பலா பட்டறை: வெண்ணை..

வெண்ணை..நல்லா.. கல்ல நல்லாஆட்டுப்பா, வெண்ணைமாதிரி அரைக்கனும்

சரிண்ணே

தோ சூப்பர்வைசர் வர்றாம்பார், மோசமான ஆளு, எதுனா குறை சொல்லிகிட்டே இருப்பான்..

யோவ் உளுந்து மாவா?

ஆமாங்க சார்

இரு நீ புதுசுதான, அரைச்ச மாவ காமி... என்னைய்யா மாவ அரைச்சிருக்க, உளுந்து மாவு அரைச்சா சும்மா வெண்ணை மாதிரி இருக்கனும், புரியுதா? அப்பதான் வடை தின்றவன் நம்ம கடைய வாயிலயே வெச்சிருப்பான்..

சரிங்க..

ம்ம் சீக்கிறம் ஆவட்டும்.

----

என்ன வேலைய விட்டுட்டு போயிடலாம் போல இருக்கா?

இல்லண்ணே நானும் நல்லாதான் அரைக்கிறேன், ஒரு வாரமா பாக்கறேன், இந்த சூப்பர்வைசர் வெண்ணை மாதிரி அரை, வெண்ணை மாதிரி அரைன்னு சொல்லி வெறுப்பேத்திக்கிட்டே இருக்கான்..

நாந்தான் சொன்னேனே, அவன் எப்போமே இப்படித்தான் கொற சொல்றதே வேலை, வேற எதுவும் தெரியாது.

இல்லண்ணே இன்னிக்கு அந்தாளுக்கு நான் வெக்கெறேன் வேட்டு..

---

என்னய்ய்யா மாவு அரைச்சிட்டயா?

ஆச்சுங்க சார்..

ஹாங் காமி பார்க்கலாம்,

யோவ் எத்தன முறை சொன்னாலும் புரியாதா? எதுக்குயா வேலைக்கு வர்றீங்க? நீ என்ன அரைச்சி கிழிச்சிறுக்க, உளுந்து மாவுன்னா சும்மா வெண்ணை மாதிரி..

டேய் லூசு,  நீ கைய்யில வெச்சிறுக்கறத நக்கிப்பாரு, அது வெண்ணைதாண்டா, வெண்ண..

என்னது வெண்னையா??

ஆம்மாய்யா, நீதான் சொல்லுவியே வெண்ணை மாதிரி அரைக்கனும்னு, அதுக்குத்தான் மாவுக்கு பதிலா வெண்ணையே குடுத்தேன். அதையும் செக் பண்ணிட்டு வெண்ணைமாதிரி அரைக்கனும்னு சொல்றியே நீதான்யா வெண்ண, காலத்துக்கும் குறை சொல்லியே பொழுத ஓட்டறியே?? அதுக்குத்தான் இன்னிக்கு வெண்ணையே குடுத்தேன், அதையும் வெண்ணை மாதிரி அரைக்கனும்னு குறை சொல்ற பார், இதெல்லாம் ஒரு பொழைப்பாய்யா...????


.

47 comments: