பலா பட்டறை: ஏழாம் உலகம்..

ஏழாம் உலகம்..

ஏழாம் உலகம்..


நல்லவை தீயவை என இவ்விரண்டுமே ஒரே ஓட்டைப் படகில் பிரயாணம் செய்பவைதான். ஆறறிவே அதற்கு வண்ணம் தீட்டுகிறது. இனிப்பு தடவுகிறது. விளம்பரம் செய்கிறது, விற்பனை செய்கிறது. தானே அந்த ஓட்டைப் படகென்று அறியாமல் பிரயாணம் செய்கிறது. மூழ்கிப் போகிறது.

எல்லா உயிர்க்கும் வாழ்தல் என்பது அடிப்படை ஆசைதான். உணவுக்கான சண்டைகளும், கொலைகளும் எல்லா உயிர்களுக்கும் பொது.  ஆனால் பிச்சை எடுத்தல் என்பது மனித இனத்துக்கே சொந்தம். அது தனித்துவமானது. ஆத்திகம், நாத்திகம், மேலும் எல்லா இசங்களும் இதில் அடிபட்டுப்போகும்.  சரி போகட்டும். வேறு வழி இல்லை. உணவு வேண்டும். உயிர் வாழ்தல் முக்கியம் என்ன செய்யலாம் என்று யோசித்தது ஆறறிவு. தன் இரை வரும் வழியில் காத்திருந்து அடித்துப் பசியாறும் விலங்குகளைப் போல பாவங்கள் சுமந்து வரும் மனிதர்களை, இரக்கங்கள் சுமந்து வரும் மனிதர்களைக் குறி வைத்துக் காத்திருந்தது.

ஒப்பீடும் ஆறறிவின் நீட்சியல்லவா? சும்மா வருமா இரக்கமும்? பரிவும்?
அங்கஹீனமும், அருவருப்புகளும், கதறல்களும் மனித இரக்கத்தின் ஊற்றல்லவா?

குறிபார்த்து அடித்தது. யார் கோவிலுக்கு வருவார்கள்? கடவுளுக்கு நன்றி சொல்பவர்களா? கோரிக்கை வைப்பவர்களா? எது முதலில் நன்றியா? கோரிக்கையா? கோரிக்கைகளுக்கு விலை உண்டு. பயத்திற்கு விலை உண்டு.

தர்மம் என்று அதற்குப் பெயர்.

அம்மா சாமி தர்மம் போடுங்கம்மா!

--

இந்த உலகில் பிச்சை எடுக்காதவர் என்று எவரேனும் உண்டா? பிச்சை போடுங்கம்மா. தர்மம் போடுங்கம்மா என்றழைப்பவரை நாம்
பிச்சைக்காரர்களாக்கிவிட்டோம் மற்றவர்களை வேறு பெயர்களில் அழைக்க ஆரம்பித்து விட்டோம். நாமே இயற்கையிடம் கையேந்தும் பிச்சைகள் என்பதனை சுலபமாய் மறந்தோமே அதுபோல.

இந்த நாவல் அது போல பிச்சை எடுக்கும் மனிதர்களின் வாழ்க்கையை அதன் குரூரத்தை, வேதனையை, அவர்களை கவனமாய் பாதுகாக்கும் மனிதர்களை, அவர்களுக்கு நம்மை விட்டா யார் இருக்கா? என்ற இரு பக்கத் தத்துவ சூட்சுமத்தை பக்கம் பக்கமாய் அலசுகிறது.

எழுத்துக்களின் வலிமை என்பது இதுதான். அதுவே ஆச்சர்யமும். கொக்கோகம் கிளர்ச்சி செய்யும். குறி நிமிர்த்தும், வெறி ஏற்றும். காதலெனில் போதை வரும், மோனம் வரும் ஆனால் அவைகளில் விஸ்தரிப்பு முக்கியம் நீட்டி முழக்கிச் சொல்லும்போது, நகாசு வேலைகள் முக்கியம் அப்பொழுதுதான் அது வாசிப்பவரைக் கவரும். ஆனால் இந்தப் புத்தகத்தில் அது இல்லை. உள்ளது உள்ளவாரே சொல்லப் பட்டிருக்கிறது. இல்லை கேட்கப்பட்டிருக்கிறது. எந்த மெனக்கெடலும் இல்லாமல் நீ இதில் யார்? பிச்சை எடுப்பவனா? எடுக்க வைப்பவனா? கூட உதவி செய்பவனா? என்னும் சுய தேடல் உள்ளுக்குள் நம்மை அறியாமலேயே விதைக்கப் படுகிறது. படிக்கும்பொழுது இல்லாவிட்டாலும் என்றேனும் ஒரு நாள் அது முளைவிடும் எண்ணங்கள் தின்று கேள்விப் பூக்கள் சொறியும். அதுவே இதன் வெற்றி.

இதில் வரும் போத்திவேலுப் பண்டாரத்தைப் பார்த்து கோவப் பட முடியுமா? உடலின் குறைகளுக்கேற்றவாறு விலை பேசி மனிதர்களை விற்று, வாங்கி தொழில் நடத்தி வருமானம் பார்க்கும் அவனுக்கும் மூளையின் நிறை/குறைகளுக்கேற்ப எண்களில் மதிப்பிடப்படும் மார்க்ஷீட்டினடிப்படையில்/ அனுபவத்தின் அடிப்படையில் வேலை தரும்.பெறும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? மொத்த உயிரினங்களின் சாட்சியாய் சொல்லவேண்டுமெனில் ஒரு மரத்தை அறுத்து மேசை நாற்காலி செய்த என்னைவிட போத்திவேலு ஒன்றும் மோசமில்லை.


--

எல்லையில்லாத ஆகாசப் பெருவெளியும், அதையொத்த நிலமும் நமக்குச் சொல்வதெல்லாம் நாமெல்லாம் தூசிலும் தூசு என்பதையே! ஆனாலும் நான் எனது என்ற சுய மோகம் பிடித்த மனது ஏறி மிதித்து காணாமல் போகும் பலவற்றில் இவர்களின் வாழ்க்கையும் ஒன்று. கடவுளை கல்லால் வடித்தவன் நிச்சயம் புத்திசாலிதான் இல்லையென்றால் மிதிப்பதுவும் வணங்குவதும் ஒரே கல்லென்ற உணர்வு என்றோ வந்திருக்குமே?

இதெல்லாம் படிக்கவேண்டுமா என்றால். ஆம் நிச்சயம் படிக்கவேண்டும். யோசிக்கத் தெரிந்த உயிர்களின் கசடுகள் கிளறப் படவேண்டும். அப்பொழுதுதான் யோசிக்கப் படாதவைகள் வெளிவரும் கூடவே தெளிவும். தெரியும்தானே உலகப் பேரழகிக்கும் உதிரப் போக்கும், மல ஜலமும் உண்டு. வாசனை திரவியங்களுக்கோ அற்பாயுசு!

--மிதிப்பதுவும் அதுவே
வணங்குவதும் அதுவே
என்றறியாத மனிதக்கூட்டம்
கோவில் சுற்றி
காசு கொடுத்து
சிறுநீர் கழித்து
கவனமாய் குதிகால் கழுவியது
சனி பிடிக்காமலிருக்க..

கடவுளை முதலில்
கல்லால் வடித்தவன்
சிரித்துக் கொண்டிருந்தான்..!--

ஒரு நன்றி: இந்தப் புத்தகம் நண்பர் ரோமியோ அவர்களால் எனக்குப் பரிசளிக்கப் பட்டது!! :))

விலை: ரூ.150/- கிழக்கு பதிப்பகம்.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்.

42 comments:

Paleo God said...

மக்களே, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? :))

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்தல் ஜீ

------------

நாங்கள் நலமே - நீங்களும் தானே ...

எறும்பு said...

செல்லாது செல்லாது நான் இந்த புக்க படிச்சுட்டு இருக்கேன். அடுத்த வாரம் இத பத்தி எழுதலாம்னு இருந்தேன்.. வட போச்சு

பிரபாகர் said...

சேம் பிளட்... படிக்கத்தூண்டும் அளவிற்கு சூப்பரா எழுதியிருக்கீங்க! இதற்கான பாராட்டு போனில் இந்த பின்னூட்டத்துக்குப் பின்!

பிரபாகர்...

Ramesh said...

பகிர்வுக்கு நன்றி...
கடைசியில் அசத்தல்
நலம் நண்பா
தொடருங்கள்

எறும்பு said...

//தெரியும்தானே உலகப் பேரழகிக்கும் உதிரப் போக்கும், மல ஜலமும் உண்டு//

ஷங்கர் நீங்கள் சித்தர் ஆயாச்சு.

சித்தர் சங்கரானந்தா

எறும்பு said...

நீங்கள் ஏன் சாரு நிவேதா புத்தகம் பற்றி எழுதுவதில்லை. அப்படி என்றால் நீங்கள் ஜெயமோகன் அடிவருடியா?

எறும்பு said...

//அவனுக்கும் மூளையின் நிறை/குறைகளுக்கேற்ப எண்களில் மதிப்பிடப்படும் மார்க்ஷீட்டினடிப்படையில்/ அனுபவத்தின் அடிப்படையில் வேலை தரும்.பெறும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன///

திரும்ப திரும்ப யோசிக்கிறேன்..
திரும்ப திரும்ப யோசிக்கிறேன்..
திரும்ப திரும்ப யோசிக்கிறேன்..
திரும்ப திரும்ப யோசிக்கிறேன்..
திரும்ப திரும்ப யோசிக்கிறேன்..

Anonymous said...

அஹம் ப்ரம்மாஸ்மி!!!

vasu balaji said...

வாங்கணும் ஷங்கர். அருமையான அறிமுகம். ஆமாம் முகிலன்ல ப்ராமிஸ் பண்ண வெண்ணை என்னாச்சு?

Paleo God said...

@ ஜமால்:: வாங்க ஜமால் நன்றி.:)


@ எறும்பு: ஆஹா நீரும் எழுதும் ஓய்! :)) அடிவருடியா? இருங்க பழனுக்கு கூட்டிட்டுப்போறேன்!

@ பிரபாகர்: கண்டிப்பா படிங்க பிரபா. (போன் சிக்னல் வீக் கிராமம்னா அப்படித்தான் வெற்றிவேல் வீரவேல்னு மெதுவாய்த்தான் வருவாய்ங்க போல!:)

@ றமேஸ் : வாங்க றமேஸ். நன்றி:))

@ சின்ன அம்மிணி: ததாஸ்து! :)) நன்றிங்க!

@ வானம்பாடிகள்: நிச்சயம் படிச்சிட்டு நீங்களும் எழுதுங்க சார். வெண்ணை: விரைவில்! :))

நாடோடி said...

அதுக்குள்ள‌ ப‌டிச்சி முடிச்சி விம‌ர்ச‌ன‌மும் போட்டாச்சா!!!!.... வாழ்த்துக்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி..

CS. Mohan Kumar said...

Thanks to Romeo & Shankar.

Shankar: Hope Internet started working & you will write often.

Prasanna said...

அற்புதமான அறிமுகத்திற்கு நன்றி.. இதே போல் நீங்கள் படிக்கும் எல்லா புத்தகங்களையும் அறிமுகம் செய்யவும் :)

கலகலப்ரியா said...

படிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருக்கேன்... நல்லா எழுதி இருக்கீங்க...

||அதையொத்த நிலமும் நமக்குச் சொல்வதெல்லாம் நாமெல்லாம் தூசிலும் தூசு என்பதையே||

எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்... பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்...

தமிழ் உதயம் said...

படிக்கும் ஆவலை தூண்டிய விமர்சனம்

அன்புடன் நான் said...

உங்க நூல் அறிமுகம் ... அந்த நூலை படிக்கும் ஆவலை தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

'பரிவை' சே.குமார் said...

படிக்கும் ஆவலை தூண்டிய விமர்சனம் , பகிர்வுக்கு நன்றி...

நலம் நண்பா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரோமியோவிடம் என் பெயரையும் சொல்லி வைக்கவும் :))

செ.சரவணக்குமார் said...

ஏழாம் உலகம் படித்துப் பிரமித்த நாவல்.

புத்தகம் பற்றி பகிர்ந்துகொண்ட விதம் மிக அருமை ஷங்கர்ஜி.

என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? புது வீட்டுக்குப் போனதும் பிஸியாயிட்டீங்களோ?

பழையபடி நிறைய எழுத வாழ்த்துகள் நண்பா.

VISA said...

எழாம் உலகம். கவிதை அருமை. நிறைய எழுதுங்கள் ஷங்கர்

ஹேமா said...

நிறைய நாளாக் காணோம் ஷங்கர்.சுகம்தானே .

சீமான்கனி said...

நல்ல அறிமுகம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் பகிர்வு.நன்றி ஷங்கர்ஜி...கொஞ்சநாளா ஆளைக்காணோம்??நலம்தானே???

shortfilmindia.com said...

jeyamohan.. எனக்கு அவ்வளவாக இண்ட்ரஸ்ட் இல்லாவிட்டாலும் நிச்சயம் படிக்க தூண்டும் விமர்ச்னம்.. நன்றி ஷங்கர்.

பா.ராஜாராம் said...

எவ்வளவு நாளாச்சு! :-)

நல்ல pagirvu! nandri shangar!

Radhakrishnan said...

பயணித்தேன். அருமை.

Romeoboy said...

வித்தியாசமான விமர்சனம் இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம். படிக்க படிக்க ஆவல் தான் .

Unknown said...

அண்ணே ஆளையே காணோம்.. அடிக்கடி எழுதங்க..

ஏழாம் உலகம் இப்போதும் எங்கு பிச்சை எடுப்போரை பார்த்தாலும் நினைவில் சுழலும்..

கவிதைக்கு பாராட்டு..

'பரிவை' சே.குமார் said...

namma valaikkum vanthu porathu....

http://www.vayalaan.blogspot.com

Vidhoosh said...

நாங்க மட்டும் வாங்கித்தான் படிக்கணுமோ? பின்னூட்டம் மற்றும் வோட்டு போட்ட அன்பர்கள் எல்லோருக்கும் அன்பளிப்பா ஒரு புஸ்தகம் நீங்களே ஏன் வாங்கி கொடுக்கக் கூடாது?

Vidhoosh said...

நானும் வோட்டு போட்டிருக்கேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

மணிஜி said...

//Vidhoosh(விதூஷ்) said...
நானும் வோட்டு போட்டிருக்கேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்//


நாங்களும்தான் (அப்ப நீங்க?)

பாலா said...

//கொக்கோகம் கிளர்ச்சி செய்யும். குறி நிமிர்த்தும், வெறி ஏற்றும். //

யோவ்... 18+ன்னு போட்டிருந்தா நாங்க இந்த பதிவை படிச்சிருக்க மாட்டமில்ல??!!

என் மூணு வயசு பொண்ணு இப்பல்லாம் இண்டர்னெட் ப்ரவுஸ் பண்ணுது. எங்க உங்க வெப்சைட் வந்து படிச்சிடுமோன்னு ரொம்ப பயமாயிருக்குங்க.

பின்னோக்கி said...

இவ்வளவு சீக்கிரமாக ரோமியோ புக் அனுப்பி, படித்து, விமர்சனம். சூப்பர் ஃபாஸ்ட்.

சாமக்கோடங்கி said...

அண்ணா.. உங்களின் எழுத்தின் வீரியம்.. அடடா வாய்ப்பே இல்லை.. உங்களைப் போன்றோரின் நட்பு கிடைத்ததில் அடியேனுக்கு பெருமகிழ்ச்சி..

கண்டிப்பாக அந்த புத்தகத்தைப் படிக்கிறேன்..

//

எல்லையில்லாத ஆகாசப் பெருவெளியும், அதையொத்த நிலமும் நமக்குச் சொல்வதெல்லாம் நாமெல்லாம் தூசிலும் தூசு என்பதையே! //

ஆம்.. காக்கைக்கும், கழுதைக்கும், பூச்சிக்கும் புழுவுக்கும் இருக்கும் அதே உரிமை தான் நமக்கும் இப்பூவுலகில்.. நல்லதொரு ஆறாம் அறிவை நமக்கு மட்டும் கொடுத்தான், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல், போட்டி, பொறாமை, வஞ்சகம், வெறி, கொலைகள், கொள்ளைகள் எனப் பாதகங்கள் செய்து தானும் அழிந்து நாட்டையும் அழிக்கும் இந்த மனிதப் பதர்களை என்னவென்று சொல்ல...? ஓட்டைப் படகை உணரும் வரை நமது வாழ்க்கை இப்போது தான்.. நீங்கள் என்ன மரவேலை செய்கிறீர்களா,,,,? இடையில் ஒரு வரி பார்த்ததும் கேட்கத் தோன்றியது...

நன்றி அண்ணே..

பாலா said...

//எல்லையில்லாத ஆகாசப் பெருவெளியும், அதையொத்த நிலமும் நமக்குச் சொல்வதெல்லாம் நாமெல்லாம் தூசிலும் தூசு என்பதையே! //

ஐயய்யோ... இப்படியெல்லாம் வேற எழுதியிருந்தீங்களா???

நல்லவேளை.. நான் கொக்கோகம் வரைக்கும்தான் படிச்சேன்.

பாலா said...

39, 21, 16, 12, 10, 8, 1

குட் ப்ராக்ரஸ்!! சீக்கிரம்.. என்னை மாதிரியே ஆக வாழ்த்துகள்!!! :)

R.Gopi said...

வாங்க ஷங்கர்....

ஏழாம் உலகம் படிச்சாச்சா... வெரிகுட்...

//Vidhoosh(விதூஷ்) said...
நானும் வோட்டு போட்டிருக்கேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் //

விதூஷ், நீங்களுமா?

க.பாலாசி said...

நல்ல விமர்சனமுங்க... இனிமேத்தான் நண்பர் அகல்விளக்கு மூலமா இந்த புத்தகத்தை படிக்கப்போகிறேன்.

திவ்யாஹரி said...

நல்ல விமர்சனம் அண்ணா.. வாங்கி படிக்கிறேன்..

Paleo God said...

@ நாடோடி: நன்றி ஸ்டீபன் :)

@ மோகன் குமார்: இன்னும் இல்லைங்க ஜி. அனாலும் அட்க்கடி கடிக்க முயற்சிக்கிறேன்.

@ பிரசன்னா: முயற்சிக்கிறேன். நன்றிங்க.

@ கலகலப்ரியா: படிங்கஜி. கண்ணில் நீர் வரவழைக்கும் குரலும் பாடலும் நினைவூட்டலுக்கு
நன்றி! :)

@ தமிழ் உதயம்: நன்றிங்க.:)

@ சி,கருணாகரசு: நன்றிங்க தோழர்! :)

@ சே.குமார்: நன்றி நண்பரே :)

@ ராதாகிருஷ்ணன்: கண்டிப்பா சார்.:)

@ செ.சரவணக்குமார்: நானும் பிரமித்தேன்
சரவணன். நன்றி:)

@ விசா: நன்றிங்க விசா:)

@ ஹேமா: நல்லா இருக்கேன் சகோ. :)

@ சீமான்கனி: படிங்க கனி. நன்றி:)

@ கேபிள்: படிங்க ஜி நீங்களே இப்படி சொல்லலாமா?
:) எறும்பு நோட் திஸ் பாயிண்ட்:)

@ பா,ராஜாராம்: நன்றிண்ணே:))

@ V.Radhakrishnan@: நன்றிங்க:)

@ ரோமியோ: படித்து முடித்ததும் தோன்றும்
எண்ணங்கள் தவிர விமர்சனம் என்பது இந்த நாவலுக்கு கடினமென்றே எனக்குத் தோன்றுகிறது ரோமி. மற்றபடி உங்களுக்கு இன்னுமொருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.:)

@ கே.ஆர்.பி: நன்றிங்க செந்தில்! :))

@ சே.குமார்: படித்துக்கொண்டுதான் இருக்கேன்
நண்பரே:)

@ விதூஷ்: 38 வருஷத்துல ஒரே ஒரு முறை ஒரு
பரிசு கெடச்சுது தப்பாங்க! :))

@ மணிஜீ: நானும்தான் :)

@ ஹாலிபாலி: எழுதும்போதே நினெச்சேன். கரெக்ட்டா இதத்தான் கமெண்ட்டுவீங்கன்னு:))

@ பின்னோக்கி: ஆமாங்க புத்தகம் அப்படி:))

@ பிரகாஷ்: நன்றி பிரகாஷ் உங்கள் நட்பும் எனக்குப் பெருமைதான்.:) ஜீவனுள்ள ஒரு மரத்தை அறுக்கும்போது வராத வேதனை சக மனிதனை துன்புறுத்தும்போது வருகிறதே என்பதே அந்த வரிகள்.

@ ஹாலி: நீங்க அதுவரைக்கும்தான் படிப்பீங்கன்னு தெரியும்:)) அல்மோஸ்ட் உங்களமாதிரி ஆயாச்சு. சந்தோஷம்தானே?

@ க.பாலாசி: படிங்க பாலாசி. படிச்சிட்டு எழுதுங்க
உங்க பார்வையைக் காண ஆவல்.:)

@ திவ்யாஹரி: வாம்மா:) நலம்தானே? நன்றி:)

ராம்ஜி_யாஹூ said...

சினிமாவாக பார்த்த பிறகும் உங்களால் ரசித்துப் படிக்க முடிகிறது என்றால், ஜெயமோகன் அவர்களின் எழுத்தின் வீச்சை நாம் புரிந்து கொள்ளலாம்.

பதினைந்து வருடங்கள் முன்பு சொல்வார்கள்.

டீவியில் ராமாயணத்தைப் பார்த்த பிறகு , ராமாயணம் புத்தகத்தில் படிக்க சுவாரஸ்யம் இருக்காது.