பலா பட்டறை: விதி..

விதி..

எவ்ளோப்பா?

முழம் 15 ரூவா தாயி

சரி 2 முழம் குடுங்க, ஆட்டோகார் கொஞ்சம் இருங்க பார்லர் போயிட்டு வந்திடறேன்..

-----

என்னாச்சி

ரீச் ஸ்டேக்கர் பிரச்சனை பண்னுது. கன்டைனர் தூக்கல

ஹைட்ராலிக்ஸ் எதுனா பிரச்சனையா?

இல்ல சார் இஞ்சின் அமுங்குது, லோட் எடுக்கல, ப்ரைம் மூவர்தான் பிரச்சனை,

சரி மெக்கானிக் யாராவது வரச்சொல்லுங்க, ஏகப்பட்ட லாரிங்க நிக்கிது..

சொல்லியாச்சு சார், ஆன் த வே

-----

ஏம்மா இப்படியா செலவு பண்றது, உன் புருஷன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் தெரியுமில்ல,?

இல்லம்மா அவர்தான் இப்பதானே கல்யாணம் ஆச்சி எனக்குன்னு யாருமில்ல இப்பதான் நீ இத்தன வருஷத்துல வந்த உறவு, கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம் உனக்கு என்ன வேணுமோ செலவு பண்ணிக்கோ, நீ சந்தோஷமா இருக்கத்தான் நான் சம்பாதிக்கிறேன்றார், நானும் சொல்லிப் பார்த்துட்டேன், கேக்கல, சரி அவர் சந்தோஷம்ன்னு விட்டுட்டேன்..

----

என்னாச்சுங்க?

லோட் எடுக்கல சார், எம்ப்டி கண்டெய்னர் தூக்கினாகூட அப்படியே அமுங்குது..

ம்ம்..  நல்ல டீசல்தான் யூஸ் பண்றீங்களா? ஃபில்டர் எப்ப மாத்தினீங்க?

டீசல் லோக்கல் பங்க்லதான் வாங்கறது, ஃபில்டர் மாத்தறதில்லசார் அப்படியே க்ளீன் பண்ணி போட்றுவோம்..

என்னங்க ஒரு கோடி ரூபாய்க்கு கிரேன் வாங்கிட்டு 1700 ரூவா ஃபில்டர் மாத்த யோசிக்கிறீங்க? கிடைக்கிற டீசல்லயே ஏகப்பட்ட கலப்படம், இதுல ஃபில்டரும் மாத்தலன்னா எப்படி? ஸ்டாக் இருந்தா ஸ்டோர்ஸ்லேர்ந்து எடுத்துட்டு வாங்க..

----

ஹலோ


சார்

ஏன்ப்பா லேட் ஆவுது லோடிங்?

கிரேன் பிரச்சனை சார், மெக்கானிக் பார்த்துகிட்டு இருக்காங்க சரியாகிடும், முடிச்சிடலாம் சார் ஹார்பர் லோடிங்..

சீக்கிறம்ப்பா, பதில் சொல்ல முடியல, போன்ல கத்தறாங்க..

----

சார் ஃபில்டர் இந்தாங்க..

ஸ்பின் ஆன் ஃபில்டர்தானே, ஒரு அசக்கு அசக்கி திருகினா வெளில வந்திடும், புதுசு சுலபமா மாட்டிடலாம், ஓரிங் கூட இல்ல, லீக் ஆவாது, இதப்போய் க்ளீன் பண்ணி போடறீங்களே? ம்ம் மாத்தியாச்சு.. இஞ்சின ஆன் பண்ணுங்க..

ஷ்ர்க்..

டொம்..

ஐய்யோஓஓஓஓ

---

ஹலோ

---
ஹலோ

---
ஹலோ(.....)

30 comments: