பலா பட்டறை: வட்டம்..

வட்டம்..காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை
நொடிகளின் இடைவெளி சிறிதாய் இருந்தாலும்
யுகங்கள் கடந்து நடந்து கொண்டே இருக்கிறது

மேலும் கீழுமாய் ஒரே இடத்தில்
சுற்றிக்கொண்டே
வட்ட கடிகாரத்தில் வாழ்க்கை தத்துவம்

எனக்கு முன்னாலும் சந்ததிகள் இருந்தது
எனக்குப் பிறகும் இருக்கலாம்
சின்ன சின்ன அடியெடுத்து
யுகங்களின் பயணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்
உலகம் புரிய விழையும் என் மகனும்
அவனுக்கான படமெடுக்க ஆயத்தமாய்...

நொடி முள் நிற்கவே இல்லை...

38 comments: