பலா பட்டறை: வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்?

வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்?


என்ன இது கேள்வி? என்று நினைக்கிறீர்களா? ஆம் எல்லோருமே ஓடத்தான் செய்வோம் அனால் சற்று யோசித்து பார்க்கும்போது சாதாரணமாய் ஓடுவதற்கும்ஒன்று  நம்மை துரத்தும்போது ஓடுவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறதில்லையா? வாழ்க்கையில் இலக்கு கூட அது போன்றதுதான்.. 

இலக்கு ஒன்று. 
இங்கே ஆங்கிலத்தில் பேசுவது பெரிய விஷயமாய் பார்க்கப்படுகிறது.. அனால் தவறாகிவிடுமோ என்று கவலைபட்டே பலர் அந்த பேசும் இலக்கை தவிர்த்து விடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் இஷ்டப்படி கவலயே படாமல் புகுந்து விளையாடும் ஆங்கிலத்தில் நம் மக்கள் மட்டும் கூச்சப்பட்டே பேச தவிர்கிறார்கள். கவலைப்படாமல் பேச கற்றுக்கொண்டால் நாளடைவில் சுலபமாகிவிடும். ஆங்கில படங்கள். செய்தி வாசிப்புகள், ஆங்கிலத்தில் பேசுபவர்களுடைய உச்சரிப்பு கூர்ந்து கவனிக்க அது சுலபமாய் பிடிபட்டு போகும். நீங்கள் கவிதையோ, காவியமோ படைக்க நினைத்தால் இலக்கணம் பற்றி அதிகம் கவலை படலாம் (தாய் மொழி இலக்கணம் கரைத்து குடித்திருந்தால்)வெறும் பேச்சு பரிமாற்றத்திற்கு கவனிக்கும் ஆற்றல் இருந்தாலே போதும். மேலும் நான் கண்டவரை இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு அதன் புலமை மிகவும் கம்மிதான். மேலும் ஆங்கிலம் பேச கற்றுகொடுக்கும் புத்தகங்கள் மேலும் அயர்ச்சியையும், சோர்வையும் தருமே தவிர்த்து வேறு பெரிய பயன்கள் இல்லை.                   

இலக்கு இரண்டு:

பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும் அளவுக்கு, நல்லபடியாய் செலவு செய்ய மற்றும் சம்பாதித்த செல்வத்தை வைத்து என்ன செய்வது என யாரும் கற்றுகொடுப்பதில்லை. எனக்கு 
உள்ள மிகபெரிய ஆச்சர்யம் இதுதான் (சந்தேகமும் கூட) திடீரென்று நமக்கு ஏதோ ஒரு வகையில் ஜாக்பாட் அடிக்கும்போது உடனடியாய் அதைவைத்து அடுத்து என்ன செய்வது என்ற திட்டமிடல் இருக்கிறதா? திடீரென செல்வம் கிடைக்கும் பலர், குறுகிய காலத்திலேயே அதனை இழந்து பழையபடி நிற்பது பெரும்பாலும் நடக்க காரணம், சம்பாதிப்பது போல அதற்கான கனவுகள் போல, சரியான செலவிற்கான திட்டங்கள் / கனவுகளை யும்  வளர்த்துக்கொள்வோம்.

இலக்கு மூன்று:

இலக்கு இரண்டு போலவே தான் ஆனால் நாம் யோசிக்க தவிர்க்கிற விஷயம் இது. இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் நாம், திடீரென்று இவ்வுலகை பிரிந்தால் அடுத்தது என்ன என்று யோசிக்க தயங்குகிறோம். வாழ்ந்து முடிந்த காலத்திற்கு பிறகு உயில் எழுதுவது பற்றி அல்ல இது. இளமையில் வலிவு உள்ளபோது நம்மை நம்பி உள்ள குடும்பத்தை நாமில்லை எனில் யார் காப்பற்றுவார்கள் என்ற கணிப்பை எண்ணிப்பார்த்திருக்கிறோமா என்ற கேள்வி. யோசித்து பாருங்கள் திடீரென்று நாம் மறைந்தால் நம் குடும்பத்திற்கு நம்மை போலவே எல்லாம் செய்ய யார் யார் உள்ளனர் என்ற list நம்மால் சரியாக தர முடியுமா? மிக குறைவான சாலை பாதுகாப்பு விதிகளையே பல்வேறு சாக்கு போக்கு சொல்லி வெறுப்பு கொள்ளும் நாம் அவை நம் நல்லதிற்குத்தான் என எண்ணி பின் பற்றுகிறோமா? காப்பீடும் இன்ன பிற வசதிகள் இருந்தாலும், நான் இல்லை எனில் என்ன செய்வாய் என நம்மை நம்பி இருப்பவர்களுடன் ஒரு தயார் படுத்துதல் தேவை தானே.  என்ன செய்ய வாழ்க்கை முழுதும் வெறி நாய் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது? முடிந்த வரை கடிபடாமல் ஒடப்பழகுவோம்.                  
   
            

3 comments: