பலா பட்டறை: க்ளக், க்ளக், க்ளக்

க்ளக், க்ளக், க்ளக்

ரைட், போன பதிவில் வந்தது அடிக்கடி நிகழும் ஒன்றாயிருந்தாலும், முடிவினை உங்கள் யூகத்திற்கு விட்டுவிட்டேன். ஆனாலும் விதி (ரூல்ஸ்ங்க) என்ற ஒன்று நம்மை சுற்றி எப்பொதும் பின்னப்பட்டதாகவே இருக்கிறது, ஒரு நொடி அதை மறக்கும்போது நிகழும் நிகழ்வுகளை இப்படி பயம் கலந்துதான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்..:(( 
உலக தண்ணீர் தினம். மார்ச் 22 இதை பற்றிய சக பதிவர்களின் தொடர் இடுகைகள்..

மண், மரம், மழை, மனிதன் வின்செண்ட்
சிறு முயற்சி - முத்துலெட்சுமி
முத்துச்சரம் - ராமலக்‌ஷ்மி
மேலும் பதிவர்களின் இது பற்றிய பதிவுகள்  ( நன்றி நீச்சல்காரன்)

இங்கே, தினமும் தண்ணீர் தினம் கொண்டாடப்போகும்(!?) நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசம்தான். ஏதோ புண்ணியத்துக்கு மழை நீர் சேகரிப்பு என்ற ஒன்று செயல்படுத்தப்பட்டு, கண்ணெதிரே பயன் தெரிந்தாலும் இன்னும் சிறப்பாக உபயோகிக்காது இருப்பது குறையே. கடல் நீர் சுத்திகரிப்பு போய் காற்றிலிருந்து சுத்திகரிப்பார்கள் போல, பின்ன ஏரி குளமெல்லாம், பட்டா போட்டு, குப்பை போட்டு, சுத்தி இருக்கிற இடங்களெல்லாம் சிமெண்ட் போட்டு சுத்தமா மூடி, கதவு வைத்த சமாதிகளில் வாழ்க்கை வாழும்போதுதான் இம்மாதிரி தினங்கள் வந்து நினைவு படுத்துகிறது.  நம் வீட்டு தண்ணீர் தொட்டியின் அளவு, எத்துனை முறை அதனை காலி செய்து நிரப்புகிறோம், நம் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கான சராசரி தண்ணீர் செலவு என்ன? என்பதை கணக்கு செய்தால் தலை சுற்றுகிறது.

ஒன்பது சென்ட் இடத்தில் வெறும், இரண்டு சென்ட் மட்டுமே வீடு கட்டுகிறேன், மிச்சம் தோட்டம், செடி, மரம் இவைகளுக்காக. 20 அடியில் தண்ணீர் வந்த இடத்திற்கு நான் செய்யும் கைமாறு இதுவாகத்தான் இருக்க முடியும். நீர் சுத்திகரிக்கும் தாவரங்கள், மறு சுழற்சி, குறைவான நீர் உபயோகம் போன்றவை மூலமும், சூரிய சக்தி பயன்பாடு மூலமாகவும் இயற்கை சார்ந்த ஒரு வாழ்வு முறைக்காக, சிங்கார ந(ர)கரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தாலும், என் குழந்தைகளுக்கான படிப்பு வசதிகளில் சில குறைவுகள் இருப்பினும் எந்த தயக்கமுமில்லாது இந்த முடிவு மகிழ்ச்சியாகவே எடுத்திருக்கிறேன். குடி நீருக்காக குடம் கொண்டு அலைவதையும், லாரியில் காசு கொடுத்து வாங்குவதையும் பார்த்து மனது வெறுத்து போயிருக்கிறேன். இருப்பினும் தண்ணீர் என்பது ...

இதுவரை இது அரசியல்,

இப்போது வியாபாரம்

இனி

அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக இருக்குமாம்...

அதுவரையுமாவது

நிம்மதியாய்..

                              க்
                    ள
                க்

                க்
                      ள
                             க்

                                      க்
                                            ள
                                                 க்
(நண்பர்களே நீங்களும் இதுகுறித்து கண்டிப்பாக ஒரு பதிவு போடுங்க.. .. ப்ளீஸ்..)


41 comments: