பலா பட்டறை: வெண்ணை..(0.03) (டிங் டிங் டி டிங்)

வெண்ணை..(0.03) (டிங் டிங் டி டிங்)




லிஸன். இது முக்கியமான ஒரு ப்ரொஜக்ட். நம்ம கம்பெனிக்கு மிகப் பெரிய ப்ரெஸ்டீஜ் இஷ்யூன்னு, எம்.டி பர்சனல் கேர் எடுத்து, அதிக கவனம் வெச்சி செய்ய சொல்லி இருக்கார். ஏன்னு உங்களில் யாருக்காவது தெரியுமா??

பிகாஸ், நாம் எழுப்பும் இந்த கட்டிடம் 60 மாடிகளைக் கொண்டதாலா?

இல்லை நண்பர்களே. அதல்ல இங்கே பிரச்சனை, இது ஒரு கூட்டு முயற்சி என்பது உங்களுக்கு தெரியுமல்லவா?

யெஸ் சார். நமக்கு வரவேண்டிய ஆர்டர் இது. தனியே கட்டி பெயர் வாங்கி இருக்கவேண்டியது, கடைசியில் அந்த ஜப்பான் கம்பெனியும் போட்டிக்கு வந்துவிட்டது.

எக்ஸாட்லி மை பாய். எனி வே.. நாம் யார் என்பதை காண்பிப்போம்.

யெஸ் ஸார்..

--

வாட் தெ ஹெல்? என் மானத்த வாங்கறதுக்குன்னே எல்லாரும் அந்த ஜப்பான் கம்பெனிக்கு விலை போயிட்டீங்களா?

நோ பாஸ்.

பின்ன எப்படிய்யா கட்டிடம் சரிஞ்சிது? பெரிசா பேசினோமே? கட்டிடகலையில நாங்க 3000 வருஷ அனுபவசாலிங்கன்னு, இப்ப அந்த ஜப்பான்காரன் கட்டறான். கட்டி நிக்க வெச்சிட்டான்னு வைச்சிக்க. மானம் போய்டும்.

எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை சார். கீழ மொத்தம் லைம் ஸ்டோன், சாலிட் சாயில் இல்ல, நிறைய ஏர் பாக்கெட்ஸ். நாமளே மொதல்ல ஏமாந்துட்டோம், இப்ப விஷயம் தெரிஞ்சி அவன் கை வெக்கிறான், ஜப்பான் என்ஜினியர்களால முடியாது சார். ஐ பெட்.

அடப்போய்யா.. அவங்களப்பத்தி உனக்கு தெரியாது..

--

சார்.. குட் நியூஸ்.

வாட்.?

ஜப்பான் காரன் கட்டினதும் பணால்.

ஓ காட். அப்பறம். ?

ஹை லெவல் மீட்டிங் இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு..

--

ஜெண்டில்மேன்.. இது ஒரு டிபிகல் சாயில். ஐ அக்ரீ. கொஞ்சம் கஷ்டமான வேலைதான். நம்மூருகாரங்களாச்சே முடிச்சிடுவீங்கன்னு நெனெச்சேன். பட். இது அவங்களுக்கும் ஒரு சவால்தான். நவ் இத கட்டி முடிக்க ஒரே சொல்யூஷன்தான் இருக்கு..அவங்க ஐ மீன் ஜப்பனீஸ் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க, இனி ஈகோ இல்லாம நீங்க ஓக்கே சொன்னா வி வில் வின் டுகெதர். என்ன சொல்றீங்க.?

நோ ப்ராப்ளம் சார். ஆனா என்ன அந்த வழி.?

சிம்பிள். ஸ்ட்ரக்ச்சர் டிசைன்ல ரெண்டு பேருக்குமே வேற வேற எடத்துலதான் ஃபெய்லியர். உங்களுக்கு ஆன இடத்துல அவங்களுக்கு ஆகல, அதே மாதிரிதான் அவங்களுக்கும், ஸோ ரெண்டு பேருமே ஒண்ணா இணைஞ்சி இந்த ப்ரோஜக்ட் முடிச்சா நல்லது.

ம்ம்.. ஓகே சார், டீல். ப்ரோஜெக்ட் முடியனும், அது முக்கியம் ஆனா??

வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்? தட் நேம் ஆஃப் த பில்டிங்? ரைட்?

ஆமாம் சார் அதுல யார் பங்களிப்பு அதிகம் இருக்கோ அவங்க பரிந்துரைக்கிற பேர் கட்டிடத்துக்கு வைக்கறதாதானே அக்ரிமெண்ட்.

யா, பட் இப்ப மொதல்ல வேலை முடிப்போம், பங்களிப்பைப் பொறுத்து அதை தீர்மானிப்போம்.

--

ப்ளீஸ்.. சைலெண்ட். இது ஒரு நல்ல நேரம், மிகுந்த வேதனைகளுக்குப் பிறகு வேலை முடிந்த நேரம். ஒரு கட்டிடம் முழுமை பெற்ற நேரம், கொண்டாடுங்கள், ஏன் சர்ச்சை நண்பர்களே?

சார். நமது கொண்டாட்டங்களுக்கு முன் முக்கியமாய் செய்யவேண்டிய ஒன்று இந்த கட்டிடத்திற்கு பெயர் வைப்பது. அதனை முடிவு செய்துவிட்டு மற்றவைகள் பற்றி பேசலாம்..

ஓ யெஸ். நான் அதை மறந்து விட்டேன்.  நீங்கள் இரு நாட்டினரும் சேர்ந்து இந்த கட்டிடத்தை கட்டி முடித்ததாலும் இருவருமே ஒத்துப்போகிற ஒரு பெயரையே நான் பரிந்துரை செய்யலாமென்று இருக்கிறேன்.

வாட், தமிழும், ஜப்பானீஸும் கலந்தா? அதுவும் இப்படிப்பட்ட ஒரு கட்டிடத்திற்கா? எப்படி சார்??

முடியும். அதுவும் இந்த கட்டிடக் கதையைக் கேட்ட என் 5 வயது குழந்தை வைத்த பெயர் அது.

வாவ் என்ன பெயர் சார்..




































’நிக்கிமோ நிக்காதோ’

--

இது ஜேப்னீஸா?, ட்டாமிளா?    


டிங் டிங் டி டிங்..:)



30 comments:

Vidhoosh said...

:)) அது.....!

பனித்துளி சங்கர் said...

அந்த கட்டிடம்
’நிக்கிமோ நிக்காதோ’ . இதை படித்து முடிப்பதற்குள் எங்க கட்டிடம் சரிந்துபோச்சு போங்க !

Cable சங்கர் said...

m..mmmmm....குத்து நல்லாருக்கு..:)

தராசு said...

யப்பா !!!!!!

எப்படிங்க, இப்படிஎல்லாம்!!!!!!!

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Naan kooda konjam seriousa yosichuturunthaen!!

:D

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

நாடோடி said...

க‌ட்டிட‌த்தின் பெய‌ர் சூப்ப‌ர் ச‌ங்க‌ர்ஜி

Chitra said...

ஆட்டோ வர்மா? வரதா? - இந்திய "பெயர்கள்"

vasu balaji said...

குத்துன்னா குத்து!என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா குத்து:))))

☀நான் ஆதவன்☀ said...

:)))))

'பரிவை' சே.குமார் said...

க‌ட்டிட‌த்தின் பெய‌ர் சூப்ப‌ர் ச‌ங்க‌ர்

மணிஜி said...

தொன்னை....

Ahamed irshad said...

போட்டு தாக்குங்க.....ஷங்கர்

கண்டிப்பா ......... வரும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நிக்குமா - குடியிருப்பு
நிக்காட்டா - சுற்றுலாத்தளம்

தமிழகத்தின் பைசா கோபுரம்

தேவன் மாயம் said...

படத்தில் இருக்கும் கட்டிடமே ஒருமாதிரி சாய்ந்து உள்ளதே!!!!!!!!1

எல் கே said...

mudiyala avvvvvvvvv

Anonymous said...

:)

எறும்பு said...

Cable Sankar said...

m..mmmmm....குத்து நல்லாருக்கு.//
வானம்பாடிகள் said...

குத்துன்னா குத்து!என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா குத்து:))))////

எச்சூச்மீ, ஆளாளுக்கு குத்து குத்துக்ராங்களே அப்படினா என்ன? நான் அப்பாவியா இருக்ரதனாலே எனக்கு எதுமே புரிய மாட்டேங்குது..

Vidhya Chandrasekaran said...

:)))

துபாய் ராஜா said...

:))

Prasanna said...

பட்டையோ கெளப்புங்கோ :)

Unknown said...

கண்ணைக் கட்டுது சாமியோவ். அதெப்படி எவ்வளவு அடுச்சாலும் தாங்குறாங்க? ரொம்ப நல்லவிங்களா இருப்பாங்க போல.
அன்புடன்
சந்துரு

Unknown said...

இந்த ஜோக் நான் மூணு வயசா இருக்கும்போது கேட்டது.. ஆனா இப்ப சொல்லியிருக்கிறதுல எதோ உள்குத்து இருக்கிற மாதிரி அல்லாரும் பேசுறாங்க.. அதான் ஒன்னியும் பிரியல..

Unknown said...

புரிஞ்சிருச்சி புரிஞ்சிருச்சி எனக்குப் புரிஞ்சிருச்சி..

க.பாலாசி said...

அட. இந்த பேரு நல்லாருக்கே... அதுசரி... இப்டி கட்டுனா பில்டிங்..’நிக்கிமோ நிக்காதோ’ ???

ரசித்தேன்....

சீமான்கனி said...

யோவ்...அது யாருயா ஆட்டோவ உள்ளே விடுறது....பிரேக்கு பிடிச்சா ''நிக்குமோ நிக்கதோ'' தெரியலையே...ஷங்கர் ஜி...பத்திரம்...

மரா said...

கத நல்லாயிருக்கு.யாரோ உங்க ஜப்பான் ரசிகர் சொன்னதா? எனக்கு கூட ஜப்பானில் நிறைய நண்பிகள் உண்டு. உகாண்டாவிலும். :)

மங்குனி அமைச்சர் said...

ஒரு மார்கமா தான் தான் இருக்கிக

Paleo God said...

@விதூஷ்: சரிங்க..:))
@பனித்துளி: நிக்க வெச்சிடலாம். அதான் பேர் கிடச்சாச்சே..:))
@கேபிள் சங்கர்:: ஏன் தல, ஏன் இந்த கொலை வெறி?? :))
@தராசு: வாங்க தல, எல்லாம் வெயில்தான்..:))
@நாளைப்போவான்:: உங்க ஆறு வெரலப்பார்த்தாலே இப்படி ஆயிடுது:)
@T.V.ராதாகிருஷ்ணன்:: நன்றி சார்..:)
@நாடோடி:: நன்றிங்க..:))
@சித்ரா:: அதானே? சூப்பருங்க டீச்சர்..:))
@வானம்பாடிகள்:: நீங்களுமா சார்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
@நான் ஆதவன்:: வாங்க நன்றி..:))
@சே.குமார்: நன்றிங்க குமார்..:))
@மணிஜீ:: ஹி ஹி..:)
@ஈரோடு கதிர்: நன்றிங்க::) அந்த கேமரா?? :)
@அஹமது இர்ஷாத்: போட்டா, ஆட்டோ, போட்டோதான்..:))
@க.நா.சாந்தி லெட்சுமணன்:: சரிதாங்க..:))
@தேவன் மாயம்:: நீங்கதான் சார் கரெக்ட்டா கண்டுகினீங்க..:))
@LK :இதுக்கே இப்படின்னா?? :))
@சின்ன அம்மிணி: நன்றிங்க..:))
@எறும்பு: அப்படியே அப்பாவியாவே இருங்க அதுதான் நல்லது..:))
@வித்யா: நன்றிங்க..:)
@துபாய் ராஜா: நன்றிங்க ராஜா..:)
@பிரசன்னா: ரைட்டுங்கோ..:))
@தாமோதர் சந்துரு: வாங்க. என்ன சொல்றீங்களா?? :))
@முகிலன்: என்னது மூணு வயசிலேயா?? என்னது புரிஞ்சிடிச்சா? அவ்வ்:))
@பாலாசி:: நன்றிங்க பாலா:)
@கனி: அதானே நன்றி நண்பா..:))
@மயில் ராவணன்: ரைட்டு.. உங்க ரேஞ்சே வேற வேற..:))
@மங்குனி:: நன்றி:)

R.Gopi said...

சாயாத மாதிரி எம்புட்டு நேரம் தான் பில்ட்-அப் கொடுக்கறது... உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா........

இந்த நிக்கிமோ-நிக்காதோ சங்கதி புரியறது நெம்ப கஸ்டம்.....