பலா பட்டறை: கண்ணாடி..

கண்ணாடி..


போதும்.!!!

இந்நேரம் அந்த தந்தை அழுதிருக்கக்கூடும். அவரின் விருப்பமாகவே அந்த பதிவு வெளிவந்தது. நம்முடைய ஆறுதல்கள், பிரார்த்தனைகள் அவருக்கும், குடும்பத்தாருக்கும் அமைதியை தரட்டும். அடுத்தவர் சுக துக்கங்களும் நமக்கான பாடம்தான். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நெகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி.

எல்லாம் கடந்து போகும்'..
எத்தனையோ தாய்களின்
சூல் கொண்ட சூட்சுமத்தை
டி என் ஏ வாய்ப்பாடுகளில்
வம்ச முகவரிகள் தேடும்
விளக்கங்கள் கேட்ட என்
பிள்ளை,

ஒரே மதம், ஒன்றே இனம்
எனில் முகமும், ரேகைகளும்
வேறு வேறானதேன், உன்னிலிருந்து
நானெனினும்

நானும் நீயும் ஒன்றா
என்ற கேள்விகளில்
ஏதும் சொல்லாமல்
நான்
மெளனமாய் திரும்பிய
பக்கத்தில் ஆளுயர நிலைக்கண்ணாடி
எப்போதும் போல்
இருப்பதை இருப்பதாகவே
காட்டிக்கொண்டிருந்தது..


.26 comments: