இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்..
இத்தோட முடிஞ்சுது...:))
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
"என்னம்மா பண்ணிகிட்டு இருக்க"
"ம்ம் ஒரு யோசனை, என்னோட டீன் ஏஜ் பத்தி"
"ஹைய், சொல்லும்மா, நீ ரொம்ப ஃப்ரெண்ட்லிதான். ஆனா இது நீ சொல்லாதது"
"ம்ஹும் அவ்வ்ளோ சுவாரஸ்யமா அம்மாவோட டீன் ஏஜ் கேக்க.."
"பின்ன நானும் டீன்’ல நீங்க என்னல்லாம் பண்ணினீங்கன்னு சொன்னா ஒரு ஜாலி"
"நீ டீனா? கழுத 19 முடியப்போகுது"
"ஒஹ்ஹ் மா!.. ஸ்டில்ல், நான் டீன். ஸோ ப்ளீஸ்.."
"ஓகே. நானும் சில விஷயங்கள் சொல்லனும்னுதான் நினச்சேன்,"
"ஏம்மா சஸ்பென்ஸா பேசற, யாரையாவது லவ் பண்ணினீங்களா? சொல்லு சொல்லு.."
"ஆமா.. உங்கப்பாவ.."
"ச்ச.. போர்மா நீ.., அப்பாவ லவ் பண்ணாம வேற யாரையாவது லவ் பண்ணினீங்களா? நோ.. லைய், ப்ளீஸ் சொல்லுங்க"
”இல்ல கண்ணு அப்பாவ மட்டும்தான்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அன்னிக்கு நீ எப்போவும் சொல்வியே, இன்னிக்கு கூட கேட்டியே, அந்த பெரிய பூ போட்ட நீல சாரி.. அதைத்தான் நான் முதல் முதலா கட்டிக்கிட்டு உங்கப்பாவ பார்க்க போனேன், அப்போ அவர் இருந்தது தாம்பரம், நான் இருந்தது காளிகாம்பாள் கோவில் கிட்ட, பீச்லேர்ந்து ரயில் பிடிச்சு என்ன என்னமோ கனவுகளோட நான் பார்க்க போய்க்கிட்டிருந்தேன். அன்னிக்கு நல்ல கூட்டம் வேற, எப்படி என் காதல சொல்றதுன்னு எனக்குள்ள ஒரு பெரிய போராட்டம் உள்ளுக்குள்ள நடந்துகிட்டு இருந்தது, சுற்றுப்புறம் மறந்த சூழல், ஏதோ நினைவில் நான் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டேன், ஆனா அந்த கூட்டத்துல சில பேர் என்ன தொட்டு சில்மிஷம் பண்ணி, அருவெறுக்க வெச்சிட்டாங்க.”
"ஓஹ் மை காட், நீங்க என்ன பண்ணினீங்கம்மா"
"என்ன பண்ன முடியும்? ஒண்ணும் பண்ணல, அவங்க என்னோட யோசனையையும், கூட்டத்தையும் பயன்படுத்தி உடளவுலயும் மனசளவுலையும் நோகடிச்சிட்டாங்க. தாம்பரத்துக்கு முன்னாடி அவங்க இறங்கிட்டு, வண்டி தாம்பரம் நின்னதும், நான் மவுனமா ஒரு பென்ச்ல உட்கார்ந்தேன், என்ன என்னமோ யோசனைகள், ஆம்பளைங்க மேல அப்படி ஒரு வெறுப்பு, எல்லாரையும் வெறுத்தேன், இப்பகூட வார்த்தைகள் வரலை, அப்பதான் அப்பா என் கிட்ட வந்தார், ஹலோ சொன்னார், எதாவது சாப்பிடலாமான்னு கேட்டார், அவ்வளவு நேரம் அவரை விரும்பி என்னன்னெமோ யோசிச்ச எல்லாமே அந்த சம்பவத்துல காணாம போய், சாரி எனக்கு காதல் எல்லாம் வேண்டாம், ஆம்பிளைங்க மேல எனக்கு ஒரு நம்பிக்கையுமில்லை, உங்களையும் ஒரு ஓநாயாத்தான் பார்க்கிறேன். மன்னிக்கனும்னு சொல்லி அடுத்த ட்ரெயின்ல பீச்சுக்கு போக உக்காந்துட்டேன்.."
"அப்பா என்ன சொன்னார்? கோவிக்கலையாம்மா உங்கமேல"
"அப்பா என்ன நடந்துதுன்னு கேட்டார் நானும் சொன்னேன், கூடவே என்ன சமாதான படுத்தவேண்டாம் என் அபிப்ராயம் இனி மாறாது ப்ளீஸ் விட்டுட்டு போய்டுங்க அப்ப்டீன்னுட்டேன்.."
"இவ்ளோ லவ்லியா இருக்கற நீங்களா அப்படி சொன்னீங்க? ஐ டோண்ட் பிலீவ் திஸ் மம்.. அப்பா பாவம். "
"ஆமாம்மா அவர் பாவம்தான் இல்லைன்னா...
இல்லைன்னா..?? என்னம்மா சொல்லவற்றீங்க..??
” உன்ன தத்தெடுத்து வளர்க்கும்போது என்ன பார்த்து என்னோட தன்னம்பிக்கை பார்த்து, ஒரு நல்ல நட்பா உன்னை வளர்க்க என்னை அவர் தேடி விஷயம் சொல்ல வந்தது தெரியாம, நான் அவர காயப்படுத்தி இருக்க மாட்டேன்.."
"வாட் தத்தெடுத்தீங்களா?? என்னையா? என்ன சொல்றீங்க??"
"சாரி குட்டி உங்கப்பா உன்னை ஒரு ஆஸ்ரமத்திலேர்ந்து தத்தெடுத்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு யோகி, கல்யாணம், குடும்ப வாழ்க்கை இதெல்லாம் விட மனித அன்புக்காக ஏங்கிய ஒரு ஜீவன். அவரை நான் காயப்படுத்தினது, அவருக்கு கேன்ஸர் வந்து சாகறதுக்கு முதல் நாள் எப்படியோ என்னை வரவெச்சி உன்னை என்கிட்ட தரும்போதுதான் தெரிந்தது.
நான் உன்னை பார்க்கும்போது உனக்கு 3 வயசு,
ஐய்யய்யோ தப்பு பண்ணிட்டேனே, சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஐ லவ் யூ சொல்லிடலாம்னு மறு நாள் அவர பார்க்க போனப்ப சடலமாத்தான் பார்க்க முடிந்தது. "
"ஐ கான்ட் பிலீவ் திஸ், "
"இல்லம்மா இது உன் வயசுக்கு நான் சொல்லனும், அது சட்டமோ, தார்மீகமோ எனக்கு தெரியாது ஆனா எப்படியும் இது உனக்கு தெரிய வேண்டியது, நான் சொல்லிடனும், இல்லைன்னாலும் எப்படியாவது தெரிய வரும் அதுக்கு நானே சொல்லிடலாமில்லையா? இப்ப உங்க காலம் வேற விதமானது. நிச்சயம் நீ என்னை மாதிரி முட்டாளில்லை, பரி பூரண சுதந்திரம் உனக்கு தந்திருக்கேன், குட்டி, இது ஒரு ஸ்டேட்மெண்ட்தான், இத கேட்டுட்டு விட்டுடு நான் உன் அம்மா, அந்த படத்துல இருக்கறது உன் அப்பா, வெரி சிம்பிள், எப்படி உன்கிட்ட சொல்ல ஆரம்பிக்கனும்னு இருந்தேன், ஃபைன் எப்படியோ சொல்லிட்டேன். சொல்லு நீ என் செல்லம்தானே? அம்மா மேல, கோவம் இல்லையே,,ஹேய் போன் அடிக்கிது பார், பேசு அப்பறம் இத பத்தி பேசலாம், ரிலாக்ஸ் டியர்.. நான் காபி போடறேன்..உனக்கும் எனக்கும்..ஓக்கே"
""ஹலோ"
"ஹேய் நாந்தான் என்னாச்சு இன்னிக்கு என் பர்த்டே, எதோ உங்கம்மாவோட லக்கி சாரி கட்டிக்கிட்டு, லவ்யூ சொல்ல வர்ரேன்னு சொன்னியே வெய்ட்டிங் ஸ்வீட்டி,, கம் ஃபாஸ்ட், எல்லாரும் வைய்ட்டிங்.."
"சாரிடா இது ஒத்து வராது, ஜஸ்ட் ஃபெர்கெட் இட்"
"வாட்??"
"யா ஐம் நாட் லவ்விங் எனிஒன்.. எனிமோர்.. பை. "
"யார்மா ??"
"நத்திங் மம்மி.. "
"ஹேய் யாரது.. நத்திங்..? பாய் ஃப்ரெண்ட்டா? அம்மாகிட்ட சொல்ல மாட்டியா?"
"ஆமாம்மா..பாய் ஃப்ரெண்ட்தான் லவ் யூன்னு சொன்னான், இன்னிக்கு சொல்றேன்னேன்,”
"என்னங்க இங்க பாருங்க உங்க பொண்ணு லவ் பண்ணப்போறாளாம்’
’வாட்? லவ்வா/ நம்ம குட்டியா ஈஸ் இட்.."
"ஐய்யோ அப்பா!.., அம்மா... "
"சொல்றேன்னுதான் சொன்னேன். இன்னும் சொல்லல. ஆனா சொல்லப்போவதுமில்லை? "
"வொய்? என்னாச்சி? "
"இல்லப்பா இன்னும் என்னை குழந்தையாவே வெச்சிருக்கீங்க, நீங்க ஃப்ரெண்ட்லிதான், ஆனா வெளி உலகம் வேற, சில விஷயங்கள் சாதாரணமா பலருக்கு தெரியறது. மத்தவங்களுக்கு அப்படி இல்லை, இதோ இந்த புக்ல இருக்கற இந்த கதையும் அப்படித்தான். நான் என்னப்பத்தி புரிஞ்சிக்கணும்னு ஏதோ உள்ள சொல்லுது இத படிச்சதுக்கப்புறம், சாரி இது உங்களுக்கு சாதாரண கதையா இருக்கலாம் எனக்கு அப்படி சொல்ல தெரியல.."
"இன்னும் முழுசா கூட படிக்கலையேடி, முக்கா புத்தகம் படிச்சி அப்படியென்ன வேதம் கிடச்சிது? என்னங்க இவ இப்படி பேசறா?"
"இல்லம்மா நாம் முழுசா படிச்சா அது கதையாகிடும் சில விஷயங்கள் நாமா உணர்ந்துகிடறது நல்லது. நானே உணர்ந்துகொள்கிறேன்."
"சரிம்மா இட்ஸ் யுவர் சாய்ஸ், ஐ அம் ப்ரொவ்ட், ஓகே. அப்பா இருக்கேன். பட் உனக்கு சங்கடம் ஏதும் வந்தா அப்பாவ தயங்காம கூப்பிடு, எதுவா இருந்தாலும் நான் உன் ஃப்ரெண்ட்."
"தாங்ஸ்ப்பா..."
”ஹலோ நான் யாரையாவது லவ் பண்றீங்களான்னு கேட்டேன்.. அதுக்குள்ள என் ஹேண்ட்பேகை துருவியாச்சா??”
உண்மையை சொல்வதா? வண்டு குடையத்தொடங்கி இருந்தது. ரத்தம் வந்து என்னை கண்டு பிடித்த்..
”பல்லவிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? ”
”பல்லவி ம்ஹ்ர்ர்ம்ம் ஓ யா பல்லவி என்ன பிரச்சனை? ஒன்னுமில்லையே? வொய்?”
”சண்முகவடிவேல் தயவு செய்து என்னிடம் எதையும் மறைக்கவேண்டாம். பல்லவியும் நீங்களும் காதலித்தது உண்மைதானே? ”
”ஹேய் என்னதிது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்,, இத்தனைக்கும் எல்லார் முன்னாடியும் சொன்ன விஷயம் அது. யெஸ் நாங்கள் காதலித்தோம். ஸோ வாட்? நீங்க யாரு எஃப்.பி.ஐ? சி.பி.ஐ? இண்டர்போல்..”
ஸ்வா சிரித்தாள் கொஞ்சம் சப்தமாய்
பொதுவாய் இந்த மாதிரி ஹோட்டல்கள் வித்தியாசமானவை நிறைய காசு கொடுத்து சுதந்திரமில்லாத அடிமை இடம், ஒரு ஸ்பூன் எடுப்பதிலிருந்து, நாப்கின் உபயோகிப்பது வரை, பேசும் சப்தங்களின் அளவுகள், உடை நேர்த்தி முதல் எல்லாமே இயல்பான ஒரு சுதந்திரத்தை தடுக்கும். அவள் சிரித்தது நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்தது. நான் சங்கடமாய் உணர்ந்தேன். அவளையே பார்த்தேன்.
”யெஸ் ஸ்வா காதலித்ததும் காதலித்துக்கொண்டிருப்பதும்”
”ஸ்டில் யு லவ் பல்லவி?”
”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும் அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.
அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”
”தெரியல, நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..”
”ஷான்.”.
”இல்லைங்க சண்முகவடிவேல்..” திரும்பவும் சிரித்தாள்...
”வாட் எவர்..”
”இப்ப நான் சொல்றேன் ஐ லவ் யூ”
“வேண்டாம் குத்தி கிழிக்காதீங்க, போதும் நான் பல்லவியையே கல்யாணம் பண்ணிக்கிறேன்”
“பட் ஐ லவ் யூ”மீண்டும் சிரித்தாள் எனக்கு கையில் கிடைப்பதை வைத்து அவளை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடலாம் என்று தோன்றியது.
ஆனால் விதி வலிது, வாய் வேறு விதமாய் சொல்லியது
” நான் உன்னை முதலில் பார்த்தவுடனே மனசுக்குள் சொல்லிட்டேன் ஸ்வா”
ஹும்ம் இப்படித்தான் என் சிக்கல்கள் ஆரம்பித்தன.. என்ன பல்லவியா ??அவளிடமும் இவளை பற்றி சொல்ல வேண்டும்,
அன்று பெசென்ட் நகர் பீச்சில் பல்லவியும் இப்படித்தான் ஆரம்பித்தாள்
”ஷான் நீங்க காயுவ (காயத்ரி) லவ் பண்ணினீங்களா??? ”
”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும் அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.
”அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”
”தெரியல,” நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..
”ஐ லவ் யூ ஷான்..”
நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது.
பின்குறிப்பு: கதை இப்படித்தான் போகும் என்று புரிஞ்சிடிச்சிங்க என்று சொல்பவர்களுக்கு ( நான் உட்பட ) இந்த கதை சமர்ப்பணம்..:)))) கதைக்கு உதவிய திரு.பிரபாகர், திரு.முகிலனுக்கு நன்றி.:)
29 comments:
தமிலிஷ்க்கு மேலயே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்கு கவனிச்சீங்களா??
ஹி ஹி ஒரு தகவல்தான்..:))
//தமிலிஷ்க்கு மேலயே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்கு கவனிச்சீங்களா??
//
அப்பிடியே அதுக்கு ஹெல்ப் பண்ணினவங்களுக்கும் ஒரு நன்றி சொல்லியிருக்கலாமே?? :))
அப்பிடியே அதுக்கு ஹெல்ப் பண்ணினவங்களுக்கும் ஒரு நன்றி சொல்லியிருக்கலாமே?? :))//
முகிலனுக்கு கோடானு கோடி நன்றி..:)))))
இடித்துரைத்தற்கு நன்றி மன்னா..::))
//முகிலனுக்கு கோடானு கோடி நன்றி..:)))))
இடித்துரைத்தற்கு நன்றி மன்னா..::))/// இந்தப் படம் இங்கயும் ஓடுதா.. :))
மேலும் பெண்களை இத்தனை 'லூசா'க நினைக்கும், சித்தரிக்கும் உங்களைப் போன்ற எம்.சி.ம-களுக்கு (male chauvinistic மண்டூகங்கள்) என் பலத்த கண்டனங்கள். மண்டூகங்களை எல்லாம் ஏதோ அவரவர் அதிருஷ்டத்திக்கு ஒரு அழகிய இளவரசி வந்து முத்தமிட்டதால் மனுஷனாக மாறி, இப்படியா ஆட்டம் போடுவீங்க..
திரும்பவும் மண்டூகமாகக் கடவது.
கதை
எழுதியது சுஜாதாவா ... ஷங்கரா... உண்மையை சொல்லுங்கள்
நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது.
.........அப்படியா? சரிங்க.
நான் மன்னன் கிட்டயே இடிச்சிக்கிறேன்:))
முன்பு சொம்பு தூக்கி இப்போ MCM ஷங்கர், நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்.....
// எறும்பு said...
முன்பு சொம்பு தூக்கி இப்போ MCM ஷங்கர், ////
எறும்பு ... ஹிட் அடிச்சு கொன்னுடுவேன்.
அந்த கமெண்ட்டில் விட்டுப் போன ///ஹா ஹா ஹா..:))))))))))))))))))))))))))))))))))))))))))))))) மெய்யாலுமே சிரிப்புதான்..:)) ///////
@விதூஷ்ஜி.. மிக்க நன்றி..:))
@தமிழ் உதயம்.. நான் உங்கள மாதிரி எழுதறேன்னு சொன்னாலே அதிகம். மேல உள்ள த பாருங்க அதுதான் உண்மை.
@சித்ராஜி- சிரிங்க..:)
@வானம்பாடிகள்: (தலை சொறிந்துகொண்டே) சார் சார்..:))
@எறும்பு: ஆமாங்க ஆமாம், (வண்ணம் குறைக்கவேண்டும்:)))
ஷங்கர் நீங்க ஆழ்வார்பேட்டையில் இருக்கீங்களா... அப்புறம் வசூல் ராஜா பாட்டுக்கு நீங்கதான் எக்ஸாம்பிள்
ஷங்கர் எழுத்து ஊற்றுப்போல வருது உங்களுக்கு.வாழ்த்துக்கள்.
//உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது.//
எல்லா நேரத்திலயும் சரிவருமா இது ?
சரி விடுங்க...
இந்த கதையை படமா எடுக்கலாம்,டிஸ்கஸ் பண்ண மதுரைக்கு வர்றீகலாப்பு?
தீராத விளையாட்டு பிள்ளை effect -ஆ அண்ணா.. நல்ல்ல்லா.. இருக்கு
//தமிலிஷ்க்கு மேலயே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்கு கவனிச்சீங்களா??//
கவனிச்சோம் சாமி..
இன்னும் நான் முகிலன்,பிரபா அண்ணன் எழுதிய
பார்ட் படிக்கல....அப்புறம் படிச்சுட்டு சொல்றேன்....
ஒரு வழியா அருமையா முடிச்சிட்டீங்க தல..சூப்பர்
உங்களுக்கு திருமண நாள் வாத்துக்கள்........
அப்புறம்.....【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பதிவு எழுத எதுவுமில்லைன்னா கவிதை எழுதவேண்டியதுதானே? :)
அய்யா.... நானெல்லாம் கவிதைத்தான்னு..... 20 ஆண்டுகளாய்... வாழ்ந்துக்கிட்டிருக்கிறேன்.
//நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது. //
இதுக்கு மேலும் நம்பாம இருப்போமா...நம்பிட்டோம்.... நம்பிட்டோம்.... நம்பிட்டோம்....
ஆஹா நல்ல சிந்தனைதான் வாழ்த்துக்கள் .
{{{{{{தமிலிஷ்க்கு மேலயே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்கு கவனிச்சீங்களா??
ஹி ஹி ஒரு தகவல்தான்..:))
]]]]
தமிழ்மணமத்திலும்
ஓட்டு போட்டாச்சு .
பகிர்வுக்கு நன்றி !
புள்ளையார் புடிக்க கொரங்கா வந்துச்சின்னு கேள்விப்படுக்கேன், டைனேசர் வந்ததா இப்பத்தான் படிச்சிருக்கேன்! இப்படியெல்லாமா முடிப்பீங்க? ஒரு பாகத்த எழுதுன நமக்கே மயக்கம் தெளிய இன்னும் ரொம்ப நேரம் ஆகும் போல இருக்கு.... ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கு பாஸ்....
பிரபாகர்.
Happy weddding day Shangar... ethanavathu..? ...LIVE LONG HAPPILY
அனுபவமா ??? வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஷங்கர்.
நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது//
நம்பிட்டோம்...
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஷங்கர்.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..
கதையின் முடிவும் சூப்பர்.
/நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது//
நிச்சியமாக உண்மைகளைமட்டும் சொன்னதான் பிடிக்கும்..
Post a Comment