பலா பட்டறை: நான் மகானல்ல..

நான் மகானல்ல..
வணக்கம் நண்பர்களே..:) திடீரென இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஒரு பசுமை பயணம் செய்ய நேரிட்டதால் பட்டறை விடுமுறை. எல்லாருடைய பதிவுகளும் பார்த்து விட்டு..

புகை படங்களுடன் நாளை ஒரு பதிவு வரும்..:))

கீழிருப்பவை சும்மா டச் விடாமலிருக்க..


பயம்.. 

விஷமில்லாத பாம்புகளும்
பயங்களை தருகிறது
விஷமில்லாத மனிதர்களை
போலவே..
நான் மகானல்ல..

நீ வலதுகை பழக்கமுள்ளவள்தானே?
ஆனால் ஒவ்வொருமுறை
முந்தானையை சரி செய்யும்போதும்
எனது சத்திய சோதனைகளின்
பக்கங்களை உன் இடது கை விரல்களால்
ஏன் எழுதுகிறாய்... ?
.

31 comments: