பலா பட்டறை: கூடு..

கூடு..ஒருவழியாய் வீடு கட்டி 2-ம் தேதி குடி வந்தாயிற்று. கிராமம் சார்ந்த வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. இரவில் நிசப்தமாக குழந்தைகளுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து.. அங்க போகறதுக்கு எவ்ளோ கிலோமீட்டர்ப்பா? என்று கேட்ட மகனிடம் எனக்குத் தெரிந்த லைட் இயர் கணக்கை சொல்லி புரியவைக்க முயன்றேன்.

வயல்களில் நாற்று நடுவதையும், பக்கத்து வீட்டு ஆட்டுகுட்டிகளையும், கொத்திக் கிளறும் கோழிகளையும் பார்த்து குதூகளிக்கின்றன பிள்ளைகள். நானும் என் சிறு வயதை இப்படி கழித்தவன்தான். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைக்கான Survival of the Fittest சூத்திரங்களை மெதுவாய் கற்றுக் கொடுத்துவிடலாம் என்ற தைரியமும், என்னை என் தந்தை சுதந்திரமாய் வளர்த்த பரிசை நானும் என் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறேன். வீடு மாற்றியது, பிள்ளைகளின் பள்ளி மாற்றல், பணிச்சுமை போன்ற காரணங்களும், இணைய இணைப்பு துண்டிப்பு, மாற்றலுக்கான காலதாமதம் ஆகியவை என்னை வலை உலகத்திலிருந்து முற்றாக துண்டித்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்தவை பற்றி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு நொந்துபோனேன். நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன். சமீபத்திய பதிவர் சந்திப்பும், அதற்கு முன் சந்தித்த பலரின் அன்பான நட்புகளைத் தாண்டி வேறெதுவும் கண்களுக்கு தெரியவில்லை. வலை உலகம் தவிர்த்து வேறெதிலும் இது சாத்தியமும் இல்லை.

எல்லா நண்பர்களுக்கும் என் நன்றியும், வந்தனமும்.

--

மீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். வீடு கட்டுவது என்பது அத்தனை எளிதாக இல்லை. பட்ஜெட்டை விட செலவு திமிறிக்கொண்டு போகிறது. ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே பகிர்ந்தபடி முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா? சிந்திப்பேனா? அழுவேனா? தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)

--

நிழல் வளர்த்து நீண்டு
அடுத்த வீட்டின் மதில் தாண்டிய
வேப்பமரம் என்றேனும் எங்களுக்குள்
வரும் பகையில்
முதல் பலியாகக்கூடும்!
.

48 comments:

பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் புது வீட்டிற்கு.

கிராமத்திற்கு சென்று விட்டதாக எழுதியிருக்கிறீர்கள். எந்த ஊர். உங்கள் வேலை ??

பின்னோக்கி said...

படிக்காமல் விட்டுப் போன பதிவிலிருந்து புரிந்துகொண்டேன்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நன்றிங்க பின்னோக்கி! :-)
--

பிரபாகர் commented on blog post: “வாழ்த்துக்கள் சேம் பிளட். ரொம்ப மகிழ்வா இருக்கு. வந்தும் உங்களை பார்க்காததற்கு இங்கயும் ஒரு சாரி கேட்டுக்கறேன்.பிரபாகர்...”நன்றிங் சேம் ப்ளட்! (ஏன் உங்க பின்னூட்டம் தெரியவில்லை? )

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரனாகிவிட்டாய்.. வாழ்த்துக்கள்..! என்ஜாய்..!

அன்றைக்கு அலுவலகப் பணி காரணமாகத்தான் வர முடியவில்லை.. மன்னிக்கவும்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் ஷங்கர்..

ஜெட்லி said...

இயற்கையை ரசிச்சு வாழ்றீங்க.....
பொறாமையா இருக்கு அண்ணே
...

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் ஷங்கர்ஜி.

//முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா? சிந்திப்பேனா? அழுவேனா? தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:‍)//

பிரமாதம்.

சி. கருணாகரசு said...

முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். //

வாழ்த்துக்கள்.

முடிந்தால் வேப்பமரம் நடுங்கள்.... அந்த காற்று நல்லது.

seemangani said...

புது கூடுக்கு வாழ்த்துகள் ஷங்கர் ஜி...எண்ணப்படியே எல்லாம் அமைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

மணிஜீ...... said...

போடா...(அடுத்த வரி உனக்கு தெரியும் )

முகிலன் said...

புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துகள்.

அன்னு said...

ஆஹா....எங்கடா இந்த ஷங்கரண்ணா நம்ம வூட்டு பக்கம் காணமேன்னு பாத்தாக்க புது வீட்டு பிஸில இருந்திருக்கீங்க போல. ரொம்ப சந்தோஷம்ண்ணா...புது வீடு வாங்கினதுக்காக அல்ல. அதில மத்த ஜீவராசிங்களுக்கும் வாழ விளையாட இடம் கொடுக்கனும்னு முடிவு பண்ணீங்க பாருங்க அதுக்கு. சல்யூட். கிராமத்துல வீடா? எந்த கிராமம்ணா? கோழி எல்லாம் வாங்கி விடுவீங்களா? இயற்கை உரமாயிடும், பொழுது போறதும் தெரியாது. ஃபோட்டோ எல்லாம் போடுங்கண்ணா ஆசையா இருக்கு பாக்க. மீண்டும் வாழ்த்துக்கள்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் புது வீட்டிற்கு.

அமைதிச்சாரல் said...

புது கூட்டுக்கு வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

வாழ்த்துகள் ஷங்கர்.. புது வீட்டிற்கும் கிராமத்துக்கும்....அந்த அமைதி கிடைத்ததுக்கு..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

வாடகை கொடுக்க வேண்டுமே என்ற நிலையிலிருந்து மாற்றம் இதுவே முதல் சந்தோஷம் :)

பறவைகளுக்காகவும் இடம், வாழ்க்கைய இரசிக்க தெரிந்தவர் நீங்கள்

பகைக்கு பலி - யதார்த்த வரிகள்.

Chitra said...

/////ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது.////


..... so true. Congratulations!
May the new house bring many treasured moments. :-)

dheva said...

யாரு வேணுமானாலும் பேசலாம்.....ஆனா தன்னுடைய ஆத்ம திருப்தியோட வாழத் தெரியுமான்னா தெரியாது....

ஆத்மாவின்...
கூடு போல நீங்கள்...
நினைத்து வைத்த..
கிராமாத்து வீடு படைத்தீர்களே.....

அதுக்காக முதல்ல கைய குடுங்க சங்கர்.....! இயற்கையோட இயைந்த வாழ்வு,...இறைவனின் ஆசிர்வாதம்...!

வாழ்த்துக்கள் சங்கர்....!

பிரசன்னா said...

கிராமத்து வீடா..? அருமை.. அதைப்பற்றி விளக்குவீர்கள் என்று நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்
(உங்கள் விவரிப்புதான் கிட்டத்தட்ட என் சொந்த வீட்டு கனவு)
:)

விஜய் said...

வாழ்த்துக்கள்

விஜய்

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துக்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன்///////


நானும் இதை முழுதாய் ஏற்கிறேன் நண்பரே !


கிராமத்து வீடு என்னைப் பொருத்த வரையில் பூமியில் எஞ்சியிருக்கும் சொர்க்கம்தான் அது !

ப்ரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துகள் அண்ணா..

தலைப்பு அருமை....

வானம்பாடிகள் said...

கூட்டில் மரம் வளர்த்து கூடு வளர்க்க வாழ்த்துகள் சங்கர்:)

பா.ராஜாராம் said...

அருமை சங்கர்!

சமீபத்தில், நான் வாசித்த

தி பெஸ்ட் பகிர்வு.

மயில்ராவணன் said...

புதுவீடா? சொல்லவே இல்லை? எங்க? எங்களையெல்லாம் கூப்பிடல? ரொம்ப நல்லவர்ங்க நீங்க?
தம்பி ‘பூரி’ இன்னும் வரல!!

நாடோடி said...

புது வீடா ச‌ங்க‌ர்ஜி... வாழ்த்துக்க‌ள்.. இய‌ற்கையோடு இயைந்த‌ வாழ்க்கை த‌னிசுக‌ம் தான்..

மோகன் குமார் said...

புது இல்லத்திற்கு வாழ்த்துக்கள். ரசிச்சு எழுதிருக்கீங்க. வாழ்க்கையை இதே போல் என்றும் ரசனையுடன் வாழ வாழ்த்துக்கள் நண்பா

கே.ஆர்.பி.செந்தில் said...

அந்தக் கவிதையில் உண்மை இருக்கிறது..

ஜெயந்தி said...

புது வீட்டிற்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் வீட்டிற்குன்னு நெனச்சுக்கப்போறீங்க. உங்களுக்குத்தான்.

Vidhoosh(விதூஷ்) said...

அன்பான குடும்பம் உங்களது. அளவில்லா சந்தோஷம் பெருக இறைவன் துணையிருக்கட்டும்.

ஸாதிகா said...

//எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)
//ஒரு குடும்பத்தலைவரின் நிதர்சனமான நிம்மதிப்பெருமூச்சு!வாழ்த்துக்கள் சகோதரரே!

butterfly Surya said...

புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துகள்.

விரைவில் நண்பர்களோடு நேரில் வாழ்த்தவும் வருகிறேன்.

க.பாலாசி said...

சந்தோஷம் மகிழ்ச்சி... வாழ்த்துக்களும்...

மாதேவி said...

கிராமத்தில் புதுவீடு வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

இயற்கையோடி இயைந்த வாழ்வு வாழ நினைத்தில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி!! குழந்தைகள் வளர்ந்து வரும்போது சலிப்பு தோன்றாமல் பார்த்துக் கொள்ளுவதும் அவசியம்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

வாழ்ததுக்கள் ஷங்கர்.

ரோஸ்விக் said...

புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துகள் சங்கர் அண்ணா.
எல்லா வளமும், நலமும் பெற்று குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_10.html

:-)

cheena (சீனா) said...

அன்பின் ஷங்கர்
புதுமனை புகுந்தமைக்கு நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

எறும்பு said...

// மயில்ராவணன் said...

புதுவீடா? சொல்லவே இல்லை? எங்க? எங்களையெல்லாம் கூப்பிடல? ரொம்ப நல்லவர்ங்க நீங்க?
தம்பி ‘பூரி’ இன்னும் வரல!!///

Repeatuuuu :)

அமுதா கிருஷ்ணா said...

இந்த வருடம் வீடு கட்டும் ஐடியாவில் இருக்கிறேன்.ஐடியா ப்ளீஸ்...

ஷர்புதீன் said...

வாடகை வீட்டில்
வசிக்கலாம்
வாழமுடியாது
- எங்கோ படித்தது.,

இதன் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு நன்கு புரியுமே ஷங்கர்., வாழ்த்துக்கள்., ஊடு தேடி வந்து சோறு தின்னாத்தான் திருப்பதி ஆவும் ., வர்றேன் ....இருங்க....

ஊர்சுற்றி said...

புதுவீட்டிற்கும், அனுபவத்திற்கும் வாழ்த்துக்கள்!

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

தமிழ் வெங்கட் said...

புது வீட்டில் சந்தோசமா இருங்கோ..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! :))

ஜாக்கி சேகர் said...

எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)
--//

அதேதான்.. நைனா இங்கயும்...