பலா பட்டறை: பதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)

பதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)பதிவர்கள் என்று ஆரம்பித்து சந்திப்பு/குழுமம்/சங்கம்/கட்சி/பேரவை என ஏதோ ஒன்றில் முடியப்போகும் நேற்றைய சந்திப்பிற்கு நானும் போனேன். 

சிறிய கால அவகாசத்தில் நட்புகளின் அடிப்படையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. முறையான தகவல்கள் அளிக்கப்பட்டது, ஒருங்கிணைப்பு மட்டுமே சில நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் அழைப்பு விடப்பட்ட நிலையில், அதற்கான இடமும், நேரமும் அறிவிக்கப்பட்ட நிலையில், லோகோவில் மட்டுமே சில கருத்து வேறுபாடுகள் வந்தது. முயற்சியில், நோக்கத்தில் என்ன செய்யப்போகிறீற்கள்?? என்பதனை அறிவிப்பு நிலையிலேயே கேட்க்கப்பட்டிருந்தால் ஒரு ஆரோக்கியமான சந்திப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. அது வரை எனக்குப்புரிந்த வரையில் (அல்லது பெரும்பாலான பதிவர்களின் புரிதலின் படி) ஒரு முறையான நட்புக்கூட்டம் ஆரம்பிக்க இருக்கிறது. அது சங்கமாக, குழுமமாக கட்சியாக இருப்பதற்கு தடைகள் இருப்பின், இது வேண்டும் அல்லது வேண்டாம் என்று முடிவெடுத்து கடந்து போயிருக்கலாம். யார் யாரைக் கட்டாயப்படுத்த முடியும்? எதற்கு இத்தனைக் குழப்பம் என்றே புரியவில்லை. எந்த குழுவும் வேண்டாம் நட்பு ரீதியாகவே இணைவோம் என்றால் அதனை பதிவாகவோ அல்லது பின்னூட்டமாகவோ சொல்லி இருக்கலாம். அல்லது இதனை ஆரம்பித்து வைத்தவர்களுடன் கருத்து வேறுபாடு இருப்பின் புறக்கணிக்கிறோம், எங்களுக்கு தேவை இல்லை என்றாவது சொல்லி இருக்கலாம். வேண்டியவர் கலந்து கொண்டிருப்பர், வேண்டாதவர் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கலாம். அதை விடுத்து இது போன்ற ஒரு நிகழ்வை நான் எதிர்பார்க்கவில்லை.

எல்லாவற்றையும் குழப்பி, கடைசியில், இல்லைன்னா சொல்றோம் இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றோம், என்பது போல, குழுவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதை சொன்னபோது. கல்கி ஆஸ்ரமமே தேவலை போல இருந்தது. நண்பர்களே எந்த குழுவும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. தயக்கமிருப்பின் சேரவே வேண்டாம். நட்பு ரீதியான சந்திப்பு எப்போதும் தொடரும். நல்ல நட்புகளுக்கான ஒரு தளமாகவே இந்த வலைமக்களை நான் பார்க்கிறேன். அது தொடர வேண்டும். இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆரம்பிப்போம். கவர்ச்சியாய் ஏதேனும் சொல்லி ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அது தேவையா? இதைத்தான் செய்யப்போகிறோம் என்பதை விட இதைச்செய்யலாம் என்பது சிறப்பானாதாக இருக்காதா? 

உண்மைத்தமிழன் அவர் கருத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டாக தந்தார். அதில் குறைகள் ஏதுமிருப்பின் அதனை பிறகு விவாதித்திருக்கலாம். அல்லது நிராகரித்திருக்கலாம். அதனையே ஒரு காரணமாக்கியது ஏன் எனத் தெரியவில்லை. எதற்கும் ஒரு துவக்கம் வேண்டும். பிள்ளை பெறுவது முக்கியம் சுக பிரசவமோ?, சிசேரியனோ? ஆனால் அபார்ஷன் வேண்டாமே. பிள்ளையே வேண்டாம் என்பவர்களுக்கு நிறைய சாதனங்கள் இருக்கிறது. 

துவக்கம் மட்டுமே செயல்படுத்த யாராலும் இயலும். அதன் நகர்வோ, முடிவோ, இப்படித்தான் போகுமென்ற துல்லிய கணிப்போ, யாராவது இவ்வுலகில் இதுவரை செயல்படுத்தி இருக்கிறார்களா?? நான் ஆரம்பிக்கும் ஒன்று இன்னும் ஐம்பது வருடங்களுக்கு ஒவ்வொரு நொடியும் இப்படித்தான் நகரும் என்று யராவது ஒரு பட்டியல் தாருங்கள். உங்கள் குழுமத்தில் நான் ஆயுட்கால மெம்பர் ஆகிறேன்.   

அதுவரை, நேற்றைய நிகழ்வில் இணைய விருப்பமுள்ளவர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள், ஒரு நல்ல துவக்கத்தை நல்லபடியாய் ஆரம்பிக்க, சிறப்பானதாக்க .. 

மெயில் அனுப்ப வேண்டிய முகவரி tamilbloggersforum@gmail.com

நன்றி. 

---

வெண்ணை. இனி இந்த பெயரிலேயே அவ்வப்போது சிலவற்றை எழுதலாமென்று இருக்கிறேன் சிலது பிடிக்கலாம் சிலது மரண மொக்கையாக இருக்கலாம் ப்ளீஸ் பொருத்தருள்க!!!


மனுஷன் உயிரோட இருந்தா நோ பிராப்ளம்
செத்தா ரெண்டு பிராப்ளம்

அவன புதைக்கறதா? எரிக்கிறதா?

எரிச்சா நோ பிராப்ளம்
புதைச்சா ரெண்டு பிராப்ளம்

அங்க புல்லு வளருமா? வளராதா?

வளரலைன்னா நோ பிராப்ளம்
வளர்ந்தா ரெண்டு பிராப்ளம்

அத மாடு தின்னுமா? தின்னாதா?

தின்னலைன்னா நோ பிராப்ளம்
தின்னா ரெண்டு பிராப்ளம்

அது பால் கறக்குமா? கறக்காதா?

கறக்கலைன்னா நோ பிராப்ளம்
கறந்தா ரெண்டு பிராப்ளம்

அத மனுஷன் குடிப்பானா? மாட்டானா?

குடிக்கலைன்னா நோ பிராப்ளம்
குடிச்சா ரெண்டு பிராப்ளம்

அவன் உயிரோட இருப்பானா? மாட்டானா?

உயிரோட இருந்தா நோ பிராப்ளம்
செத்தா ரெண்டு பிராப்ளம்

அவன புதைக்கறதா? எரிக்கிறதா????????????

(யார் வேண்டுமானாலும் தொடரலாம்..)

45 comments:

நாடோடி said...

பலாபட்டறை சார் உங்களுடைய வெண்ணையை ஏற்கனவே நான் அக்பருக்கு பின்னுட்டமாக போட்டுட்டேன்..இருந்தாலும் உங்க தளத்துல பத்தி பிரிச்சி அழகா இருக்கு..
http://sinekithan.blogspot.com/2010/02/blog-post_21.html

மணிஜீ...... said...

hey ! wats your problem?

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..:)))::::"

கே.ஆர்.பி.செந்தில் said...

நீங்க எரிக்கும் கட்சியா? புதைக்கும் கட்சியா?
அடிக்கடி வெண்ணை கடைய வாழ்த்துகிறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

//பதிவர்கள் என்று ஆரம்பித்து சந்திப்பு/குழுமம்/சங்கம்/கட்சி/பேரவை என ஏதோ ஒன்றில் முடியப்போகும் நேற்றைய சந்திப்பிற்கு நானும் போனேன். //
இதுவே ஆயிரம் கண்ணீர் கத சொல்லிடுச்சு!

மோனி said...

அது என்ன சகா
வெண்ணைக்கு
0.01 ன்னு ஒரு Version ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

என் நடை பாதையில்(ராம்) said...

வெண்ணை(0.01)....!


நல்லா பேர் வைக்கறாங்கய்யா.....

Sukumar Swaminathan said...

தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...
பதிவர் சந்திப்பு புகை படங்களுக்கு
http://valaimanai.blogspot.com/2010/03/blog-post_28.html

butterfly Surya said...

No Problem..

சங்கர் said...

//(யார் வேண்டுமானாலும் தொடரலாம்..)//


இதுக்கு மேல என்னத்த தொடர

Sangkavi said...

உங்கள் நேர்மையான கருத்தை வரவேற்கிறேன்....

அக்பர் said...

ஏதாவது செய்யனும் பாஸ்.

லிங்க் கொடுத்த நாடோடிக்கு நன்றி.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

எல்லா பயணங்களும் முதல் அடியில் தான் தொடங்குகிறது. பயணத்தின் ஒவ்வோரு புள்ளியும் ஆயிரம் சாத்தியக்க்கூறுகளூடன் காத்திருக்கும் பொழுது முழு பயணத்தையும் நாம் பயணத்தின் முதல் அடியிலேயே தீர்மானித்துவிடமுடியாது. நாம் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைப்போம் வழிகளை பயணம் தீர்மனிக்கட்டும்.


வெண்ணை 0.01 :-)) கூட்டத்திற்கு வந்தவர்கள் வெண்ணை 0.01இன்னும் ரசிக்க முடியும்!!

காவேரி கணேஷ் said...

பதிவர் சந்திப்பின் பாதிபிபினால் வெண்ணையை கடைகிறீர்களோ?

Kamal said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

துபாய் ராஜா said...

பதிவர் குழுமம் பற்றி விரைவில் நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.

உங்கள் வெண்ணையைப் போல ஏற்கனவே எழுதிட்டோம்ல... http://rajasabai.blogspot.com/2009_08_01_archive.html

வானம்பாடிகள் said...

வெண்ணெய உருக்கறதா தடவறதா:))

ஹாலிவுட் பாலா said...

ஒன்னுமே புரியலே.....
உலகத்திலே.....

இராகவன் நைஜிரியா said...

voted..

வெண்ணைக்காக...

// வானம்பாடிகள் said...
வெண்ணெய உருக்கறதா தடவறதா:))//

டபுள் ரிப்பீட்டோய்...

மங்குனி அமைச்சர் said...

இந்த வெண்ணையை
படிக்காட்டி நோ பிராபளம்
படிச்சிட்டா ரெண்டு பிராப்ளம்
அத தொடர்றதா? இல்லையா ?
தொடர்ந்தா நோ பிராபளம்
.....................................
.....................................

பழமைபேசி said...

ப்ராப்ளத்தைச் சொல்லாட்டி நோ ப்ராப்ளம்!
சொன்னா ரெண்டு ப்ராப்ளம்!

சொன்னபடியே புரிஞ்சுக்குவாங்களா? மாட்டாங்களா??

.................

அன்புடன்-மணிகண்டன் said...

மெயில் போட்டாச்சு தலைவரே.. கொஞ்சம் நம்ம ஏரியாவுக்கு வாங்க.. :)

VISA said...

சென்னை என்னை போடா வெண்ணை என்றது....


இதுக்கு மேல என்ன தொடர்றது. அது தான் புதைச்சு புல்லு முளைச்சிடுச்சே....

மயில்ராவணன் said...

நண்பரே....

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.

ஜெ.மார்த்தாண்டன் அவ்ர்களுடைய கருத்தை வழிமொழிகிறேன்(1st para only)

பிரியமுடன்...வசந்த் said...

புதைச்சா ரெண்டு ப்ராப்லம்

புதைச்ச உடம்பு மண்ணுக்கு உரமா இல்லை விதைக்கபட்ட விதையான்னு...
.......

இன்னும் எழுதலாம் நேரமில்லை

கார்க்கி said...

இதெல்லாம் 2008லே போட்டாச்சு

http://www.karkibava.com/2008/10/blog-post_1769.html

செந்தில் நாதன் said...

என் கருத்து

http://blogsenthilnathan.blogspot.com/2010/03/blog-post_28.html

வித்யா said...

வெண்ணை.. வெயில்??

Chitra said...

வெண்ணையை உருக்கி, நெய் ஆக்க வேண்டியதுதான். எனி ப்ரோப்ளம்?

ha,ha,ha,....

~~Romeo~~ said...

Present boss :D

Vidhoosh said...

அப்படி ஒன்றும் வெண்ணையாக இருந்துட முடியாதே. வெண்ணையாகவே இருந்தால் ரெண்டு ப்ராப்ளம், ஒன்னு மஞ்ச பூத்து புளிச்சு போயிடும்,இல்லன்னா ஹனுமாருக்கு சாத்திடுவாங்க.
நெய்யா உருக்கினாலும், பதத்துல உருக்கணும். ரொம்ப உருக்கினால் தீஞ்சு போய்டும், கம்மிய உருக்கின டால்டா மாதிரி இருக்கும்.

தொலஞ்சு போன்னு ஜில்லுனு பஞ்சாபி லஸ்ஸில கலந்து வேணா சாப்பிடலாம். அதுலயும் ரெண்டு ப்ராப்ளம் இருக்கு, ஜில்லுனு குடிச்சு ஜலதோஷம் பிடிக்கும், வெண்ணை கொழுப்பாகி .... சரி .... பார்க்கலாம்...

Kolipaiyan said...

அன்றைய கூடத்திற்கு நானும் வந்தேன். ஒன்றும் விளங்காமல் குழம்பி சென்றேன்.

இனி கூடுவோம்... விவாதிப்போம்... வளம்பெறுவோம்.

Vidhoosh said...

மொத்தத்துல இந்த சந்திப்பினால் உங்களுக்கு "பிடிச்சிது"ன்னு அறியும் போது திக்கு முக்காடி போயிட்டேன், சந்தோஷத்துல.. :))

நர்சிம் said...

//Kamal said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
//

பிரச்சனை தெரிஞ்சு போட்டாறா இல்ல அதுவா நடக்குதா.. என்றாலும் குழுமத்தின் தலைவன் வாழ்க.

திவ்யாஹரி said...

இது ஏற்கனவே தெரிஞ்ச மொக்கை அண்ணா.. தெரியாததை வெண்ணை ஆக்கவும்.. ஹி..ஹி..

இரசிகை said...

vaazhkkai oru vattamngira unamaiyai nirubichurukku.....
intha vennai kavithai:)

க.பாலாசி said...

பதிவர் சந்திப்பு தொடர்பான உங்களின் பார்வை நன்றாக இருக்கிறது. இதை தாங்கள் சந்திப்பின் முன்னதாகவே தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

வெண்ணை... :-))

V.Radhakrishnan said...

//முயற்சியில், நோக்கத்தில் என்ன செய்யப்போகிறீற்கள்?? என்பதனை அறிவிப்பு நிலையிலேயே கேட்க்கப்பட்டிருந்தால் ஒரு ஆரோக்கியமான சந்திப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.//

நோக்கம் இல்லாம ஒரு அமைப்பு எதற்கு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. நோக்கம் பற்றி பேசத்தான் கூடுறிங்கனு நினைச்சேன். ஒன்ன நினைச்ச இப்படி எல்லாம் கையில வெண்ணைய வைச்சிட்டு வெளியில தேடக்கூடாது

Vidhoosh said...

தமிழ்மண மகுடம் சூடியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

sir , please visit to my blog

மங்குனி அமைச்சர் said...

sir , please visit to my blog

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

முதன் முதலாய் வந்தவர்களுக்கு என் வந்தனம்.

--

எல்லாம் கடந்து போகும்..!!

ஜெரி ஈசானந்தன். said...

வெண்ணை உருகி ...நெய்யாக வாழ்த்துகள்...

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.