பலா பட்டறை: இன்னிக்கு செத்தா...???

இன்னிக்கு செத்தா...???

எச்சரிக்கை :: சாவே வராதவர்கள் இதைப்படிக்கவேண்டாம்..!!20 நாட்களுக்கு முன்பு...

ஹலோ 


சொல்லுங்க பாலா சார்


ஷங்கர் எனக்கு சின்ன ஆக்சிடண்ட்


ஐய்யய்யோ எங்க சார் என்னாச்சு

இங்கதாங்க என் எஸ் கே நகர் ஆர்ச் பக்கத்துல, வலது கை ஃப்ராக்ச்சர், இப்ப ஆஸ்பிட்டல்லதான் அட்மிட் ஆயிருக்கேன். அந்த மெடிக்கல் இன்ஸூரன்ஸ் போட்டேனே அது நாளையோட முடியிது. ரினிவல் பண்ணனும், போக இப்ப ட்ரீட்மெண்ட்டுக்கு க்ளெய்ம் கிடைக்குமா?


கண்டிப்பா சார், கார்ட்ல இருக்குற நம்பர கூப்பிட்டு முதல்ல எந்த ஆஸ்பிடல்னு தகவல் சொல்லிடுங்க, அவங்க சொல்ற நம்பர குறிச்சுக்குங்க, எதுனா ப்ராளம்னா கூப்பிடுங்க, ரினிவல் நான் பார்த்துக்கறேன்.

இரண்டாம் நாள் மெடிக்ளைம் ரினிவல் செய்து அவரை பார்க்கப் போனபோது சிரித்தபடியே, சைட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அதே துடிப்பு.

என்ன பாலா சார் தனியா பிசினெஸ் பண்ண ஆரம்பிசிட்டீங்க, லைஃப் இன்ஸூரன்ஸ் ஓன்னும் பெரிசா சொல்ற மாதிரி இல்ல, ஒரு டெர்ம் பாலிசியாவது போட்டுக்குங்க, அப்படியே சேவிங்ஸும் ஆரம்பிச்சிடுங்க குழந்தைக்கு உதவும்.. ப்ளானிங் முக்கியம் சார். 

ஆமாங்க ஷங்கர், போடனும், கண்டிப்பா...


லேட் பண்ணிடாதீங்க..

:)

அன்றைக்கு அவர் சிரிப்பை பார்த்ததுதான், இதோ இப்பொழுது செல்பேசியில் அழைப்பு வந்தது. வீடு அருகில் ஷேர் ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்தவர் மீது அரசு பேருந்து மோதி அதே இடத்தில் மரணமடைந்திருக்கிறார். 34 வயது, வாழ்வின் கனவுகளுடனிருந்த மனிதர். இண்ட்டீரியர் டெக்கரேட்டர்,  இப்பொழுது..ப்ச்....

அவர் எப்போதோ பெங்களூரில் சிறிய தொகைக்கு எடுத்தவரையில் காப்பீட்டிற்கு க்ளெய்ம் கிடைக்க என்னாலான உதவி செய்வதாய் அவரின் சகோதரரிடம் சொல்லி இருக்கிறேன்.

அன்றே அவரை சற்று அழுத்தப்படுத்தி ஒரு பாலிசியை போடச்சொல்லி இருந்திருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி அவரின் ஐந்து வயது குழந்தையை பார்க்கும்போது எனக்கு எழும். இது வரையில் யாரையும் நான் கட்டாயப்படுத்தியதில்லை. அதன் அத்தியாவசியத்தை சொல்வதோடு சரி. இனி கண்டிப்பாய் (யார்மூலமேனும்) எடுங்கள் என்று கட்டாயப்படுத்த / கண்டிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

பாலிசி - பாகம் 1
    
பாலிசி - பாகம் 2

இது காப்பீடு குறித்து நான் எழுதியது. படிக்காதவர்கள் படித்துப்பார்க்கலாம். அதில் ஒன்னும் பிரமாதமான கருத்துக்கள் இல்லீங்க , உயிரோடு இருப்பின் சம்பாதிக்கிறோம் குடும்பத்தை காப்பாத்தறோம், செத்தா? யார் காப்பாத்துவாங்க?

தறி கெட்டு வேகமாய் வண்டி ஓட்டும் நபர்களை
ங்கோத்தா தெவிடியாப்பையா நீ சாவேண்டா அதுக்கு ஏன் அடுத்தவன சாவடிக்கப்பாக்கறன்னு சண்டையிட்டிருக்கிறேன். கொஞ்சம் நிதானம் வந்தவுடன் மனதில் திட்டி இருக்கிறேன், பிறகு அதுவுமில்லாது வெறித்தபடி ஒதுங்கிப்போயிருக்கிறேன்.  ஆனால் இப்போது வாய் விட்டு திரும்பவும் திட்டலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.  ஏனென்றால் பஸ்ஸின் அடியிலிருந்து நண்பரின் உடலை வெளியே எடுக்க சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றி அக்கரையில்லாது இருக்கும், இதைப்படிக்கும் நண்பர்களே இறப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரும். சில விஷயங்கள் அதை அர்த்தமுள்ளதாக ஆக்குமெனில் அதை செயல்படுத்த தயங்காதீர்கள். இது பற்றி தெரியாதவர்களுக்கும் தயவு செய்து விளக்குங்கள்..

32 comments: