பலா பட்டறை: Dolphin மனிதர்கள்

Dolphin மனிதர்கள்




 

தேவைகளே மனிதனின் பல கண்டுபிடுப்புகளுக்கு ஆதாரம். நெருப்புக்காக just like that நாம் பற்ற வைக்கும் ஒரு தீப்பெட்டிக்காக கற் காலத்தில் என்ன பாடு பட்டிருக்கிறார்கள், அதிலும் அந்த தீயை அணைக்காமல் வைக்க முறை வைத்து காவல் வேறு. இன்றைக்கு சர்வ சாதரணமாய் நாம் பயன்படுத்தும் பொருட்களில் நம்மின் சொகுசு வாழ்க்கைக்காக எத்தனையோ பேரின் தூக்கம் தொல்லைந்த இரவுகள் விலையாக்கப்பட்டிருக்கின்றன. நம் வாழ்க்கையும் இந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிமையானதும் ஆதி மனிதனின் மிக சிறந்த பல இயல்புகள் நம்மில் தொலைந்து விட்டன.  calculator கையில் இருக்கும்போது மூளை கணக்கு பற்றிய சிந்தனை இல்லாது இருப்பது போல, அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் அடிமைகளாகவே நாம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட நீச்சல் குளத்தில் வளர்க்கப்படும் டால்பின்-களை போலத்தான், ஒவ்வொருமுறை டால்பின்கள் சாகசம் பண்ணும்போதும் அவற்றிற்கு வழங்கப்படுவது இறந்த மீன்கள்தாம், மனிதர்களால் வளர்க்கப்பட்ட அவைகளை மீண்டும் கடலில் கொண்டு விட்டால் உயிருள்ள மீன்களை பிடித்து சாப்பிட தெரியாமல் இறந்துபோகும். 

நம்முடைய கண்டுபிடிப்புகளும் ஒருவகையில் அப்படித்தான் தோன்றுகிறது. தேவைகளை விட அதிகமாய் தேவையற்றவைகளை தேக்கி வைத்துக்கொண்டு எல்லா உயிர்களுக்கும் சமமான இப்பூவுலகை நச்சுப்படுத்திகொண்டு இருக்கிறோம்.     

       

4 comments:

Anonymous said...

good

tamiluthayam. said...

சரியான நேரத்தில் சரியாக சொன்னீர்கள். மனிதன் அறிவியல் கண்டுபிடிப்புகளால் தன் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறான். ஒரே ஒரு வினாடி மின்சாரம் தடைப்பட்டால் உலகமே இருண்டு போகிறது. ஒரே ஒரு நாள் வண்டி பழுதாகி போனால் செய்வதறியாமல் விழிக்கிறார்கள். பூவ்வுலகை நச்சுப்படுத்துவதோடு நில்லாமல் நாமே அழித்து கொண்டு இருக்கிறோம்

venkat said...

\\தேவைகளை விட அதிகமாய் தேவையற்றவைகளை தேக்கி வைத்துக்கொண்டு எல்லா உயிர்களுக்கும் சமமான இப்பூவுலகை நச்சுப்படுத்திகொண்டு இருக்கிறோம்.//

Covairafi said...

மனிதனின் கண்டுபிடிப்பும் நிற்கப்போவதில்லை, அவனுடைய செயல்களும் நாகரீகப் போர்வையால் காட்டுமிராண்டிதனமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அந்த டால்பின்கள், இறந்த மீன்களை தின்கின்றன. கடைசியில் அவைகளே கொல்லப்படும் நிலை ஏற்ப்பட்டு விடுகிறது. அது போல் தான், மனிதனும் தன் கண்டுபிடிப்புகளால் தானே இரையாக நேரும் சந்தர்ப்பங்களும் ஏற்ப்படும்.