இதற்கு முந்தின இடுகையில் கூறியது போல பாம்பு என்றால்? என்ற புத்தகம் படித்து முடித்தேன் (மொத்தமே 72 பக்கங்கள்) மிகவும் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தப் புத்தகம் வெறும் பாம்புகள் அதன் வகை, விஷங்கள் என்று கூறிச்செல்லாமல் பாம்பைப் பற்றிய வெகுஜன மூட நம்பிக்கைகளை வெகுவாகச் சாடியது.
பாம்பினங்கள் 15கோடி ஆண்டுகளுக்கு முன் ஊர்வன இனத்திலிருந்து பரிணமித்தவை. மனித இனத்தின் வயது வெறும் 2 லட்சம் ஆண்டுகள்!!
ஓரிடத்தில் பாம்புகள் வளமாக இருக்கிறது என்றால் பல்லுயிரியம் செழித்து இருப்பதாக அர்த்தம். அன்றி இல்லாமலிருப்பது அவ்விடத்தின் பாழ்பட்ட தன்மையாக கருதவேண்டியதாகும். (சிமெண்ட் போட்டு, செடி அழித்து கொசு வளர்க்கும் நகரங்கள்:)
பாம்புகளைப்பற்றிய நம் அறிவுதனை எள்ளி நகைக்கும் நூலாசிரியர் பாம்புகள் பழிவாங்கும், ஆதிசேஷன் கதைகள், நாக ஜோதிடம், கடிக்குப் பச்சிலை மருந்துவம், மந்திரம் சொல்லுதல், பால் குடிக்கும் பாம்புகள், பாம்பைக்கண்டால் அடித்துக் கொல்லும் நம் வீர சாகசங்கள், அதுவே நல்ல பாம்பாக இருந்தால் அதைச் சாகடித்து அதற்கு சடங்குகள் செய்யும் அபத்தங்கள் (இல்லன்னா பழிவாங்கிடும்!), மேலும் அரசாங்கம் அதிரடிப்படைகளுக்கு ’கோப்ரா’என்றும், கோவையில் சாலையில் எழுதப்பட்டிருந்த வேகம் ஒரு நாகம் வேண்டும் விவேகம் என்று பாமரத்தனமாக பாம்பினைவைத்து பிரச்சாரம் செய்வதையும் மிக கடுமையாகச் சாடுகிறார்.
நிறைய தகவல்களை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் பாம்பின் வகைகள், அதில் மிகக் குறைந்த அளவே உள்ள விஷப் பாம்புகள் வகைகள், அவைகளிலும் அவை மனிதனை ஏன் கடிக்கின்றன? விஷப்பாம்புகளுடன் தனி அறையில் வித்தை காட்டும் சாகசங்கள் உண்மையில் என்ன? உண்மையில் பாம்பு கடித்தால் இறப்பது விஷத்தினாலா? கால தாமத்தினாலா? பயத்தினாலா? கடிபட்டால் என்ன செய்யவேண்டும்? பச்சைப்பாம்பு கண்ணைக் கொத்துமா? பாம்புகள் பிண்ணிப் பிணைவது எதற்காக? நல்ல பாம்பும் சாரையும் ஜோடிகளா? பாம்பு விஷத்தை அப்படியே முழுங்கினால் இறப்பு வருமா? அந்த விஷத்தில் என்னதான் இருக்கிறது? தமிழ் இலக்கியங்களில் பாம்புகளைப் பற்றிய குறிப்புகள் குறைவாக இருப்பது போன்றவைகளை அலசி இருப்பதோடு வெறும் 4 வகை நஞ்சுடைப் பாம்புகள் கடித்து ஒருவர் இறப்பதென்பது பாதிக்கப்பட்டவரின் மன உறுதி, பொது அறிவினைப் பொறுத்ததே ஆனால் அந்த 4 வகைகளுக்காக/ கண்ணில் காணும் எல்லா பாம்புகளையும் அடித்துக் கொல்லாமல் உணவு தானியங்களைப் பாழ்படுத்தும் எலி போன்ற கொறி விலங்குகளை அழிக்கும் இயற்கைக்கு மிகவும் உதவியாய் இருக்கும் பாம்புகளை அப்புறப் படுத்தி உதவியை செய்தாலே போதும் அவைகளும் இங்கே வாழ்ந்து விட்டுப்போகும்.
தவறான நடை முறைகளால், கவனமும், பாதுகாப்பும் இன்றி எதையும் செய்யும்போது தற்செயலாக தண்டனைப் பெறுகிறோமே, அதில் ஒன்றுதான் பாம்புக்கடி!!!!!
அரவங்கள் காக்கப்படவேண்டும்.
கண்டிப்பாய் வாங்கிப் படியுங்கள்.
பாம்பு என்றால்?
-ச.முகமது அலி.
இயற்கை வரலாறு அறக்கட்டளை
பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம்.
04259-253252 / 253303 விலை.ரூ.50/-
---
உஸ்ஸ்ஸ்ஸ்..
எதேச்சையாய் உருவான இரண்டு
கிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று
வேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.
ஏதும் சொல்லாததை இறைவன் என்றது.
தம்மையோ மனிதர் என்றழைத்துக்கொண்டது!!!
30 comments:
அருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html
பரவலாக இப்போது பாம்புகளை கொல்வதில்லை...
பெரும்பாலும் பாம்புகள் மனிதர்களைக் கண்டால் அல்லது உணர்ந்தால் விலகிச்சென்று விடும் ..
மனிதன் .. ஆப்பிள்.. இறைவன் ...சங்கர் .
//எதேச்சையாய் உருவான இரண்டு
கிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று
வேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.
ஏதும் சொல்லாததை இறைவன் என்றது.
தம்மையோ மனிதர் என்றழைத்துக்கொண்டது!!!//
நச்..
நல்ல அறிமுகம் சங்கர்......
//எதேச்சையாய் உருவான இரண்டு
கிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று
வேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.
ஏதும் சொல்லாததை இறைவன் என்றது.
தம்மையோ மனிதர் என்றழைத்துக்கொண்டது!!!//
இது...சூப்பர்....பாஸ்!
நல்ல அறிமுகம் சங்கர்......
//எதேச்சையாய் உருவான இரண்டு
கிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று
வேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.
ஏதும் சொல்லாததை இறைவன் என்றது.
தம்மையோ மனிதர் என்றழைத்துக்கொண்டது!!!//
இது...சூப்பர்....பாஸ்!
பாம்பகள் மிக சாதுவானவை. அதைப்பார்த்த இடத்திலயே அடிக்கனும்னு மைன்ட்ல செட்டாயிடுச்சு ஒண்ணும் பண்ணமுடியாது.
பாம்பகளை பற்றிய முடநம்பிக்கைகளுகக்கு அளவே கிடையாது.
படத்தைப் பார்க்கும் போதே, முதுகுல சில்லுன்னு எதோ போகுதே.. மீ.த. எஸ்கேப்.
நல்ல அறிமுகம். நன்றி சங்கர்
நல்ல பகிர்வு ஜீ
உஸ்ஸுக்கு - உஸ்ஸ் ...
கவிதை சூப்பர்
என் பங்கிற்கு!
99.999 பயந்தான் காரணம் .நாம அடிச்சு கொல்லாட்டி அது நம்மை கொன்னுடும்ங்கிற பயமே இதெல்லாம்..
உஸ்ஸுக்கு - உஸ்ஸ் ...,, :)
பாம்பையும் ___________ கண்டால் முதலில் _________ அடி என்கிறார்களே அதை பற்றி ஏதேனும் புத்தகம் இருக்கா :)
சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன் ;)
பகிர்வுக்கு நன்றி
கவிதை.... ம்ம்ம்ம்.......
HI FRIEND :)
VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
உஸ்ஸ்...பாம்பு.
பயமுறுத்தாதீங்க ஷங்கர்.
*ஏதும் சொல்லாததை
இறைவன் என்றது.*
கவிதையை மிகவும் ரசித்தேன்.
நல்ல பகிர்வு. நன்றி.
aaggggggggaa! கவுஜ சூப்பரு:))
படிக்க வேண்டிய புத்தகம் தான் சங்கர்ஜி... பகிர்விற்கு நன்றி..
நல்ல தகவல்.
கவிதை சூப்பர்.
கிருமிகள் என்ற வார்த்தையை தூக்கிவிடுங்கள்.
இன்னும் நச்சென்று இருக்கும்.
சொல்லிட்டீங்கள்ள அண்ணே வாங்கிடலாம்
அப்புறம் உஷ்ஷ்ஷ் செம செம செம சூப்பர்
ரசித்தேன்
ஷங்கர்......
பாம்புகள் பற்றிய விரிவான பதிவையும், பதிவின் முடிவில் இருந்த கவிதையையும் மிஞ்சிய விஷயம் சுவாமி ஓம்கார் அவர்களின் கேள்வி........
இந்த கேள்வி அவரா கேட்டாரா, இல்ல மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்ததா தெரியல....
பாம்பென்றால் படையும் நடுங்கும்
படிக்க வேண்டிய புத்தகம் தான் பாஸ்...
நல்ல பகிர்வு. நன்றி
paambu paambu endru payappadaamal porumaiyaaga puthagam padithu arimugam seythulleerkal-paaraddukkal-meerapriyan
வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி! ::))
@கோபி.. தலைவரே,
ஸ்வாமிஜி சொல்லவந்தது பாம்பையும் வெற்றிடத்தையும் கண்டால் முதலில் வெற்றிடத்தை அடிக்கனும். அதிர்வில் பாம்பு ஓடிவிடும்!! ரெண்டு உசிருங்களும் பொழச்சுக்கும்! அம்புட்டுத்தேன். :))
மிக அறிய புரிந்துணர்வு தகவல்.
பகிர்வுக்கு நன்றிங்க
நீங்க நல்லவரா - கெட்டவரா ? பாம்பா - சாத்தானா ? பாம்பு நல்லதுன்னா - சாத்தான் நல்லவனா ? மனித கிருமி உங்களைப் பார்த்து சாத்தான்னு சொல்லிருக்காது. பாம்பு பரமசிவத்துட்ட இருந்தா தான் மனித கிருமிக்கு நல்லது. இல்லனா சாத்தா வேதம் ஓதிடும்.
Post a Comment