ஒவ்வொரு மிருகத்துக்கும், பறவைக்கும் அதன் ஒலிகளே தொடர்புகொள்ளும் கருவியாக இருக்கிறது. கிடைக்கும் சுள்ளிகளைக்கொண்டு கூடு கட்டியோ, குகைகளில் பதுங்கியோ, தண்ணீரிலோ அவையும் வாழ்க்கை நகர்த்துகிறது.
என்ன பெரிய தேவை? உணவு, தண்ணீர், அச்சமில்லாது உறங்க ஓரிடம். நிம்மதியாய் கலவி, பின் சந்ததி வளர்க்க வந்த வாரிசுகளுக்கு சூழலின் அபாயங்கள் புரியவைக்கவும், உணவுக்கான போராட்ட முறைகள் தெரிய வைக்கவும் சில பயிற்சிகள். குட்டிகள் வளரும் வரை காபந்து. அதன் பின் அதனதன் வழி, அதனதன் வாழ்வு, அதனதன் போராட்டம்.
இதன் நடுவில்தான் ஆறறிவு கிளை பிரிந்து, அபத்தங்களைக் கட்டி அழத்தொடங்கியதோ?
குழந்தை பெற்று, பாலூட்டி சீராட்டி, வித்தைகள் கற்றுத்தந்து, அன்பினாலே விலங்கிட்டு, அதனூடே வாழ்வு நகர்த்தி, சாமர்த்தியங்கள் முதலீட்டில் ஒரு தனி உயிரின் பரிபூரண வாழ்வு சிதைக்கப்படுகிறதோ?
ஒரு விலங்கிற்கான வாழ்வு முறை சுதந்திரம் மனிதனுகில்லாமல் சார்புடையவனாக, எதையாவது பின்பற்றுபவனாக, பின்பற்றச்சொல்லுபவனாக ஏன் மாறிப்போனான்?
அதிகாரங்கள் யார் தந்தது? எல்லா தர்க்கங்களிலும் தன்னையே முன்னிருத்தி தனக்கானதே இவ்வுலகென்றும், மற்றெல்லா உயிரினமும் தன்னாலே பிழைக்கிறதென்றுமான தத்துவம் உயிர்பெற்றதெப்போது? வெறும் ஒலிகளை ஒழுங்கு படுத்தி வடிவங்கள் தந்த ஆணவமா?
ஒரு பறவைக்கோ, விலங்கினத்திற்கோ தெரிந்த குழந்தை வளர்ப்பும், அவை கற்றுத்தரும் வாழ்வு எதிர்நோக்கும் பாடங்கள் அளவுக்கு நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? அவைகள் அளவுக்கு சுய புத்தி உண்டா?
கூடலின் சுகம் மென்று, வலியுடன் குழந்தை ஈன்று, அன்புடன் அரவணைத்து, தனியே வாழ்வு சுவைத்துக்கொள் என்ற மற்ற உயிரினிங்களின் சுதந்திரத்தை மட்டும் எப்படி ஆறறிவு தவற விட்டது? எங்கே பிசகு? அதி மிகுந்த அன்பின் போதையா? சுயநலத்தின் சூழ்ச்சியா? வாழ்வுமுறை பயமா? பயமே அழிவிற்கான மூலதனமா? ஆளத்துடிக்கும் தூண்டுதலா?
சரி, தவறு என்ற நிகழ்வுகளின் தீர்ப்புகளில் உண்மையிலேயே அது சரிதான் அல்லது தவறுதான் என்று எதை முன் வைத்து முடிவுக்கு வருகிறோம்?
எதுவரை போகும்? மனிதனைத்தவிர இறப்பினைப்பற்றி பயங்களும், யோசனைகளுமில்லாத உயிரினத்தில் மனித இனம் போகும் பயணம் எவ்வளவு தூரம் இன்னும் மிச்சமிருக்கிறது? மரணம் பற்றி பயம் கொள்ள வைப்பது எது?
--
பெயரில்லா கவிதை..
நிலவில்லாத இரவொன்றில்
காற்றினிலாடும்
மெழுகுவர்த்திச்சுடர்
மின் வெளிச்சம்
ஜடமாய்க் காட்டிய
பொருட்களுக்கும்
உயிர் தந்துவிடுகிறது...
.
34 comments:
கவிதை நல்ல தாட்.
மனிதன் விசித்திரமானவன். புரிந்துகொள்வது இயலாத காரியம்.சில சமயம் அன்பினால் கூட சில குழப்பங்கள் நேரிட்டுவிடும்.
வாவ்...
சிந்தனையும் கவிதையும் அற்புதம்..
good thougt and correct poem recoding this article.
அருமையான பதிவும் அழகான கவிதையும்.
ஷங்கர்.. சூப்பர்.
இதில வேற நீ மனுசனா மிருகமான்னு திட்டிக்கிறமே அதுங்களுக்கு புரிஞ்சா சிரிக்காது:). கவிதை வாவ்
இப்படி ஒரு அருமையான கவிதை தந்தது.. அந்த ஆறாவது அறிவு தான் :)
அருமையான பதிவும் அழகான கவிதையும்.
ஷங்கர்..ஜி...
கவிதைக்கு "காட்சி மயக்கம்" என்ற பெயரை பரிந்துரைக்கிறேன் :))
ஞான வெண்ணை!
மிருகங்கள் தெருவில் செத்துக்கிடக்கும்.
மனிதனுக்கு செத்த பின்னும் சொர்க்கம் போக ஆசை இருக்கிறதே!ராஜா மாதிரி கடைசி மூச்சு வரை இருக்கணும்கற ஆங்காரம்,தான் என்கிற ஆணவம் இவை மிருகத்திற்கு இல்லை. சிந்திக்கக் கற்றவனுக்குத்தான் சீக்கு அதிகம் சங்கர் ஜீ!
இன்னிக்கு 6/6 நான்தான்
//சிந்திக்கக் கற்றவனுக்குத்தான் சீக்கு அதிகம் சங்கர் ஜீ!////
:))) ROFL
கதையும் கவிதையும் நல்லா இருக்கு சங்கர்ஜி..
கவுஜ கலக்குது
மின் வெளிச்சம்
ஜடமாய்க் காட்டிய
பொருட்களுக்கும்
உயிர் தந்துவிடுகிறது...
....... கவிதை, அசத்தி விட்டது. படம், சுவாரசியமாக இருக்குது.
சிந்தனையைத் தூண்டும் பதிவு.
எனக்கு "ஓ"ன்னு அழணும் போலிருக்கு...
ஷங்கர் அய்யா வேணாங்க.
என்னால முடியலை.. உங்க வெண்ணை பதிவ படிச்சு சாமியார் ஆகிர்வேன்னு பயமா இருக்கு.இவ்வளவு தத்துவம் ஆகாதுங்க. கொஞ்சம் lighter subject எழுதுங்க.
அற்புதம்
ஒரு மாறுபட்ட சிந்தனை ஷங்கர் .
சிந்தனையின் வீச்சு விரிகிறது,.....மனசுக்குள் உருகி ஓடுகிறது....மணக்கும் நெய்யாய்.
அழகான கவிதை, வித்தியாசமான பதிவு....
நாளைக்கு வேணும் என்பதைவிட, சந்ததிக்கு சேர்த்துவைக்கணுமுன்னு ஆரம்பிச்சவுடனே மனிதன் அதலபாதாளத்தில் விழுந்துட்டான்.
போதாக்குறைக்கு கௌரவம் அது போலியாக இருந்தாலும் வேண்டிக்கிடக்கே:(
//அதிகாரங்கள் யார் தந்தது? எல்லா தர்க்கங்களிலும் தன்னையே முன்னிருத்தி தனக்கானதே இவ்வுலகென்றும், மற்றெல்லா உயிரினமும் தன்னாலே பிழைக்கிறதென்றுமான தத்துவம் உயிர்பெற்றதெப்போது? வெறும் ஒலிகளை ஒழுங்கு படுத்தி வடிவங்கள் தந்த ஆணவமா?//
பொறி தெறிக்கும் ஷங்கரின் வரிகள்.. இது ஷங்கர் இன்ஸ்டின்க்ட்.
மனிதன் ..
வேருக்கு வெந்நீர் ஊற்றி கிளைகளுக்கு ஏசி போடுபவன்..
நன்றி..
:)
mm :)
பெயரே தெரியாத கவிதை இனிக்குதே...
மிகவும் அழகான சிந்தனை
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
.
மனிதன் மிக மிக விசித்திரமானவன். அவனையும், அவனின் செய்கைகளையும் எல்லா நேரமும் சரியாக புரிந்து கொள்வது எளிதல்ல...
அந்த கவிதையும் பலே ரகம்...
Nice One
//////////எதுவரை போகும்? மனிதனைத்தவிர இறப்பினைப்பற்றி பயங்களும், யோசனைகளுமில்லாத உயிரினத்தில் மனித இனம் போகும் பயணம் எவ்வளவு தூரம் இன்னும் மிச்சமிருக்கிறது? மரணம் பற்றி பயம் கொள்ள வைப்பது எது?//////////
சிந்திக்கத் தூண்டும் பதிவு மிகவும் அருமை !
வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன்.
சிந்தனையும் கவிதையும் அற்புதம்..!
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
@விசா : நன்றிங்க ..:))
@அமைதிச்சாரல் : ஆமாங்க. மிக்க நன்றி.:)
@முகிலன் : நன்றி முகிலன்..:)
@மதுரை சரவணன்: மிக்க நன்றி சரவணன்..:)
@பட்டர்ஃப்ளை சூர்யா: மிக்க நன்றி ஜி:))
@வானம்பாடிகள்:: கண்டிப்பா சிரிக்கும் சார். மிக்க நன்றி.:)
@பிரசன்னா: அதுதான் பிரச்சனையே..:)) நன்றிங்க பிரசன்னா:))
@கனி: மிக்க நன்றி கனி:)
@விதூஷ்: ரைட்டுங்க:)) மிக்க நன்றி.:)
@நாடோடி:: நன்றிங்க ஸ்டீபன்.:)
@தராசு: மிக்க நன்றி தல:)
@சித்ரா: மிக்க நன்றி சித்ராஜி..:)
@எறும்பு: குறும்பு. மிக்க நன்றி தல:))
@T.V.ராதாகிருஷ்ணன்: நன்றி சார்..:)
@தமிழ் உதயம்: மிக்க நன்றிங்க:)
@ஜெரி ஈசானந்தன்: மிக்க நன்றிங்க வாத்யார்..:))
@சங்கவி:: நன்றிங்க நண்பரே;;:)
@துளசி கோபால்: வாங்க டீச்சர், கரெக்ட்டா சொன்னீங்க.. மிக்க நன்றி:))
@பிரகாஷ்:: மிக்க நன்றி பிரகாஷ்..:)
@ஷர்புதீன்: மிக்க நன்றி..:))
@கலகலப்ரியா:: நன்றிங்க சகோதரி..:)
@துபாய் ராஜா:: மிக்க நன்றிங்க.:))
@பனித்துளி சங்கர்: மிக்க நன்றிங்க:)
@கோபி: மிக்க நன்றி தல..:)
@அஹமது இர்ஷாத்: நன்றிங்க அஹமது..:)
@குமார்: மிக்க நன்றி குமார்..:))
@பின்னோக்கி: மிக்க நன்றிங்க..:))
@போகி: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..:))
nantru...............
Post a Comment