பலா பட்டறை: புற முதுகு மருத்துவம்

புற முதுகு மருத்துவம்




இப்பொழுது விற்கப்படும் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் அதன் விளம்பரத்திர்கேர்ப்ப தரமானதாய் இருப்பதில்லை, அதிலும் நம் ஊரிலுள்ள சாலைகளின் நேர்த்திக்கு, வெகு சீக்கிரமாகவே இருக்கும் கொஞ்ச நஞ்ச தரமும் போய் விடுகிறது. 99 சதவிகித மக்களுக்கு முதுகு வலி கழுத்து வலி வந்து அவதிப்படுகிறார்கள். பிசியோ தெரபிஸ்டுகளை போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே பலருக்கு இருப்பதில்லை, பொது மருத்துவரால் இத்தகைய பிரச்சனைகளுக்கு உதவ முடியாது, அவர்கள் வெறும் வலி நிவாரணிகளை தந்து அப்போதைக்கு வலி இல்லாமல் செய்கிறார்களே தவிர்த்து, நிரந்தர தீர்வு என்பது பிசியோ தெரபிஸ்டுகளால் தரமுடிகிறது. மேலும் மருந்தில்லா மருத்துவம் என்னும் மிக அற்புதமான வலி நிவாரண முறை இவர்களுடையது.

முதுகு வலியை தவிர்ப்பதற்கு இவர்கள் சொல்லும் சில எளிய வழிமுறைகள்:

அ)  உட்காரும் முறை சரியாக இருக்கவேண்டும். 
ஆ) பான்ட் பாக்கெட்டில் (பின் பக்கம்) பர்ஸ் வைத்திருந்தால் கூட உட்காரும் முறை மாறுதலுக்கு உள்ளாகி வலி வர வாய்ப்புண்டு.
இ)  வண்டியில் உட்கார்ந்து ஓட்டும் முறையும்  சரியாக இல்லாவிடில் வலி ஏற்படும். 
ஈ)  உடல் வலி மற்றும் கால் வலிகளுக்கு பெரும்பாலும் வைட்டமின் குறைபாடே காரணம் தேவையான அளவு விட்டமின்களை உணவு மூலமாகவோ மாத்திரை மூலமாகவோ உட்கொள்ளும்போது வலி  
      மறைகிறது.      
உ) கால் வலிகளுக்கு முட்டி வரை மூழ்கும் அளவுக்கு பாத்திரத்தில் தாங்கக்கூடிய அளவுக்கு சுடு தண்ணீரில் உப்பு போட்டு 30 நிமிடம் வரை வைத்து எடுத்தால் வலி குறையும். 
ஊ) பின் பக்கம் முதுகு தண்டு வடங்களுக்கு ஐஸ் ஒத்தடம் குடுக்கலாம், வெந்நீர் பை களை கொண்டும் ஒத்தடம் குடுக்கலாம். 
எ)  stretching எனப்படும் சிறு சிறு உடற் பயிற்சிகள் வலியிலிருந்து காக்கும்.
ஏ) உடற் பயிற்சிகளை தினந்தோறும் செய்து வரவேண்டும். கண்டிப்பாக பிசியோ தெரபிஸ்டுகளால் அறிவுறுத்தப்படும் அளவிலேயே செய்யுங்கள். 

உடல் வலிகளுக்கு துவக்க காலத்திலேயே வலி நிவாரணிகளை தவிர்த்து, பிசியோ தெரபிஸ்டுகளை பார்ப்பது நிச்சயம் பயன் தரும்.

  
    


3 comments:

Anonymous said...

ரொம்பவே நல்ல பதிவு

கலையரசன் said...

நன்றி உங்கள் தகவலுக்கு... ரொம்ப நாளா எனக்கும் இருக்கு!

Muruganandan M.K. said...

ஆம் இத்தகைய பிரச்சனைகளுக்கு அவசியமற்ற மருந்துகளைத் தவிர்த்து, ஏற்ற பயிற்சிகளைச் செய்வதே நல்லது