பலா பட்டறை: நேசத்தின் பொழுதுகளில்..

நேசத்தின் பொழுதுகளில்..


ழுத்துக்களாலான நட்புகளின்
முகம் பார்த்தலின் மிச்சமாய்
அவரவர் கழட்டிப் போட்ட சட்டைகளில்
அனைவரின் வாசமும்..

--

நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..

--

ன் விரலிலிருந்து வழியும் 
ரத்தம் பாதிவெட்டுண்ட
ஆப்பிளின் மேலே
உணர்த்தியது
பழத்தின் வலியை

--

யர்த்திய கொள்ளி
வெறுப்பைத் தந்தது
காலடியில் தாழ்த்தியும் 
நிமிர்ந்தேதான் எரிகிறது.

--

து ஆயிற்று குரங்கிலிருந்து நிமிர்ந்து
செவ்வாயில் எல்லைக் கோடு கிழிக்க
அளவெடுப்பது வரைக்கும்..
இப்பொழுதுதான் பாலே குடிக்கின்றன 
கடவுள் சிலைகள்..




.

70 comments:

க ரா said...

கவிதைகளில் ஸ்ரீ ஸ்ரீ ஷங்கரானந்த சுவாமிகள் தெரிகிறார் :)

க ரா said...

இங்கன போடலாம கும்மிய. எல்லாரையும் கூப்பிடவா :)

க ரா said...

என் விரலிலிருந்து வழியும்
ரத்தம் பாதிவெட்டுண்ட
ஆப்பிளின் மேலே
உணர்த்தியது
பழத்தின் வலியை
---
அப்படின்னா இன்னிலேந்து நோ ஆப்பிளா :)

க ரா said...

ஹல்லோ மூனு கமெண்டு போட்டாச்சு. இன்னும் பதில் வரேலேன்னா என்னன்றேன்..

Paleo God said...

வடை கொத்திப் பறவை இராமசாமி வாழ்க! :)

geethappriyan said...

ரொம்ப நல்லாருக்கு நண்பா கவித,கவித

Paleo God said...

ஏங்க என் ‘டக்’ என்னன்னு தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேக்கலாமா இரா? :)

@ கீதப்ப்ரியன் : வாங்க. நன்றி. :)

geethappriyan said...

வடை கொத்திப் பறவை இராமசாமி ,அட நல்லாருக்கே பேரு

க ரா said...

வடை கொத்திப் பறவை
---
இந்த தலைப்பிலேயே எழுதிரலாம நம்ம கவிதைய....

Paleo God said...

கீதப்ப்ரியன்: அவருதாங்க என் கவிதைகளுக்கான டியூஷன் மாஸ்டர்.

Paleo God said...

@ இராமசாமி : குருவே உங்களுக்கில்லாததா? :)

ஜோதிஜி said...

கடந்த நான்கு மணி நேரத்திற்குள் உண்டான பாதிப்பு போல் தெரிகின்றதே?

துறவி வரட்டும், பேசிக்கொல் கின்றேன்.

க ரா said...

Blogger 【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...

@ இராமசாமி : குருவே உங்களுக்கில்லாததா? :)
----
அய்யோ அய்யோ :)

Paleo God said...

@ஜோ : இல்லீங்க கடந்த 24 மணி நேரங்களின் பாதிப்பு. :)

க ரா said...

யாருங்க அந்த துற்வி :)

ஜோதிஜி said...

ஓகோ அந்த 24 மணி நேர பாதிப்ப தணிக்க உ த கிடைத்தாரா(?)

Paleo God said...

@ இராமசாமி துறவி = ஹாலிவுட் கண்ணன் :)


@ ஜோ : நீங்க சொல்லித்தான் அண்ணன் வீட்டுக்கே போனேன். அது வேறங்க :)

ஜோதிஜி said...

ரகஸ்யத்த காக்கோனும் சிஷ்யா?

ஜோதிஜி said...

@ இராமசாமி துறவி = ஹாலிவுட் கண்ணன் :)


இராமசாமி கோவிச்சுக்காதீங்கண்ணே, நம்ம சங்கரும் நானும் ஒருத்தர்க்கிட்ட துறவறம் கத்துக்கிட்டுருக்கோம்.

என்னுன்னு மட்டும் கேட்காதீங்க?

ஷங்கர் வார்த்தை சிலம்பம் சூப்பரு

பாலா said...

அண்ணனை விடுறதா இல்லை.

ஆனது ஆச்சி.. அண்ணனையும் இந்த மேட்டர்ல கொசுவா நினைச்சிக்க வேண்டியதா இருக்கு.

--

வேற எதுவும் கவிதைல புரியலை. மீ த காலி குடம்??

ஜோதிஜி said...

அண்ணனை விடுறதா இல்லை.

பாலா நீங்க நினைக்கிற அளவுக்கு உத இல்ல. அவரு ஒரு பூச்சி. மனசுல பட்டத எழுதிட்டு அவரே மறந்துடுவாரு.

காலிகுடமா? ஷங்கர் ஷேம் ஷேம் பப்பி ஷேம்

sathishsangkavi.blogspot.com said...

//நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..//

சரியாச்சொன்னீங்க...

கவிதை கலக்கல்....

Paleo God said...

//வேற எதுவும் கவிதைல புரியலை. மீ த காலி குடம்??//

தல,

இராமசாமிகிட்டே கேளுங்க! உலகத்துக்கே புரியர மாதிரி நிறைய கவிதைகள் பார்ட்டிகிட்ட இருக்கு. :)

Paleo God said...

@ சங்கவி : வாங்க நண்பரே.:)

vasu balaji said...

என்னமோ ஆச்சி. செம மூட்ல இருக்காப்பல இருக்கு:). ஜோதிஜி வேற ஏத்தி விடுறாரு:). நமக்கெங்க புரியுது கவிஞருங்க மொழி.

Paleo God said...

@வானம்பாடிகள் : சார்ர்ர்ர்!!!!! :))

ஜோதிஜி said...

என்னமோ ஆச்சி. செம மூட்ல இருக்காப்பல இருக்கு:). ஜோதிஜி வேற ஏத்தி விடுறாரு:). நமக்கெங்க புரியுது கவிஞருங்க மொழி.


இல்லைங்க கொஞ்சமாவது இதை முயற்சி செய்து பார்க்கனும்ன்னு தான் உங்ககிட்ட அப்படி சொன்னேன். எத்தனை நாளைக்குத் தான் மத்தவங்க நன்றாக எழுதுறாங்ன்னு வேடிக்கை பார்த்துக் கொண்டுருப்பது.

50 எழுதுனா ஒன்னு தேறதா?

க ரா said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//வேற எதுவும் கவிதைல புரியலை. மீ த காலி குடம்??//

தல,

இராமசாமிகிட்டே கேளுங்க! உலகத்துக்கே புரியர மாதிரி நிறைய கவிதைகள் பார்ட்டிகிட்ட இருக்கு. :)
---
மீ த காலி அண்டா :)

'பரிவை' சே.குமார் said...

//நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..//

அருமையா இருக்கு ஷங்கர்.

க ரா said...

//
நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..//
இது வரைக்கும் ரெண்டு பேருக்கு இது பிடிச்சிருக்கு.. இன்னும் எத்தன் பேரோ :)

சாந்தி மாரியப்பன் said...

//அது ஆயிற்று குரங்கிலிருந்து நிமிர்ந்து
செவ்வாயில் எல்லைக் கோடு கிழிக்க
அளவெடுப்பது வரைக்கும்..
இப்பொழுதுதான் பாலே குடிக்கின்றன
கடவுள் சிலைகள்..//

அடுத்தபடியா சூரியனுக்கு போக ஆராய்ச்சி நடக்குது :-)))

நட்புடன் ஜமால் said...

அவரவர்களுக்கான அனுபவங்களை உங்கள் வார்த்தைகள் கொண்டு நிறப்பி கொள்கின்றன

சீமான்கனி said...

நிறை குடம் தழும்பும்னு தெரியும் ஆனால் இவ்வளோ சீக்கிரம் !!! வாழ்த்துகள் ஷங்கியானந்தரே ஆஷ்ரமம் அட்ரெஸ் வேணும்...

Ahamed irshad said...

Well..

சுரேகா.. said...

ஒவ்வொரு கவிதையிலும் வேறமாதிரி ஆயிடுறீங்களே பாஸு! பேசாம ஒக்காந்திருக்கீங்க! உள்ளே இப்படி ஒரு கவிஞன் இருக்கறதே தெரியாம நாம்பாட்டுக்கும் பேசிக்கிட்டிருந்தேனே!!

வாழ்த்துக்கள் நண்பா!!

பா.ராஜாராம் said...

நேசனோடு இருக்கும் போதே யோசிச்சேன். :-) ஜோக்ஸ் அபார்ட், எல்லாமே நல்லாருக்கு ஷங்கர்.

பின்னூட்டங்கள், :-))

இன்னும் விதூஸ் வரலையா? நாளைக்கு இன்னும் ரகளை இருக்கு.

பாலா said...

//பாலா நீங்க நினைக்கிற அளவுக்கு உத இல்ல. அவரு ஒரு பூச்சி. மனசுல பட்டத எழுதிட்டு அவரே மறந்துடுவாரு.
//

பாஸிஸ ஜோதிஜி ஒழிக.. ஒழிக.

இந்த வார்த்தைக்கு யாருனா அர்த்தம் சொல்லுங்கய்யா சாமீமீ...!!

பாலா said...

//எல்லாமே நல்லாருக்கு ஷங்கர்.

பின்னூட்டங்கள், :-))

//

ஷங்கர்.. இப்பல்லாம் நம்ம பா.ரா எங்க பார்த்தாலும் இதே மாறி கமெண்ட் போடுறாரே..?? இவரையும் கொசு லிஸ்டில் சேர்த்து அடிச்சிடுவோமா??

கவிதை எழுதி ஒரு மாசமாச்சி. கையெல்லாம் நடுங்குது.

ஹேமா said...

அப்பிள் கவிதை,
கொள்ளிக் கவிதை,கடவுள் கவிதை நல்லாயிருக்கு ஷங்கர்.

பாலா said...

//அப்பிள் கவிதை,
கொள்ளிக் கவிதை,கடவுள் கவிதை நல்லாயிருக்கு ஷங்கர்//

இதெல்லாம் நெசமாவே கவிதை தானுங்களா?

பாஸிஸத்தை விடுங்க. மொதல்ல இந்த கவிதைன்னா என்னன்னு யாருனா சொல்லுங்கப்பா சாமீமீமீ

கலகலப்ரியா said...

நல்லாருக்கு ஷங்கர்... கடைசி நச்சுன்னு இருக்கு...

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த பால் குடிக்கிற கவித, நச்.

அகநாழிகை said...

நேசமித்ரன் மற்றும் நண்பர்களுடனான சந்திப்பை மிக அழகாக கவிதைப்படுத்தியிருக்கிறீர்கள்.

//நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..//

இந்தக்கவிதை மிகவும் பிடித்தது.

பாலா said...

இனிமே யாருனா ‘நச்’ ‘நச்’ -ன்னு நச்சு பண்ணினா நச்’சின்னு ஒரு குத்து குத்தலாம்னு இருக்கேன்.

ஒழுங்கா.. இந்த நச்-சு புடிச்சங்க எல்லாம்.. இந்த கவிதைல என்ன புரிஞ்சதுன்னு இங்க விளக்க உரை எழுதிட்டு போங்கப்பா. நானும் தூங்காம கொள்ளாம.. இதே ஏரியாவை சுத்தி வந்துகிட்டு இருக்கேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..//

WOW...

Paleo God said...

@ஹாலி: கோனார் குறிப்புகளை மின் அஞ்சல் செய்கிறேன். தூங்கப் போங்க. :)

Unknown said...

கட்சி கவுஜ மட்டுந்தான்பா பிரிஞ்சிச்சி..

Jerry Eshananda said...

Applause....

பாலா said...

சரி.. சரி.. எதோ சொல்லுறீங்களேன்னு இந்த நச்சை எல்லாம் விட்டுட்டு தூங்கப் போறேன். காலைல எல்லாம் கரீகட்ட மெயில இருக்கோனும் சொல்லிட்டேன்.

இப்பத்தான் ஜோதிஜி கவிதைல ஒரு கமெண்ட் போட்டேன். மாட்ரேசன் முடிஞ்சி வரட்டும். அப்பத்தெரியும் மீ த ஹூ.

பாலா said...

மீ த 51-1 = 50

மரா said...

வடை கொத்திப் பறவை இராமசாமி ,அட நல்லாருக்கே பேரு :)

வ கொ ப ராம்சாமி வாழ்க வாழ்க :)

மரா said...

வ கொ ப ராம்சாமி வாழ்க வாழ்க :)

மரா said...

@ shankar
//கீதப்ப்ரியன்: அவருதாங்க என் கவிதைகளுக்கான டியூஷன் மாஸ்டர்.//

அப்போ கவிதை இன்னும் 4 பக்கம் இருக்கோனுமே? ஏன்னா கீதப்பிரியன் அமீரக உ.த அண்ணன் :)

சிவாஜி சங்கர் said...

//நிறைகுடங்கள் தளும்புவதை
நிரூபிக்கின்றன
சற்று முன் நிறைந்திருந்த
காலிக் கோப்பைகள்..//

Joobber :)

மரா said...

அமீரக உண்மைத்தமிழன் கீதப்பிர்யன் வாழ்க வாழ்க :)

மரா said...

கடேசி கவித மிக அருமை :)

ஜோதிஜி said...

@ஹாலி: கோனார் குறிப்புகளை மின் அஞ்சல் செய்கிறேன். தூங்கப் போங்க. :)

ஷங்கர் கவிதங்ற ஆசையே போயிடுத்து.


பாஸிஸ ஜோதிஜி ஒழிக.. ஒழிக.

ஏற்கனவே இங்கே ஒழிந்து தானே இருக்கிறோம். இதுக்கு மேலேயுமா?

ஜோதிஜி said...

அவரவர்களுக்கான அனுபவங்களை உங்கள் வார்த்தைகள் கொண்டு நிறப்பி கொள்கின்றன


அற்புதமான விமர்சனம்

ஜோதிஜி said...

ஒழுங்கா.. இந்த நச்-சு புடிச்சங்க எல்லாம்.. இந்த கவிதைல என்ன புரிஞ்சதுன்னு இங்க விளக்க உரை எழுதிட்டு போங்கப்பா. நானும் தூங்காம கொள்ளாம.. இதே ஏரியாவை சுத்தி வந்துகிட்டு இருக்கேன்.


அடடா ஒரு கதக்களியே நடந்து முடிந்துருக்கு.

நாடோடி said...

க‌விதைக‌ள் எல்லாம் ந‌ல்லா இருக்கு ஷ‌ங்க‌ர்ஜி.

க.பாலாசி said...

எல்லாமே நல்லாயிருக்குங்க... பச்சக்குன்னு ஒட்டினது கடையொன்னு... ப்ப்ப்ச்... கலக்கல்...

Vidhoosh said...

may i come in for கும்மிங்... ?

மரா, எறும்பு, மற்றும் ப.ப. ரசிகர் மன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கூடுமாறும் வேண்டிக் கொள்கிறேன்...

ருத்ர வீணை® said...

//
ஹாலிவுட் பாலா said...
மீ த 51-1 = 50
//

என்னையா இது இங்க வந்து கணக்கு போட்டுகிட்டு.. பேட் பாய்ஸ்..

இப்படியா கவிதை எழுதி பேஜார் பண்றது

சுஜா செல்லப்பன் said...

அருமையான கவிதைகள்..வாழ்த்துக்கள்!

dheva said...

நீங்க எழுதணும்னு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டிருந்த ஆட்களில் நானும் ஒருவன்...மழைக்காக காத்திருந்து மழையில் நனைந்த திருப்தி....சங்கர்...

எல்லாமே அருமை...!

sakthi said...

என் விரலிலிருந்து வழியும்
ரத்தம் பாதிவெட்டுண்ட
ஆப்பிளின் மேலே
உணர்த்தியது
பழத்தின் வலியை

அருமை சங்கர்

பாலா said...

///நீங்க எழுதணும்னு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டிருந்த ஆட்களில் நானும் ஒருவன்...மழைக்காக காத்திருந்து மழையில் நனைந்த திருப்தி....சங்கர்...//

இவருக்கு கட்டம் சரியில்லாதனால கட்டம் கட்டிட்டேன்.

சீக்கிரம் ஒரு கவித ரெடி..

ம.தி.சுதா said...

//....என் விரலிலிருந்து வழியும்
ரத்தம் பாதிவெட்டுண்ட
ஆப்பிளின் மேலே
உணர்த்தியது
பழத்தின் வலியை.....//
வன்முறை பிடிக்கவில்லையாயினும் இது ரொம்ப நல்லாயிருக்கு...

ஜோதிஜி said...

சீக்கிரம் ஒரு கவித ரெடி..

start ///////////music........

Paleo God said...

வருகை புரிந்த அனைவருக்கும் மிக்க நன்றி! :)