பலா பட்டறை: 'அது' எது?

'அது' எது?'அது' நானாக வரவைத்துகொண்டது 'அது' என்ன செய்யப்போகிறது என்று தெரிந்திருந்தும், தெளிவாய் சொல்லப்பட்டிருந்தும் நானே 'அதை' தெரிவு செய்தேன், விதி வலிது. நான் அதை பற்றி கவலைப்படவில்லை, 'அது' என்னை கூட்டிச்சென்ற இடத்தில் கலவையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் சொல்லப்பட்டிருந்ததாகவே இருந்தது வேறு வேறு த்வனியில் இருந்தாலும் நிகழ்வு ஒன்றாகவே இருந்தது. 'அதை' பார்த்தேன் எந்தவித சலனமும் இன்றி அப்படியே இருந்தது. 

நிகழ்வுகளில் நான் கலக்க முடியாது, கருத்துரைக்க முடியாது, ஓங்கி குரலெழுப்ப முடியாது 'அது' ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது. சத்தியத்தை மீற நினைத்தாலும் என்னால் முடியவில்லை. கண்கள் இருண்டது பசி எடுத்தது 'அது'வும் சத்தியத்தை மீறவில்லை கரிக்கும் ஒன்றை தின்னக்கொடுத்தது. மறுப்பேதும் சொல்லாமல் புசிக்கத்துவங்கினேன். 

ண் முன்னே பார்த்த நிகழ்வுகளை சகிக்க முடியவில்லை, சில என்னை வேதனை படுத்தியது. வாளெடுத்து வரவில்லை. வந்திருந்தாலும் 'அது' பெற்ற சத்தியம் என்னை ஏதும் செய்ய விடாது. விதியை வெல்ல முடியாது என்னை நோக முடிவு செய்தேன்.    

காரண காரியங்களுடன் எனக்கு விளக்கப்பட்டிருந்தும் ஏன் இங்கு வந்தேன்? 'அதை' கேட்கலாம் என்றால் என்னால் முடியவில்லை. 'அது' எனக்கான அடையாளத்துடன் நானாகவே இருந்தது. இது இதற்கு முன்பும் எனக்கு நடந்திருக்கிறது அப்போதும் 'அது' என்னோடு இருந்திருக்கிறது ஆனாலும் நிகழ்வுகள் வேறு வேறானதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் எதுவும் செய்ய இயலாது வெறுமனே எனக்கு முன்னால் நடப்பதை ஒரு ஜடமாக பார்த்துகொண்டிருந்தேன். 

வாளிப்பான ஒருவன் சவலை பிள்ளையை தோளில் கொண்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட என் வண்டி எனக்காய் தயாராய் இருந்தது. நான் கண்ட நிகழ்வுகளோடு 'அது'வும் கூடவே இப்போதும் என்னூடே வந்து கொண்டிருந்தது. 

'அது' கூட்டிச்சென்ற நிகழ்வில் சிலர் காரித்துப்பினார்கள், என்னைப் பார்த்தா? அப்படித்தான் தெரிந்தது அல்லது 'அது' அப்படி என்னை நினைக்க வைத்திருக்கலாம், 'அதனை' கேட்கலாம் என்றால் 'அதனுடன்' என்னால் தர்கிக்க முடியவில்லை! 'அது' வெவ்வேறு பெயர்களுடன் எப்போதும் என்னை அழைத்துக்கொண்டே அல்லது நான் அழைத்ததாய் இருக்கிறது. இதோ இப்போதும் இதனை அசை போடும்போதும் 'அது' சாதுவாய் என்னோடே இருக்கிறது. 

என்ன செய்ய?                              

'அதனுடன்'  போகும்போது மனது சமநிலையாய் இருந்தது. வரும்போது அப்படி இல்லை. ஆனால் போகும்போதும் வரும்போதும் 'அது' என்னமோ ஒரே நிலையிலேயே இருந்தது.     

வடிவங்கள் வேறாய் இருந்தாலும் உங்களுக்கும் 'அது' தெரிந்ததுதான் 'அது' எது?

 கொஞ்சம் சொல்லுங்களேன்..! 


பி.கு. 

து இன்றைக்கு எனக்கு நடந்தது! தயவு செய்து கருத்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் நாளை 'அதை' படமாய் காண்பிப்பதா? வேண்டாமா? என முடிவு செய்ய இயலும். நன்றி!      

38 comments: