பலா பட்டறை: ஒரு ஆதங்கம்...:(

ஒரு ஆதங்கம்...:(



கடவுளின் குழந்தைகள் என்ற ஒரு இடுகையில் ஏற்கனவே என் உணர்வுகளைச் சொல்லி இருந்தேன். இன்றைக்கு சந்தியா என்ற ஒரு சகோதரியின் இந்த இடுகையை படித்தபோது, மனது மிகவும் கஷ்டப்பட்டது.

பள்ளிகள் நடந்து கொள்ளும் விதம் கேவலமாயிருக்கிறது. பெரியதாக ஜம்பம் பேசும் பள்ளிகளையும், அதன் வாயிலில் தவம் கிடந்து அட்மிஷனுக்காய் அலைவதையும் நான் அறவே வெறுக்கிறேன்.

ஒரு குழந்தை என்பது குழந்தைதான் அதற்கு மேல் எந்த அளவுகோலும் கொண்டு ஒரு குழந்தையை சீர் தூக்குவது கேவலம். அக் குழந்தைக்கான உரிமையை தட்டிப்பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அந்த இடுகையிலுள்ள நியாயமான ஆதங்கம் மனதைப் பிசைகிறது. நல்லவேளை எனக்கு வரவில்லை என்று தாண்டிப்போக முடியவில்லை.

இந்தமாதிரியான அவலங்கள் என்று தீரும்? அரசாங்க அனுமதி பெற்று, அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்று நடத்தும் ஒரு பள்ளியில், ஒரு குழந்தை மூன்றாம் வகுப்பிற்கு போவதற்கே இத்தனை வியாக்கியானம் பேசுகிறார்கள் என்றால், இனி ஒவ்வொரு படியும் தாண்ட அக்குழந்தையும், பெற்றோரும் என்ன பாடுபடப்போகிறார்கள்?

இதற்கெல்லாம் விடிவே இல்லையா? என்னதான் சிறப்பு பள்ளிகள் அல்லது அரசாங்க பள்ளிகள் என்று விவாதித்தாலும், பள்ளிகளின் இது போன்ற செயல்கள் சரியா?

இன்னும் எத்தனை குழந்தைகள் இதுபோல நிராகரிக்கப்பட்டிருக்கிறதோ என்பதை நினைக்கும்போது....

ப்ச்....


.

22 comments:

dheva said...

காலையில் அந்த சகோதரியின் வலைப்பூவினை பார்வையிட்ட போது எனது நெஞ்சிலும் உங்களுக்கெ ஏற்பட்ட அதே வலிதான் சங்கர்!

வியாபர ஸ்தலாமாய் போய்விட்டது கல்விக்கூடங்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். நன்றாக நான்கு கொடுக்கலாம் என்று இருந்தேன்.... நீங்கள் எழுதிவிட்டீர்கள்.....! சகோதரி சந்தியாவிடம் இப்படி நடந்து கொண்ட அந்த நிர்வாகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது!

உங்கள் ஆதங்கத்தை நான் வழி மொழிகிறேன்.....சங்கர்!

எறும்பு said...

நல்ல பதிவு. நன்றி சந்தியா.

மதுரை சரவணன் said...

ok i feel like u. but school's with some attraction show their power only like this. v can change by avoiding the schools like her. v can aware people and make the trs to realise their mistakes. thank u for sharing.

Unknown said...

நல்ல பகிர்வு ... நன்றி ...

Jerry Eshananda said...

சமூக பார்வையுள்ள பதிவு.

தமிழ் உதயம் said...

சந்தியா அவர்களின் பதிவை வாசித்தேன். நிராகரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள். சேர்ப்பதற்கு ஒரே காரணம். பணம்.

சாமக்கோடங்கி said...

அந்த அன்னையின் ஆதங்கம் புரிகிறது.. நாட்டில் எது தான் நன்றாக நடக்கிறது...? கல்வி ஒரு தொழில்.. அதில் சேவை மனப்பான்மைக்கு இப்போது இடமில்லை..

ஷங்கர் அண்ணாவிற்கு என்றும் என் சிறப்பு வணக்கங்கள்.. அந்த சகோதரியின் வரிகளில் ஏதோ இருக்கிறது...

பனித்துளி சங்கர் said...

மிகவும் வேதனைப்படவேண்டிய நிகழ்வுதான் . இன்றைய நிலையில் கல்வி என்பது விலை பொருளாக மாறிபோகிவிட்டது என்று எண்ணும்பொழுது . இனி வரும் காலங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி என்பது பொய்யாக போய்விடுமோ ????

நாடோடி said...

ம்ம்ம்ம்ம்ம்....க‌ல்வியை வியாபார‌மாக‌ ஆக்கிவிட்டார்க‌ள்...

'பரிவை' சே.குமார் said...

உங்கள் ஆதங்கத்தை நான் வழி மொழிகிறேன்.....சங்கர்!

சிநேகிதன் அக்பர் said...

சமூக அக்கறையுள்ள பதிவு.

Suresh Rajasekaran said...

மிகவும் வருந்த மற்றும் கண்டிக்க தக்கது. இந்த பிரின்சிபாலுக்கு சிறு வயதில் இதை போல் ஒரு நிகழ்வு இல்லாமல் வளர்ந்து விட்டார் போலும்.
இதை அவர் பார்வைக்கு கொண்டு சென்றால் இனியாவது மாறுவார் என்று எதிர்பார்க்கலாம்

Chitra said...

I read that post too. It is sad to see that many school authorities are so insensitive. :-(

Anonymous said...

வருந்தத்தக்க விஷயம்

நட்புடன் ஜமால் said...

காசு ஒன்றே குறி என்றாகிவிட்ட வியா-பாரங்களில் கல்வியும் ஒன்று,

இன்னும் ஏதோ எதிர்ப்பார்க்கிறாங்களோ என்னவோ ...


பச் ...

மரா said...

நல்ல பதிவு. நன்றி சந்தியா..

விஜய் said...

மெக்காலே முறையில் விழுந்த நாம் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.

விஜய்

நசரேயன் said...

நியாயமான ஆதங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு....

Paleo God said...

மிக்க நன்றி. அந்த சகோதரியின் வலைப்பூவுக்கும் சென்று பின்னூட்டமிட்டு ஆதரவும், அன்பும் சொன்ன நல் உள்ளங்களுக்கும் நன்றி!!

G.Ganapathi said...

ஹ்ம்ம் இங்கே அளவு கோள்கள் ஒன்றை மற்றுமே சார்ந்து இருக்கிறது நண்பரே அது பணம் . அதுவும் நமது கல்வி துறையின் குருட்டு கல்விக்கே இப்படி என்றால் மற்ற துறைகலையின் அவலங்களை என்ன சொல்லுவது . அவர்களிடம் இன்னும் கொஞ்சம் பணம் எதிரிபார்த்து இருப்பன் அந்த கல்வி வியாபாரி