காதலன் - (என்ன கொடுமை சார் இது??)
வேற வழியே இல்லாமல்தான் டாக்டரைப் பார்க்கும் அந்த முடிவுக்கு வந்தேன். முதலில் எதாவது அல்ப்ராஸொலம் மாத்திரை வாங்கி போடலாம் என்றுதான் நினைத்தேன், மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுமே என்பதால், ப்ச், போலியா, காலாவதியானதா என்ற பிரச்சனைகள் இருப்பதால் டாக்டரை போய் பார்ப்பது அவசியம் எனத் தோன்றியது.
டாக்டருடைய வீடு கம் க்ளினிக் அடைந்து, பெரிய கேட்டைத் திறந்து, மெல்ல ரிசப்ஷனில் பதிவு செய்து என் பெயர் கூப்பிடக் காத்திருந்தேன்.
உடலில் வியாதிகள் இல்லாமல், ஏதேனும் வியாதி இருக்குமோ என்று சந்தேகத்தோடு போகும்போது நிறைய விஷங்கள் பொறுமையாய் கவனிக்க முடிகிறது.
நான் தரையில் இருந்த டைல்ஸ் கட்டங்களை எண்ண ஆரம்பித்தேன்.
எக்ஸ்கியூஸ்மி மிஸ்டர்.ஷங்கர்.
யெஸ் சிஸ்டர்,
நீங்க டாக்டரை போய் பார்க்கலாம்.
தேங்ஸ்..
டொக், டக்..
மே ஐ கமின் டாக்டர்
யெஸ், வாங்க நேம்..., ஷங்கர், ...ம்ம் சொல்லுங்க என்ன பிரச்சனை?
சார் நான் ஒரு பதிவர், ஐ மீன் ப்ளாக்கர்,
அடடே எழுத்தாளரா? வெரி குட்.
அய்யய்யோ, இண்டெர்னெட்ல எனக்கு தெரிஞ்சத ஓசில கிறுக்கிட்டு இருக்கறவன் சார், நீங்க சொல்றதெல்லாம் பெரிய வார்த்தை.
ஹா ஹா சரி என்ன விஷயம் நான் எப்படி உங்களுக்கு உதவலாம். சொல்லுங்க?
லவ் ப்ராளம் சார், அதாவது எனக்கு இப்பல்லாம் நிறைய லவ் லெட்டர்ஸ் மின்னஞ்சல்ல வருது. ரொம்ப பயமா இருக்கு.
அப்படியா என்ன மாதிரி?
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்களுக்கு நிறைய லவ்வர்ஸ் இருக்கலாம் ஆனா நான் அவங்க மாதிரி கிடையாது, ஸ்பெஷல், உங்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன், வேணும்னா இன்னிக்கு ஸ்பென்சர் 'சப்வே' க்கு வாங்க,
நீங்க இல்லாம நான் ரொம்ப விசனப்படுறேன், உங்களுக்காகவே நான் பொறந்தா மாதிரி ஒரு ஃபீலிங்ஸ், தயவு செஞ்சி 'ம்' னு ஒரு வார்த்தை சொல்லுங்க.
உங்க போட்டோ பார்க்காட்டி எனக்கு தூக்கமே வரல, உங்க பதிவு தவிர்த்து வேற எதையும் நான் படிக்கறதில்லை, நீங்க எழுதாத நாட்கள்ல நான் சாப்பிடறதே இல்லை, ப்ளா.. ப்ளா.. இப்படி நிறைய வருது டாக்டர்
அட எஞ்சாய், ஷங்கர் இதெல்லாம் பப்ளிக்கா வெளிப்படுத்திக்கிற மக்களுக்கு சகஜம்தானே,
இல்ல சார் எனக்கு கல்யாணமாயி ரெண்டு குழந்தைகள் இருக்கு, சொன்னாலும் புரியாம தினம் மெயில் வருது, அன்பே ஆருயிரே, நீயின்றி நானில்லை அப்படின்னு, என்னால முடியல.:(
என்னது கல்யாணம் ஆயிடிச்சா? ரொம்ப சென்சிடிவ் மனிதரா நீங்க? அட இந்த வயசுலயும் லவ் லெட்டெர்ஸ் வருதுன்னு, பெருமை படுங்க சார். இதப்பத்திக்கூட எழுதலாம் நீங்க. இன்ஃபாக்ட் இதுவே ஒரு சிகிச்சைதான். உங்களுக்கு உங்க லிமிட்ஸ் தெரிஞ்சிருக்கு அப்பறம் ஏன் பயப்படறீங்க.
அட இது நல்ல ஐடியாவா இருக்கே டாக்டர், எழுதிடறேன்.
அப்புறம் ஷங்கர்.
சொல்லுங்க டாக்டர்
பதிவுல அந்த பெண்களோட பெயர் எதையும் போடாதீங்க,
எந்த பெண்கள் டாக்டர்?
அதான் உங்களுக்கு லவ் லெட்டர்ஸ் எழுதினவுங்க..
அட, நீங்க வேற, எல்லாமே ஆம்பளைங்க டாக்டர்..!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!டொய்ங்!!!!!!!!!!!
.
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
//போலியா, காலாவதியானதா என்ற பிரச்சனைகள் இருப்பதால் டாக்டரை போய் பார்ப்பது அவசியம் எனத் தோன்றியது.//
மருந்து போலியான்னு கவலைபடுறீங்களே, டாக்டர் ஒரிஜினலான்னு பாத்தீங்களா?
//சார் நான் ஒரு பதிவர், ஐ மீன் ப்ளாக்கர்,
அடடே எழுத்தாளரா? வெரி குட்//
எப்பவுமே உங்களுக்கு வெள்ளாட்டு தான் போங்க
:-)
எப்பவாவது பின்னூட்டம் போடுறதோட சரி, கடிதம் எழுத நான் கருணா இல்லீங்கோ
//அட, நீங்க வேற, எல்லாமே ஆம்பளைங்க டாக்டர்..!!!!!!!!!!!!!!!!!!!!//
ரெம்ப வருத்தமா சொன்னது போல இருக்கு...
ஆமா, அதாரது தலைகீழா தொங்குறது?
அதானே பார்த்தேன் உங்க ஆதங்கத்துக்கு ஆம்பளைங்க லெட்டர்
தான் காரணமா......
அதானே பார்த்தேன் உங்க ஆதங்கத்துக்கு ஆம்பளைங்க லெட்டர்
தான் காரணமா......
///////அப்புறம் ஷங்கர்.
சொல்லுங்க டாக்டர்
பதிவுல அந்த பெண்களோட பெயர் எதையும் போடாதீங்க,
எந்த பெண்கள் டாக்டர்?
அதான் உங்களுக்கு லவ் லெட்டர்ஸ் எழுதினவுங்க..
அட, நீங்க வேற, எல்லாமே ஆம்பளைங்க டாக்டர்..!!!!!!!!!!!!!!!!!!!!//////////
ஏலே மக்கா இங்கேயும் இதுதான் நடக்குதா ???????
என்னக் கொடுமை ஸார் இது !
என்னத்தைச் சொல்ல.....
ம்ஹூம், கலி முத்திடுத்து.
என்ன கொடுமைடா ஷங்கரா?
சரியான டாக்டரைத்தான் போய் பாத்தீங்களா :)
//!!!!!!!!!!!!!டொய்ங்!!!!!!!!!!!//
ஷங்கர் இப்பிடி டொய்ங் சொல்லிட்டா கதை முடிஞ்சுபோச்சுன்னு அர்த்தமா !
இது வித்தியாசமான சாமியாரா இருக்கே:))
இதெல்லாம் வேற நடக்குதா
:)
விஜய்
//இந்த வயசுலயும் லவ் லெட்டெர்ஸ் வருதுன்னு//
நோட் தட் பாயிண்ட்...
அட என்ன கொடுமைங்க இது... ஃபீல் பண்ணவேண்டிய விசயம்தான்...
இதெல்லாம் கூடவா?
ஆமாம் போட்டோ ஏன் தலைகீழ்?
:-))
veetu ammini illaiyaa??
veetu ammini illaiyaa??
veetu ammini illaiyaa??
veetu ammini illaiyaa??
veetu ammini illaiyaa??
veetu ammini illaiyaa??
veetu ammini illaiyaa??
எப்பா, கடைசியில கலங்கடிச்சிபுட்டீரே!
சரி அதெல்லாம் உண்மை இல்லை தானே?
பிரபாகர்.
லவ் லெட்டர் வந்தாலும் வந்துது கெட் அப் எல்லாம் மாத்தி ஆட்டோ ஷங்கர் ரேஞ்சுக்கு பெரிய ஆளாயிட்டீங்க.
காதலன் - (என்ன கொடுமை சார் இது??)
மெய்யாலுமே இது கொடுமை தான்! :-)))
ஆனா, பதிவு சூப்பர், வழமை போல...!
முகப்பில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பது நீங்கள் தானா என்று நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏதேனும் திரைப்படத்தில் நடிப்பதாக உத்தேசமா நண்பரே?
ha,ha,ha..... super......punch-line
கோவா படம் பார்த்தா கையோடு பதிவு படித்ததும் தோன்றுகிறது நியாயமான பதிவுதான்...ஆடோலாம் பத்தாது எடு லாரிய விடு ஜூட்...
ஆமா இந்த போட்டோ ல இருக்கறவர் தமிழ்படம் சிவா தானே?
அடடா மேலே போட்டோ கலக்குதே; நீங்க தமிழ் படங்களில் நடிக்காமல் இருப்பது கலை துறைக்கு இழப்பு; நல்ல பிள்ளையா நடிக்க முயற்சி பண்ணுங்க
ஆமா இது சிறுகதையா? :)) அப்படி தான் இருக்கு
ஆமா . . எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் . . இது சிறுகதையா. . செய்தியா . . ஜம்பமா . . மொக்கையா . .இல்ல அறிவிப்பா . . :-)
எப்பா, கடைசியில கலங்கடிச்சிபுட்டீரே!
inga enna nadakkuthu? enna yen intha mathiri..........kadavule :)
அதூகுத்தேன் உங்க வயசுல ஒரு பாட்டி போட்டோ போட்டிருகீயளோ?ம்ம்ம்
/முகப்பில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பது நீங்கள் தானா என்று நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏதேனும் திரைப்படத்தில் நடிப்பதாக உத்தேசமா நண்பரே//
இவரு அதுல ஒரு ஆள் இல்லயே???
நீங்க ரொம்ப நல்லவங்க:) ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..:))
//சரியான டாக்டரைத்தான் போய் பாத்தீங்களா :)/
repeatuu
thangamani illaya ithellam kekamattangala
@சங்கர்:: ஒரிஜினல்தான். மயங்கி விழுந்துட்டாரே..:)
விளாட்டெல்லாம் உங்க கிட்டேர்ந்து கத்துக்கிட்டதுதான் அண்ணே.:)
@சந்தனமுல்லை: நன்றிங்க சகோதரி..:)
@ நாடோடி:: என்னா வில்லத்தனம்..:))
@ சங்கர்:: ஹி ஹி ஒரு விளம்பரம்தான்.
@ஜெட்லி:: யூ ட்டூ மக்கா??
@பனித்துளி சங்கர்: என்னது அங்கயுமா???? என்ன கொடும சங்கர்?? :))
@தராசு: ஆமாண்ணே..:))
@மணிஜீ:: ஆமாண்ணே..:))
@சின்ன அம்மிணி:: ஹி ஹி..:))
@ஹேமா: ஏன் சிஸ்ட்டர் இவ்ளோ அப்பாவியா நீங்க?? :))
@வானம்பாடிகள்: விடமாட்டீங்க போல..:)) நன்றிங்க சார்.
@T.V.ராதாகிருஷ்ணன்:: நன்றிங்க சார்.:)
@ விஜய்:: வா நண்பா. நலமா? நன்றி! :))
@NESAMITHRAN: நன்றிங்க!!
@க.பாலாசி:: நெம்ப ஃபீல் பண்ணனும் நண்பா:))
@ அக்பர்:: ஹி ஹி .. ! :)
@பா.ராஜாராம்: வாங்கண்ணே, :))
@ விதூஷ்:: இருக்காங்க:))
@ பிரபாகர்:: இல்ல, சிலதெல்லாம் :))
@ விசா: என்னது ஆட்டோ ஷங்கரா?? உங்கள நேர்ல பார்ர்கும்போது வெச்சிக்கிறேன்.:)
@ நசரேயன்: வாங்க:) அதானே? ரொம்ப கொடும சார்.:)
@ சேட்டைக்காரன்: நன்றிங்க.:))
@செ.சரவணக்குமார்:: நேர்லயே இந்த கிழவனைப்பார்த்தும் இந்த கேள்வியா?? :)
@சித்ரா:: நன்றிங்க.:))
@சீமான்கனி:: நன்றிங்கோவ்..:))
@பிரசன்னா:: இல்லீங்க அது ஏதோ ஹாலிவுட் நடிகர். :))
@மோகன் குமார்:: ஏன் தல ஏன் இ.கொ.வெ?? நன்றி:))
@க.கண்ணாயிரம்: அதானே நல்லா கேளுங்க நண்பா! :))
@சே.குமார்:: ஹி ஹி.. நன்றி குமார்.:)
@மயிராவணன்:: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))
@முகிலன்:: :)))
@மிஸ்டர் இட்லி: உங்களோடதும்..:))
@LK: ஹி..ஹி..:))
என்னமோ ஏதோன்னு பயந்து போய் உள்ளே வந்தேன்.
ஆணகளே ஆண்களை காதலித்துப் பார்ன்னு ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விடுவோமா?
சர்தான்.
அண்ணே நசர் சொகமாயிருக்கீங்களா?
Post a Comment