குருஜி. அபசகுனமாக நினைக்கவேண்டாம். திரும்ப வரும் காலம் ..
அது என்னிடமில்லையப்பா.. கட்டளை வந்தது அவ்வளவுதான். பயணங்கள் என்னால் தீர்மானிக்கப்பட்டாலும், பாதைதான் அதை பூர்த்தி செய்கிறது, இதுவே ஆரம்பமும் முடிவுமாயும் இருப்பின் நான் இங்கேயே திரும்பக்கூடும், அல்லது முடிவில்லா பாதையெனில் என்னின் முடிவு வேறெங்காவதுமாயின் இருக்கலாம். இது உனக்கும் பொருந்தும், உன் அடுத்து வருபவருக்கும் இதுவே.
ஆனாலும் குருஜி, இத்துனை அதிகாரங்கள், சொத்துகள், வசதிகள் கொண்ட இந்த ஆஸ்ரமத்தை விட்டு பிட்சை எடுத்து வாழப்போகும் வடக்கு நோக்கிய பயணம் அவசியமா? மேலும் தங்களின் மேல் தீரா அன்பு கொண்ட பக்தர்கள் மிகுந்த மன வருத்தம் அடைய மாட்டார்களா? என்னின் தகுதியிலும் எனக்கு சந்தேகங்கள் உண்டே...
***
நோ நோ யு ஆர் ராங்.. மை சன். எனக்கு இது அலுத்துடிச்சி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னுதான் ஹிமாலயாஸ் போறேன். நோ போன், நோ கான்ப்ரன்ஸ், நோ டென்ஷன்.. நீ ரொம்ப ஸ்மார்ட்.. உன் வயசுல நான் கூட இவ்ளோ ஸ்பீட் இல்ல. கோடிக்கணக்குல காசு இருந்தாலும், ஏ.சி போட்டா ஹிமாலயாஸ் ஆகிடுமா. கம் ஆன் டியர். நான் வரலைன்னாலும் கவலை வேண்டாம் இன்ஸூரன்ஸ் இருக்கு அதுக்கும் நீதான் நாமினி.. ஹா ஹாஹ்ஹா.. ஸோ இந்த சாம்ராஜ்யம் உன் பொறுப்பு, நீ என்ன பண்ணினாலும் இட்ஸ் அப் டு யூ.. நீ ஏர்போர்ட் வந்ததே போதும்..
பட், டாட், இப்பதான் செல் போன் இன்டர்னெட் எல்லாம் இருக்கே ஐ கேன் மேனேஜ்.. நானும் உங்க கூட வர்றேன்.. ஜஸ்ட் கூட இருக்கேன்.. ஒரு கேரவேன் வெச்சிகிட்டு.. எந்த தொந்தரவும் இருக்காது.. ப்ளீஸ்
***
சும்மா இருடா.. அப்பா வேலை விஷயமா டெல்லி போறார், நானும் வர்றேன்னு அடம் பிடிக்கிற..
அடியே, அவனுக்கு என்ன தெரியும்? குழந்தைதானே..விடு. செல்லம் அப்பா சீக்கிறம் வந்திடுவேன்,, வரும்போது உனக்கு பிடிச்ச ரிமோட் கார், ஸ்வீட்ஸ், சாக்லேட் எல்லாம் வாங்கி வருவேன், குட் பாய். அம்மா சொல்றத கேட்க்கனும், அழுகாச்சி பாப்பாவா இருக்கக்கூடாது என்ன? சிரி..
ம்க்கும்,, வர்றதே எப்பவோ வீட்டு கதவ தட்டும்போதே போன் வந்திடுது. அதுக்குள்ள பார்டர்ல குண்டு போட்டான்னு
சலிச்சிக்காதம்மா, கல்யாணம் பண்ணும்போதே நான் தெளிவா சொன்னதுதானே.. ஒரு ராணுவ வீரன் மனைவி இப்படியெல்லாம் பேசற நேரத்துல ரொமாண்டிக்கா எதுனா பேசலாம்ல..
அப்பா அதுதான் நீ ஏறப்போற ஃப்ளைட்டா?
***
ப்ச்க்..
ஹாஹ். இனி என் உயிர் போனாலும் கவலையே படமாட்டேன்,..
ப்ச்க்..
என்ன டியர் இங்கயே சாவடிக்கலாம்னு பார்க்கறியா? ஏர்போர்ட் ஆச்சே ன்னு பார்க்கறேன் இல்லைன்னா.. அப்படியே உன்ன..
ம்ஹும் தெரியும் அதுனாலதான் ஏர்போர்ட்ல வெச்சி.. இச்சி.. திரும்பற வரைக்கும் மறக்காதுல்ல, எதுனா வெள்ள தோல பார்த்து ஷாதி ஆயிடக்கூடாதுல்ல..
****
என்னங்க மிஸ்.பொண்டாட்டி யோசனை?
ஏங்க இப்ப டெல்லில ரொம்ப குளிருமா? ஆமாம் ஹனிமூன்னா என்ன?
ஓ ஹனிமூன்னா தெரியாதா உனக்கு. வெல், என் கிராமத்து கிளியே.. கேளு தாஜ்மஹால் இருக்குல்ல, அது பக்கத்துல ஒரு ரிவர் இருக்கு அங்க ஜமுக்காளம் விரிச்சி பவுர்ணமி அன்னிக்கி ராத்திரி மூன் வெளிச்சத்துல தேன் பாட்டில தொறந்து...
****
பயணிகள் கவனிக்கவும் டெல்லி செல்லும் பயணிகள் கேட் 6ஏ வுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
****
நாம போறது ஆன்மீக பயணம் ஹனிமூன் இல்ல, பல் செட் பத்திரம். விரகதாபத்துல விழுங்கிடப்போறீங்க..
இதுவும் ஆன்மீகம்தாண்டி நீயும்தான் பல்செட், அதுக்குன்னு நான் உன்னவிட்டுட்டு வேற இளசா டிஎல்ஜே பார்த்தா ஜொள்ளு ஊத்தறேன்..அலட்டிக்காத...
போதும் சகிக்கல, ப்ளைட் அனொன்ஸ் பண்ணியாச்சு கிழடுங்கதான் முன்னாடி நிக்கனும். வாங்க முட்டி வலிக்கிது..
****
சற்றுமுன் கிடைத்த செய்தி, சென்னையிலிருந்து டெல்லி சென்ற பயணிகள் விமானம் தீவிரவாகளால் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது
****
பூனம் ஹோல்ட் ஆன் எ செகண்ட், நவ் லெட் அஸ் கோ டு ப்ரெஸ் மீட் லைவ் ஃப்ரம் செக்ரட்டரி..
எக்ஸ்கியூஸ் மி சார் அபொட் தி ஃப்ளைட் பாஸஞ்சர்ஸ்..
ஹலோ சார் தி டெர்ரரிஸ்ட்...
சார் ப்ளீஸ் ஆன்ஸர் ஹவ் மெனி டெர்ரரிஸ்ட்...
ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ் சைலன்ஸ்... லெட் மீ ரீட் தி அஃபிஷியல் ஸ்டேட்மென்ட். பர்ஸ்ட்
டெர்ரரிஸம் வில் பி டிஃபீட்டெட், வி நெவெர் அலோ டெர்ரரிஸ்ட்ஸ் டு...
****
கேட் 6ஏ கமின்..
திஸ் ஈஸ் கேட் 6ஏ ஓவர்..
செக்யூரிட்டி ரெட் அலெர்ட், லெவெல் 3, கேன்ஸல் ஃப்ளைட், ஸ்டாப் போர்டிங் பாஸஞ்சர்ஸ். ஸ்டாண்ட்பை.
ராஜர்..
****
எப்படி இந்த வீடியோ கிடச்சிது? வாட் ஹாப்பெண்ட் டு சிசிடிவி?
ரிப்பேர் சார், இன்னும் ஏஎம்சி டெண்டரே விடல, ஏதோ வாரண்ட்டி டிஸ்ப்யூட்..இது ஸ்வீப்பர் கீழ கிடச்சிதுன்னு கொண்டுவந்து கொடுத்தாங்க, பட் யார் எடுத்தது, என்ன மோட்டிவ் எதுவும் தெரியல,
ரைட் எதுனா க்ளூ கிடைக்குதான்னு பாருங்க, மே பி டைவர்ஷனா கூட இருக்கலாம். எனிவே இங்கேர்ந்துதான் நூல் பிடிக்கனும், பட் நோ நியூஸ் டு மீடியா..பீ அலர்ட்..
*****
என்னய்யா இப்படி சொதப்பிட்ட..
சாரி சார் ரெஸ்ட்ரிக்டெட் ஏரியா, ரொம்ப நேரம் தனியா கேமரா கையில வெச்சிருக்க முடியல,,ஸோ அப்படியே முடிஞ்ச வரை ஒரு வாக் ஷாட்,, எடுத்துட்டேன். போதாத குறைக்கு அங்க ஹைஜாக்னு ஒரே பரபரப்பு..திடீர்னு போலீஸ், கமாண்டோல்லாம் வரவும் வெளில எடுத்த கேசட்ட பதட்டத்துல எங்கியோ விட்டுட்டேன்..
ஷிட். 500 எபிசோட் ஏர்போர்ட்லதான் ஓட்டனும், ரியலிஸ்ட்டிக்கா டயலாக் வேணும்னு சானல்ல ப்ரஷர் மேன்.. இப்ப யோசிக்கல்லாம் டைம் இல்ல கேண்டிட் டைப்தான் பெஸ்ட்.. இத வெச்சி டயலாக் முடிச்சிடலாம், 200 எபிசோட் ஒருமாதிரி இழுத்துடலாம், டிஆர்பி பொறுத்து மாத்திடலாம்னு நெனெச்சித்தான் ஏர்போர்ட்ல நடக்கறத படம் புடிய்யான்னு சொன்னேன். என்ன பண்ணுவியோ ஐ டோண்ட் கேர். ஒரு டென் டேஸ்க்கு இதுதான் உன் வேலை. புரிஞ்சிக்க ப்ளீஸ், இல்ல பழையபடி மார்ல அடிச்சிட்டு அழுவுற சீன்தான் எடுக்கனும். பயணிகள் கவனிக்கவும்னு பேர் வெச்சி பந்தாவா விளம்பரம் கொடுத்தாச்சிய்யா.
*****
ஹலோ ஸ்டிங் டிவி ரெஜி
யெஸ்..
டெல்லி ப்ளேன் ஹைஜாக் பத்தி ஒரு வீடியோ புட்டேஜ் இருக்கு, எக்ஸ்குளூசிவ், இப்ப சிபிஐ க்ளாசிஃபைட், இண்ட்ரெஸ்டெட்?
வெயிட்..
”----”
யா ஷ்யூர், வாட்ஸ் த ப்ரைஸ்..?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பின் குறிப்பு: ரத்தத்தின் ரத்தங்களான அன்பு வலையுலக நட்புகளே, வேலை, கணிணி குறைபாடு, இன்ன பிற காரணங்களால் எந்த பதிவுகளையும் படிக்க முடியவில்லை, பின்னூட்டமும் இடமுடியவில்லை. மன்னிக்கவும். ஓரிரு நாளில் வழக்கம்போல் கொடுமைகள் ஆரம்பமாகும்.
:))
.
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
ரைட்..இப்படிதான் நடக்குதா....
:-))
:)
நல்ல கோர்வையான சம்பவங்களின் நிகழ்வு தான் கதையே..
மிக அருமை சங்கர். கலக்கிட்டீங்க...
தொடர்ந்து கலக்குங்க..
டெம்ப்ளேட் ரொம்ப சூப்பரா இருக்கு.. நமக்கு கொஞ்சம் சொல்லக்கூடாதா..
உங்களுக்கு, எங்கள் பதிவுகளை படிக்கும் கொடுமையா? இப்படியும் சொல்லலாம். ஹா,ஹா,ஹா,ஹா.....
கதை நல்லா இருக்குங்க.
பின் குறிப்பு - ரணகளமாயிருக்கே!
சுஜாதா கதை படிச்ச மாதிரி இருந்துச்சு.
அட!! வித்தியாசமா இருக்கே, பாராட்டுக்கள் ஷங்கர்
காக்கா உட்கார.. மாதிரி தான் இருக்கு..
மெகா சீரியல் எடுக்க யோசனை சொல்லியிருக்கீங்க... வந்துடப்போகுது..
பல சமயங்களில் ஆர்வத்தை தூண்டிவிடும் எழுத்துக்கள் முடிவில் சொதப்பும். உங்களது clean take-off and thirilling sky diving and clean landing வாழ்ததுககள்
இது தொடருமா? முற்றுமா?:)
படிச்சுட்டேன். தலைப்புதான் விளங்கவில்லை.
என்ன ஆச்சு?
Present sir..
//இன்ன பிற காரணங்களால் எந்த பதிவுகளையும் படிக்க முடியவில்லை//
ithuku santhosa padanum..
:)
ஓகே...நல்லது. வாழ்த்துக்கள். எஸ்கிமொவோடு பயணம் பண்ணதுல இருமல் ஜாஸ்தியாக இருகிரதுனால் பேசமுடில :( ;)
நல்லா இருக்கு பாஸ் கதை.. :)
ஹ்ம்ம் கலக்குறிங்க .. ஆங்கில வார்த்தைகள் கலப்பதை தவிர்த்து இருக்கலாம் தல
i want to sell my fridge. do you know any Eskimo?
//ஏர்போர்ட்ல வெச்சி.. இச்சி..//
பிச்சுகிச்சு.
அருமையாக இருக்கு
கதை//
:))
முதல் பாரா படிச்சதும் ரொம்ப சிரிச்சுட்டேன்...
ஐயா பெரியவரே..நீங்க ரெம்ப கேட்டு போயிடீக...யார கவுக்க காத்து இருகீகளோ தெரியலையே...
கதை சொன்னவிதம் நல்லா இருக்குது ஷங்கர்
//ஓரிரு நாளில் வழக்கம்போல் கொடுமைகள் ஆரம்பமாகும்.//
ஓகே அண்ணா..
romba busy shankar, lateaaa padikkiren
அட ரொம்ப வித்யாசமா இருக்கே ஷங்கர்
Post a Comment