முடிவற்ற..
இன்றைக்கு முன் இறந்துபோன
ஏழு நாட்களின் தாக்கத்தில்
இன்றைய நாளும் இறப்பதறியாது
வாழ்வது பற்றிய குறிக்கோள்கள் மீது
கேள்விகள் எழுந்தது..
எல்லா முனைப்புகளும் முடிவினை நோக்கியே
என்ற சிந்தனையில் இலக்குகளில்லா வாழ்வின்
சூட்சுமங்களில் இறக்கப்போகும் முன்னேற்பாடுகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்..
-----
இதுவரை பறவைக்கும், குஞ்சுக்கும்
வீடாயிருந்த கூடு, அடித்த புயலில்
ஏதுமற்ற வெளியை, குடிவைத்து
சிதிலங்களின் சின்னமாய் சிக்கல் பின்னல்களில்
ஊடாக, கூடாகவே சரிந்து கிடக்கிறது..
-----
விழிப்பினைத் தள்ளிப்போட்ட
உறக்கத்தின் முடிவில்
பெற்றவர்கள், பெற்றவைகள்
பறவைகள், தொலைக்காட்சி,
செல்பேசி, வாகனம் மற்றும்
வயிற்றினுள் பசியின் உறுமல் என
சேதி சொல்லும் ஒவ்வொரு
ஒலிக்குமான அர்த்தங்கள்
தேவைகளின் மொழிகளாய்
விழிகளைத் திறக்கவைத்து
ஓடச்சொல்கிறது
இருப்பின் வேட்டைக்காய்..
.
Labels:
கவிதை,
பட்டறை கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
Me First....
//விழிகளைத் திறக்கவைத்து
ஓடச்சொல்கிறது
இருப்பின் வேட்டைக்காய்.. //
அழகான வரிகள்.....
இன்றைக்கு முன் இறந்துபோன
ஏழு நாட்களின் தாக்கத்தில்
இன்றைய நாளும் இறப்பதறியாது
வாழ்வது பற்றிய குறிக்கோள்கள் மீது
கேள்விகள் எழுந்தது..
.... thought for the day!
புயல், கூடு.... நல்லாருக்குங்க சேம் பிளட்...
பிரபாகர்...
//இலக்குகளில்லா வாழ்வின்
சூட்சுமங்களில் இறக்கப்போகும் முன்னேற்பாடுகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்..//
உண்மைங்க... இதுதான் உண்மைமே...
இரண்டாவது நன்று..
மூன்றாவது நிதர்சனம்... தினம் விடியும் காலை இருப்பிற்காகத்தான்....
Photo = Post title
good
//இன்றைக்கு முன் இறந்துபோன
ஏழு நாட்களின் தாக்கத்தில்
இன்றைய நாளும் இறப்பதறியாது
வாழ்வது பற்றிய குறிக்கோள்கள் மீது
கேள்விகள் எழுந்தது..//
அருமை.அருமை. ஓய்வு நேரத்தில் இது போன்ற ஓயாத என்ணங்கள்தான்.
அருமை
அப்பிடித்தான் இருக்கு..கடைசி வரிகள் மிக நன்று
அதே அதே!
என் ரேஞ்சுக்கு இல்லாட்டி கூட பரவயில்லை.கவிதை நல்லா இருக்கு. ஆமா சங்கத்துல போஸ்டிங் கேட்டு.......?!!
இதுவரை பறவைக்கும், குஞ்சுக்கும்
வீடாயிருந்த கூடு, அடித்த புயலில்
ஏதுமற்ற வெளியை, குடிவைத்து
சிதிலங்களின் சின்னமாய் சிக்கல் பின்னல்களில்
ஊடாக, கூடாகவே சரிந்து கிடக்கிறது..
அழகான வரிகள்....
yellame nallaayirukku.........!
தூங்குவதுபோல் சாக்காடு..
விழிப்பதுபோல் பிறப்பு..
என்ற வரிகள் ஞாபகம் வருகின்றன.
நல்லாருக்குங்க.
//விழிப்பினைத் தள்ளிப்போட்ட
உறக்கத்தின் முடிவில்
பெற்றவர்கள்,//
சிறப்பான சிந்தனை ஷங்கர்...ஆழ்கருத்துகள் அடங்கிய பதிவு...அருமை...
அனைத்தும் அருமை.
சிறப்பான சிந்தனை...
ஆழ்கருத்துகள் அடங்கிய பதிவு...அருமை...
கவிதை வரிகள்,அர்த்தம் மனதை இலகுவாக படிக்கிறது.
thala
sathiyama puriyala.. amam en blogku vantheega, appuram alaye kanom enna acchu
வாங்க சங்கவி மிக்க நன்றி..:)
மிக்க நன்றி சித்ராஜி..:)
ரொம்ப நன்றிங்க சேம் ப்ளட்..:)
மிக்க நன்றி பாலாசி..:)
மிக்க நன்றி எறும்பாரே..:) (தலைப்பு தாண்டி வரலயா?)
நன்றிங்க ராஜா::) (ரொம்ப ஓய்வெடுக்காதீங்க..:)
மிக்க நன்றி T.V.ராதாகிருஷ்ணன் சார்..:)
மிக்க நன்றி நர்சிம்ஜி..:)
மிக்க நன்றி வானம்பாடிகள் சார்..:)
மிக்க நன்றி மயில் (வொய் ப்ளட் நோ ப்ளட்.:)
மிக்க நன்றிங்க கொற்றவை:)
மிக்க நன்றிங்க ரசிகை..:))
நன்றிங்க அமைதிச்சாரல்..:)) (அட ஆமாங்க..!)
தலைவன்(ரே) ஹும்ம்..
மிக்க நன்றி கனி..:)
மிக்க நன்றிங்க அக்பர்..:)
நன்றிங்க நண்பர் குமார்..:))
வாங்க அஹமது இர்ஷாத் மிக்க நன்றி..:))
எல்கே.. வாங்க .:). (அடுத்தது படிங்க புரியும் (!?)
//விழிகளைத் திறக்கவைத்து
ஓடச்சொல்கிறது
இருப்பின் வேட்டைக்காய்//
நிதர்சன உண்மை....
Post a Comment