நிழல்..
பொங்கிய ஒரு வேரிலமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர் சிலர்
எப்படி வெட்டலாம்
எவ்வளவு கிடைக்கும் என்று..
எந்த வெறுப்புமின்றி
நிழல் தந்துகொண்டிருந்தது
மரம்..!
--
அந்தப் பறவைகள்
வான் நோக்கிப் பறந்ததாய்
நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
அவை தரை நோக்கியே
பறப்பதறியாது..!
--
இருட்டில்
கண்மூடி தோள் சாய்ந்த
குழந்தையிடம் ஏன் என்று
கேட்டதற்கு பயமாயிருக்கிதென்றான்
கண்மூடினாலும் இருட்டாகத்தானிருக்கும்
என்பதை நான் அவனிடம்
சொல்லவில்லை...!
--
.
Labels:
கவிதைகள்,
பட்டறை கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
//எந்த வெறுப்புமின்றி
நிழல் தந்துகொண்டிருந்தது
மரம்..!//
அருமை.
அனைத்தும் அருமை ......
அந்தப் பறவைகள்
வான் நோக்கிப் பறந்ததாய்
நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
அவை தரை நோக்கியே
பறப்பதறியாது..
அருமையான கவிதை
இன்னும் இரண்டு அடுமையான இடுக்கைகளை இங்கேயே போட்டுட்டீங்க
முதல் கவிதையிலேயே நிலைத்து நிற்கிறேன்...
மரத்தின் நிழல்... அருமை சங்கர்ஜி..
// கண்மூடினாலும் இருட்டாகத்தானிருக்கும்
என்பதை நான் அவனிடம்
சொல்லவில்லை...! //
என்னைக் கவர்ந்த வரிகள்
//////
இருட்டில்
கண்மூடி தோள் சாய்ந்த
குழந்தையிடம் ஏன் என்று
கேட்டதற்கு பயமாயிருக்கிதென்றான்
கண்மூடினாலும் இருட்டாகத்தானிருக்கும்
என்பதை நான் அவனிடம்
சொல்லவில்லை...!
///////
ஸார்.. இதுல லாஜிக் எரர் இருக்கு. எங்களுக்கும் கவித எல்லாம் புரியுமில்ல.!!
ரொம்ப நாளைக்கப்புறம் ஷங்கர் பவர்:)
2nd one is good
அருமை சங்கர்...இரண்டு கவிதைகளும்...... முத்துக்கள்! வாழ்த்துக்கள்!
மிக அற்புதமாய் இருக்கு ஷங்கர்.
இரண்மாவது 3வது பந்தி பிடிச்சிருக்கு
//கண்மூடினாலும் இருட்டாகத்தானிருக்கும்
என்பதை நான் அவனிடம்
சொல்லவில்லை...!///
ம்ம்ம்
பட்டறையில விட்டு செதுக்குவீகளோ.
அனைத்தும் அருமை ......
//எப்படி வெட்டலாம்
எவ்வளவு கிடைக்கும் என்று..
எந்த வெறுப்புமின்றி
நிழல் தந்துகொண்டிருந்தது
மரம்..!// --- எந்த நியாயமான காரணமும்மின்றி மரம் வெட்டுபவர்களை முச்சந்தியில் 'கரண்டுகம்பத்தில்' கட்டி வைத்து சவுக்கால் அடிப்பது போல இருந்தது.
மிக்க நன்றி... ஷங்கர்ஜி.
'கட்டாய மரம் வளர்ப்பை' இன்னும் இவ்வுலகில் எந்த ஒரு அரசும் தம் குடிமக்களுக்கு சட்டமாக்காத அவல நிலையை எண்ணி எனக்கு கோபமாய் வருகிறது. இவ்வளவு கற்று அறிவை பெற்ற பின்னும்... இன்னும் ஏனிந்த அவலநிலை?
ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் இரண்டு மரங்களாவது நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்த மரத்தை வெட்டினாலும், வெட்டுபவருக்கு உரிய தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். பத்துமரங்கள் நட்டவரே ஒரு மரத்தை வெட்டுவதற்கு உரிமம் பெறல் வேண்டும். நிறைய மரங்கள் நட்டு வளர்த்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, இலவச பஸ்/ரயில் பாஸ், ரேஷன் கார்டில் கூடுதல் அளவைகள் மற்றும் அரசியல் போன்றவற்றில் முன்னுரிமை தரப்படல் வேண்டும்.
இப்படியெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டப்பட்டதால் அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் குளோரோ புளோரோ கார்பன்களை டன் கணக்கில் கக்கும் நட்சத்திர பிரம்மாண்ட அரங்கத்தில் உலகவெப்பமயமாதல் பற்றி மாநாடு போடுவார்களாம் உலக நாட்டுத்தலைவர்கள்...
மறை கழண்டவர்கள்...
நல்லா இருக்கு கவிதை. செந்தில் அண்ணனுக்கு பார்சல் அனுப்புங்க.(இதுக்கு பெயர்தான் கவிதை அப்டின்னு)
பொங்கிய ஒரு வேரிலமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர் சிலர்
எப்படி வெட்டலாம்
எவ்வளவு கிடைக்கும் என்று..
எந்த வெறுப்புமின்றி
நிழல் தந்துகொண்டிருந்தது
மரம்..!
...... உண்மை ....... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.... பாராட்டுக்கள்!
மனதை தொட்ட கவிதை. மனதை சுட்ட கவிதையும் கூட.
முதல் கவிதை மிக அருமைங்க.
முதலும்... கடைசியும்.. நல்லாருக்கு..
முதல் கவிதையை ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டில் எழுதி வைக்க வேண்டும்.,
good :)
நிழலும் பயமும் ரசித்தேன் ஷங்கர்ஜி அருமை......பாராட்டுகள்..
நிழலும் பயமும் ரசித்தேன் ஷங்கர்ஜி அருமை......பாராட்டுகள்..
ஷங்கர் அண்ணே... இரண்டாவது புரியல... நெஜமாகவே..
யாராவது விளக்கம் குடுங்களேன்..
//இப்படியெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டப்பட்டதால் அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் குளோரோ புளோரோ கார்பன்களை டன் கணக்கில் கக்கும் நட்சத்திர பிரம்மாண்ட அரங்கத்தில் உலகவெப்பமயமாதல் பற்றி மாநாடு போடுவார்களாம் உலக நாட்டுத்தலைவர்கள்...//
பின்னி பெடல் எடுக்கிறார் UFO
என்னாச்சு டெம்ப்ளேட் மாற்றி .. ரொம்ப நாளா ஆளையும் காணோம் ..
கவிதை .. அதுதான் எப்போதும்போல் அருமை .. ...
மூன்றாவது அருமை
மூன்றையும் ரசித்தேன்
மூன்றாவதை ருசித்தேன்
வாழ்த்துக்கள்
விஜய்
இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
http://kaniporikanavugal.blogspot.com
முதல் கவிதை அருமை. ‘தல’ ஹாலிபாலி கேட்ட எரர் பிக்ஸ் பண்ணுங்க சீக்கிரம். :)
மர நிழல் பற்றிய முதல் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது நண்பரே . பகிர்வுக்கு நன்றி !
ரொம்ப நல்லாருக்குங்க.
மூன்றுமே மனதில் பதிந்து நிற்கிறது ஷங்கர்.மூன்றாவது...உண்மைதான் சொல்லாமல் விடுவது நல்லது.
முதல் கவிதை அசத்தல் ரகம்...
//
பொங்கிய ஒரு வேரிலமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர் சிலர்
எப்படி வெட்டலாம்
எவ்வளவு கிடைக்கும் என்று..
எந்த வெறுப்புமின்றி
நிழல் தந்துகொண்டிருந்தது
மரம்..!//#
இதில் மரத்தை ஒரு எழுத்தாளர் ஆகவும் நிழலை அவரின் எழுத்துக்களாகவும் எடுத்து கொள்ளலாமா அண்ணா?
//கண்மூடினாலும் இருட்டாகத்தானிருக்கும்
என்பதை நான் அவனிடம்
சொல்லவில்லை...!//
அண்ணே இது அருமை
பக்கா பக்கா கவிதைகள்
1ம் 3ம் முதல் வாசிப்பில் அருமையாக இருந்தது. 2வது, 3வது வாசிப்பில் புரிந்தது.
கடைசிக்கவிதை சூப்பர்
கடைசி கவிதை மிக நல்ல சிந்தனை நண்பரே...
மூன்றும் அழகு வாழ்த்துக்கள்
தொடருங்கள்...
ரோமிங் தாசுக்கு உள் குத்து?
Post a Comment