பலா பட்டறை: இன்னிக்கு செத்தா...???

இன்னிக்கு செத்தா...???

எச்சரிக்கை :: சாவே வராதவர்கள் இதைப்படிக்கவேண்டாம்..!!20 நாட்களுக்கு முன்பு...

ஹலோ 


சொல்லுங்க பாலா சார்


ஷங்கர் எனக்கு சின்ன ஆக்சிடண்ட்


ஐய்யய்யோ எங்க சார் என்னாச்சு

இங்கதாங்க என் எஸ் கே நகர் ஆர்ச் பக்கத்துல, வலது கை ஃப்ராக்ச்சர், இப்ப ஆஸ்பிட்டல்லதான் அட்மிட் ஆயிருக்கேன். அந்த மெடிக்கல் இன்ஸூரன்ஸ் போட்டேனே அது நாளையோட முடியிது. ரினிவல் பண்ணனும், போக இப்ப ட்ரீட்மெண்ட்டுக்கு க்ளெய்ம் கிடைக்குமா?


கண்டிப்பா சார், கார்ட்ல இருக்குற நம்பர கூப்பிட்டு முதல்ல எந்த ஆஸ்பிடல்னு தகவல் சொல்லிடுங்க, அவங்க சொல்ற நம்பர குறிச்சுக்குங்க, எதுனா ப்ராளம்னா கூப்பிடுங்க, ரினிவல் நான் பார்த்துக்கறேன்.

இரண்டாம் நாள் மெடிக்ளைம் ரினிவல் செய்து அவரை பார்க்கப் போனபோது சிரித்தபடியே, சைட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அதே துடிப்பு.

என்ன பாலா சார் தனியா பிசினெஸ் பண்ண ஆரம்பிசிட்டீங்க, லைஃப் இன்ஸூரன்ஸ் ஓன்னும் பெரிசா சொல்ற மாதிரி இல்ல, ஒரு டெர்ம் பாலிசியாவது போட்டுக்குங்க, அப்படியே சேவிங்ஸும் ஆரம்பிச்சிடுங்க குழந்தைக்கு உதவும்.. ப்ளானிங் முக்கியம் சார். 

ஆமாங்க ஷங்கர், போடனும், கண்டிப்பா...


லேட் பண்ணிடாதீங்க..

:)

அன்றைக்கு அவர் சிரிப்பை பார்த்ததுதான், இதோ இப்பொழுது செல்பேசியில் அழைப்பு வந்தது. வீடு அருகில் ஷேர் ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்தவர் மீது அரசு பேருந்து மோதி அதே இடத்தில் மரணமடைந்திருக்கிறார். 34 வயது, வாழ்வின் கனவுகளுடனிருந்த மனிதர். இண்ட்டீரியர் டெக்கரேட்டர்,  இப்பொழுது..ப்ச்....

அவர் எப்போதோ பெங்களூரில் சிறிய தொகைக்கு எடுத்தவரையில் காப்பீட்டிற்கு க்ளெய்ம் கிடைக்க என்னாலான உதவி செய்வதாய் அவரின் சகோதரரிடம் சொல்லி இருக்கிறேன்.

அன்றே அவரை சற்று அழுத்தப்படுத்தி ஒரு பாலிசியை போடச்சொல்லி இருந்திருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி அவரின் ஐந்து வயது குழந்தையை பார்க்கும்போது எனக்கு எழும். இது வரையில் யாரையும் நான் கட்டாயப்படுத்தியதில்லை. அதன் அத்தியாவசியத்தை சொல்வதோடு சரி. இனி கண்டிப்பாய் (யார்மூலமேனும்) எடுங்கள் என்று கட்டாயப்படுத்த / கண்டிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

பாலிசி - பாகம் 1
    
பாலிசி - பாகம் 2

இது காப்பீடு குறித்து நான் எழுதியது. படிக்காதவர்கள் படித்துப்பார்க்கலாம். அதில் ஒன்னும் பிரமாதமான கருத்துக்கள் இல்லீங்க , உயிரோடு இருப்பின் சம்பாதிக்கிறோம் குடும்பத்தை காப்பாத்தறோம், செத்தா? யார் காப்பாத்துவாங்க?

தறி கெட்டு வேகமாய் வண்டி ஓட்டும் நபர்களை
ங்கோத்தா தெவிடியாப்பையா நீ சாவேண்டா அதுக்கு ஏன் அடுத்தவன சாவடிக்கப்பாக்கறன்னு சண்டையிட்டிருக்கிறேன். கொஞ்சம் நிதானம் வந்தவுடன் மனதில் திட்டி இருக்கிறேன், பிறகு அதுவுமில்லாது வெறித்தபடி ஒதுங்கிப்போயிருக்கிறேன்.  ஆனால் இப்போது வாய் விட்டு திரும்பவும் திட்டலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.  ஏனென்றால் பஸ்ஸின் அடியிலிருந்து நண்பரின் உடலை வெளியே எடுக்க சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றி அக்கரையில்லாது இருக்கும், இதைப்படிக்கும் நண்பர்களே இறப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரும். சில விஷயங்கள் அதை அர்த்தமுள்ளதாக ஆக்குமெனில் அதை செயல்படுத்த தயங்காதீர்கள். இது பற்றி தெரியாதவர்களுக்கும் தயவு செய்து விளக்குங்கள்..

32 comments:

Vidhoosh(விதூஷ்) said...

:'(

நாடோடி said...

//சில விஷயங்கள் அதை அர்த்தமுள்ளதாக ஆக்குமெனில் அதை செயல்படுத்த தயங்காதீர்கள்.//
சிந்திக்க‌ வேண்டிய‌ வ‌ரிக‌ள் ச‌ங்க‌ர்ஜி..

வரதராஜலு .பூ said...

//ஏனென்றால் பஸ்ஸின் அடியிலிருந்து நண்பரின் உடலை வெளியே எடுக்க சிரமப்பட்டிருக்கிறார்கள்.//

கொடுமைங்க. :(

சைவகொத்துப்பரோட்டா said...

பரிதாபம் :(

ருத்ர வீணை® said...

"இன்றைக்காக வாழ்".. இதாங்க நம்ப பாலிசி.
ஆனா இந்த பாலிசி பத்தி கூட கொஞ்சம் யோசிக்கணும் போல.. நல்ல அறிவுரை..

தமிழ் உதயம் said...

இனி கண்டிப்பாய் (யார்மூலமேனும்) எடுங்கள் என்று கட்டாயப்படுத்த / கண்டிக்க முடிவெடுத்திருக்கிறேன்.பிறர் நன்மையடைய கூடிய, நம்மால் முடிகிறவற்றை நாம் அவசியம் செய்யவே வேண்டும்.

Chitra said...

து பற்றி அக்கரையில்லாது இருக்கும், இதைப்படிக்கும் நண்பர்களே இறப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரும். சில விஷயங்கள் அதை அர்த்தமுள்ளதாக ஆக்குமெனில் அதை செயல்படுத்த தயங்காதீர்கள். இது பற்றி தெரியாதவர்களுக்கும் தயவு செய்து விளக்குங்கள்.

...... Rightly said!

VISA said...

ஓட்டு போட்டுட்டேன்

D.R.Ashok said...

அப்ப நான் படிக்கல ;)

கபீஷ் said...

:-(:-(

அமைதிச்சாரல் said...

அர்த்தமுள்ள பதிவு. நண்பரின் மரணம், கொடுமைங்க.

ஜெரி ஈசானந்தன். said...

சிந்தனையுள்ள பதிவு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எனக்கு ரொம்பப் பிடிச்சமான தலைப்பு..!

நாஞ்சில் பிரதாப் said...

கொடுமை சார்... சிந்திக்கவேண்டிய விசயம்...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

முதலில் உங்கள் நண்பரின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்,,,

அர்த்தமுள்ள பதிவு ,,பதிவுக்கு நன்றி!!!!

என் நடை பாதையில்(ராம்) said...

இது போன்ற எந்த ஒரு விஷயத்தையும் தவறாமல் எழுதுங்கள் ஷங்கர்....

இரசிகை said...

vali......:(

seemangani said...

//இனி கண்டிப்பாய் (யார்மூலமேனும்) எடுங்கள் என்று கட்டாயப்படுத்த / கண்டிக்க முடிவெடுத்திருக்கிறேன்.//

நல்லது ஷங்கர் ஜி...கட்டாயம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்...உபயோகமான பகிர்வு...

பழமைபேசி said...

நன்றி!

வானம்பாடிகள் said...

ம்ம். தினம் ஏதோ ஒரு விதத்துல பார்த்துகிட்டு எனக்கு வராதுன்னு போற விஷயம்தான். சொன்ன விதம் உறைக்குது.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

சவுக்கடி.... என் மேல் பட்டதை உணர்கிறேன்..

கண்டிப்பாக பாலிசி எடுத்துக் கொள்கிறேன்..

நெத்தியடி வரிகள்..

சங்கருக்கே உரித்தானவை..

நன்றி..

முகிலன் said...

இந்தியாவில் இன்னும் இன்ஸூரன்ஸை ரிஸ்க் மேனேஜெமெண்ட்டாகப் பார்க்கும் நிலை வரவில்லை. அதை ஒரு இன்வெஸ்ட்மெண்ட்/டேக்ஸ் சேவிங்க்காகப் பார்ப்பவர்கள்தான் அதிகம்.

அமெரிக்காவில் குறைந்த ப்ரீமியத்தில் இன்சூரன்ஸ் கவரேஜ் உள்ளது. மாதம் $10 ப்ரீமியம் கட்டினால் $150,000 கவரேஜ். ஆனால் மெச்சுரிடி ரிட்டர்ன்ஸ் என்று எதுவும் வராது. ஜஸ்ட் உயிர் போனால் கவரேஜ் அமௌண்ட் வரும். இது போல குறைந்த பிரிமிய ஆயுள் காப்பீடு இந்தியாவிலும் இருக்கிறதா? இருந்தால் அதைப் பற்றியும் எழுதுங்கள்.

தீபிகா சரவணன் said...

தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.

மயில்ராவணன் said...

கண்டிப்பாய் யோசிக்க வைக்கும் விசயம்.

~~Romeo~~ said...

3 பாலிசி எடுத்து இருக்கேன் ..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

உங்க கோபம் ரொம்ப நியாயமானத் சங்கர் ஜி! முந்தா
நாள் கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் காம்பஸ் இண்டெர்வ்யூவில் தேர்வான இரு மாணவர்கள் விபத்தில் மாட்டி ஒருவன் ஸ்தலத்திலேயே இறந்து விட இன்னொருவனுக்கு ரூ.2,50,000 செலவில் மருத்துவம் நடக்கிறது.மருத்துவத்திற்கு வழியின்றி நண்பர்கள் கல்லூரியில் வசூல் செய்து உதவிஉள்ளனர்.பிழைப்பதற்கு வாய்ப்பு மிகக்குறைவு. பிழைத்தாலும் அங்க ஹீனம் தவிர்க்க முடியாது.இன்னும் இரண்டு மாதத்தில் ரூ.50000/ சம்பளம் பெறுவான் என்ற பெற்றோரின் கனவு சிதைந்தது மட்டுமல்ல. அவர்களே சிதைந்து போன கொடுமை நினைத்து உணவு இறங்க மறுக்கிறது நமக்கு. பெற்றோரின் நிலை கொடுமையிலும் கொடுமை.குடித்து விட்டும்,பொறுப்பின்றியும் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம். நீங்கள் திட்டும் வார்த்தைகள் போதாது சங்கர் ஜீ!

செந்தழல் ரவி said...

என்னோட உறவினர் கூட, பாலிசி போட அழைத்த ஏஜெண்ட்டிடம் , என்ன என்னை சாவச்சொல்றியா என்பார்.

40 வயதில் பர்வீன் ட்ராவல்ஸ் மோதி இறந்தார்.மூன்று பெண் பிள்ளைகள். !!!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//சில விஷயங்கள் அதை அர்த்தமுள்ளதாக ஆக்குமெனில் அதை செயல்படுத்த தயங்காதீர்கள்.//


உண்மைதான் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் ...........

கும்மாச்சி said...

யோசிக்க வைத்த விஷயம்.

சே.குமார் said...

சிந்திக்க‌ வேண்டிய‌ பதிவு.

மின்னல் said...

//உயிரோடு இருப்பின் சம்பாதிக்கிறோம் குடும்பத்தை காப்பாத்தறோம், செத்தா? யார் காப்பாத்துவாங்க?//
ரொம்ப யோசிக்க வைக்கிறிங்க நண்பரே..அவசியமான பதிவு தான்.நன்றி.

Cable Sankar said...

மிகவும் தேவையான பதிவு.