பலா பட்டறை: அவசரகால ambulance உதவி இப்படியும் செய்யலாமே!!

அவசரகால ambulance உதவி இப்படியும் செய்யலாமே!!


வெளி நாடுகளில் இருப்பது போல நம் ஊரில் ambulance வசதிகள் பரவலாக இல்லை, மேலும் மிக அவசரமான சமயங்களில் கூட அதாவது பிரசவம், விபத்து, தற்கொலை முயற்சி போன்ற நேரங்களில் அருகில் இருக்கும் ஆட்டோ அல்லது கால் டாக்ஸி போன்றவற்றில் சம்பந்தபட்ட நபர்களை அள்ளி போட்டுகொண்டு மருத்துவமனை செல்வதே பெரும்பாலும் நடக்கும் நிகழ்வு.

Ambulance அவசர சைரனுடன் ரோட்டில் பறப்பது பெரும்பாலும் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவ மனைக்கு செல்வதாகவே இருக்கிறது. அதிலும் அப்படி அவசரமாக செல்லும் ambulance க்கு வழி கிடைத்து சரியான சமயத்தில் மருத்துவமனை சென்றால் தான் சம்பந்தப்பட்ட நபர் காப்பற்றப்பட வாய்ப்புண்டு. எனக்கே கூட இந்த அனுபவம் எனது மனைவியின் பிரசவத்தின் போது ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட மிகவும் மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் சம்பந்தபட்ட (Auto, Call Taxi, சொந்த வாகனங்கள்) வாகனங்களில் நீலமோ, மஞ்சளோ ஏதாவது ஒரு நிறத்தில் சுழல் விளக்கு அமைத்து செல்ல ஒரு வழி வகை செய்தால் golden time என்று சொல்லக்கூடிய அந்த அபாய கட்டத்தில் மருத்துவ மனை கொண்டு செல்ல ஒரு விரைவு வழி பிறக்க வாய்ப்பிருக்கிறது .

மற்றபடி நாம் என்னதான் முகப்பு விளக்கு போட்டுக்கொண்டும், horm அடித்துக்கொண்டு சென்றாலும், மற்றவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளாமல் போய் விடுகிற வாய்ப்புண்டு. அதிக மக்கள் தொகையும் குறைவான வசதிகளும் உள்ள நம் நாட்டில் இது போன்ற சில மாற்றங்கள் ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்ற உதவும் என்பது என் கருத்து.


0 comments: