ரைட், போன பதிவில் வந்தது அடிக்கடி நிகழும் ஒன்றாயிருந்தாலும், முடிவினை உங்கள் யூகத்திற்கு விட்டுவிட்டேன். ஆனாலும் விதி (ரூல்ஸ்ங்க) என்ற ஒன்று நம்மை சுற்றி எப்பொதும் பின்னப்பட்டதாகவே இருக்கிறது, ஒரு நொடி அதை மறக்கும்போது நிகழும் நிகழ்வுகளை இப்படி பயம் கலந்துதான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்..:((
உலக தண்ணீர் தினம். மார்ச் 22 இதை பற்றிய சக பதிவர்களின் தொடர் இடுகைகள்..
மண், மரம், மழை, மனிதன் வின்செண்ட்
சிறு முயற்சி - முத்துலெட்சுமி
முத்துச்சரம் - ராமலக்ஷ்மி
மேலும் பதிவர்களின் இது பற்றிய பதிவுகள் ( நன்றி நீச்சல்காரன்)
இங்கே, தினமும் தண்ணீர் தினம் கொண்டாடப்போகும்(!?) நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசம்தான். ஏதோ புண்ணியத்துக்கு மழை நீர் சேகரிப்பு என்ற ஒன்று செயல்படுத்தப்பட்டு, கண்ணெதிரே பயன் தெரிந்தாலும் இன்னும் சிறப்பாக உபயோகிக்காது இருப்பது குறையே. கடல் நீர் சுத்திகரிப்பு போய் காற்றிலிருந்து சுத்திகரிப்பார்கள் போல, பின்ன ஏரி குளமெல்லாம், பட்டா போட்டு, குப்பை போட்டு, சுத்தி இருக்கிற இடங்களெல்லாம் சிமெண்ட் போட்டு சுத்தமா மூடி, கதவு வைத்த சமாதிகளில் வாழ்க்கை வாழும்போதுதான் இம்மாதிரி தினங்கள் வந்து நினைவு படுத்துகிறது. நம் வீட்டு தண்ணீர் தொட்டியின் அளவு, எத்துனை முறை அதனை காலி செய்து நிரப்புகிறோம், நம் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கான சராசரி தண்ணீர் செலவு என்ன? என்பதை கணக்கு செய்தால் தலை சுற்றுகிறது.
ஒன்பது சென்ட் இடத்தில் வெறும், இரண்டு சென்ட் மட்டுமே வீடு கட்டுகிறேன், மிச்சம் தோட்டம், செடி, மரம் இவைகளுக்காக. 20 அடியில் தண்ணீர் வந்த இடத்திற்கு நான் செய்யும் கைமாறு இதுவாகத்தான் இருக்க முடியும். நீர் சுத்திகரிக்கும் தாவரங்கள், மறு சுழற்சி, குறைவான நீர் உபயோகம் போன்றவை மூலமும், சூரிய சக்தி பயன்பாடு மூலமாகவும் இயற்கை சார்ந்த ஒரு வாழ்வு முறைக்காக, சிங்கார ந(ர)கரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தாலும், என் குழந்தைகளுக்கான படிப்பு வசதிகளில் சில குறைவுகள் இருப்பினும் எந்த தயக்கமுமில்லாது இந்த முடிவு மகிழ்ச்சியாகவே எடுத்திருக்கிறேன். குடி நீருக்காக குடம் கொண்டு அலைவதையும், லாரியில் காசு கொடுத்து வாங்குவதையும் பார்த்து மனது வெறுத்து போயிருக்கிறேன். இருப்பினும் தண்ணீர் என்பது ...
இதுவரை இது அரசியல்,
இப்போது வியாபாரம்
இனி
அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக இருக்குமாம்...
அதுவரையுமாவது
நிம்மதியாய்..
க்
ள
க்
க்
ள
க்
க்
ள
க்
(நண்பர்களே நீங்களும் இதுகுறித்து கண்டிப்பாக ஒரு பதிவு போடுங்க.. .. ப்ளீஸ்..)
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
தண்ணீர் இருக்கும் போதே ஒரு மடக் குடிச்சிட்டு வந்து கமென்ட்றேன். ......க்ளக் .....க்ளக்..........
//நம் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கான சராசரி தண்ணீர் செலவு என்ன? என்பதை கணக்கு செய்தால் தலை சுற்றுகிறது.//
உண்மைதான்...இப்போது கடல் நீர் சுத்தம் செய்து பயன்படுத்த போகிறோம் அதுவும் வற்றினாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை...
நல்ல பகிர்வு...
Good post
நல்ல பதிவு
இன்னும் சில இடுகைகளை விட்டுவிட்டீர்கள் இதோ கூகுளின் உதவியோடு திரட்டியவை
http://www.google.com/reader/shared/neechalkaran
அவசர அவசியமான பதிவுங்கோ.
// 20 அடியில் தண்ணீர் வந்த இடத்திற்கு நான் செய்யும் கைமாறு இதுவாகத்தான் இருக்க முடியும்//
வெல்டன் ஷங்கர், பாராட்டுக்கள்.
//மிச்சம் தோட்டம், செடி, மரம் இவைகளுக்காக. 20 அடியில் தண்ணீர் வந்த இடத்திற்கு நான் செய்யும் கைமாறு இதுவாகத்தான் இருக்க முடியும். //
மனதாரப் பாராட்டுகிறேன் இந்த முடிவையும் பதிவையும்.
தல மரங்கள் பற்றி ஒரு பதிவுபோட்டுட்டு வந்து பாக்குறேன், நீங்களும் அது குறித்து எழுதிருக்கீங்க. ம்இக்க மகிழ்ச்சி...
இது பத்தி பதிவு போடமாட்டேன். ஆனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துகிறேன் பயன்படுத்துவேன் என்று சொல்லிக்கொள்கிறேன்.
நல்லதுங்ன்னா..
தண்ணி மேட்டர்-னாலே
நாங்க கண்டிப்பா ஆஜராயி
ஓட்டு போட்டுடுவோம்ல ..
//தண்ணீர் என்பது ...
இதுவரை இது அரசியல்,
இப்போது வியாபாரம்
இனி
அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக இருக்குமாம்...//
mutrilum unmai. nalla pathivu.
தண்ணீர் பிரச்சனை ...இவ்வளவு இருக்கா ...!நிச்சயம் தகவல் சேகரித்து நல்ல இடுகைதர அனைவரையும் உற்சாகப் படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.
//நீங்களும் இதுகுறித்து கண்டிப்பாக ஒரு பதிவு போடுங்க.. ..//
பதிவெல்லாம் போடா முடியாது. தண்ணி வேணா போடறோம்..
:)
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
ஓ இதனாலதான் எல்லாரும் சரக்கடிக்கும் போது தண்ணி கலந்து அடிக்கறாங்களா?
//பதிவெல்லாம் போடா முடியாது. தண்ணி வேணா போடறோம்..
//
கிளாஸ் எங்கே....சீக்கரம் ஸ்டார்ட் பண்ணுங்க....
குடிக்க தண்ணி இல்லைன்னா என்னங்க, டாஸ்மாக்ல போயி சரக்கடிப்போம்.
கிண்டலுக்கு சொன்னாலும் உண்மையிலேயே இது வருந்தத்தக்க விசயம் தான். என்னாலயும் பதிவெழுத முடியாது. இனிமேயாவது தண்ணீரை சிக்கனமா உபயோகிக்க முயற்சி செய்யறேன்.
//அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக இருக்குமாம்...//
இது வெகு தொலைவில் இல்லை நன்பரே...
மிக மிகத் தேவையான இடுகை
//கதவு வைத்த சமாதிகளில் வாழ்க்கை வாழும்போதுதான்//
உண்மையான வார்த்தை....
இடுகை தண்ணீரின் அவசியத்தை தாகத்துடன் உணர்த்துகிறது....
இப்போ உப்பு திங்கிறோம் மிதமிஞ்சி. பின்னாடி குடிக்க தண்ணி கிடைக்கப் போறதில்லை:(. அவசியமான இடுகை.
//ஒன்பது சென்ட் இடத்தில் வெறும், இரண்டு சென்ட் மட்டுமே வீடு கட்டுகிறேன், மிச்சம் தோட்டம், செடி, மரம் இவைகளுக்காக. //
மனமார்ந்த பாராட்டுக்கள். மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும்.
உண்மையான அக்கறை பதிவில் தெரிந்தது.
பின்னொரு நாள் இந்நாளை நினைத்துப் பார்ப்போம்...
அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம் .
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !
10 வருசத்துக்கு முன்னாடி தண்ணீர் தொழில் கேள்விபட்டோமா...இப்போ செம தொழில் அதுதான்..கொடுமை
"ஒன்பது சென்ட் இடத்தில் வெறும், இரண்டு சென்ட் மட்டுமே வீடு கட்டுகிறேன், மிச்சம் தோட்டம், செடி, மரம் இவைகளுக்காக. 20 அடியில் தண்ணீர் வந்த இடத்திற்கு நான் செய்யும் கைமாறு இதுவாகத்தான் இருக்க முடியும்."
மகிழ்ச்சி.
"என் குழந்தைகளுக்கான படிப்பு வசதிகளில் சில குறைவுகள் இருப்பினும் எந்த தயக்கமுமில்லாது இந்த முடிவு மகிழ்ச்சியாகவே எடுத்திருக்கிறேன்."
நெகிழ்ச்சி.
சக பதிவர்களின் தொடர் இடுகைகளுக்கு தொடர்பை தந்ததிற்கு அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
//தினமும் தண்ணீர் தினம் கொண்டாடப்போகும்(!?) நாள் வெகு தொலைவில் இல்லை.//
சரக்கு விலை எல்லாம் குறையுதா ?
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????
உங்கள் சமூக நலத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
தண்ணீரை நான் எப்படி விட்டேன்..?
நிச்சயம் எழுதுகிறேன்.. உங்கள் வேண்டுகோளை நான் நிறைவேற்றுகிறேன்...
நன்றி..
உங்க இந்தப்பதிவு விகடன் குட்பிளாக்ல இருக்கு.
நல்ல பயனுள்ள பதிவு
ஆமா நானும் பார்த்தேன் இந்தப் பதிவு குட் ப்ளாக்குல இருக்கு அட நான் சொல்லும் முன்னாடி ஷாந்தி சொல்லிட்டாங்க
Congratulations! This post is selected as "Good Blogs" :-)
:)
நிறையா தண்ணீர் குடிக்கணும். சிக்கனம்னு சொல்லி தண்ணீர் குடிக்காம இருந்துராதீங்க.
வேறென்ன சொல்ல. குட் ப்ளாக். :)
நல்ல தொரு பகிர்வு வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு...
இனி தண்ணீரை சிக்கனமா உபயோகிக்க முயற்சி செய்யறேன் அண்ணா..
சார் நல்ல பதிவு , "அத்திப்பட்டி"
மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள்.
"..வீடு...மிச்சம் தோட்டம், செடி, மரம்" மிக்கமகிழ்ச்சி.பாராட்டுக்கள்.
Post a Comment