பலா பட்டறை: சக பதிவர்
Showing posts with label சக பதிவர். Show all posts
Showing posts with label சக பதிவர். Show all posts

அல்வாவோட ராவுகள்!


.

திரு நெல்வேலியில் பதிவர் உணவு உலகம் திரு.சங்கர லிங்கம் அவர்களை சந்தித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். நெல்லையில் உணவு சுகாதாரத்திற்காக சிறப்பான பல முயற்சிகள், அதிரடி ரெய்டுகள் போன்றவற்றால் முடிந்த அளவு சுகாதாரமான உணவு பொதுமக்களுக்குக் கிடைக்க ஆவன செய்துகொண்டு இருக்கும் அதிகாரியான அவர் உணவு கலப்படம் பற்றி விளக்கிய பல செய்திகள் பகீர் ரகம். 

சாதாரண கரும்புச்சாற்றில் கூட சாக்ரீன் கலப்பு, உபயோகித்த டீத்தூளை மறுசுழற்சி செய்து (இதுதான் சைனா டீ போல!)மக்களுக்கு கொடுப்பது. பழங்கள் பழுக்க வைக்க கார்பைட் கற்கள், அழுகிய காய்கறிகள் சல்லிசாக வாங்கி ஓட்டல்களில் பதார்த்தமாக்குவது, அதேபோன்று கெட்டுப்போன பழங்களை வாங்கி ஜீஸ் போட்டுக் கொடுப்பது, முக்கியமாக சுகாதாரமின்றித் தயாரிக்கப்படும் திடீர் இட்லி, தோசை மாவு இன்னும் வியாபாரிகளின் பணத்தாசைக்காக மக்களை நோயாளிகளாக்கும் கொடூரங்கள் கேள்விப்படும்போது என்னமாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் என்ற சலிப்பே மிஞ்சியது. சென்னையிலும் இது போன்ற அதிகாரிகளும் இருக்கிறார்கள் ஆனா பரவலாக ஏதும் செய்திகளைக் காணோம். ஹும்ம் என்ன செய்ய 15000 கோடி டர்ன் ஓவர் கும்பெனி டாஸ்மாக்கிலேயே சுகாதாரம் தாரைவார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் என்னத்தைச் சொல்ல?

சமீபத்தில் தமிழக அரசு நடத்திய சென்னை சுற்றுலாப் பொருட்காட்சியில் ஒரு லிட்டர் மினரல் தண்ணீர் பாட்டில் விலை ரூ.22/- யார் கேட்பது? மக்கள் நாமம் வாழ்க!

சரி அல்வா விஷயத்திற்கு வருவோம்!

திரு நெல்வேலியில் நாங்கள்தான் ஒரிஜினல் என்று அக்மார்க் டூப்ளிகேட் அல்வாக்கள் நிறையக் கிடைக்கின்றது. இரண்டு கடைகள் தவிர்த்து சில வித்தியாசங்களுடன் அதே பெயரில் விற்கப்படும் போலி அல்வாக்கள் அதிகம். சரி ஒரிஜினல் அல்வா என்னவிதமாகத் தயாரிக்கப் படுகிறது?
                                                      அல்வா கிண்டப் படும் காட்சி!                        

சம்பாகோதுமை, தாமிரபரணித் தண்ணீர், கைப் பக்குவம் இதுதான் ஃபார்முலா. சம்பாகோதுமையில் பாலெடுத்து, புளிக்கவைத்து, சர்க்கரை தண்ணீர் கலந்து, சற்றேறக்குறைய 23 மணி நேரங்கள் ஊறவைத்து, 1 மணி நேரம் அடுப்பில் கிண்டி கடைசியில் முந்திரி தூவி இறக்கி மறு நாள் விற்பனை செய்கிறார்கள். 
                                             தயாரானவுடன் அல்வா சுடச்சுட ரெடி
                                                           




கைகளால் கிண்டாமல் மிஷின் வைத்து செய்வது ஒரு முறை, பாரம்பரிய முறைப்படி கைகளாலும் விறகடுப்பாலும் செய்வது மற்றொறு முறை. சம்பா கோதுமை விலை அதிகம் என்பதால் சாதா கோதுமையில் கலர் எஸென்ஸ் சேர்த்து ஒரிஜினல் போல பாவ்லாவில் விற்பது பரவாலான முறை. க்ரைண்டர் போல ஒன்றில் கீழே பர்னர்கள் வைத்து மிதமான தீயில் கிண்டிக்கொண்டே இருப்பது போன்ற வடிவமைப்பில் மிஷினில் கைப் பக்குவ ரேஞ்சிற்கு டெக்னாலஜி தூள் பறக்கிறது.:))

டிஸ்கி: தலைப்பு விளக்கம் நைட்ல அல்வா சாப்ட்டா கிட்னிக்கு நல்லதாம்!

மீண்டும் சந்திப்போம்!

என்னை கவர்ந்த பத்து பெண்கள்.. (தொடர் பதிவு)



விதி வலிது எனக்கு பிடித்த பத்து பெண்கள் பத்தி சகோதரி திவ்யாஹரி எழுத கூப்பிட்டிருக்காங்க. ரைட்டு ஏற்கனவே எழுதியாச்சேன்னு பார்த்தா, சொந்தமா இருக்கக்கூடாதாமில்ல..:(

சரி புடிங்க..



ஏவாள்.

திருமதி.பாரதியார்.

என் தாயின் வயிற்றிலிருந்து என்னை வெளியே எடுத்து என் தாயை காப்பாற்றிய டாக்டர்.திருமதி.சுலோச்சனா

ஐடா ஸ்கடர், வேலூர் சிஎம்சி மருத்துவமனை துவங்க காரணமாயிருந்தவர்.

கஸ்தூரிபாய் காந்தி

அஞ்சலி டெண்டுல்கர்

கிரன் பேடி.

எஸ்.ஜானகி

கேட் வின்ஸ்லட்

அவ்வையார்.

------

வரிசை எல்லாம் இல்லைங்க - அப்படியே தோணினதுதான்..:)

இப்ப ..


நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,

வரிசை முக்கியம் இல்லை.,

ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,

இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள் (இந்த வம்பே வேணாம்.. யார் வேண்டுமானாலும்/எல்லோரும் எழுதுங்க ப்ளீஸ்..)

----

வெளிசம்..(முற்றும்.)

முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்..


இத்தோட முடிஞ்சுது...:))


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




"என்னம்மா பண்ணிகிட்டு இருக்க"


"ம்ம் ஒரு யோசனை, என்னோட டீன் ஏஜ் பத்தி"


"ஹைய், சொல்லும்மா, நீ ரொம்ப ஃப்ரெண்ட்லிதான். ஆனா இது நீ சொல்லாதது"


"ம்ஹும் அவ்வ்ளோ சுவாரஸ்யமா அம்மாவோட டீன் ஏஜ் கேக்க.."


"பின்ன நானும் டீன்’ல நீங்க என்னல்லாம் பண்ணினீங்கன்னு சொன்னா ஒரு ஜாலி"


"நீ டீனா? கழுத 19 முடியப்போகுது"


"ஒஹ்ஹ் மா!.. ஸ்டில்ல், நான் டீன். ஸோ ப்ளீஸ்.."


"ஓகே. நானும் சில விஷயங்கள் சொல்லனும்னுதான் நினச்சேன்,"


"ஏம்மா சஸ்பென்ஸா பேசற, யாரையாவது லவ் பண்ணினீங்களா? சொல்லு சொல்லு.."


"ஆமா.. உங்கப்பாவ.."


"ச்ச.. போர்மா நீ.., அப்பாவ லவ் பண்ணாம வேற யாரையாவது லவ் பண்ணினீங்களா? நோ.. லைய், ப்ளீஸ் சொல்லுங்க"


”இல்ல கண்ணு அப்பாவ மட்டும்தான்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அன்னிக்கு நீ எப்போவும் சொல்வியே, இன்னிக்கு கூட கேட்டியே, அந்த பெரிய பூ போட்ட நீல சாரி.. அதைத்தான் நான் முதல் முதலா கட்டிக்கிட்டு உங்கப்பாவ பார்க்க போனேன், அப்போ அவர் இருந்தது தாம்பரம், நான் இருந்தது காளிகாம்பாள் கோவில் கிட்ட, பீச்லேர்ந்து ரயில் பிடிச்சு என்ன என்னமோ கனவுகளோட நான் பார்க்க போய்க்கிட்டிருந்தேன். அன்னிக்கு நல்ல கூட்டம் வேற, எப்படி என் காதல சொல்றதுன்னு எனக்குள்ள ஒரு பெரிய போராட்டம் உள்ளுக்குள்ள நடந்துகிட்டு இருந்தது, சுற்றுப்புறம் மறந்த சூழல், ஏதோ நினைவில் நான் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டேன், ஆனா அந்த கூட்டத்துல சில பேர் என்ன தொட்டு சில்மிஷம் பண்ணி, அருவெறுக்க வெச்சிட்டாங்க.”   


"ஓஹ் மை காட், நீங்க என்ன பண்ணினீங்கம்மா"


"என்ன பண்ன முடியும்? ஒண்ணும் பண்ணல, அவங்க என்னோட யோசனையையும், கூட்டத்தையும் பயன்படுத்தி உடளவுலயும் மனசளவுலையும் நோகடிச்சிட்டாங்க. தாம்பரத்துக்கு முன்னாடி அவங்க இறங்கிட்டு, வண்டி தாம்பரம் நின்னதும், நான் மவுனமா ஒரு பென்ச்ல உட்கார்ந்தேன், என்ன என்னமோ யோசனைகள், ஆம்பளைங்க மேல அப்படி ஒரு வெறுப்பு, எல்லாரையும் வெறுத்தேன், இப்பகூட வார்த்தைகள் வரலை, அப்பதான் அப்பா என் கிட்ட வந்தார், ஹலோ சொன்னார், எதாவது சாப்பிடலாமான்னு கேட்டார், அவ்வளவு நேரம் அவரை விரும்பி என்னன்னெமோ யோசிச்ச எல்லாமே அந்த சம்பவத்துல காணாம போய், சாரி எனக்கு காதல் எல்லாம் வேண்டாம், ஆம்பிளைங்க மேல எனக்கு ஒரு நம்பிக்கையுமில்லை, உங்களையும் ஒரு ஓநாயாத்தான் பார்க்கிறேன். மன்னிக்கனும்னு சொல்லி அடுத்த ட்ரெயின்ல பீச்சுக்கு போக உக்காந்துட்டேன்.."


"அப்பா என்ன சொன்னார்? கோவிக்கலையாம்மா உங்கமேல"


"அப்பா என்ன நடந்துதுன்னு கேட்டார் நானும் சொன்னேன், கூடவே என்ன சமாதான படுத்தவேண்டாம் என் அபிப்ராயம் இனி மாறாது ப்ளீஸ் விட்டுட்டு போய்டுங்க அப்ப்டீன்னுட்டேன்.."


"இவ்ளோ லவ்லியா இருக்கற நீங்களா அப்படி சொன்னீங்க? ஐ டோண்ட் பிலீவ் திஸ் மம்.. அப்பா பாவம். "


"ஆமாம்மா அவர் பாவம்தான் இல்லைன்னா...


இல்லைன்னா..?? என்னம்மா சொல்லவற்றீங்க..??


” உன்ன தத்தெடுத்து வளர்க்கும்போது என்ன பார்த்து என்னோட தன்னம்பிக்கை பார்த்து, ஒரு நல்ல நட்பா உன்னை வளர்க்க என்னை அவர் தேடி விஷயம் சொல்ல வந்தது தெரியாம, நான் அவர காயப்படுத்தி இருக்க மாட்டேன்.."


"வாட் தத்தெடுத்தீங்களா?? என்னையா? என்ன சொல்றீங்க??"


"சாரி குட்டி உங்கப்பா உன்னை ஒரு ஆஸ்ரமத்திலேர்ந்து தத்தெடுத்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு யோகி, கல்யாணம், குடும்ப வாழ்க்கை இதெல்லாம் விட மனித அன்புக்காக ஏங்கிய ஒரு ஜீவன். அவரை நான் காயப்படுத்தினது, அவருக்கு கேன்ஸர் வந்து சாகறதுக்கு முதல் நாள் எப்படியோ என்னை வரவெச்சி உன்னை என்கிட்ட தரும்போதுதான் தெரிந்தது.  
நான் உன்னை பார்க்கும்போது உனக்கு 3 வயசு, 
ஐய்யய்யோ தப்பு பண்ணிட்டேனே, சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஐ லவ் யூ சொல்லிடலாம்னு மறு நாள் அவர பார்க்க போனப்ப சடலமாத்தான் பார்க்க முடிந்தது. "


"ஐ கான்ட் பிலீவ் திஸ், "


"இல்லம்மா இது உன் வயசுக்கு நான் சொல்லனும், அது சட்டமோ, தார்மீகமோ எனக்கு தெரியாது ஆனா எப்படியும் இது உனக்கு தெரிய வேண்டியது, நான் சொல்லிடனும், இல்லைன்னாலும் எப்படியாவது தெரிய வரும் அதுக்கு நானே சொல்லிடலாமில்லையா? இப்ப உங்க காலம் வேற விதமானது. நிச்சயம் நீ என்னை மாதிரி முட்டாளில்லை, பரி பூரண சுதந்திரம் உனக்கு தந்திருக்கேன், குட்டி, இது ஒரு ஸ்டேட்மெண்ட்தான், இத கேட்டுட்டு விட்டுடு நான் உன் அம்மா, அந்த படத்துல இருக்கறது உன் அப்பா, வெரி சிம்பிள், எப்படி உன்கிட்ட சொல்ல ஆரம்பிக்கனும்னு இருந்தேன், ஃபைன் எப்படியோ சொல்லிட்டேன். சொல்லு நீ என் செல்லம்தானே? அம்மா மேல, கோவம் இல்லையே,,ஹேய் போன் அடிக்கிது பார், பேசு அப்பறம் இத பத்தி பேசலாம், ரிலாக்ஸ் டியர்.. நான் காபி போடறேன்..உனக்கும் எனக்கும்..ஓக்கே"



""ஹலோ"

"ஹேய் நாந்தான் என்னாச்சு இன்னிக்கு என் பர்த்டே, எதோ உங்கம்மாவோட லக்கி சாரி கட்டிக்கிட்டு, லவ்யூ சொல்ல வர்ரேன்னு சொன்னியே வெய்ட்டிங் ஸ்வீட்டி,, கம் ஃபாஸ்ட், எல்லாரும் வைய்ட்டிங்.."

"சாரிடா இது ஒத்து வராது, ஜஸ்ட் ஃபெர்கெட் இட்"

"வாட்??"

"யா ஐம் நாட் லவ்விங் எனிஒன்.. எனிமோர்.. பை.      "
     
"யார்மா ??"

"நத்திங் மம்மி.. "

"ஹேய் யாரது.. நத்திங்..? பாய் ஃப்ரெண்ட்டா? அம்மாகிட்ட சொல்ல மாட்டியா?"

"ஆமாம்மா..பாய் ஃப்ரெண்ட்தான் லவ் யூன்னு சொன்னான், இன்னிக்கு சொல்றேன்னேன்,”

"என்னங்க இங்க பாருங்க உங்க பொண்ணு லவ் பண்ணப்போறாளாம்’

’வாட்? லவ்வா/ நம்ம குட்டியா ஈஸ் இட்.."

"ஐய்யோ அப்பா!.., அம்மா... "

"சொல்றேன்னுதான் சொன்னேன். இன்னும் சொல்லல. ஆனா சொல்லப்போவதுமில்லை? "

"வொய்? என்னாச்சி? "

"இல்லப்பா இன்னும் என்னை குழந்தையாவே வெச்சிருக்கீங்க, நீங்க ஃப்ரெண்ட்லிதான், ஆனா வெளி உலகம் வேற, சில விஷயங்கள் சாதாரணமா பலருக்கு தெரியறது. மத்தவங்களுக்கு அப்படி இல்லை, இதோ இந்த புக்ல இருக்கற இந்த கதையும் அப்படித்தான். நான் என்னப்பத்தி புரிஞ்சிக்கணும்னு ஏதோ உள்ள சொல்லுது இத படிச்சதுக்கப்புறம், சாரி இது உங்களுக்கு சாதாரண கதையா இருக்கலாம் எனக்கு அப்படி சொல்ல தெரியல.."

"இன்னும் முழுசா கூட படிக்கலையேடி, முக்கா புத்தகம் படிச்சி அப்படியென்ன வேதம் கிடச்சிது? என்னங்க இவ இப்படி பேசறா?"

"இல்லம்மா நாம் முழுசா படிச்சா அது கதையாகிடும் சில விஷயங்கள் நாமா உணர்ந்துகிடறது நல்லது. நானே உணர்ந்துகொள்கிறேன்."

"சரிம்மா இட்ஸ் யுவர் சாய்ஸ், ஐ அம் ப்ரொவ்ட், ஓகே. அப்பா இருக்கேன். பட் உனக்கு சங்கடம் ஏதும் வந்தா அப்பாவ தயங்காம கூப்பிடு, எதுவா இருந்தாலும் நான் உன் ஃப்ரெண்ட்."

"தாங்ஸ்ப்பா..."

”ஸ்வா தமிழ் கதையெல்லாம் படிப்பீங்களா?? மண்டை காய வைக்குது என்ன கதைங்க இது?”


”ஹலோ நான் யாரையாவது லவ் பண்றீங்களான்னு கேட்டேன்.. அதுக்குள்ள என் ஹேண்ட்பேகை துருவியாச்சா??”


உண்மையை சொல்வதா? வண்டு குடையத்தொடங்கி இருந்தது. ரத்தம் வந்து என்னை கண்டு பிடித்த்..


”பல்லவிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? ”


”பல்லவி ம்ஹ்ர்ர்ம்ம் ஓ யா பல்லவி என்ன பிரச்சனை? ஒன்னுமில்லையே? வொய்?”


”சண்முகவடிவேல் தயவு செய்து என்னிடம் எதையும் மறைக்கவேண்டாம். பல்லவியும் நீங்களும் காதலித்தது உண்மைதானே? ”


”ஹேய் என்னதிது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்,, இத்தனைக்கும் எல்லார் முன்னாடியும் சொன்ன விஷயம் அது. யெஸ் நாங்கள் காதலித்தோம். ஸோ வாட்? நீங்க யாரு எஃப்.பி.ஐ? சி.பி.ஐ? இண்டர்போல்..”


ஸ்வா சிரித்தாள் கொஞ்சம் சப்தமாய்


பொதுவாய் இந்த மாதிரி ஹோட்டல்கள் வித்தியாசமானவை நிறைய காசு கொடுத்து சுதந்திரமில்லாத அடிமை இடம், ஒரு ஸ்பூன் எடுப்பதிலிருந்து, நாப்கின் உபயோகிப்பது வரை, பேசும் சப்தங்களின் அளவுகள், உடை நேர்த்தி முதல் எல்லாமே இயல்பான ஒரு சுதந்திரத்தை தடுக்கும். அவள் சிரித்தது நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்தது. நான் சங்கடமாய் உணர்ந்தேன். அவளையே பார்த்தேன்.


”யெஸ் ஸ்வா காதலித்ததும் காதலித்துக்கொண்டிருப்பதும்”


”ஸ்டில் யு லவ் பல்லவி?”


”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும்  அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.
 அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”


”தெரியல, நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..”


”ஷான்.”.


”இல்லைங்க சண்முகவடிவேல்..” திரும்பவும் சிரித்தாள்...


”வாட் எவர்..”


”இப்ப நான் சொல்றேன் ஐ லவ் யூ”


“வேண்டாம் குத்தி கிழிக்காதீங்க, போதும் நான் பல்லவியையே கல்யாணம் பண்ணிக்கிறேன்”


“பட் ஐ லவ் யூ”மீண்டும் சிரித்தாள் எனக்கு கையில் கிடைப்பதை வைத்து அவளை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடலாம் என்று தோன்றியது.


ஆனால் விதி வலிது, வாய் வேறு விதமாய் சொல்லியது


” நான் உன்னை முதலில் பார்த்தவுடனே மனசுக்குள் சொல்லிட்டேன் ஸ்வா”


ஹும்ம் இப்படித்தான் என் சிக்கல்கள் ஆரம்பித்தன.. என்ன பல்லவியா ??அவளிடமும் இவளை பற்றி சொல்ல வேண்டும்,


அன்று பெசென்ட் நகர் பீச்சில் பல்லவியும் இப்படித்தான் ஆரம்பித்தாள்


”ஷான் நீங்க காயுவ (காயத்ரி) லவ் பண்ணினீங்களா??? ”


”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும் அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.


”அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”


”தெரியல,” நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..


”ஐ லவ் யூ ஷான்..”


நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது.  
  




பின்குறிப்பு: கதை இப்படித்தான் போகும் என்று புரிஞ்சிடிச்சிங்க என்று சொல்பவர்களுக்கு ( நான் உட்பட ) இந்த கதை சமர்ப்பணம்..:)))) கதைக்கு உதவிய திரு.பிரபாகர், திரு.முகிலனுக்கு நன்றி.:)     


கிரிக்கெட் தொடர்பதிவு..



நர்சிம் அன்புடன்(?) தொடரச் சொன்னதால் இந்தப் பதிவு.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய   அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------




1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) : ஸ்ரீகாந்த், ஹேய்டன், கங்குலி , வால்ஷ், ஸ்டீவ் வாக், சேவாக், மித்தாலி ராஜ்,.

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? : அஃப்ரிடி, (திறமையை வீணாக்குவதால்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : பாட்ரிக் பாட்டர்சன், ஆலன் டொனால்ட், ப்ரெட் லீ,  .

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : நெஹ்ரா, சிரீசாந்த், ஸ்டூவர்ட் ப்ராட்
 (இப்படியா ங்கே ன்னு ஆறு சிக்சர் அடிக்க விடுவ? )

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்ன், முரளிதரன்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வெங்கடேஷ் பிரசாத்..

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : எம்.எல்.ஜெய்சிம்ஹா,  டக்ளஸ் மெரில்லியர்,

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : நாந்தான்.,

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, ஜெயசூர்யா, சயீத் அன்வர், கில்கிறிஸ்ட், மைக்கெல் பெவன்

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : சடகோபன் ரமேஷ்

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி

13. பிடித்த ஆல்ரவுண்டர் : கபில்தேவ், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,
 .
14. பிடித்த நடுவர் : ஷெப்பர்ட். பில்லி பொவ்டன், சைமன் டாஃபில்

15. பிடிக்காத நடுவர் : நம்மாளுதாங்க, இலங்கைக்கு எதிரா கோவால ஜடேஜா ஆடும்போது அவுட்னு விரல் தூக்கி ’டக்குனு’ தொப்பிலயே தலை சொறிஞ்சி இல்லைன்னுட்டார், பேர் நினைவில்லை.

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ,டோனிகிரேக், பேரி ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : அருண்லால் (கரி நாக்கு:), மணீந்தர் சிங், (எல்லா அச்சி, கிலாடி சுந்தர் ஷாட்’ டும்)

18. பிடித்த அணி : இந்தியா, ஆஸ்திரேலியா

19. பிடிக்காத அணி : சீனா.

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- பிடித்த அணிகள்தான்.

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- எதுவுமில்லை.

22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, கபில்தேவ், தோனி (மச்சம்யா), ஸ்மித் .

23. பிடிக்காத அணித்தலைவர் : டிராவிட்

24. பிடித்த போட்டி வகை :டெஸ்ட் மேட்ச்

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : நானும் சேவாக்கும்.:)

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : சேவாக் .

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : பிராட்மென்,கபில்தேவ்.. ஸ்டீவ்வாக்.

நன்றி நர்சிம்.:-)

தொடர அழைக்க..

பிரபாகர் (வாழ்க்கை வாழ்வதற்கே)

மீன்துள்ளியான்,

நிலா ரசிகன்.

வேறு யாருக்காவது விருப்பமிருப்பின் அவர்களும்..:)


.

வெளிசம்..


.






இலை அல்வாவை சுடச்சுட ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டால் வழுக்கிக்கொண்டு போகுமே அப்படி ஒரு குரலில், 


”ஹாய் ஐ ஆம் ஸ்வா..” 

அவள் கை நீட்டியபோது சத்தியமாய் எனக்கு தெரியாது, அவள்தான் என்னுடைய வருங்கால காதலிகளில் ஒருவள் என்று!. அப்போ மொத்தம் எத்தனை என்கிறீர்களா? மொத்தம் இரண்டு பேர்தான், ஆனால் படிப்பு முடித்து திருநெல்வேலியிலிருந்து ரயிலேறி சென்னை மாநகர் வந்து எக்மோரை பிரமிப்பாய் பார்த்த நாளெல்லாம் நானே எரேசர் (ரப்பர் என்று சொல்லக்கூடாது என்று தினேஷ் முதல்முறை அமெரிக்கா போனபோது சொல்லிக்கொடுத்தான்) வைத்து மனதிலிருந்து அழித்து மாதங்களாயிற்று. 

ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் ரகசிய டிஸ்கொதேக்கள் முதல், நியூயார்க்கின் அழுக்கான, ஆங்கிலம் தெரியாது, முதுகு வளைத்து பறிமாறும் சைனா டவுன் வரைக்கும் எனக்குத்தெரியும். உபயம் - நான் கற்ற கணிணி மொழி, அது தந்த வேலை, அந்த வேலை நிமித்தம் நான் பயணித்த நாடுகள், சந்தித்த மனிதர்கள், ஏகப்பட்ட பெண் நண்பிகள் இரண்டே இரண்டு காதலிகள். 

”ஓ ஹாய் .. ஐ ம் ஷான்,”

சண்முகவடிவேலன் என்று சொன்னால் எந்த பெண் திரும்பிப்பார்ப்பாள்? அதுவும் நான் சாஃப்ட்வேர் எஞ்சினியர், கூட வேலை செய்வதெல்லாம் தேவதைகள், ஒரு சீனப்பெண்ணை வேறு நெட்டில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். 'வோ அய் நி' என்று மாண்டரின் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

என் பெயரைக் கேட்டதும் முகத்தின் இரு புருவங்களையும் சுருக்கி உதட்டோரம் சிரித்தவள். 

”ஒரு காபி சாப்பிடலாமா?” 

எப்போதும் கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது திடீரென தண்ணீரிலிருந்து ஒரு மீன் உங்கள்மீது தூண்டில்போட்டால்...?! அவள் கேட்டதில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். என்ன இவள் என்னையே போட்டு வாங்குகிறாளா? இரை சுலபமா, ஷன்முகவடி...ச்சே..ஷான் மச்சம்டா உனக்கு..

”ஓ யெஸ், கான்டீன் போலாமா? இல்லை.” 

“ ஹவ் அபொட் தாஜ் ?”  

சிரித்துக்கொண்டே உள்ளே பல் கடித்தேன், இல்லை இவள் ஏதோ முடிவோடுதான் வந்திருக்கிறாள், பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை, பெயர் மட்டும் சொல்லி காபி சாப்பிட தாஜ் போகலாம் என்றால் என்னமோ உதைக்கிறது! ஒரு வேளை பல்லவி இவளிடம் ஏதாவது சொல்லி இருப்பாளா என்னைப்பற்றி.


 பல்லவி?? காஷ்.. அவளை பிறகு யோசிக்கலாம். 

“பயப்படாதீங்க நான் வேணா ’பே’ பண்ணிடறேன்” 

மீண்டும் சிரித்தாள். இவள் தூண்டில் இல்லை. என்னைச் சாய்த்த நங்கூரம். அது புரிய வெகு நாளாயிற்று. ஆனால் அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது. 

”ஹேய் நான் ஜஸ்ட் ஒரு ப்ரோஜக்ட் கால் பத்தி நினெச்சேன், ஃபைன்.. நோ ப்ரோப்ளம்.. அப்சல்யூட்லி” வார்த்தைகள் மாற்றி நான் வழிவது எனக்கே தெரிந்தது. 


’ஷான் கவனம்’ ஒற்றைக்கால் கொக்காய் நிற்கச்சொல்லி உள்ளுக்குள் ஆதாம் பல்லி கத்திக்கொண்டிருந்தது.

“லெட்ஸ் கோ”

என் முன்னே ந(டொக்)ட(டொக்)ந்(டொக்)தா(டொக்)ள். ஹை ஹீல்ஸ், ஜீன்ஸ், ச்சிக் டாப்ஸ், பெர்ஃபெக்ட் வளைவுகள், தலைமுடி..வாவ் இவ்வளவு நீளமான முடி அடர்த்தியாய் கருப்பாய், சீராய் நான் பார்த்ததே இல்லை.


 உங்களுக்கு பிடித்த பிட்ஸ்ஸா நீங்கள் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டால்.. ச்சே.. சரியான சாப்பாட்டு ராமனாகிவிட்டேன், ஒரு அழகான பூங்கொத்து விலாசம் தவறி உங்களுக்கு டெலிவரி ஆனால், அய்யோ எப்படி சொல்வது அவளை அதற்குள் லிஃப்ட் உள்ளே நுழைந்து ‘பேஸ்மென்ட்தானே’ என்றபடி (-1) பட்டனை அழுத்தினாள்.


அப்போதுதான் கவனித்தேன், அவள் வலது கையில் அந்த ஆறாவது விரல். அதிலிருந்த தக்குனியூண்டு நகத்துக்கும் பெயர் சொல்ல இயலா நிறத்தில் ஒரு வர்ணம் பூசி இருந்தாள். அந்த் லிஃப்ட் என்னையும் அவளையும் அப்படியே மேலே பிய்த்துக்கொண்டு போய் விடாதா என்றபடிக்கு அவள் வாசம் என்னை நாய்க்குட்டி ஆக்கி இருந்தது. 

(தொடரும்)



குறிப்பு : வெளிசம் என்றால் தூண்டில். கதை பெயர் காரணம். கதை சாதாவா இருந்தாலும் பெயர் கொஞ்சம் நவீனமா இருக்கட்டுமேன்னுதான்...:-)).

--------------
நண்பர்களே..

திரு.ஆரூரன் விசுவநாதன் தனது கொங்கன் பக்கத்தில் பதிவிட்டுள்ள கீழுள்ள இடுகையை படித்து, கண் குறைபாடுள்ளவர்களுக்கு தெரிவிக்கவும்/பயன் பெறவும். மிக்க நன்றி.:)

சாமக்கோடங்கி..

உங்களுக்கு பிரகாஷ் என்ற சாமக்கோடங்கி தெரியுமா? மிக குறைந்த அளவே எழுதி இருந்தாலும் (11 இடுகைகளும், 112 பின்னூட்டங்களும்) மிக அருமையான பதிவுகள் அவர் எழுதி உள்ளார். கார்பன் சுவடுகள் என்ற பதிவு மிகவும் முக்கியமான ஒன்று மொத்தம் 5 பாகங்கள். தயவு செய்து படித்து, உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.




இந்த சிறிய வயதில் சுற்றுச்சூழலின் அக்கரை நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆதரவும் பின்னூட்டமுமே, இவர்களுக்கு மேலும் இது போன்ற பதிவுகள் எழுதத்தூண்டும். நான் காணும் புதிய மற்றும் சுவாரஸ்யமான, ஊக்கங்கள் தேவைப்படும் பதிவர்கள் பற்றி அவ்வப்போது எழுத விருப்பம். நீங்களும் செய்யலாம். நானும் அப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன்தான். 

-------------
கவுஜ + டிஸ்கி ::


ஒரு நடைபாதையின் மதிலருகில்
என்னின் தவம் கலைத்த கிழவி,
வைத்த உலைக்காய் என்னை
காவல் வைத்த வேளையில்
எங்கிருந்தோ வந்த காகமொன்று
மின் கம்பியிலமர்ந்து உலை உலர
காத்திருந்தது, காகத்தை காவல் வைத்து
பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்தேன்
நன்றாய் மழிக்குமென்று விற்றவன் சொன்னான்..
மழிக்குமாவென்று எவனோ கேட்டான் 
ஒரு பூனையை தேடி அலைகிறது என் கண்கள்
மழித்துப்பார்த்துவிட்டு இந்த கவிதை முடிக்கவேண்டும்..

---


நான் பதிவு எழுதாமல் போவதை விட, இவர் போன்றவர்கள் பதிவெழுதாமல் போனால் நிச்சயம் இழப்புதான். ஆதரவு தாங்க மக்களே.:)    

விரைவில் ஒரு காதல் (சற்றே பெரிய) சிறு கதை வரவிருக்கிறது, 

ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி!.

.

எங்கே செல்லும்...பாகம்-2












எங்கே செல்லும்....



எங்கே செல்லும்....
முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம்.
இப்படித்தான் முகிலன் ஆரம்பித்தார் முதல் பாகம்..




முதலில் முகிலனின் முதல் பாகத்தை படித்துவிட்டு இதை தொடரவும்..



RULES:
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார். 
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் 
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.



(பாகம் - 2)


”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”

 2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை

நான் திரும்பவும் நிஜமா என்று ஆரம்பித்தேன்...
”ஏய் இப்பதானே சொன்னேன், திரும்பவும் அதயே கேக்காதப்பா.”  மெதுவாய் இடது கையால் என் தலை கோதி இன்னும் நெருக்கம் காட்டினாள்.

எனக்கு பேரவஸ்த்தையாய் இருந்தது. நிறைய பூக்கள் மலர்ந்த மரத்தின் அடியில் திடீரென நம் மீது பூக்கள் மழையாய் பொழியும்போது ஏதோ ஒரு சந்தோஷம் உணர்வோமே, அட அதை விடுங்கள் பூக்களில்லாத மழையில் நனைந்திருந்த ஒரு மரத்தினடியில் காற்றின் வேகத்திற்கு மரம் சிலிர்த்து நீர்த்துளிகளால் சட்டென்று ஒரு  குளுமையுடன் சிலிர்ப்பு தருமே கிட்டத்தட்ட சாதாரணத்திற்கும், பைத்தியத்திற்கும் இடையிலான ஒரு நிலை.

தம்பிடிக்காசுக்கு பிரயோஜனமில்லாத வறிய இளமைக்காலம் என்னுடையது. என்ன எதிர்பார்த்து இந்த பேரழகி என்னிடம் இழைகிறாள்? ஐயோ யாராவது இப்ப போய் இதை நினைப்பார்களா? நிஜமாவே நீ லூசுதாண்டா மனசு அவளை பாரேன், பார்ரா என்று மைக் வைத்து உள்ளே அலறிக்கொண்டிருந்தது.

”என்ன யோசிக்கற நான் நல்லவளான்னுதானே? பொண்ணுங்களா வந்து உன்ன எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லக்கூடாதா, ம்..?”

அந்த மாநகராட்சி பூங்காவில் நிறைய பேர் எங்களை பார்த்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அணிந்திருந்த சட்டையின் முதலிரண்டு பித்தான்களை அழுத்திக்கொண்டு இன்னும் எனது வலது கை விரல்களை தாமரை மொட்டாகவே வைத்திருந்தாள்.

”ஏய் என்னாச்சு, யாரையும் பார்க்காத, த பார் நானே கவலபடல, நீ ஏன் பொண்ணுங்க மாதிரி சுத்தி சுத்தி பார்த்துகிட்டிருக்கற.”

 வரிசையான, கறைகளில்லாத வெண்மை நிற பற்கள் தெரிய ஸ்வா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் நான் மெதுவாய் என் கைகளை அவளிடமிருந்து விடுவித்துகொண்டேன். கையில் கர்ச்சீப் இல்லை வியர்த்த முகத்தை கைகளால் துடைத்த போது அவளின் வாசம் என் உள்ளங்கைகளின் மூலம் என் முகத்தில் பரவியது.

”என்ன பவ்டர் யூஸ் பண்ற ஸ்வா?”
“ நத்திங் ஸ்பெஷல் இங்க கிடைக்கிறதுதான்.” அவள் பெயர் சொன்னாள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, நானும் யூஸ் பண்னி இருக்கிறேன் ஆனால் இந்த வாசம்.

எனக்கு எல்லாமே புதுசாக இருந்தது, அவளுக்கு எதிலும் பயமில்லை, என் பயங்களை அந்த உள்ளுதட்டு மோன சிரிப்பில் ஊடே குருகுருப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சேர்ந்தார்போல நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேச வராது எனக்கு, அவளோ தடி தடியாய் ஆங்கில கதை புத்தகங்கள் படிப்பவள்.

”சரி இப்ப என்ன எனக்கு உன்ன நிஜமா பிடிச்சிருக்கான்னு தெரியனும் அவ்ளதானே?” இப்பொழுது நான் சிரித்தேன், ஆமாம் என்று தலை ஆட்டினேன்.

”சிம்பிள்டா அடிக்கடி உன்ன பஸ் ஸ்டாப்ல பார்த்திருக்கேன், உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஸூப்பரா டாவடிக்க நீ மட்டும் தலை கூட நிமிர்த்தாம அமைதியா நின்னுகிட்டிருப்ப.”

” அப்ப நீயும் பஸ்ல டைய்லி என்ன பார்ப்பியா?”

“ ம்ஹும்.. சில சமயம்தான், எங்க அப்பாகூட மோஸ்ட்லி கார்ல போய்டுவேன், ஆனா அப்பவும் உன்ன பார்த்திருக்கேன்.”

“ அது மட்டும்தானா? ”

“ஹேய்..இது என்ன காதல் பிஹெச்டியா? ஹாங்..”மீண்டும் சிரிப்பு.

 ” அது மட்டும்னு இல்ல நான் போல்டான பொண்ணுதான், என் வீட்டு பாக் ஸைட்ல என்ன டாவடிக்கிற பக்கத்து வீட்டு பையன கலாட்டா பன்றதுக்காக, பொறுமையா ஒரு தம் அடிச்சிருக்கேன். என்ன பஸ்ல இடிச்சவன்கிட்ட இன்னும் பக்கத்துல வந்து இடிங்க உங்க அம்மாவ இடிக்கறமாதிரியே இருக்கும்னு சொல்லிருக்கேன்.”

நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகொண்டேன். திரும்பவும் சிரித்தாள், இந்தமுறை மொத்த பார்க்கும் எங்களை பார்த்ததுபோலவே இருந்தது எனக்கு.

”ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிரிச்சு, ஐ டோண்ட் நோ,,சம் திங் ஸ்ட்ரேன்ஜ், இட்ஸ் டோட்டலி நியூ ஃபார் மீ டூ...”

 என் முகம் மாறுவதை கவனித்து ..

”ஓகே ஓகே உனக்கு இங்கிலீஷ் தெரியாது, நீ ரொம்ப படிக்கல, எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க கூட காசில்ல ப்ளா ப்ளா சாரி சாரி சாரி.”

 எனக்கு உள்ளே குத்தியது. அப்போதுதான் கவனித்தேன் இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை நோக்கி வருவதை. ஸ்வா என் கையை பிடித்து ”உட்கார் எழுந்திருக்காத” என்றாள்,

”டேய் நீ இங்க இருக்கியா?”

ஒரு கான்ஸ்டபிள் கொத்தாய் என் சட்டையை பிடித்து பளார் என்று அடித்தார், கீழே விழும்போதே தலை சுற்றியது, சுதாரிப்பதற்குள் நங் கென்று எதோ தலையில் பட்டது..ப்ளாக் அவுட் டோட்டல் நிசப்த்தம்

“சொல்லு ஏன் ஸூப்பர் மார்கெட்ல குழந்தைய தூக்கிட்டு போன?”

மெல்ல சுற்று முற்றும் பார்த்தேன், எப்போது இங்கே வந்தேன், இவர் என்ன கேட்கிறார்? உடலெல்லாம் வலித்தது, இன்ஸ்பெக்டர் டேபிளில் இந்தியா அபார வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது தினசரியில் பெரிய போட்டோவுடன் படபடத்துக்கொண்டிருந்தது இந்த படம் எங்கயோ பார்த்தோமே..

”டேய் உன்னதான் கேக்கறேன்.. ”

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்
தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின்
எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்
றுணி படல் இன மணி இயலெறும் எழிலின்
இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

பெரும் குரலெடுத்து யார் பாடுவது? அட எப்போது மேசையில் ஏறினேன், எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில்,, நானா..னா நானா பாடுகிறேன்...அப்படியே எகிறி குதித்து வாசலை நோக்கி ஓடினேன்..

”ய்யேய் அவன பிடிங்கப்பா...”

யாரோ துரத்திக்கொண்டு வரும் சத்தம் கேட்டது, என்னை தாண்டி சென்ற காரில் ஒரு ஆள் என்னை பார்த்து ”அவந்தான் வண்டிய திருப்பு பிடி..”

 நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தேன். வெளிச்சம் கண்ணை கூசியது . ஆமா நான் ஏன் ஓடிக்கிட்டிருக்கேன், எங்க போயிடிருக்கேன்.. திடீரென்று வளைவில் திரும்பிய பஸ்சில் ரன்னிங்கில் ஏறி மெல்ல எட்டிப்பார்த்தேன்...

”ஹலோ.”.பஸ்ஸில் யாரோ கூப்பிட்டார்கள்.
      

(தொடரும்)


அடுத்தது யாருங்க.. பதிவு போட்டுட்டு லின்க் முகிலனுக்கு அனுப்பிடுங்க அப்படியே எனக்கும். ( தினத்தந்திலதான் கன்னி தீவு வரனும்னு சட்டம் இல்லீங்களே:) ) 



சாலையோரம் - தொடர் இடுகை




ஸ்பென்சர் தாண்டி இடதுபுறம் திரும்பி பொறுமையாய் வந்துகொண்டிருந்தபோது எத்திராஜ் கல்லூரிக்கு முன்னால் சிக்னல் சிவப்பிலிருந்து அப்போதுதான் பச்சைக்கு மாறி கூவம் ஆற்றின் பாலத்தினை கடந்து எத்திராஜ் கல்லூரி நெருங்கும்போது, கல்லூரி வாயில் தாண்டி கூட்டமாய் இருந்தது. என்னவென்று நானும் எட்டிப்பார்க்க ஒரு இளம் பெண், மஞ்சள் நிற சுடிதார் போட்டு, மல்லாந்து கிடந்தார் அருகில் ஸ்கூட்டி (இங்கயுமா?!) ”ஆட்டோகாரன் இடுச்சிட்டு போய்ட்டாம்ப்பா, த இப்பதான் சிக்னல் வுட்டு பொறுமையாதான் வந்துனு இரிந்திச்சி இந்தம்மா”, நான் பார்க்கும்போதே சுட சுட ரத்தம் பின் மண்டை வழியே சாலையில் பரவியது, அழகான இளம் பெண், சுற்றிலும் ஆண்கள், தொட்டு தூக்க தயக்கம்.

பார்த்தேன் நீல நிற புடைவயில் கையில் ஃப்ளாஸ்க்குடன் ஒரு அம்மா நின்றிருந்தார், அருகிலிருக்கும் ஐ ஓ பி வங்கியில் கடை நிலை ஊழியர், ”அம்மா நீங்க ஒரு கை பிடிங்க ஆஸ்பிடல் கொண்டு போயிடலாம்”,

இப்போது அந்த பெண்ணிற்கு வலிப்பு ஆரம்பித்து விட்டிருந்தது. கையில் சாவி கொத்து தரவேண்டுமா?, உடைகளை தளர்த்த வேண்டுமா? கைப்பை திறக்கலாமா?, குடிக்க தண்ணீர் தரலாமா? இவர் வண்டி யார் பார்த்துக்கொள்வார்கள்? தாமதிக்க முடியாது, ”அம்மா நீங்கதான் லேடிஸ் கொஞ்சம் ஹெல்ப் பன்ணுங்க, பக்கத்துலதான் அப்பல்லோ, ஃபிட்ஸ் வந்திடிச்சி, மண்டை உடஞ்சி ரத்தம் வருது தாமதிக்கிறது ஆபத்து”, உடனே அந்த அம்மா, அந்த பெண்ணின் தோள் பிடித்து, நாங்களும் ஒரு உதவி செய்ய, ஒரு ஆட்டோவில் ஏற்றி அப்பல்லோ கொண்டு போய், அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தோம், உதவி செய்த அந்த அம்மா தன் புடைவையெல்லாம் ரத்ததுடன், பரவாயில்லைங்க என்றபடி அதே ஆட்டோவில் சென்றுவிட்டார். கைப்பையில் பன்னாட்டு வங்கியின் ஐடி கார்டில் அவரின் பெயர், மற்றும் படம், வங்கி பெயர் மட்டும் இருந்தது, பையில் தேடி அவரின் கணவரை தொடர்பு கொண்டு விவரம் சொல்லி வரச்செய்தோம்.

இருவருக்குமே 23 வயதுக்கு மேல் இல்லை, கணவர் சாஃப்ட்வேர்,மனைவி வங்கி, ஒரு ஹெல்மெட் போட்டிருந்தால் ‘ நாயிண்ட மோனே ’ என்று தாய் மொழியில் திட்டி, தூசி தட்டி வீடு போய் சேர்ந்திருக்க வேண்டிய பெண்,  மண்டை உடைந்ததற்கு, அறுவை சிகிச்சை செய்து அழகான தலை முடி மழித்து, பல மாதங்கள் அவஸ்தை அனுபவித்தார்.

இடித்த மிருகம் காணாமல் போய்விட்டது. இந்த பெண் ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு பாதுகாப்பு தலைகவசம் அணியவில்லை அவ்வளவுதான்.

இதே ஒரு இரவு நேரமாகவோ, மழை காலமாகவோ, தனிமையான சாலையாகவோ இருப்பின்...??

----------------------

ஆப்பிரிக்க ஊடூ வில் வருவதுபோல சாலையில் ஒரு வட்டம் வரைந்து, நடுவில் ஒரு மனித கை கால்கள் வரைந்து வைத்திருப்பதை பார்க்கும்போதெல்லாம், ஏதோ ஒரு குடும்பத்தின் தலைவிரி அழுகை காட்சி நினைவிற்கு வரும்.

“ இன்னிக்கு உனக்கு பிடிச்ச சாப்பாடு சீக்கிரம் வந்துடுப்பா, ”

“ரெடியா இரு சினிமாக்கு போய்ட்டு ஹோட்டலில் சாப்ட்டுட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்திடலாம்,”

“ அப்பா ஒரு வருஷம்தான் காம்பஸ்ல செலக்ட் ஆயிட்டேன், நீ இதுவரை கஷ்ட்டப்பட்டது போதும்,”

“ என்னங்க சொந்த வீடு வாங்கிடலாங்க, லோன் ஓகே ஆயிடும், ஆபீஸ்ல சொல்லிருக்காங்க”

“குட்டி அப்பா சாயந்திரம் கண்டிப்பா ஐஸ் கிரீம் வாங்கிட்டுவரேன்”


எத்தனை எத்தனையோ வாக்குறுதிகள் கடைசியாய் போகுமென்று யாருக்கு தெரியும்?, காதல், பாசம், நம்பிக்கைகள் அந்த வட்டத்துக்குள்ளேயே, சூழ்ய சூன்யமாய், அந்த மஞ்சள் வட்டத்தின் மேலே வண்டி ஓட்டுவது கூட எனக்கு பயமாய் இருக்கும். யாருடைய சொந்தமோ, யாருடைய நினைவிடமோ?

......

ஸ்டாலின் என் பள்ளி தோழன், என் உயிர் நண்பன், என் முதல் காதலுக்காய் என்னுடன் நெற்குன்றம் திரைஅரங்கில், அரங்கேற்றம் படம் பார்க்க வந்தவன், பள்ளியில் ஒன்றாய் திருக்குறள் சொல்லி இருக்கிறோம். அவன் அப்பா ஒரு சிறந்த ஓவியர், அண்ணனும், அழகான குடும்பம். பள்ளி முடித்து ஆளுக்கொரு திசையில் பிரிந்தோம்,

இன்றைக்கு தென்னக ரயில்வேயில் வேலை செய்துகொண்டிருக்க வேண்டியவன், கோயம்பேடு ரவுண்டானாவில் லாரியில் அடிபட்டு சொல்லாமல் கொள்ளாமல் காற்றில் கரைந்தான். ஒரு நல்ல நட்பு இழந்தேன், முதல் காதலும், முதல் நட்பும் ஒரு சேர இழந்த என் வாழ்க்கை தராசில் நடு முள் மட்டும் குத்திக்கொண்டே இருக்கிறது. :( அந்த இடங்களை சாதா’ரண’மாக என்னால் ஒருபோதும் கடக்க முடிவதில்லை.

.........

சாலை பயணங்களில் பல விபத்துகளை பார்த்தாயிற்று, வண்டியில் விழுந்த விழுப்புண்கள் அங்க அடையாளத்துக்காய் ஏராளமாக இருக்கிறது. அதில் என் தவறுக்கானவை மிக குறைவு. சொல்லிக்கொண்டே போவதில் மனது வலிக்கும்.

எதுவும் நிச்சயமில்லை ஓடும் ரயிலில், கழிவரையில் பிரசவித்து அதிலுள்ள ஓட்டை வழியே கீழே விழுந்த குழந்தை சிறு கீறலும் இல்லாமல் சிரித்து பிழைத்திருக்கிறது. மல்லாக்க விழுந்ததில் வெறும் பின் மண்டை திறந்து சிரித்தபடியே இறந்துபோய் ”அய்யோ அவன எழுப்புங்க தூங்கரான் சாவல” என்று மாரில் அடித்த தாயையும் பார்த்தாயிற்று.

விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே.

எதிரே போகும் வண்டி திடீரென நிற்காது என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே நாம் வண்டி ஓட்டுவதின் சாமர்த்தியம் அன்றி வேறெதுவும் இல்லை. நமக்கு பின்னாடியும் அதே நம்பிக்கையில் பலர் வருகின்றனர். வாழ்க்கை சக்கரமும் அதே நம்பிக்கையில்தான் சுழன்றுகொண்டே இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை. சந்தர்ப்ப சூழ் நிலையால் நிகழ்பவைகளை மட்டுமே விபத்து என்று சொல்லலாம். மற்றவைகள் மிக கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவை.

பகிர அழைத்த சகோதரி வித்யா அவர்களுக்கு நன்றி. நிரம்ப பாரங்களை என் பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன். இதுவும் அதில் ஒன்று.


வித்யா அவர்களின் பதிவு::

சாலையோரம் - தொடர் இடுகை

எனக்கும் யாரையாவது அழைக்க விருப்பம்தான்... படித்து பின்னூட்டமிடும் நண்பர்களோ, படித்துவிட்டு மட்டும் போகும் நண்பர்களோ, தயவு செய்து இது பற்றி பதிவிடுங்கள், நாமோ நமை சார்ந்தவர்களோ தினம் தினம் சந்திப்பதுதான் இது, யாருடைய பதிவையாவது படித்து தவறு செய்யும் ஒருவர் திருந்தினாலும் மகிழ்ச்சியே.




.