திருமணங்கள் அவரவர் வசதிக்கேற்ப எளிமையாகவும் ஆடம்பரமாகவும் பல விதங்களில் நடத்தப்படுகிறது. அநேகமாய் எல்லா மதத்திலும் இதற்கு விதிவிலக்கில்லை. உறவினர்கள் கூடி, மகிழ்ச்சிகளின் சங்கமத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கூட்டாய் ஒரு வாழ்க்கை நடத்த செய்யப்படும் அந்த திருமண நாளில் அவர்களுக்கு சிக்கனத்தை போதித்து சிறப்பான வாழ்வு சொல்லிதருகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது.
இப்போதெல்லாம் ஆடம்பரமும், பகட்டும், ஒப்பீடுமே திருமணங்களில் கோலோச்சுகிறது.. வாழ்க்கையில் ஒருநாள் வரும் திருமணத்தில் என்ன கணக்கு பார்ப்பது என்ற எண்ணமும் ஆடம்பரத்தின் வேர்களுக்கு உரமாகிவிட்டன. இங்கே உறவினர்கள் கூடுவதையும், களிப்பதையும் திருமணத்தை கொண்டாடுவதையும் குறை சொல்ல இதை நான் பதியவில்லை. ஆடம்பர போதை அழகான இந்த வைபவத்தை ஒரு நாள் கூத்தாக ஆக்கிவிட்டது தான் வேதனை. நன்றாக சாப்பிடும் ஒரு மனிதனால் கூட முழுவதும் உண்ண முடியாத வகையில் இலை நிறைய பதார்த்தங்களும், உணவு வகைகளும், காது கிழியும் இரைச்சல் பாட்டு கச்சேரிகளும், வெடிகளும் வான வேடிக்கைகளும் அனாவசியம் என்பது என் கருத்து. இரண்டு குடும்பங்களுக்குள் சரியான அறிமுகங்களும், வாழ்ந்து பார்த்தவர்களின் அனுபவ பகிர்தல்களும், எதிர்கால திட்டமிடலுக்கான எண்ண பகிர்தல்களுக்கும் இடமில்லாமல் இரைச்சல் ஆடம்பரங்கள் இரண்டு மனங்களின் புதிய வாழ்க்கை தொடக்கத்தை கூட்டத்தில் தொலைந்த குழந்தையாக ஆக்கிவிட்டது தான் கொடுமை.
பெண் குழந்தை பிறப்பது செலவின் ஆரம்பமாக பார்க்கப்படும், பல பெண் சிசு கொலைகளுக்கு காரணமாகும், தேவைக்கு அதிகமான ஆரோக்கியமில்லாத உணவு வகைகளுக்கு காரணமாகும் ஒரு (பெண்ணுடைய) குடும்பத்தின் நிதி வளத்தையே நிர்மூலமாக்கும் இத்தகைய ஆடம்பரங்கள் குறையும் நாளே, நல் மனித சமூகத்தின் தொடக்க நாளாகும்.
5 comments:
அதில நிறைய அந்தஸ்து விசியம் இருக்குதுங்க. மாப்பிள்ளை வீட்டாரோ பெண் வீட்டாரோ... நடத்துபவர்கள் அந்தஸ்து நிரூபிக்கப்படல் வேண்டும். பிறகு அந்த போட்டோக்களை அடுத்தவர்களுக்குக் காட்டி காட்டி அவர்கள் கழுத்தை அறுக்க வேண்டும். என்னதான் படிச்சாலும் இந்த புத்தி எல்லாருக்கும் இருக்குது.
மிகவும் உண்மையான கருத்து..!! திருமணம் என்பதே ஒரு வியாபார அமைப்பில்தான் அமைக்கபடுகிறது வெகுவான இடங்களில். இன்றைய காலத்தில் நிறைய படித்த இளைய சமுதாயமும் - நல்ல வேலையில் இருந்து சம்பாரித்தாலும் - பணம் அடிப்படையிலேயே திருமணத்தை செய்து கொள்வது வருத்தமானது - அதனால்தான் எந்த புரிதலும் இல்லாமல் 1 வருடத்தில் விவாகரத்துக்கு அலைகிறார்கள்..!!
உங்கள் பதிவு அருமை .......
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
fundoo said...
//அதில நிறைய அந்தஸ்து விசியம் இருக்குதுங்க. மாப்பிள்ளை வீட்டாரோ பெண் வீட்டாரோ..//
உண்மை தான் நண்பரே! வறட்டு கெளரவம் வாழ்வு தருவதில்லை.. கருத்துகளுக்கு நன்றி
முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...
நிறைய படித்த இளைய சமுதாயமும் - நல்ல வேலையில் இருந்து சம்பாரித்தாலும் - பணம் அடிப்படையிலேயே திருமணத்தை செய்து கொள்வது வருத்தமானது - அதனால்தான் எந்த புரிதலும் இல்லாமல் 1 வருடத்தில் விவாகரத்துக்கு அலைகிறார்கள்..!
//உண்மை. நெத்தியடியாய் சொன்னீர்கள். கருத்து பகிர்வுக்கு நன்றி.
Post a Comment