பலா பட்டறை: இன்றைக்கு என்ன விஷம் உண்டீர்கள்?

இன்றைக்கு என்ன விஷம் உண்டீர்கள்?






ஒரு நாள் உணவை பரிசோதித்தால் மேற்கண்ட வினாவிற்கு விடை நிச்சயம் கிடைக்கும். காணி நிலமோ கை அளவு நிலமோ ஒரு நூலிழை இடம் விடாமல் சிமெண்ட் கொட்டி வீடு என்னும் கூண்டை கட்டுவதனால் பயனேதும் இல்லை. கிடைக்கும் சிறு இடங்களில் சின்ன சின்ன காய் கறி செடிகளை தொட்டியில் நட்டு பராமரித்தால் அன்றாட சமையலுக்கு உபயோகமாவதோடு, கைக்காசு கொடுத்து விஷம் வாங்கி உண்பதும் தவிர்க்கப்படும் இல்லையா? 

விதைப்பதுதானே கிடைக்கும், நஞ்சு கொண்டு விளைவிக்கும் பயிர்கள் எல்லாமே நமக்கு அமுதையா தருகிறது? இயற்கை விவசாயம் என்று தமிழில் எழுதினாலே பக்கத்தை புரட்டி சினிமா செய்திகளுக்கு மேயப்போகும் நமக்கு அமுதம் விளைவித்து door delivery யார் செய்வார்கள்? 

சுற்றுச்சூழலுக்கும், வீட்டுச்சூழலுக்கும் நலம் தரும் இதனை ஒரு குழந்தை வளர்ப்பது போல கருத்தாய் செய்தால் நமக்குதானே லாபம். விவரங்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம், புத்தகங்கள் மற்றும் தெரிந்தவர்களை கேட்போம். சிறியதோ பெரியதோ நமக்கென ஒரு சிங்கார தோட்டம் அமைப்போம். நஞ்சை தவிர்த்து நல்லதை உண்போம்.           

        

0 comments: