சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு கல்லிடைகுறிச்சி என் தந்தையுடன் போனது அதன் பின் வேலை நிமித்தம் திருநெல்வேலி வரை போய் வந்தாலும் கல்லிடை, பாபநாசம், அம்பை போன்ற இடங்களுக்கு செல்ல முடிந்ததில்லை. ஒரு திடீர் பயணமாக செல்லப் பிரியப்பட்டேன், சென்றேன், நிறைவான ஒரு இரண்டு நாளாக அமைந்ததில் மகிழ்ச்சி.
முதலில் சென்னையிலிருந்து திருநெல்வேலி கையிலிருந்த 'திரு.பாஸ்கர் சக்தியின் - கனகதுர்கா' வழக்கமாய் ரயில் பயணங்களில் ஜன்னலின் வழியே நான் பார்க்கும் வெறித்த பார்வைகளையும், அருகில் அமர்ந்திருக்கும் சக பயணிகளின் பாவனைகளையும் விழுங்கிக்கொண்டிருந்தது. புத்தகம் முழுவதும் படிக்க முடியவில்லை என்றாலும் படித்தவரையிலான சிறுகதைகள் மனதில் ஒட்டிக்கொண்டது. சலிப்பே தரவில்லை. விரைவில் முழுதும் படித்து உங்களுடன் பகிர விருப்பம் (விமர்சனமாயில்லை!).
திருநெல்வேலி இறங்கி முதலில் சென்றது கல்லிடை. அங்கே இருக்கும் எங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு சென்று சுமார் இருபது வருடங்கள் ஆகிவிட்டது, என் தந்தையின் தொடர் வற்புறுத்தலும், தனியான சிறிய பிரயாணத்திற்கான ஏக்கமும் ஒன்றுகூடிய ஒரு நிகழ்வாய் இது அமைந்துவிட்டது. கல்லிடையில் போய் இறங்கிய உடனே ஒரு சிற்றோடையில் ஆனந்த குளியல், குல தெய்வ கோவிலுக்கு போய்விட்டு அங்கிருந்து மதியம் சென்றது அம்பா சமுத்திரம் அருகிலுள்ள 'பிரம்மதேசம்' அம்பாசமுத்திரத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு வழி எங்கும் பச்சை வயல், வாழை தோப்பு, சிற்றோடை, இதமான குளிர்ச்சி.
பிரம்மதேசத்தில் பெரிய ராஜ கோபுரம், தெப்பக்குளத்துடன், ஊரின் மையத்திலிருந்த பழைய காலத்து சிவன் கோவிலில் 'மோகினியும் நானும்' என்ற மலையாளப்படம் புது முகங்கள் நடிக்க ஷூ, செருப்பு சகிதம், கோவிலில் எல்லா இடங்களிலும் (கோபுரம் உட்பட ) சர்வ சாதாரணமாய் ஏறி பாடல் காட்சிகள் படமெடுத்துக்கொண்டிருந்தார்கள், சிறந்த கற்சிற்பங்கள், பான்பராக் எச்சிலுடனும், கறித்துண்டுகளுடனும் சாப்பிட்டுப்போட்ட எச்சில் பேப்பர் தட்டுகளுடனும் கோவில் பரம பவித்திரமாய் இருந்தது.
பல படங்கள் இங்கு படமாக்கப்பட்டிருக்கிறது. வெறும் ஐயாயிரம் ருபாய் கொடுத்து யார் வேண்டுமானாலும் மேலே சொன்ன கலை சேவை செய்யலாம். ஆனால் ரெட் ஒன் கேமேராவும், இன்ன பிற படபிடிப்பு சாதனங்களும் பத்திரமாய் துணி போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்திலேயே உட்கார்ந்து நல்லபடியாய் பாதுகாத்துகொண்டிருந்தார்கள். பளபளா ஷூ வோடு, HDTV மானிட்டரில் காமெரா விழுங்குவதை (என்ன ஒரு க்ளாரிட்டி!) பார்த்துகொண்டிருந்தவர்களில் திரு.வினயன் அவர்களும் ஒருவர்.
வேடிக்கை பார்த்த மக்களிடையே ஒரு சிறிய பாலிடிக்ஸ் செய்ய வேண்டி ஒரு கேள்வி கேட்டேன் கேரளாவில் இது போன்ற ஒரு சிறிய கிராமமாக இருந்தாலும், இதை விட சிறிய கோவிலாக இருந்தாலும் செருப்பை விடுங்கள், அட்லீஸ்ட் மேல் சட்டை போட்டு இது போன்ற ஒரு ஷூட்டிங் எடுக்க முடியுமா? புகைய ஆரம்பித்தது. கூடி இருந்த மக்களின் சலசலப்பு காதில் விழுந்ததோ என்னவோ பிறகு பாதி பேர் கழட்டி காரிலேயே வைத்து விட்டார்கள். அவர்களை சொல்லி தப்பில்லை.
வயலும், பசுமையும், ஊரின் அமைதியும் மனதை குளிர செய்தது. இதுதான் மிச்சமா? இல்லை இன்னும் எவ்வளவு நாள் இந்த பசுமை நிலைக்கும் என்ற உணர்வு மனதில் வந்தது. இதுதான் மூலம் என்றதை தாண்டி மாசு பட்ட சூழ்நிலையில், வேர்களை விட்டு விழுதாய் கிடக்கிறோமே என்ற ஆற்றாமை மனதை சுட்டது. பணம் என்ற மையிட்ட மந்திர காகிதம் நம்மைத்தான் எவ்வளவுதூரம் துரத்தி அடித்திருக்கிறது? தேக்கு மரத்தில் உத்திரங்களும், ஊஞ்சல்களும், கதவுகளும், திண்ணைகளும், வைத்த பழைய வீடுகள் தரும் ஒரு அழகு சூழலை, கோடி ரூபாய்க்கு விற்கும் எந்த அடுக்ககங்களும் தந்துவிட முடியாது.
அந்த ஆற்று நீரின் சுவை அடேங்கப்பா எத்துனை வருடங்களாயிற்று அப்படியே கைகளில் ஏந்தி தண்ணீர் குடித்து. இப்போதெல்லாம் எங்கே போனாலும் "ஏங்க இது குடிக்கிற தண்ணிதானே?" என்ற தண்ணீர் குடிக்கும் முன்பு மறக்காமல் கேட்கும் கேள்வி ஏனோ நினைவில் வரவில்லை. ஒரு குழந்தையை வெளியில் கூட்டிச்சென்றால் கூட கையில் வடிகட்டி சுடவைத்து ஆறவைத்த, குடி நீர் குடுவையோடு அலைவது வெருப்பைத்தருகிறது. என்னதான் பளபளக்கும் மினரல் தண்ணீர் என்றாலும் அப்படியே எடுத்து குடிக்க மனம் வரவில்லை.
வாகனங்களின் இரைச்சல் சப்தங்களின்றி வயல் வெளிகளூடே பச்சைய மணம் நுகர்ந்து கொண்டே வெறும் காலில் நடந்த சுகம் இன்னும் பல நாட்களுக்கு என் நினைவில் இருக்கும். இதை படிக்கும் உங்களில் பலபேருக்கும் வம்சத்தின் ஆணிவேர் நிச்சயமாய் இது போன்ற ஒரு பச்சை வயல் சூழ்ந்த வாகன வசதிகளில்லாத ஒரு கிராமத்த்தில் இருக்கக்கூடும், வருடத்திற்கு ஒரு முறையேனும் சென்று வந்தால் நம்முடைய மனதும் நமது இருப்பிடத்தில் ஒரே ஒரு செடிவைக்க ஆசைப்படும்.
கல்லால் செய்யப்பட்ட மணி - நாக்குடன்
நுழை வாயில் கூரை முழுவதும் கல்லால், பார்ப்பதற்கு மரத்தால் செய்தது போலவே
இந்த மண்டபத்தில் தான் மோகினி லவ்விக்கொண்டிருந்தது
பாபநாசம் சிவன் கோவில்
இந்த மண்டபத்தில் தான் மோகினி லவ்விக்கொண்டிருந்தது
அடுத்ததாய் நான் சென்றது பாபநாசம் அருவி, அது மற்றுமொரு பேரானந்தம். நான் பிரபல பதிவர் என்று (!:) ??) தெரிந்து விட்டதாலோ என்னமோ நான் போனபோது வெறும் இரண்டு நபர்கள் மட்டும் அருவியில் குளித்து கொண்டிருந்தார்கள். அவ்வளவு பெரிய இயற்கை ஷவரில் தனியே குளித்தது மறக்க முடியாத மற்றொரு நிகழ்வு. நல்லதொரு வாசம் நீரில் கலந்திருந்தது. தட தட என்று உடம்பிலிருந்த F5 கீகளில் விழுந்த நீரில் உடலிலிருந்த நிறைய கலோரிகள் நாசமாய் போகின. பரதேசியாய் கானகத்தின் உள்ளே போய் கிடைத்ததை தின்று வாழ்ந்துவிடும் மன நிலை மெல்ல வரும் நேரத்தில், குடும்பத்துடன் வந்த மந்தி கூட்டம் காமேராவையும், பர்சையும், குடும்பத்தையும் நினைவு படுத்தியது (கூடவே எங்க ஏரியா உள்ள வராதே)..
உங்களின் மனசு கடவுள் மறுப்பு, தியானம், சாமியார்கள், அண்டம், பிண்டம், பழுத்த பழம், யூத்து, இலக்கியவாதி, முன் நவீனம், பின் நவீனம், நடு நவீனம். பலான பார்ட்டி, பல் செட் பார்ட்டி, பகுத்தறிவு பார்ட்டி இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சரக்கு, தம், பாக்கு, கேலி பேசும்/கூச்சலிடும் நட்புகள் இன்றி, தனியாகவோ, ஒரிருவருடனோ ஒரு முறை வெறுமனே இயற்கையும், அதன் அமைதியையும் ரசிக்க (மட்டும்) வருடத்திற்கு ஒரு முறையேனும் இது போன்ற இடங்களுக்கு சென்று வாருங்கள்.
பின் குறிப்பு:-
- சில வருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. செல் பேசியும், டிஷ்
ஆன்டேனாவும் ரீச் ஆன அளவுக்கு இன்னும் பேரூந்து /மருத்துவ/பள்ளி
வசதிகள் இல்லை. அக்மார்க் 'பட்டையின்' மணம் நிறைய விவசாயிகளின்
வாயில் வீசிக்கொண்டிருந்தது.
- முப்பத்தி சொச்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பதிநான்கு ரூபாய்
வாங்கிக்கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பஸ்
ஓட்டுகிறார்கள்.
- ஒரு தார் சாலை எப்படி போடக்கூடாது என்பதை பாபநாசத்திலிருந்து, அம்பை
வரும் வழியில் அருமையாய் செயல் படுத்திக்கொண்டிருந்தார்கள்.
விட்டுவிட்டு ஈகலப்பையில் பொட்டி தட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு அசரீரி
அருவியில் குளிக்கும்போது அவரிடம் சொல்ல சொன்னது " போய்யா எறும்பு
போய் விவசாயத்த பாருமைய்யா, புள்ள குட்டிக்கு நல்ல காத்தும்,
தண்ணியும் குடுமைய்யா..:)) (சித்தர் வாக்கு சொல்லியாச்சு - சாமிகுத்தம்
ஆகிடுமில்ல, இனி அவர் பாடு :)) .
- இயற்கையை 'வாங்க' முடியாததால் இருட்டு கடையில் (ஒரிஜினல்) அல்வா
வாங்கிக்கொண்டு திருநெல்வேலியில் ரயில் ஏறினேன்.
- ஒரு பரதேசியின் பயணத்தில் வெறும் துண்டுடன் அருவியில் குளிப்பதை
(அப்பாடா! தலைப்புக்கு வந்துட்டேன்) நீங்கள் காணவேண்டுமென்றால், மின்
(அப்பாடா! தலைப்புக்கு வந்துட்டேன்) நீங்கள் காணவேண்டுமென்றால், மின்
அஞ்சல் செய்யவும்:-).(கட்டணம் தனி:-)
42 comments:
பயண அனுபவங்களும் படங்களுமாக பகிர்வு நன்று.
நல்லா இருக்கு ஷங்கர், இலவசமா அம்பை போய் வந்தாச்சு, உங்க எழுத்து நடை அப்படி இருக்கு.
சூப்பர் ட்ரிப்... அருமையா படங்கள்...
இந்த மாதிரி கிராமத்தில் ( அல்லது இதைவிட சிறிய அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்தில் ) இரண்டு நாட்கள் தங்கி விவசாய சேவை புரிய வேண்டும் என்பது எனது ஆசைகளுள் ஒன்று
கல்லிடை வயல், ஓடைச்சிற்பம் , வயல்கள் சூழ குலதெய்வம் கோவில்,கல் கூரை,கல்மணி,
அனைத்தும் மனத்திற்கு குளிர்ச்சியைத் தந்தன.
நல்ல நடையில் எங்க எல்லோரையும் அப்பிடியே அழைத்து சென்று வந்து விட்டீர்கள். ஒருக்கா காசியும் போயிட்டு வந்து எழுதினீங்கன்னா புண்னியமாப் போவும் சாமி. பயணங்கள் எல்லாமே அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்.
நல்லா என்ஜாய் பண்ணி இருக்கீங்க....
//வெறும் துண்டுடன் அருவியில் குளிப்பதை
(அப்பாடா! தலைப்புக்கு வந்துட்டேன்) நீங்கள் காணவேண்டுமென்றால், மின்
அஞ்சல் செய்யவும்:-).(கட்டணம் தனி:-) //
அவரா நீங்க....
ஷங்கர், என்ன ஒரு அருமையான ஒரு நடை.. வழுக்கிக்கொண்டு போகிறது. வினயன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயம் நிச்சயம் கேட்கப்பட வேண்டியதுதான். நம்ம ஆளுங்களுக்கு எப்பவுமே மத்தவன் சொன்னாத்தான் புரியும்.
நல்ல பயண அனுபவம்..அழகான விவரிப்பு
நல்ல பகிர்வு.. நல்ல பயணக்கட்டுரை. உங்களுடன் கல்லிடைக்கும் பாபநாசத்திற்கும் வந்த மாதிரி இருந்தது..
அழகான பயணம் உங்களுடன்:)
படங்களும் கட்டுரையும் அருமை. குளிக்கும் காட்சி பார்த்தேன்
பின்னணியில் காட்சிகள் தெளிவு...
"ஒரு பரதேசியின் பயணத்தில் வெறும் துண்டுடன் அருவியில் குளிப்பதை
(அப்பாடா! தலைப்புக்கு வந்துட்டேன்) நீங்கள் காணவேண்டுமென்றால், மின்
அஞ்சல் செய்யவும்:-).(கட்டணம் தனி:-)"
பயந்துகிட்டா மந்திரிக்க கூடவே விபூதியும் அனுப்புவீங்களா
புகைப்படங்களோடு அருமையான பகிர்வு ஷங்கர். அந்த இடங்களையெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என ஆவல் எழுகிறது.
அருமை!
அருமை! இப்படிப்பதிவுகள் எனக்குப்பிடித்தம்.புகைப்படம் கரகாட்டக்காரன் படத்த ஸ்டில்,ஸ்டில்லா பாத்தமாதிரி சூப்பர்!அப்புறம் சகோதரரே! கிராமத்தவிட்டுப்போகாம இருந்தா பூவாவுக்கு என்ன பண்றது.சம்பாத்தியம் + இப்புடி அடிக்கடி ஊருக்குப்போய் நம்மளபுதுப் பிச்சுக்கிறது,அது தானே வாழ்க்கை.
அருமையான எழுத்துநடையில் நல்லதொரு பயண அனுபவம் ஷங்கர். படங்களும் அருமை.
ஜிலீர் அனுபவம் ஷங்கர்!
புகைப் படங்கள் மிக அருமை.
மிக அழகான பயணக்கட்டுரை
இயற்கை இயற்கைதான்
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
நிஜமாவே ரொம்பவும் ரசிச்சு படிச்சேன்.. கூடவே போன பிரமை.. பிரமாதம் போங்க..
பயண அனுபவமும் நல்லாயிருக்கு...
படங்கள் அனைத்தும் இயற்கை எழில் கொஞ்சுகிறது...
படங்களுடன் விளக்கங்கள் அருமையாக உள்ளது...
படங்கள் பார்த்து மெய் ச்லிர்த்துப் போனேன்....
அண்ணே... எம்புட்டு செலவானாலும் சரி..!! என் பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும்... உங்களை துண்டோடு பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அமவுண்டை சொல்லுங்க. நான் மெய்ல் பண்ணுறேன்!!!
துண்டு இல்லாம.. எதுனா இருக்கா...? ஹாலிவுட்டுக்கு ஹீரோவா நடிக்க.. அப்படியெல்லாம் கூட போட்டோ அனுப்பனும். எதுக்கும் அதையும் ரெடியா வச்சிருங்க! :)
--
பாலிடிஸ்க்ஸை எங்க போனாலும் விடுறதில்லை போல இருக்கு?! :)
ஓசியில இருக்கிற இந்த பயண கட்டுரையும் புகை படங்களுமே அருமை. அதே எங்களுக்கு போதுங்க.
கோவில் அழகில், நெல்லை அழகும் பெருமையும் சேர்ந்து இருக்கு.
போட்டோஸ் அழகா இருக்கு ......
யப்பா.. சூப்பர் எழுத்து நடை. F5 கீ, கோவில் ஷூட்டிங் .. கலக்கறீங்க ஷங்கர். புன்னகைத்துக் கொண்டே படிச்சு முடிச்சேன். அருமை.
அருமை ஷங்கர். புகைப்ப்டங்கள் அழகு. ஆறேழு வருடம் முன் அம்பை நண்பனின் திருமணத்திற்காக அம்பை போயிட்டு வந்தேன். அடுத்த முறை போகும் போது சொல்லுங்க. இன்னொரு டிரிப் அடிக்கலாம்.
மைத்ரி பற்றிய பதிவின் லிங்க் அளித்தமைக்கு நன்றிகள் பல.
//தேக்கு மரத்தில் உத்திரங்களும், ஊஞ்சல்களும், கதவுகளும், திண்ணைகளும், வைத்த பழைய வீடுகள் தரும் ஒரு அழகு சூழலை, கோடி ரூபாய்க்கு விற்கும் எந்த அடுக்ககங்களும் தந்துவிட முடியாது.//
அக்மார்க் உண்மை.
படங்களும் பகிர்வும் அழகு
படித்தேன்... இரசித்தேன்... பயணித்தேன்...
புகைப்படங்களும் அருமை...
ippo present mattum sollikiren... appalikaa vanthu karuthu solren..
:)
புகைப்படங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக பிரமதேசம் கோவில். என்னுடைய பாட்டியின் ஊர் அது. சில படங்கள் நானும் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் அது இந்த அளவுக்கு வொர்த் இல்ல. அம்பை அருகே பார்க்க வேண்டிய வேறு சில கோவில்களும் உள்ளன.
////போய்யா எறும்புபோய் விவசாயத்த பாருமைய்யா, புள்ள குட்டிக்கு நல்ல காத்தும்,
தண்ணியும் குடுமைய்யா///
நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்த மாதிரி, வயல்கள் அழிந்து காண்க்ரீட் காடாகி வருகிறது அம்பை.கவலை அளிக்க கூடிய விசயம்தான்.ஊர் கொஞ்சம் அழகாய் இருப்பதால் இந்த ஷூட்டிங் தொல்லை வேறு.
அடுத்த முறை இன்னும் ரெண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை எடுங்கள்.. ஜூன் ஜூலை சீசன் அருமை ஆக இருக்கும்.. போகலாம்.
நீங்கள் எங்கள் ஊர் வாய்காலில் குளிப்பதை பார்த்தேன். வருடம் பூராக சேர்த்து வைத்த அழுக்கை எங்கள் ஊரில் சென்று விட்டதற்கு எங்கள் ஊர் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மிக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
:))
அசத்திட்டீங்க ஷங்கர் ..
திருநெல்வேலிய பாக்கும் போது எவ்வளவு ஆனந்தமா இருக்கு .. ( நம்மூர்ல சும்மாவா ..)
படங்கல் அருமை .
அருமையான அரிய பதிவு பலா
இனி வருடம் ஒரு முறை குலதெய்வக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்
என் அம்மா எனக்குச் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்
//என்ன ஒரு அருமையான ஒரு நடை//
இப்படி சொல்லி சொல்லியே ஒரு பதிவரை ஏத்திவிட்டுடுவீங்களே...
அடுத்த கடற்கரை சத்சங்கத்திற்கு பிரபல பதிவர் ஆயிட்டா வருவாரா? :)
அட உங்களுக்கு பூர்வீகம் நம்ம ஊரு பக்கமா...
படங்களும், பகிர்வும் அருமை.
//பணம் என்ற மையிட்ட மந்திர காகிதம் நம்மைத்தான் எவ்வளவுதூரம் துரத்தி அடித்திருக்கிறது?//
உண்மையான உண்மை. :((
படங்களும், பகிர்வும் அருமை ஷங்கர்... !! லாஸ்ட்ல என்ன லொள்ளு... =))
பயண கட்டுரை அருமை தலைவரே . அதே மாதிரி அந்த பாலிடிக்ஸ் நல்லதுதான். அவனுங்க ஊருக்கு போன மட்டும் அதை செய்யாத இதை செய்யாதன்னு பெருசா பேசுவாங்க, நாமளும் அவனுகளுக்கு ரீபீட் குடுத்தாதான் அடங்குவாங்க.
பலா படங்கள் எல்லாம் அருமை .. வருடத்திற்கு ஒரு முறை நல்ல யோசனை ..
final touch அருமை ..
சூப்பர் ட்ரிப்தான்....ஆனந்த குளியலோடு!
& Beautiful photos!!!
கல்லூரி காலங்களில் சுற்றிய இடங்களை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி
Post a Comment