பலா பட்டறை: பெற்றதும் கற்றதும்

பெற்றதும் கற்றதும்







'Ignorance is Bliss' என்பது பரவலான ரசிக்கும் மனோபாவத்தை நமக்கு தருகிறது. எதையும் புதியதாய் பார்க்கும்போது ரசிக்கும் ஆர்வம் கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. இங்கே நமக்கு கற்றுக்கொடுத்தவை எல்லாமே பிறரால் போதிக்கப்பட்டவையாகவும், அவரவர் மனக்கருத்திர்கேற்ப வடிவமைக்கப்பட்டவையாகவே இருக்கிறது. 


இங்கே மலரை மலராக பார்க்க யாருக்கும் முடிவதில்லை. எல்லா ஆராய்ச்சிகளுமே வந்த வழியை மட்டுமே சொல்லுகிறது. போகும் வழி யாருக்கும் தெரியாதபோது இருப்பை நேசிக்கும் குழந்தை பார்வை எல்லோருக்கும் தேவை.


படிப்பும் அனுபவமும் நம்முள்ளே புகுந்த பின்பு ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகை பார்ப்பது நமக்கு இயலாததாகிறது. சுய விருப்பு வெறுப்பின்றி காணும் அந்த மழலை பார்வை ஓரளவுக்கு நமக்கு இருக்குமென்றால் போர் கருவிகள் துருபிடித்து போயிருக்கும். 


அறிந்ததலிருந்து விடுதலை கிடைக்கும்போது அறியாததும் தேவையில்லையாகிறது.



1 comments:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

நல்ல விஷயம்.. ஆனால் இது நிறைய பேச வேண்டிய சங்கதி..!! கல்வி, பெற்றோர் பொறுப்பு..சமுதாய அமைப்பு என பல காரணிகள் இருக்கின்றன நீங்கள் சொன்ன விஷயத்தில்..