எழுத்துக்களாலான நட்புகளின்
முகம் பார்த்தலின் மிச்சமாய்
அவரவர் கழட்டிப் போட்ட சட்டைகளில்
அனைவரின் வாசமும்..
--
நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..
--
என் விரலிலிருந்து வழியும்
ரத்தம் பாதிவெட்டுண்ட
ஆப்பிளின் மேலே
உணர்த்தியது
பழத்தின் வலியை
--
உயர்த்திய கொள்ளி
வெறுப்பைத் தந்தது
காலடியில் தாழ்த்தியும்
நிமிர்ந்தேதான் எரிகிறது.
--
அது ஆயிற்று குரங்கிலிருந்து நிமிர்ந்து
செவ்வாயில் எல்லைக் கோடு கிழிக்க
அளவெடுப்பது வரைக்கும்..
இப்பொழுதுதான் பாலே குடிக்கின்றன
கடவுள் சிலைகள்..
.



70 comments:
Post a Comment