடுத்தேன். அட அப்பத்தான் எதோ மனசுக்குத் தெரிஞ்சிது. சட்டுனு வெளில வந்து ப்ளாட் பாரத்துல படுத்தேன். இடுப்புத்துணி நவுந்தது தெரியாம நிம்மதியா தூங்னினேன்னா பாத்துக்க.”

”புரியலண்ணே”

” அட இங்க நாலு செவுத்துக்குள்ள இருக்கறோம் ஜெயிலுங்கறான். வெளில அந்த நாலு செவுத்தையும் பார்டர்ன்னுட்டு நாடுங்கறான். மொதல்ல எனக்கும்தான் புரியல மார்ல அடிச்சிக்கிடு அழுவேன். ஆனா அந்த ஓட்டல்ல கதவெல்லாம் தாப்பாப் போட்டு ரூமுக்குள்ள இருக்கும்போதும் செல்லுல அடச்சி வெச்சிருக்கறாமாதிரியே இருந்துதுப்பா. ”

”நீயே சொல்லு விடுதலைன்னா என்ன? உனக்கு இங்கேர்ந்து வெளில போனாப்போதும் அப்படீங்கறது விடுதலன்னா, அட அங்கப்போயும் கதவசாத்தி பூட்டிக்கிட்டு நாலு செவுத்துக்குள்ளாறத்தானேய்யா இருக்கோம்? நல்லா ரோசனை பண்ணு, வெளில உன்ன ஏமாத்த பெருங் கும்பலே இருக்கு. ஆனா இங்க நீ ஏமாத்துவியான்னுதான் பார்த்துகிட்டே இருக்கான். இன்னுஞ்சொல்லப்போனா முக்காவாசி இங்க இருக்கறவனெல்லாம் வெளில ஏமாத்தினவன கொன்னுட்டு வந்தவந்தான். கடசி முச்சூடும் இங்கயே என் காலம் கழிஞ்சா சந்தோஷந்தான். அட எனக்கு விடுதலையே வேணாந்தம்பி“

நான் மேலே பார்த்தேன், காகமொன்று வெளியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி ஜெயில் உள்ளே இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்தது.

.

37 comments:

Ahamed irshad said...

கடைசி வரி ... 'டச்'

பத்மா said...

ஜெயில் என்பது மனசிலதானோ ?
கலக்கமா இருந்தது படிக்க .நா மொதல்ல எதோ அந்நிய தேசத்துல நடக்குற உரையாடல்னு நெனச்சேன்

ஹேமா said...

விடுதலை ,சுதந்திரம்
அதன் சுகமே தனிதான்.

ஹுஸைனம்மா said...

ஆ, ஜெயிலா... அவ்வ்வ்வ்வ்..

நானும் புதுசா வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தவங்க பேசிக்கீறாங்க போலன்னு நினைச்சுப் படிச்சா..

கலக்கிட்டீங்க!!

CS. Mohan Kumar said...

கடைசி வரி தவிர மற்றவை இருவர் பேசிக்கிற மாதிரியே எழுதி உள்ளீர்கள்.. ம்ம்.. அந்த வரியும் அதே மாதிரி எழுதிருக்க முடியாதில்லை?

vasu balaji said...

கிட்டதட்ட நித்தியும் இப்படித்தான் நினைப்பாரோ:))

நாடோடி said...

ந‌ல்லா இருக்கு ச‌ங்க‌ர்ஜி...

settaikkaran said...

மிகவும் ஆழமாய் யோசித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Anonymous said...

மோகன் குமார் சொன்ன பாயிண்ட் கூட நல்லாத்தான் இருக்கு

சாந்தி மாரியப்பன் said...

ஆ..ஜெயில்... நல்லா இருக்கு:-))))

Prasanna said...

//நான் மேலே பார்த்தேன், காகமொன்று வெளியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி ஜெயில் உள்ளே இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்தது//

இத கவிதையா எழுத போய், சரி இவிங்களுக்கு புரியாதுன்னு, விரிவா எழுதிட்டீங்க.. கரெக்டா.? (இப்படிக்கு வருங்கால CBI)
:)

Unknown said...

நிதர்சனம் ...

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமை.

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
கிட்டதட்ட நித்தியும் இப்படித்தான் நினைப்பாரோ:))
//

எங்க அய்யா அவரு நினைப்பாருன்னு நினைக்கிறத நினச்சா சிரிப்பா வருது...

நல்லாருக்கு சங்கர்!

பிரபாகர்...

VISA said...

கதை அருமை ஆனா இது எந்தஊரு ஜெயிலு?

செ.சரவணக்குமார் said...

நானும் ஹுஸைனம்மா மாதிரியே வெளிநாட்டுல இருக்குற மக்கள் பேசிக்கிறாங்களோன்னு நெனச்சேன். உரையாடல் ரொம்ப கச்சிதமா வந்துருக்கு ஷங்கர்ஜி.

sriram said...

நானும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கதைன்னு நெனைச்சேன் மொதல்ல, நல்லா வந்திருக்கு, வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

க.பாலாசி said...

இயல்பான வார்த்தைகளில் மனதில் பதியும் உண்மை....

க ரா said...

அருமயா எழுதீருகீங்க.

Chitra said...

கதையில், தத்துவம் இறக்கை கட்டி பறக்குது. :-)

ஈரோடு கதிர் said...

// வானம்பாடிகள் said...

கிட்டதட்ட நித்தியும் இப்படித்தான் நினைப்பாரோ:))
//

அய்யோ.. எங்க பெருசு, ரவுசு தாங்க முடியலையே

'பரிவை' சே.குமார் said...

நானும் புதுசா வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தவங்க பேசிக்கீறாங்க போலன்னு நினைச்சுப் படிச்சா..

கலக்கிட்டீங்க!!

கடைசி வரி ... 'டச்'.

'பரிவை' சே.குமார் said...

நானும் புதுசா வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தவங்க பேசிக்கீறாங்க போலன்னு நினைச்சுப் படிச்சா..

கலக்கிட்டீங்க!!

சீமான்கனி said...

//இன்னுஞ்சொல்லப்போனா முக்காவாசி இங்க இருக்கறவனெல்லாம் வெளில ஏமாத்தினவன கொன்னுட்டு வந்தவந்தான்//

வாஸ்தவமான வார்த்தை...ஷங்கர் ஜி....ஏன் இப்பூடி...

நசரேயன் said...

நல்லா இருக்கு தலைவா

Vidhoosh said...

// On May 5, 2010 3:38 AM , நசரேயன் said...

நல்லா இருக்கு தலைவா
////

அண்ணனே அடக்கி வாசிக்கும் போது நான் பேசினா நல்லாருக்குமா..

அதான் ரிபீட்டு போட்டுட்டு கிளம்பறேன்.

நிஜமாவே நல்லா இருக்கு.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

நல்லா இருக்கு ஷங்கர்... சரளமான நடை... சட்டுன்னு மனசுல பதியற மாதிரி எழுதியிருக்கீங்க!! :)

பனித்துளி சங்கர் said...

கதாபாத்திரத்தின் சுழ்நிலைக்குத் தகுந்தாற்போல் அவர்களின் உச்சரிக்கும் தரத்தையும் உங்களின் எழுத்துகளில் ரசிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

சிவாஜி சங்கர் said...

யதார்த்த வார்த்தை நடை... மெல்லிய இழை மனதிற்குள் படிக்கையில்.. :)

ரோஸ்விக் said...

என்ன ஆச்சுண்ணே?? அந்தப் பக்கமேது போனீங்களா....?? :-)))
நல்ல நடை. இயல்பாக...

இரசிகை said...

//
காகமொன்று வெளியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி ஜெயில் உள்ளே இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்தது.
//

superb.........

Paleo God said...

எதையும் தாங்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!

@மோகன்: முன்னாடி அப்படி எழுதி இருக்கேன் தல! இதுல கொஞ்சம் கஷ்டமே. :)

@விசா.. நம்மூருதேன்.:)

மரா said...

Awesome.Keep writing.

muthukumaran said...

//நானும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கதைன்னு நெனைச்சேன் //

ரிபீட்டு..

நல்லா இருக்குன்னே..

Unknown said...

nice

ஜோதிஜி said...

நல்லா இருக்கு தலைவா

நீங்க நல்ல இருக்கீங்களா நசர்