பலா பட்டறை: ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்

ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்






ஹைபோதலாமஸ் - ம் - குளிர் ஜுரமும்.

ஜுரம் வந்தால் ஏன் உடல் சூடாகிறது? ஏன் குளிர்கிறது? உடல் நடுங்குகிறது? இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் - மூளையின் நடு பகுதியான ஹைபோதலாமஸ் கிட்டத்தட்ட நம் உடலின் air condition என்று கூட சொல்லலாம். சாதாரணமாக நமது உடலின் வெப்ப நிலை  98.6 பாரன்ஹீட்  ம் அல்லது 37 டிகிரி செல்சியஸ் (கொஞ்சம் கூட குறைய) இருக்கும் இதனை பராமரிப்பது ஹைபோதலாமஸ் தான். ஏதாவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்போது சில ரசாயனங்கள் நம் உடலில் ரத்தத்தின் மூலமாக பரவும்போது ஹைபோதலாமஸ் இதனை கண்டுகொண்டு மெதுவாக நம் உடலின் வெப்பத்தை 98.6 லிருந்து  102 டிகிரி பாரன்ஹீட் ஆக அதிகரிக்க செய்கிறது. இப்படி உடல் சூட்டை அதிகரிக்க செய்வது மூலம் உள்ளே நுழைந்த வேண்டாத விருந்தாளியை சமாளிக்கலாம் என்பது அதன் திட்டம்.

ஹைபோதலாமஸ் உடல் சூட்டினை ஏற்றிய உடனேயே உடல் குலுங்க ஆரம்பிக்கிறது (குளிர் ஜுரம் மற்றும் உடல் நடுங்குதல்) ஏன்? உடலை உடனடியாக சூடு படுத்தத்தான் அதனால் தான் நமக்கு எத்தனை கம்பளி போர்த்தினாலும் குளிரும் நடுக்கமாகவுமே இருக்கிறது. ஹைபோதலாமஸ் கட்டளை இட்ட அந்த உடல் சூடு (அதாங்க ஜுரம்) உடலுக்கு வந்த உடனேயே உடல் நடுங்குவதும் குளிர் எடுப்பதும் நின்று போய் விடுகிறது.

யோசித்து பாருங்கள் இந்த ஜுரம் ஒன்றுதான் நாம் நோய் பட்டிருக்கிறோம் என்பதற்க்கான அறிகுறி, உடனே உடலை கவனிக்க நமக்கு ஹைபோதலாமஸ் இடும் மறைமுக கட்டளையும் இதுதான். உண்மையில் ஜுரம் என்பது நோய் அல்ல அது உடலில் நமக்கு தெரியாமல் நுழைந்துவிட்ட நோய் கிருமி பற்றிய எச்சரிக்கை தான்.

முக்கியமாக குழந்தைகளுக்கு ஜுரம் வரும்போது உடனடியாக Paracetamol Ibuprofen போன்ற மருத்துவர் சிபாரிசின் அடிப்படையில் உள்ள மருந்துகளை கொடுத்து ஜுரம் நிப்பாட்டுவோம். ஆனால் உண்மையில் இவ்வகை மருந்துகள் நம்முடைய ஹைபோதலாமஸ் க்கு ஜுரம் ஏற்படுத்த வேண்டாம் என்ற கட்டளையை தான் கொடுக்கிறது. ஆனால் ஜுரம் வந்த குழந்தையை மருந்து குடுக்காமல் தாமத படுத்தும்போது அதற்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எப்போதும் ஜுரத்திர்க்கான அறிகுறி தெரியும்போதே என்ன மருந்து கொடுத்து அழைத்து வருவதென்று டாக்டரிடம் கேட்டு வைத்துக்கொண்டு அந்த மருந்தை கையிருப்பில் வைத்துகொள்வது  நல்லது. ஜுரம் வந்தவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், ஜுரத்தால் வற்றிய உடம்புக்கு தண்ணீர் மிகவும் முக்கியம், நிறைய தண்ணீர் குடிப்பது ஜுரத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். அதேபோல உடலை பல துணிகள் கொண்டு போர்த்தாமல் ஓரிரு பெட்ஷீட் கொண்டு போர்த்தினாலே போதுமானது.

அதிமுக்கியம் உடனே மருத்துவரை சென்று பார்ப்பதுதான். போனமுறை டாக்டர் கொடுத்த மருந்தை இந்த முறையும் குடுக்க கூடாது ஏனென்றால் அதற்குள் அந்த மருந்துக்கு நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடுவது தான். சிந்தித்து பாருங்கள் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு Tamiflu என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டும் எல்லோரும் இஷ்டம் போல பயன் படுத்த தடை ஏன் விதிக்கப்பட்டது? அந்த நோய் உங்களை தாக்குவதற்கு முன்பே அந்த மருந்தை  நீங்கள் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற ஒரு எதிர்ப்பு சக்தி உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. H1N1 தாக்கும்போது Tamiflu தவிர்த்து  வேறு மாற்று மருந்துகள் இல்லாததால் அந்த நோய் மரணத்தில் கொண்டு விட வாய்ப்புள்ளது.

பொதுவாகவே நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள் எல்லாமே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் தான். எந்த நோய் வரக்கூடாதென்று நாம் தடுப்பு ஊசி போடுகிறோமோ அந்த நோய் உண்டாக்கும் கிருமிகளை வீரியம் குறைக்க செய்து நம் உடலில் தடுப்பூசியாக போடுகிறார்கள். இதனால் மூளைக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது மேலும் உடலின் எதிர்ப்பு சக்தி வீரியம் குறைக்கப்பட்ட இந்த அழையா விருந்தாளியை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அந்த கிருமி தாக்கும்போது உடனே கண்டுணர்ந்து அதனை அழித்து நம்மை காக்கிறது.              

 படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல் அதிக ஜுரத்தால் வலிப்பு வந்து பேச்சு மூச்சற்று கிடக்கும் குழந்தையை பார்த்து அலறி அடித்து மருத்துவ மனை வரும் பெற்றோர்களை பார்க்க நேர்ந்த போது நான் தேடி சேகரித்த தகவல்கள் தொகுப்பு இது.
       

0 comments: