ஒவ்வொருமுறை வீட்டை சுத்தம் செய்யும்போதும் குப்பையாய் தூக்கிபோடும் பொருட்களில் பல ஏதோ ஒரு தருணத்தில் அதிக விலைக்கு நாம் வாங்கியவைகளாயிருக்கும். என்னதான் விழிப்பாக இருந்தாலும் மூலை முடுக்கெல்லாம் சேரும் இந்த வேண்டாத பொருட்கள் ஒட்டுமொத்தமாய் சேர்ந்து நம்மை பயமுறுத்தும்போது சரி, இன்னைக்கு எல்லாத்தையும் ஒழித்து கட்டிவிடலாம் என்று ஒரு வழியாய் ஏறக்கட்டினால் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பொருட்கள் ஐம்பது ரூபாய் (எடைக்கு) போனால் அதிகம். குழந்தைகளுடன் குடும்பத்தோடு எங்காவது வெளியில் செல்லும்போது இப்படி பட்ட பொருட்கள் நமக்கு தெரியாமலேயே இடத்தை ரொப்பி விடுகின்றன. அரசாங்கமே சிக்கனம் சின்னுவாக இருக்கின்ற இந்த காலத்தில் நம்முடைய செலவுகளை செய்யுமுன் இரண்டு விதமாய் யோசிக்கலாம்..
நாம் வாங்க போகும் பொருள் வரும் காலத்தில் லாபம் தருமா நஷ்டம் தருமா? அதாவது செலவா அல்லது முதலீடா?
அந்த பொருளை உபயோகிக்கும் போதெல்லாம் நமக்கு செலவா அல்லது வரவா?
இதனை பொறுத்து செலவினை வரையறை செய்வது கூட சிக்கனத்தின் ஒரு வழிதான். அதனை விடுத்து பார்த்ததை எல்லாம் வாங்கி கண்டபடி செலவு செய்வது மிகவும் ஆபத்தானது. சில calculators நமக்கு எப்போதும் உபயோகமாக இருக்கும்...
வங்கிகள் மற்றும் தனி நபர் கடன் வட்டி விபரங்கள் மற்றும் EMI கணக்குகளுக்கு::
இங்கே paarkkavum மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேர்த்தால் குறிப்பிட்ட வருடங்களில் எவ்வளவு வருமானம் (சதவீதத்தில்) கிடைக்கும் என்று பாருங்கள்.
ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கடந்த வருடங்களில் மாதம் 1௦௦௦ ரூபாய் சேர்த்திருந்தால் எவ்வளவு சேர்த்திருப்போம் என்று பாருங்கள்.
இது போன்றே சிகரெட்டினால் நாம் இழக்கும் பணத்தை ஒழுங்காக சேர்த்தால் அந்த பணம் பெருகும் விதத்தை வலது பக்கம் இருக்கும் calculator இல் காணுங்கள். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் வைத்தால் அவை கூட வரும் காலங்களில் நம்மை பொருளாதார சிக்கலில்லாததாக ஆக்கும்.
ஆமாம் சிறு துளி தான் பெரு வெள்ளம்!!
0 comments:
Post a Comment