அம்மா என்னோட ஹேர்க்ளிப் எங்க? இதோடு மூன்றாவது முறையாய் கத்திவிட்டாள் ஸ்வாதி. அவனுக்கு அவள் குரல் மாடியில் தெளிவாய் கேட்டது. குரல் கேட்க்கும்போதே மனசு பூராவும் ஜயண்ட் வீலின் மேலிருந்து கீழே வரும்போது அடிவயிற்றில் வரும் ஜிலீரென்ற உணர்ச்சிகளால் பீடித்திருந்தது.
காதல் உள்ளே நுழையும் முன்பு வரை ஒரு ஆச்சரியம் நுழைந்த பின்னோ அது மரண அவஸ்த்தை. இதுவரையிலும் நட்பாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனி என்ன ஆகுமோ எனத்தெரியாது. ஹோட்டலிலிருந்து கிளம்பும்போதே முடிவு செய்திருந்தான். இன்றைக்காவது அவளிடம் சொல்லவேண்டியதுதான்.
தனியாய் ஒரே பிள்ளையாய் அதுவும் சகோதர சகோதரி பொறுப்புகளும் தொல்லைகளுமில்லாத ஆண் மகனாய் பிறப்பவனுக்கு அழகாய் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அன்பு பொழிகிறது. நட்பாக ஆரம்பித்து காதலாய் அது மாறுமா என்ற எதிர்பார்ப்பு சுவாரஸ்யங்கள் சுகமான மரண அவஸ்த்தை,
மரண அவஸ்த்தை. ஆச்சர்யமாய் இருந்தது அவன் யோசிப்பு. மரணம் என்பது அவஸ்த்தை என்றால் மரணிக்கும் தருவாயில் வரும் உடல் வேதனைகளா? மன வேதனைகளா? பின் எப்படி சந்தோஷத்தை மரண அவஸ்த்தை என்று எண்ணிக்கொள்கிறேன். அவனே கேட்டுக்கொண்டான். ஒஹ் புரிந்துவிட்டது. இந்த வாழ்வு. யெஸ் இந்த வாழ்வு இந்த பிறப்பின் பூரணம் மரணம். அதை நோக்கியே இந்த உயிர் வளர்கிறது, சிரிக்கிறது, அழுகிறது, அகங்காரம் கொள்கிறது, அன்பு கொள்கிறது, அழிவு செய்கிறது, ஆக்கம் செய்கிறது, அடுத்த மரணத்தினை தயாரிக்க கூடல் கொள்கிறது, மரணத்தை குழந்தையாய் பெற்று கொஞ்சுகிறது, தாலாட்டி சீராட்டி, மரணமில்லா பெருவாழ்வு போதனைகள் புகுத்தி மகனே உன் சமர்த்து என்று இந்த உயிர் கோளில் மேய விடுகிறது. உயிருடன் இருக்கிறதா என்று தினமும் மரணத்தின் வளர்ச்சியை கவனமாய் பாதுகாக்கிறது.
மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தலையை உதறிக்கொண்டான். ஏன் இறப்பு இங்கே அழுகையாய்ப் போனது? மீண்டும் உள்ளே கேள்வி எழுந்தது. ஒரு தொடர்பு விட்டுப்போவதாலா? இறப்பதற்காகவே உயிர் என்பது வாழ்கிறது என்பதை மறந்து இறப்பை வெல்லவே உயிர் வாழ்கிறேன் என்பது போதையாய் மரத்துப்போனதா? அதிகபட்ச ஆசையென்பது இதுதானா? தொடர் உயிர் வாழ்தலில் சாதிக்கப்போவதென்ன? அல்லது வெறும் அதிக பட்ச 100 வருட் உயிர் வாழ்தலுக்கே மனமும் தயாராகிவிட்டதா? அதன்பிறகும் என்ன செய்வதெனத்தெரியாமலே இறப்பு பிறக்கிறதா?
ஒரு காதலிக்கும் பெண்ணின் குரல் கேட்டால் மரணம் பற்றிய சிந்தனைகள் யாருக்கேனும் வருமா? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வேளை எல்லாருக்குமே இப்படி ஒரு எண்ணம் வருமா? மறைத்து வெளியில் சொல்லாது தன் வேலை தன் காதல் தன் சம்பாத்தியம், கிரிக்கெட் என்று சுலபமாய் தாண்டுகிறார்களோ? அல்லது என் யோசனையே தவறா?
அம்மா டைம் ஆச்சு வர்ரேன். ஸ்வாதி தெரு இறங்கும் குரல் கேட்டது.
நேரே அவள் பின்னாலே சென்றான். அவள் ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாப்பை அடைந்தாள். அப்போதுதான் கிளம்பி விட்டிருந்த பஸ்ஸில் அனைவரும் ஏறிச்சென்று விட்டிருந்தனர். காலியாய் இருந்த அந்த பஸ் ஸ்டாப்பின் இருக்கையில் அமர்ந்தவாரே மெதுவாய் செல்போனை எடுத்தாள் ஸ்வாதி. அதில் பதிவு செய்யப்பட்டிருந்த போட்டோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவள் திடீரென ஒரே படத்தை வெறித்துப் பார்த்தாள் அது அவனுடைய படம். எப்போது இதை எடுத்தாள். என்னை ஏன் கவனிக்கவில்லை, ’கிறீச்’சென்ற சப்த்தத்துடன் ஒரு பஸ் வந்து நின்றது. சட்டென கவனம் கலைந்து இருக்கையிலிருந்து எழுந்த ஸ்வா அவனுள்ளே புகுந்து நேரே எழுந்து பஸ்ஸில் ஏறினாள். தன்னுள் அவள் புகுந்து போனதை அதிசயித்தவாறே அவன் மெதுவாய் திரும்பினான். புகை கக்கிக்கொண்டு பஸ் வேகமெடுத்துப் போய்க்கொண்டிருந்தது. அவன் காத்திருந்தான்.
--
”இங்கதான் இருக்கீங்களா?” ஸ்வாதி கேட்டபடியே பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்தாள். அவன் திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான்.
”ஹலோ ஷான் உங்களத்தான், என்ன அப்படிப் பார்க்கறீங்க?”
“ ஹாய் ஸ்வா..”
”உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.. ” என்றாள் ஸ்வாதி.
அவன் சிரித்தான். ”நானும்தான்” என்றான்.
---
அன்றைக்கு மொத்தம் மூன்று குண்டுகள் ஹோட்டல், மார்கெட் மற்றும் பஸ்ஸில் 68 பேரை பலிவாங்கி இருந்தது.
.
41 comments:
//குரல் கேட்க்கும்போதே மனசு பூராவும் ஜயண்ட் வீலின் மேலிருந்து கீழே வரும்போது அடிவயிற்றில் வரும் ஜிலீரென்ற உணர்ச்சிகளால் பீடித்திருந்தது.
//
ம்...நடத்துங்க
அப்படிப்போடு. அடி தூள். கை கொடுங்க ஷங்கர்.
”என்னை ஏன் கவணிக்கவில்லை” என்ற வார்த்தையில் விளங்கிவிட்டது,
ஆனால் அவன் மட்டும் தான் மரணித்திருந்தான்னு நினைத்தேன்.
---------------------
மரணம் பற்றிய நல்லதொரு புரிதல்
---------------------
செத்தா தான் சுடுகாடு தெரியுமான்னு கேட்பாங்க - ஆனால்
[[மனசு பூராவும் ஜயண்ட் வீலின் மேலிருந்து கீழே வரும்போது அடிவயிற்றில் வரும் ஜிலீரென்ற உணர்ச்சிகளால் பீடித்திருந்தது]]
ஆனால் இது உணராமல் உணர இயலாது.
/////அன்றைக்கு மொத்தம் மூன்று குண்டுகள் ஹோட்டல், மார்கெட் மற்றும் பஸ்ஸில் 68 பேரை பலிவாங்கி இருந்தது.////
..... நல்லா எழுதி இருக்கீங்களே....... சூப்பர்! நல்ல வேளை, நம்ம ஊருல அருவா கிடைக்கிறது மாதிரி கன்னு எளிதா கிடைக்கிறது இல்லை.......
சூப்பர்..அசத்திட்டீங்க.... ஷங்கர்...
@ VISA: ரைட்டு! :)
@ வானம்பாடிகள்: நன்றி பாலா சார்! :)
@ ஜமால்: நன்றி ஜமாலண்ணே!!
வீல்லயும், வீதிலயும் சுத்தின அனுபவ effect தான் அது!! :))
@சித்ராஜி:: ஆமாங்க. :) நன்றி! :))
@அஹமது: நன்றிங்க அஹமது!! :))
//மரணம் என்பது அவஸ்த்தை என்றால் மரணிக்கும் தருவாயில் வரும் உடல் வேதனைகளா? மன வேதனைகளா? பின் எப்படி சந்தோஷத்தை மரண அவஸ்த்தை என்று எண்ணிக்கொள்கிறேன்.//
வார்த்தை ஜாலம் பண்ணி இருக்கிறது.
அடேங்கப்பா!! அசத்தல் ஷங்கர்.
சூப்பர் தல..... கிளப்புங்க
ண்ணா சத்தியமா புரிஞ்சு போச்சுங்கண்ணா உங்களப் பத்தி.
அது ஏங்ணா எல்லாரையும் கொன்னுடறீங்க இல்லைன்னா தனியாளா உலகத்துல சுத்த விட்டுர்றீங்க? என்னமோ போங்க. "இந்த மனித குலத்தின் மீது தங்களுக்குள்ள பகை அப்பட்டமாய் தெரிகின்றது. சத்தம் போடாமல் வந்த வழியே செல்வதுதான் எமக்கு நல்லது, தளபதி, வாரும் பட்டறையை தாண்டி."
@மால்குடி: வாங்க! நன்றிங்க! :))
@சை.கொ.ப.: நன்றி நண்பரே! :))
@முரளி: நன்றி முரளி! :))
@அன்னு: வாங்க! என்னங்க சிஸ்டர் இப்படி சொல்லிட்டீங்க! ஆவியானாலும் வாழ்வு கொடுத்து காதல் வளர்த்துருக்கேனே! :) மனித குலத்தின் மீது பகையா! ஆண்டவன் ஃபார்முலாங்க அது! :))
--
அடுத்த பட்டறையில சோகம் வராம திகில் பண்ணிடலாம்! :))
இந்த கதை புரிஞ்சுடுச்சுங்க.. அப்ப, நானும் எலக்கியவாதி ஆகிட்டேனா??
ஷங்கர் சார்.. கொன்னுட்டீங்க!!!
//மரண அவஸ்த்தை. ஆச்சர்யமாய் இருந்தது அவன் யோசிப்பு. மரணம் என்பது அவஸ்த்தை என்றால் மரணிக்கும் தருவாயில் வரும் உடல் வேதனைகளா? மன வேதனைகளா? பின் எப்படி சந்தோஷத்தை மரண அவஸ்த்தை என்று எண்ணிக்கொள்கிறேன். அவனே கேட்டுக்கொண்டான். ஒஹ் புரிந்துவிட்டது. இந்த வாழ்வு. யெஸ் இந்த வாழ்வு இந்த பிறப்பின் பூரணம் மரணம். அதை நோக்கியே இந்த உயிர் வளர்கிறது, சிரிக்கிறது, அழுகிறது, அகங்காரம் கொள்கிறது, அன்பு கொள்கிறது, அழிவு செய்கிறது, ஆக்கம் செய்கிறது, அடுத்த மரணத்தினை தயாரிக்க கூடல் கொள்கிறது, மரணத்தை குழந்தையாய் பெற்று கொஞ்சுகிறது, தாலாட்டி சீராட்டி, மரணமில்லா பெருவாழ்வு போதனைகள் புகுத்தி மகனே உன் சமர்த்து என்று இந்த உயிர் கோளில் மேய விடுகிறது. உயிருடன் இருக்கிறதா என்று தினமும் மரணத்தின் வளர்ச்சியை கவனமாய் பாதுகாக்கிறது.//
கலக்கல்..
//இந்த கதை புரிஞ்சுடுச்சுங்க.. அப்ப, நானும் எலக்கியவாதி ஆகிட்டேனா??
//
??
//
ஷங்கர் சார்.. கொன்னுட்டீங்க!!!
//
யாரை....??
@ ஜெட்லி
////
ஷங்கர் சார்.. கொன்னுட்டீங்க!!!
//
யாரை....??//
ஹீரோ ஹீரோயின் உட்பட 68 பேரை.. (கதைய படிச்சீங்களா??) ;-)
ரொம்ப நல்லாயிருக்கு ஷங்கர்ஜி. நல்ல வாசிப்பனுபவத்தை உணரமுடிகிறது.
நிச்சயமற்ற வாழ்க்கை. ஆனால் அதனுடே, ஏதோ ஒரு நம்பிக்கையில் ஜீவிதம்.
அவர்கள் சேர்ந்ததுக்கு மூல காரணம்.. அந்த ஹேர் கிளிப்.. எப்படி ;)
”நானும்தான்”
இதான் புனைவா?கலக்குறீங்க போங்க...
ரொம்ப நல்லாருக்குங்க.
நல்லதொரு வாசிப்பனுபவம் ஷங்கர்.
//ஏன் இறப்பு இங்கே அழுகையாய்ப் போனது? மீண்டும் உள்ளே கேள்வி எழுந்தது. ஒரு தொடர்பு விட்டுப்போவதாலா? இறப்பதற்காகவே உயிர் என்பது வாழ்கிறது என்பதை மறந்து இறப்பை வெல்லவே உயிர் வாழ்கிறேன் என்பது போதையாய் மரத்துப்போனதா? அதிகபட்ச ஆசையென்பது இதுதானா? தொடர் உயிர் வாழ்தலில் சாதிக்கப்போவதென்ன? அல்லது வெறும் அதிக பட்ச 100 வருட் உயிர் வாழ்தலுக்கே மனமும் தயாராகிவிட்டதா? அதன்பிறகும் என்ன செய்வதெனத்தெரியாமலே இறப்பு பிறக்கிறதா//
இங்கேதான் நீங்கள் பளிச் என்று தெரிகிறீர்கள் சங்கர்! ஸ்தம்பித்துப் போய்விட்டேன்....அருமை!
அண்ணாத்த.. இந்த ஸ்வாதி யாரு? எப்பப் பாத்தாலும்... இந்தப் பேரு வருதே?
அப்புறம்.. இனிமே.. இப்படி டரியல் பண்ணுற மாதிரி தலைப்பு வைக்கிறது, பாலகுமாரன் மாதிரி கெக்கெபிக்கேன்னு எழுதறது எல்லாம் வேணாம்.
கடேசி எச்சரிக்கை.
அருமையா எழுதி இருக்கீங்க..
//////காதல் உள்ளே நுழையும் முன்பு வரை ஒரு ஆச்சரியம் நுழைந்த பின்னோ அது மரண அவஸ்த்தை////////
மிகவும் அருமை உணர்வுகளை மீண்டும் மீட்டத் துடிக்கும் விரல்களாய் வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி !
ஷங்கர்,மரணம் பற்றிய அவஸ்தை வரிகளைச் சொல்ல்யிருக்கிறீர்கள்.
திரும்பத் திரும்ப வாசித்தேன்.
புரிந்தும் புரியாதா மாதிரி.
உண்மைதானா...இப்படித்தானா !
உங்க கதை எல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு இரண்டு தடவையாவது படிக்கணும் சங்கர்ஜி..
hollywood bala.. ஊருல தான் இருக்கியா..?
ஷங்கர் அப்புறமா படிச்சிட்டு வர்றேன்.
Very nice; Pl. take care of some spelling mistakes.
நல்லவேள ரெண்டுபேரையும் கொன்னுட்டீங்க.... எங்க ஃபீல் பண்ண வச்சிடுவீங்களோன்னு பயந்துட்டேன்...
மரண விவரிப்பு அருமை.....
உங்களுக்கு எழுத்து எழுந்து நின்று சலாம் அடிக்கிறது. நீங்க ஏன் இலக்கியப் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது.
ஒருத்தர் மட்டும்தான் பேய் ஆகிருக்கார் என்று எனக்கு தோணுது...
நல்ல எழுத்து நடை.
பஸ், ஹோட்டல் ஓகே. மார்க்கெட்டுலேர்ந்து யாரு வரப்போறாங்க?..
உங்களுக்கு தனிமைன்னா பிடிக்குமா. இப்படி எல்லாரையும் காலி பண்ணிடறீங்களே :-))))))
இது செத்துப்போய் காதலா .. இல்ல.. காதல்னால செத்துப்போனதா .. ஒண்ணுமே புரியலியே ...
superb! nalla ezhuththu.. very interesting! :)
கலக்கல்..
@ அனு: நன்றிங்க! :))
@ நன்றி முகிலன்! :))
@ஜெட்லி: ராவணன் டிக்கெட் வாங்கிடும்மா எனக்கும் சேர்த்து! :)
@நன்றிங்க அனு! :)
@செ.ச: நன்றி நண்பா! :))
@தமிழ் உதயம் : ஆமாங்க. மிக்க நன்றி! :))
@பிரசன்னா: ஹி ஹி.. :))
@ கே.ஆர்.பி.செ: பஸ் ஸ்டாப்லயே வெய்ட் பண்ணுங்க! :))
@மயில்ராவணன்:: ரைட்டு! :))
@ இராமசாமி கண்ணன்:: நன்றிங்க! :))
@அக்பர்: மிக்க நன்றி அக்பர்! :))
@ தேவா : நன்றிங்க தேவா! :))
@ஹாலிபாலி:: @$^#$**(^*(^(*#(@)@$_$( மிக்க நன்றி! :))
@கலகலப்ரியா: நன்றி ப்ரியாஜி! :))
@பனித்துளி : நன்றி சங்கர்! :))
@ஹேமா: இருக்கலாம் சகோ! :))
@நாடோடி::: அவ்வ்வ்வ்வ்:))
@கேபிள்சங்கர்: ரைட்டு! :))
@மோகன்குமார்; நன்றி ஜி! :))
@க.பாலாசி: நன்றி பாலா :))
@ஜெயந்தி:: அவ்வ்வ்வ்வ்:)) (ஸ்ட்ரெயிட்டா புக்கர்தாங்க! :)
@விதூஷ்:: நன்றிங்க! :))
@அமைதிச்சாரல்:: ஆமாங்க பிடிக்கும்! :))
@ருத்ர வீணை:: ரெண்டுமே! :))
@மாதங்கி: நன்றிங்க! :))
@ஜெஸ்வந்தி:: மிக்க நன்றிங்க! :))
ஆமா ஷங்கர் அண்ணே..
இன்றைக்கு இருப்பவன் நாளைக்கு இருப்பதில்லை.. இடைப்பட்ட இந்த குறுகிய காலத்தில் என்னென்ன ஆட்டம் போடுகிறான்..
புரியவைத்து தெளியவைத்ததற்கு நன்றி...
இன்னமும் நிறை வாசிக்கனும்னு தெரிஞ்சிகிட்டேன்.
Post a Comment