பலா பட்டறை: வெண்ணை..(0.02) (ஞான மரம்)

வெண்ணை..(0.02) (ஞான மரம்)



ஞானம் கிடைக்குமா? என்று போதி மரம் தேடி ஒரு வனாந்திரத்தினுள்ளே சுற்றி அலைந்தேன். வாழ்ந்து கொண்டிருக்கும் மரங்களை, வளர்ந்து கொண்டிருப்பதாய் மனம் கற்பித்துக்கொண்டிருந்தது.

மரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் சரிதானா? என்ற கேள்வியை புறம் தள்ளி, ஞானம் தரும் அந்த மரத்தைத்தேடி அலையத்தொடங்கினேன்.

சுற்றிக்களைத்த நேரத்தில் ஒரு பெரு மரத்தின் பொங்கிய வேரின் மேல் அமர்ந்து, கற்பனையில் வளர்த்த அந்த போதி மரத்தின் அடையாளங்கள் பொருத்தி இன்னும் என் கண்கள் சுற்றிச் சுழன்று எல்லாப் பச்சையிலும் அந்த போதிப்பச்சையைத் தேடிக்கொண்டிருந்தது.

”என்னப்பா தேடுகிறாய்..?”

யாருமற்ற வனத்தில் என் உயிரியின் குரலே என்னை மிரளச்செய்த நொடிகளை மனனம் செய்யாது..

”யாரது?” என்றேன்.

”நான்தானப்பா, நீ உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறாயே அந்த மரம் என்று நீ அழைக்கும் நானேதான் அழைத்தேன்.”

மரம் பேசுமா? என்ற கேள்வியை போதிமரம் பேசும் என்ற பொதி சுமந்த போதையை உள்ளிருந்து வியந்தவாரே..

”நான் போதி மரம் தேடி ஞானம் பெற வந்தவன். எங்கிருக்கிறதென்று அறியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்..”

போதிமரத்தை ஏன் தேடுகிறாய்?, கண்டு என்ன செய்யப்போகிறாய்? என்ற கேள்விகளை எதிர்பார்த்து பதில் தேடிக்கொண்டிருந்தது மனம். ஒருவேளை இதுவே, அதுவாயும் இருக்கலாம் என்று மனத்தை ஆயத்தப்படுத்தத்துவங்கிய நேரம்..

”ஓ போதி மரமா? அதனை அடைவது சுலபமே. ஆனால் அதற்கு முன் நான் சொல்லுவதை நீ செய்தால் அதனையடையும் வழி சொல்வேன்.” என்ற அந்த மரத்தைப்பார்த்து..

”நிச்சயம் செய்கிறேன்..” என்றேன்.

”சரி இந்த வனத்தினுள்ளே ஒரு கிராமம் உள்ளதை நீ அறிவாய் அல்லவா?”

”ஆம். ஆனால் அந்த மக்கள் ஒரு போதும் போதி மரத்தைப்பற்றி பேசுவதுமில்லை அது குறித்தான கேள்விகளையும் செவிமெடுப்பதில்லை ”என்றேன்.

”சரி போகட்டும். போதி மரம் பற்றியும் அதன் மூலம் ஞானம் பெறுவது பற்றியும் அறிய முதலில் எதிரில் இருக்கும் அந்த புதரின் அடியில் போய் அமர்ந்து கொள், சிறிது நேரம் கழித்து திரும்பி வா”

”சரி” என்றேன். இது ஏதோ பரிட்சையாக எனக்குப் பட்டது. என்ன ஆனாலும் சரி அடைந்தே தீர வேண்டிய ஞானம் என்னை புதரின் அடியில் போய் உட்கார வைத்தது.

தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவது. எண்ணங்கள் ஏதுமற்று இருப்பது, மனதை மூடினேன், புறமும் மூடினேன், ஒலிகள் எல்லாம் மக்கி, உள்ளே தெரியும் வண்ண ஜாலங்களும் ஒதுக்கி அதன் பின்னே வரும் வெறுமை என்னும் கருமையை அகற்ற இயலாது அப்படியே அமிழ்ந்து நொடிகளில் யுகங்கள் கடப்பதறியாது வெறுமனே அமர்ந்துவிட்டு மீண்டும் மரமருகில் சென்றேன்.

”என்ன நடந்தது?”

”எல்லாம் கடந்த பின்னும் கருமை என்னும் நிறமும் அகற்றி உள்ளே போக முடியாத நிலை சொன்னேன், வெறுமை என்பதும் என்ன என்ற அளவுகளும் என்னின் அடுத்த நிலையை கேலி செய்வதாய் உணர்ந்த நொடியில்...”

மரம் சொன்னது.. ”சரி போகட்டும் அந்த பாதை சரிவில் ஒரு மரம் இருக்கிறது கண்டாயா? ”

”ஆமாம்”

”அதன் அருகில் சரிவின் விளிம்பில் நில். என்ன தோன்றியது என்று வந்து சொல். இதற்கு மேல் கேள்விகளில்லை, தோன்றியது சொன்னபின் ஞான மர ரகசியம் சொல்லப்படும்..”

பரவசமான மன நிலையில் சரிவினை நோக்கி ஓடினேன். விளிம்பில் மரத்தின் அடியில் நின்றேன். வெறுமனே மரத்தைப்பார்த்துகொண்டிருந்தேன். பின் மீண்டும் என்னிடம் பேசிய மரத்தின் அருகில் சென்றேன்

”அந்த மரத்தின் அடியில் நின்றபோது என்ன தோன்றியது?”

”ஒன்றும் தோன்றவில்லை. வெறுமனே நின்றேன் இதன் பிறகு போதி மரம் காணக்கிடைக்கும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது” என்றேன்.

”நல்லது நீ போய்வரலாம் உனக்கு போதி மரம் கிடைக்காது.”

விக்கித்து நின்ற என்னைப்பார்த்து ”விளக்கம் வேண்டுமா” என்றது..

தலையாட்டிய என்னிடம் ”சரி கேள்”

முதலில் நீ சென்ற புதரில் ஒரு தாய் நேற்று அமர்ந்து தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். சரிவிலுள்ள மரத்தில் அதற்கும் முன் ஒருவன் மலஜலம் கழித்தான். யாரோ ஒருவர் மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் கிடைத்ததால் அதன் கீழ் அமர்ந்தால் உனக்கும் ஞானம் கிடைக்குமென்று வந்த நீ சிறிது சிந்தித்துப்பார்..

மரத்தினடியில் அமர்ந்ததால் ஞானம் கிடைத்திருக்குமாயின் அந்த புதரினடியில் அமர்ந்தபோது உன் மார்பில் பால் சுரந்திருக்க வேண்டும், சரிவின் மரத்தினடியில் கழிவுகள் வெளிப்பட்டிருக்கவேண்டுமல்லவா??

எனில் போதிமரம் கிடைத்தால் மட்டும் அடியில் அமர்ந்தால் ஞானம் கிடைத்து விடுமா என்ன??

மண்ணின்றி வேர்களின்றி நிலையில்லாது நடக்கும் நானே ஒரு மரம்தான் என்ற எண்ணம் இப்போது உள் மண்டைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது..

ஞானம்?? 




.

34 comments:

Ahamed irshad said...

அய் நாந்தான் 1st....

எறும்பு said...

பே.. பே.. பேச்சே வரலை......

:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. என்னாச்சுணே..?

சொன்னது நல்லாத்தான் இருக்கு...

ஆனாலும், இந்த மரத்துக்கு.. ஹி..ஹி

எறும்பு said...

//மரத்தினடியில் அமர்ந்ததால் ஞானம் கிடைத்திருக்குமாயின் அந்த புதரினடியில் அமர்ந்தபோது உன் மார்பில் பால் சுரந்திருக்க வேண்டும், சரிவின் மரத்தினடியில் கழிவுகள் வெளிப்பட்டிருக்கவேண்டுமல்லவா??//

ஞானி சங்கரானந்தா அவர்களே இங்கே மாறுபடுகிறேன்... பாலும் கழிவும் physical thing. ஞானம் அப்படியா?

ஒருவேளை என்னை போன்ற அங்ஞானிகளுக்கும் புரியும் விதத்தில் எளிமையாக சொல்றீங்களோ?

எதுக்கும் போதி மரம் கிடைச்ச சொல்லுங்க..


:)

எறும்பு said...

சங்கத்து பிரச்சினைக்கு உங்களை குத்தம் சொல்றவங்க சொல்லட்டும். இதுக்காக நீங்க சன்யாசியா காட்டு பக்கம் போனா எப்படி?

காவியங்கள் உன்னை பாட காத்திருக்கும் பொழுது காவி உடை நீ கொண்டால் என்னவாகும் மனது ?
வாழ்வை நீ தேடி வடக்கே நீ சென்றால் நாங்கள் போவதெங்கே..

;))

Paleo God said...

@அஹமது.. ரைட்டு..:))
--
@ பட்டி: வாங்க. ஹி ஹி..:)
--
@எறும்பு..

இப்ப பேச்சு வந்துதா மகனே..?? :)

// பாலும் கழிவும் physical thing. ஞானம் அப்படியா?//

அதத்தானே மரம் சொல்லுது. இன்னொருமுறை படித்து பாருங்களேன். (மூச்சு பத்திரம்..:))

//அங்ஞானி//

புதுசா இருக்கு. சொல்லவே இல்ல..:))

Paleo God said...

@எறும்பு..

முருங்க மரத்தை உரசாதீங்க ப்ளீஸ்..:)

vasu balaji said...

ஸாஆஆஆர்! மடம் எப்ப ஸார் தொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரப்பீங்க:)). ஜோக் கிடக்கட்டும். இடுகை பிரமிப்பாயிருக்கு.

துபாய் ராஜா said...

வார்த்தைகளை வளைத்து வளைத்து விளையாடியிருக்கிறீர்கள். அருமையான கதை. நுண்ணரசியலையும் ரசித்தேன்.

துபாய் ராஜா said...

வார்த்தைகளை வளைத்து வளைத்து விளையாடியிருக்கிறீர்கள். அருமையான கதை. நுண்ணரசியலையும் ரசித்தேன்.

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு ச‌ங்க‌ர்ஜி...

எறும்பு said...

@எறும்பு..

முருங்க மரத்தை உரசாதீங்க ப்ளீஸ்..:) ///

குருவே எறும்பு உரசி முருங்கை மரம் முடமாகாது.
ஏதாவது எருமை உரசினால் முருங்கை முறிந்து போகும்.

:)

எறும்பு said...

//துபாய் ராஜா said...

வார்த்தைகளை வளைத்து வளைத்து விளையாடியிருக்கிறீர்கள். அருமையான கதை. நுண்ணரசியலையும் ரசித்தேன்.//

Can you please explain this நுண் அரசியல்..
;)

பத்மா said...

அப்படிபோடு !
எறும்பூற கல்லும் தேயும் எறும்புகிட்ட சொல்லுங்க

பனித்துளி சங்கர் said...

வார்த்தைகள் விளையாடி இருக்கிறது . அருமை !
வாழ்த்துக்கள் !
தொடருங்கள் ,,

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பேஸ் வால்யூவில் எழுதியிருக்கும் கருத்துதானா அல்லது வேறு ஏதாவது மறை பொருள் இருக்கிறதா?

கொஞ்சம் குழப்பமா இருக்கு...

போதி மரத்தினடியில் அமர்ந்தவரெல்லாம் புத்தராகி விட முடியாது என்பது ஒரு வரியில் கதை நீதி;அதற்கு புத்தரின் வாழ்வை வாழ்ந்து விட்டு போதி மரத்திற்குப் போக வேண்டும் !

தமிழ் உதயம் said...

அற்புதம் சார். மாறுபட்ட சிந்தனையில் மலர்ந்துள்ளது.

Paleo God said...

பாலா சார் வாங்க..:) மடமா? மடமே ன்னு திட்டியிருக்கலாம்..:) நன்றி சார்..:)

துபாய் ராஜா: என்னது நுண்ணரசியலா?? ஏங்க? ஏன்? எறும்பு உங்க ஊர்தானே..வெச்சிக்கிறேன்.:) நண்பர் அறிவன் பதில பாருங்க.:) நன்றி!

நாடோடி: நன்றிங்க ஸ்டீபன்.:)

எறும்பு: ----------- இந்த கோட்டத்தாண்டி நீங்களும் வரவேண்டாம்
நானும் வரமாட்டேன் (வலிக்கிது அவ்வ்வ்):))

பத்மா. வாங்க.. ஆமாங்க ரொம்ப தேய்க்கிறாரு..:)

பனித்துளி சங்கர்:; நன்றிங்க..:)

அறிவன் : //போதி மரத்தினடியில் அமர்ந்தவரெல்லாம் புத்தராகி விட முடியாது என்பது ஒரு வரியில் கதை நீதி// அதத்தாங்க மரம் சொல்லுது, வேற எதுவும் இல்லை ஸ்ஸ்ஸ் அப்பாடி. :) நன்றிங்க.!

தமிழ் உதயம்: வாங்க தமிழ் நன்றிங்க..:)

சாந்தி மாரியப்பன் said...

நல்லாத்தான் இருக்கு..

பிரபாகர் said...

அய்யா பாராட்ட, ராஜா நுண்ணரசியல்னு சொல்ல, கொஞ்சம் புரியல சேம் பிளட். திரும்ப படிக்கிறேன்..

பிரபாகர்...

சீமான்கனி said...

ஞான வெண்ணை...
சும்மா சொல்லகூடாது அருமை பாஸ் எப்படி இப்டி...

Unknown said...

இருந்தாலும் நீங்க இப்பிடி சொல்லக்கூடாது ஷங்கர்.. நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க. அதுக்காக இப்பிடியா?

---

அப்பாடா எதோ நம்மால முடிஞ்சது..

நேசமித்ரன் said...

ந‌ல்லா இருக்கு ச‌ங்க‌ர்

ரோஸ்விக் said...

என்னாண்ணே கீழ Links to this post-ல "ஷங்கர் :: வெண்ணை ௦.02 (ஞான மரம்).. " இப்புடி போட்டிருக்கு....??


:-)))

தமாசுக்குண்ணே... தப்பா எடுத்துக்காதீங்க...

போதி மரம் மாதிரி போதை மரம் இருந்தா சொல்லி அனுப்புங்க... நம்ம ஆளுங்களுக்கு ரொம்ப தேவைப்படுது... அது ஏறுனாலே ஞானம் வந்திருமாமே...!!! :-)

Anonymous said...

வயசானதுக்கப்பறம் இதெல்லாம் படிச்சுக்கறேன் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

Paleo God said...

@ அமைதிச்சாரல் : நன்றிங்க..:)

@பிரபாகர்: ஏங்க? சாதாரணமான விஷயம்தான் பிரபா..:))

@கனி: தெரியல கனி அதுவா வருது,..:))

@முகிலன்: முடிஞ்சிதா?? முடிச்சிட்டீங்களா?? :)) நன்றி முகிலன்.:)

@நேசமித்ரன்:: வாங்க நேசன் சார்.. மிக்க நன்றி..:))

@ரோஸ்விக்: அதானே!:) நோ தப்பு:)) எல்லாருமே போதை மரம்தானே ரோஸ்விக்?? :))

@சின்ன அம்மிணி : சரிங்க அக்கா..:))))

@T.V.ராதாகிருஷ்ணன்: மிக்க நன்றி சார்..:))

Vidhoosh said...

//அங்ஞானிகளுக்கும் //
அதாகப்பட்டது அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும் ஞானியாமாம் !!

//@எறும்பு..
இப்ப பேச்சு வந்துதா மகனே..?? ///

ரொம்பதான் பேச்சு வந்திருச்சு எறும்புக்கு...
இன்றிலிருந்து எறும்புக்கு "கும்மியடி சித்தர்" என்ற பெயரை சபை பரிந்துரைக்கிறது.

///கதை. நுண்ணரசியலையும் ரசித்தேன்.//
Can you please explain this நுண் அரசியல்..
;)/////
பிரபலமாக்காம விடரதில்லைங்கர முடிவோட சைபால் படை கிளம்பி இருக்கு.

//----------- இந்த கோட்டத்தாண்டி/// இலட்சுமண ரேகையாக்கும்

//ஞான வெண்ணை.../// அருமையான புது பெயர் கிடைத்தற்கு வாழ்த்துக்கள்.

/// @சின்ன அம்மிணி said...
வயசானதுக்கப்பறம் இதெல்லாம் படிச்சுக்கறேன்////
அம்மிணி ! குருவாயூரில் போன வாரம் அன்னப்ராசனம் ஆனதற்கு மனமார்ந்த ஆசிர்வாதங்கள்.

Vidhoosh said...

jokes aside, it's indeed a very nice post.

பின்னோக்கி said...

நல்ல கருத்து. புரியும் படி எழுதியது நன்றாக இருந்தது.

எல் கே said...

இது புரிது தல

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நேற்றய சத்தியம்
இன்று பொய்.
நேற்றய போதி
இன்று விறகு.
என் தத்துவம்
உன் டிஷு பேப்பர்.
உன் வாழ்வு
என் மரணம்
ஒரு புள்ளியில் குவியாது
விரிந்தோடும் பாதைகள்
பாதை வழியே
தொடரும்-
போதியாகிப்போன
புத்தர்களின்
பயணம்.

ஸ்வாமி ஓம்கார் said...

//மரம் பேசுமா? என்ற கேள்வியை போதிமரம் பேசும் என்ற பொதி சுமந்த போதையை உள்ளிருந்து வியந்தவாரே..
//

இதேதான் என்னிடமும் எல்லாரும் கேட்கிறார்கள். :)

மரம் பேசுமா..? ம்ம்....

Paleo God said...

விதூஷ் : நன்றிங்க..:)

பின்னோக்கி: நன்றிங்க..:)

LK : ரைட்டு. நன்றிங்க..:)

ஜெ.ஜெயமார்த்தாண்டன்..: மிக்க நன்றி (அருமை) :)

ஸ்வாமி ஓம்கார்: :)
தன்யனானேன் :)) மிக்க நன்றி.