ஊற்றம்..
ஸ்பரிசம் ஆயிரம்.. தாயில் ஆரம்பித்து, குழந்தையின் விரல்களினூடே அது என்னை உயிர்ப்பித்தே வருகிறது. ஒரே உடல்தான், உரசல்கள் யார் மூலம் என்பதே சிலிர்ப்புகளின் இன்பத்தை தீர்மானிக்கிறது. ஸ்பரிசத்தின் மொழி சொல்லும் நேரம் சிறியதாய் இருப்பினும், வார்த்தைகளற்ற உணர்ச்சிகளின் குவியல் உள்ளே உலுக்கிப்போடுகிறது.
உயிரில்லாத துப்பட்டாக்களும் உயிருள்ள என்னை சித்திரவதை செய்திருக்கிறது. எங்கோ கூட்டத்தினூடே எல்லார் ஸ்பரிசமும் ஒன்றாகவே இருக்கிறது கண்கள் நிறம் பிரிக்கும்வரை. அதை நான் உணர நெடு நாட்கள் ஆயிற்று. வேட்க்கைக்கான நடுக்கங்களுக்கான உடலின் ஆயத்தத்தில் ஸ்பரிசங்கள் தேடி அலைந்தது மனது. உணர்ச்சிகளை திரியாய் உருட்டி பாலின எண்ணங்கள் எண்ணையாய் ஸ்பரிசக்குச்சி கொண்டு உரசல்களில் தீப்பிடித்து உணர்வுகள் வெந்து, தணியாமல் தணல் கனன்று, பிடித்தவைகள் கடக்கும் காற்றில் சாம்பல் விலகி கங்குகள் ஒளிர்ந்த வெளிச்சத்தில் மற்றெல்லாமும் மக்கிப்போனது.
மாய உயிர்ச் சுழலின் தந்திரம், அழியா விதைகளுக்கான சூட்சுமம், வட்டத்தின் தொடர் பயணம், நானும் நீந்த, தீண்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது, அன்பாய் வந்த தீண்டல்கள் முடிந்து, விரகத்தின் தீண்டல்கள் தீர்ந்து, பாசத்தின் தீண்டல்கள் முடிய இருக்கும் தருணத்தில் ஸ்பரிச சுவர்களின் பூச்சுகள் விரிசல் விட ஆரம்பிக்கிறது. இனி அன்புத்தீண்டல்கள் வேண்டி தவங்கள் தேவைப்படலாம், ஸ்பரிசம் உணர குத்திப்பார்க்கும் பரிட்சைகள் தேவைப்படலாம், நிரந்தர ஸ்பரிசங்கள் வேண்டிய, வேட்க்கையின் கணங்கள் நீண்ட விரும்பிய சயனத்தின் வரம் இப்போது கிடைத்திருக்கிறது. நினவுகளில் ஸ்பரிசத்தின் இன்பத்தினை மீட்டெடுக்க முடியவில்லை, அசை போட முடியவில்லை. தொடர் சயனத்தின் அழுத்தங்கள் கொப்புளித்து வரலாம், வலியில்லா ரணத்தின் வீச்சங்கள் என் தொடர் விதையின் ஸ்பரிசங்களுக்கு வேதனையோ, அருவெறுப்போ தரக்கூடும். ஒரே போல்தான் உடல் நடுங்குகிறது. வேட்கையிலும், வேதனையிலும் தளர்ச்சி மட்டுமே ஏளனம் செய்கிறது இருப்பை.
Labels:
அனுபவம்,
பெற்றதும் கற்றதும்
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
போன பதிவில் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..:))
கவிதைக்கு பதில் விளக்கமாவே(?) எழுத முயன்றதுதான் மேலே.:)
வேலை பளு/கணிணி ஊடல் = தாமதத்திற்கான காரணம். நண்பர்கள் மன்னிக்கவும்.:)
//எங்கோ கூட்டத்தினூடே எல்லார் ஸ்பரிசமும் ஒன்றாகவே இருக்கிறது கண்கள் நிறம் பிரிக்கும்வரை.//
நிறம் பிரிப்பது கண்ணா? மனமா?
good One.
//ஸ்பரிசத்தின் மொழி சொல்லும் நேரம் சிறியதாய் இருப்பினும், வார்த்தைகளற்ற உணர்ச்சிகளின் குவியல் உள்ளே உலுக்கிப்போடுகிறது.//
அருமை.. ஷங்கர்.
me the first!!
ஓ.. அது தான் இவ்வளவு நாள் காணுமா அண்ணா..
வார்த்தை விளையாட்டு நன்று :))
என்னப்பா இது,"ஆளாளுக்கு மூட கெளப்புறீங்க"
வைத்தீசுவரன் கோவில்ல சுவடிபடிச்சா மாதிரி எஃபெக்ட். :). கட்டி போட்டு படிக்க வச்சிட்டீங்க. சபாஷ்.
உண்மைய சொல்லுங்க.. நேசமித்திரன் கிட்டே பேசுனீங்களா? :))
அவர் கவிதை மாதிரி நம்ம மண்டைக்கு பாதி தான் புரியுது
உணர்வுகள் மிக அருமையாக வெளிப்பட்டுள்ளது..
அப்ப ரைட்டு
படிச்சவுடனே தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் ஒரு பந்து உருளுதுங்க..:)
நீங்கள் விளக்க முயலும் விதமே கவிதையைத் தான் இருக்கிறது சுவாமி.. ரியல்லி குட்..
:-) புரிஞ்சமாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு!
கவிதையாய் ஒரு உரைநடைப் பதிவு..
உரை நடைபதிவு நல்லா இருக்கு..தொடருங்கள்.
நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்
//உயிரில்லாத துப்பட்டாக்களும் உயிருள்ள என்னை சித்திரவதை செய்திருக்கிறது//
உணர்ச்சியின் உச்சகட்டமாக சில நேரங்களில்
ரொம்ப அழகிய நடையில் எழுதியிருக்கீங்கண்ணா...
/////உயிரில்லாத துப்பட்டாக்களும் உயிருள்ள என்னை சித்திரவதை செய்திருக்கிறது.////
////வேட்கையிலும், வேதனையிலும் தளர்ச்சி மட்டுமே ஏளனம் செய்கிறது இருப்பை./////
........மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நேர்த்தியான பதிவு.
ஸ்பரிசத்தின் ஆழம் சொல்லும் பதிவு...
அருமை....
லேசா புரியுது..
ஸ்பரிஸம்...ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஃபீலிங்...
உங்க மனதின் பிரதிபலிப்பு கவிதையா,அழகா இருக்கு சங்கர்!
ஸ்பரிசம்.....உணர்வுகளின் கோர்வை..
அருமை ஷங்கர்.. நன்றாக இருந்தது..
/ஸ்பரிச சுவர்களின் பூச்சுகள் விரிசல் விட ஆரம்பிக்கிறது. இனி அன்புத்தீண்டல்கள் வேண்டி தவங்கள் தேவைப்படலாம்//
மிக அருமை மற்றும் யதார்த்தம் ஷங்கர்
ஸ்பரிசத்தின் மொழி சொல்லும் நேரம் சிறியதாய் இருப்பினும், வார்த்தைகளற்ற உணர்ச்சிகளின் குவியல் உள்ளே உலுக்கிப்போடுகிறது.
அருமை..
@சங்கர்..
கண்ணு தெரிஞ்சாதான் மனசுக்கு போகும்..:) நன்றி.
@ராஜு..
மிக்க நன்றி ராஜு..:)
@அமைதிச்சாரல்..
மிக்க நன்றிங்க.:)
@திவ்யாஹரி..
ஆமாம்மா.. மிக்க நன்றி.:)
@சைவகொத்துபரோட்டா..
நன்றிங்க..:)
@ஜெரி...
::)) மிக்க நன்றிங்க..:)
@வானம்பாடிகள்..
மிக்க நன்றி சார்..:))
@மோகன் குமார்..
இன்னும் பேசலைங்க..:)
என்னது உங்களுக்கு பாதி புரியுமா..? :) அடுத்தமுறை சந்திக்கும்போது புரிஞ்சிக்கிறேன்..:)) நன்றி.:)
@ப்ரியா..
மிக்க நன்றி சகோதரி..:)
@அண்ணாமலையான்..
அப்ப நன்றி..:))
@வினோத்கவுதம்..
தண்ணி சாப்பிடுறீங்களா?? .. நன்றி..:))
@அன்புடன்-மணிகண்டன்..
தெரிஞ்சேதான் சுவாமின்னு கூப்பிட்டீங்களா?? :)) நன்றி நண்பரே..:)
@சந்தனமுல்லை
அப்ப கவிதையாவே போட்டுடறேன்..:) நன்றிங்க..:))
@மயில்..
நீர்தாம் ஓய் சரியா சொல்லி இருக்கீர்..:)) நன்றி.:)
@நாடோடி..
மிக்க நன்றிங்க..:)
@மதுரை சரவணன்..
மிக்க நன்றிங்க..:)
@பிரியமுடன் வசந்த்.. ..
மிக்க நன்றி வசந்த்...:))
@சித்ரா..
மிக்க நன்றி சகோதரி..:))
@சீமான் கனி..
மிக்க நன்றி கனி..:))
@நசரேயன்..
கவிதை வருதுங்க..:) மிக்க நன்றி..:))
@புலவன் புலிகேசி..
மிக்க நன்றி புலவரே..:))
@கா,நா.சாந்தி லெட்சுமணன்..
மிக்க நன்றி சகோதரி..:)
@கேபிள் சங்கர்..
மிக்க நன்றி தலைவரே..:))
@ நாளைப்போவான்..
மிக்க நன்றி நண்பா..:))
@தேனம்மை..
மிக்க நன்றி சகோதரி..::))
@ரிஷபன்..
மிக்க நன்றி நண்பா..:))
வணக்கம் ஷங்கர் . . உண்மைய சொல்லப் போனா, நானுமே உங்க சைட்ட இப்பத்தான் பாக்குறேன் . .பாலா பதிவுல உங்க பின்னூட்டங்கள பார்த்திருக்கேன் . .நானு ஏன் பார்க்கலைன்னா, எனக்கு நெசம்மாவே தெரியாது. . :-) உங்க பின்னூட்டத்தைப் பார்த்துட்டு உங்க சைட்ட பார்த்தேன் . . பட்டைய கிளப்புறீங்க . . உங்க சைட்ல இருந்து, எனக்கு சில கிரியேடிவ் இன்புட் கிடைச்சது . .:-) நன்றி ஷங்கர்.
நன்று :))
//ஸ்பரிசத்தின் மொழி சொல்லும் நேரம் சிறியதாய் இருப்பினும், வார்த்தைகளற்ற உணர்ச்சிகளின் குவியல் உள்ளே உலுக்கிப்போடுகிறது.//
மிக அருமை..ஷங்கர் வாழ்த்துக்கள்
Post a Comment