பலா பட்டறை: யார் ஞானி? தொடர் பதிவு..:)

யார் ஞானி? தொடர் பதிவு..:)

தொடர் பதிவா? கூப்பிடுங்கையா பலா பட்டறைய அப்படின்னு ஆகிப்போச்சு :-) யார் ஞானி அப்படின்னு ஒரு (சீஸனுக்கேற்ற) தொடர் பதிவு. கூப்பிட்டவர் நம்ம நண்பர் அன்பு செய்வோம் ஜீவன் சிவம். நீங்களும் தொடரலாம்..:)) நண்பரின் பதிவில் உள்ள பத்தாவது பாயிண்டுக்கும் மேலே உள்ள படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..:))

------------
யார் ஞானி..?

முதலில் யாரையாவது ஞானி ஆக்குவது தேவையா? தேவையெனில் எதற்கு? மனிதரை தவிர்த்து மற்றெதுவுக்கும் கடவுளோ, மொழியோ, கோட்பாடுகளோ தேவையில்லாதபோது, ஆறறிவு கிடைத்த நமக்கு சொறிந்து கொள்ள உதவும் சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் முழுமையான ஒன்றை போதித்து இருக்கிறதா?

புத்தி தெரிந்து இறப்பது வரை ஒரு கோனார் நோட்ஸ் போல உபயோகிக்க அன்றி அதனை கட்டிக்கொண்டு அழுவதும், கிழித்தெறிந்து காறித்துப்புவதும் தேவையா? கூடலின்பார்பட்டே, அதனையே தனது சுழற்ச்சியாய் கொண்டு இயங்கும் இவ்வுலகில் ஆடை அணிந்து, அகந்தை வளர்த்து, கூடலையே தவறென்று கூடலின் வழியே வந்து, கூடலுக்காய் நேரமும், காரணங்களும், இடம், பொருள், ஏவலும் குறிக்கும் யாரின் வாழ்வும், அதனை கேட்போறும் திறந்த புத்தகமாய் இல்லாது மூடிக்கிடக்க, இங்கே யாரை ஞானியாக்க முடியும்? அப்படியே கண்டுபிடித்தாலும் அவர் சாகும் வரையில் கூடினாரா இல்லையா என படம் பிடிக்க யார் செலவு செய்வது? அப்படியே படம் பிடித்தாலும் அவன் குறியை கேள்விக்குறியாக்க நாம் கற்ற தர்க்கங்கள் வாளாயிருக்குமா?

கூச்சல்களுக்கிடையே கற்றுக்கொடுக்கப்பட்ட அறிவினை நீட்டி, முழக்கி பார்த்ததையெல்லாம் பெயர் வைத்து மாய்ந்து அதுவே வேதமென்று, புகழ்ந்தும், இகழ்ந்தும் புதிய அர்த்தங்கள் கண்டுபிடித்தும் மாட்டினால், தர்க்கம் செய்து தப்பித்தும் வரும் கூட்டத்தில் ஞானியை எங்கு தேட?? ஏன் தேடவேண்டும்?

ப்படியே உங்களின் கருத்துக்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஞானிகளை நீங்கள் காண வேண்டுமென்றால், மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. கூடிக் கூடி பல்கி பெருகி இவ்வுலகையே நாசம் செய்துவரும் நமக்கும் உணவு அளித்து வாழ்வு கொடுக்கும் அவைகளே ஞானிகள், கடவுள், வேதம் இன்ன பிற.

வையும் எந்த பிரக்ஞையுமன்றி கூடுகின்றன தினமும். அவற்றிற்கு தெரியும் கூடுதல்களும் இருப்பின் புரிதல்களும் நம்மை விட அதிகமாய், ஏனெனில் அவை எதற்கும் பெயர் வைப்பதில்லை.

மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். !

43 comments: