காதலுக்கானதாய்
ரோஜா இருப்பதில்
வியப்பில்லை
சரி என்றால் பூ உனக்கு
வேண்டாம் என்றால் முள் எனக்கு ..
-------
வரம் கிடைக்குமா?
என்று தெரியாமல்
பகுத்தறிவே
தடுமாறும்.
இல்லாத கடவுளுக்கும், காதலுக்கும்
பூ கொண்டு போவதை..
--------
ஏனோ காதல் தின
சிகப்பு இருதய
பலூன்களும்,
ரோஜாக்களும் தன்
வடிவத்தை இழந்து விடுகின்றன
மற்ற தினங்களைப் போலவே!
இலவு காத்த கிளிக்கதை
இன்னும் முடியவில்லை...
Happy Valentines Day ..::))




39 comments:
Post a Comment