நர்சிம் அன்புடன்(?) தொடரச் சொன்னதால் இந்தப் பதிவு.
இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------
1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) : ஸ்ரீகாந்த், ஹேய்டன், கங்குலி , வால்ஷ், ஸ்டீவ் வாக், சேவாக், மித்தாலி ராஜ்,.
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? : அஃப்ரிடி, (திறமையை வீணாக்குவதால்)
3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : பாட்ரிக் பாட்டர்சன், ஆலன் டொனால்ட், ப்ரெட் லீ, .
4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : நெஹ்ரா, சிரீசாந்த், ஸ்டூவர்ட் ப்ராட்
(இப்படியா ங்கே ன்னு ஆறு சிக்சர் அடிக்க விடுவ? )
5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்ன், முரளிதரன்
6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வெங்கடேஷ் பிரசாத்..
7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : எம்.எல்.ஜெய்சிம்ஹா, டக்ளஸ் மெரில்லியர்,
8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : நாந்தான்.,
9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, ஜெயசூர்யா, சயீத் அன்வர், கில்கிறிஸ்ட், மைக்கெல் பெவன்
10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : சடகோபன் ரமேஷ்
11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ்
12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி
13. பிடித்த ஆல்ரவுண்டர் : கபில்தேவ், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,
.
14. பிடித்த நடுவர் : ஷெப்பர்ட். பில்லி பொவ்டன், சைமன் டாஃபில்
15. பிடிக்காத நடுவர் : நம்மாளுதாங்க, இலங்கைக்கு எதிரா கோவால ஜடேஜா ஆடும்போது அவுட்னு விரல் தூக்கி ’டக்குனு’ தொப்பிலயே தலை சொறிஞ்சி இல்லைன்னுட்டார், பேர் நினைவில்லை.
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ,டோனிகிரேக், பேரி ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர்
17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : அருண்லால் (கரி நாக்கு:), மணீந்தர் சிங், (எல்லா அச்சி, கிலாடி சுந்தர் ஷாட்’ டும்)
18. பிடித்த அணி : இந்தியா, ஆஸ்திரேலியா
19. பிடிக்காத அணி : சீனா.
20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- பிடித்த அணிகள்தான்.
21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- எதுவுமில்லை.
22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, கபில்தேவ், தோனி (மச்சம்யா), ஸ்மித் .
23. பிடிக்காத அணித்தலைவர் : டிராவிட்
24. பிடித்த போட்டி வகை :டெஸ்ட் மேட்ச்
25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர்
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : நானும் சேவாக்கும்.:)
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : சேவாக் .
28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : பிராட்மென்,கபில்தேவ்.. ஸ்டீவ்வாக்.
நன்றி நர்சிம்.:-)
தொடர அழைக்க..
பிரபாகர் (வாழ்க்கை வாழ்வதற்கே)
மீன்துள்ளியான்,
நிலா ரசிகன்.
வேறு யாருக்காவது விருப்பமிருப்பின் அவர்களும்..:)
.
48 comments:
அடிக்காதீங்க சச்சின் தான் GOD..:)
//6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வெங்கடேஷ் பிரசாத்.. //
என்னது, இவரு சுழல்பந்துவீச்சாளரா? எப்படிங்க? :)
பலதும் நம்ம சாய்ஸாதான் இருக்கு
// (இப்படியா ங்கே ன்னு ஆறு சிக்சர் அடிக்க விடுவ? )//
:)
நர்சிம்மோட அன்புல அப்படியென்னங்க உங்களுக்கு சந்தேகம்..?
:-)
சுழல்பந்து,துடுப்பாட்டம், களத்தடுப்பெல்லாம் ஓ.கே..!
இந்த ஆல்ரவுண்டருக்கு என்னண்ணே சொல்வாய்ங்கே..?
”எல்லாசுற்றாளர்”ன்னா..???
நடத்துங்க சேம் பிளட்! நர்சிம் இடுகையிட்ட கொஞ்ச நேரத்துலயே நீங்களுமா? உங்க வேகம் பிரம்மிக்க வெக்குது!
பிரபாகர்.
//பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின்*//
கங்குலியும்- நானும்னு மாத்திருங்க.... ஆனாலும் உங்களுக்கு ஓட்டு கிடையாது... உங்க மேல உங்களுக்கு இவ்ளோ கோவமா?
@வரதராஜலு.. ஓஓஓஒடிவந்து ஸ்லோவா லெக் ஸ்பின் போடுவாருங்க அதனாலதான்..::))
@ராஜு.. அது இது படிச்சதுக்கப்புறம் ஏற்படறது..:)
ஆல்ரவுண்டருக்கு முழுமை வட்டாளர்//”)
@பிரபா..
சச்சின் உங்க தம்பியாமில்ல..:)
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அடிக்காதீங்க சச்சின் தான் GOD..:)//
அடிக்கலாம்னு தான் வந்தேன், தப்பிச்சிட்டீங்க
//@பிரபா..
சச்சின் உங்க தம்பியாமில்ல..:)//
நன்றிங்க, (அவர் எனக்கு அண்ணன் முறை வேணும்)
ஒல்ட் மேன்...!
//@வரதராஜலு.. ஓஓஓஒடிவந்து ஸ்லோவா லெக் ஸ்பின் போடுவாருங்க அதனாலதான்..::))//
ரொம்பதான் குசும்பு
:)
\\சங்கர் said...
//@பிரபா..சச்சின் உங்க தம்பியாமில்ல..:)//
நன்றிங்க, (அவர் எனக்கு அண்ணன் முறை வேணும்)\\
ஏப்பா நீங்கதான் சச்சினோட தம்பியா..?
சச்சின் எனக்கும் கூட ஒறவுமொறதேன்..!
எப்பிடின்னு கேட்டீங்கன்னா,
எங்க அண்ணன் தங்ராஸோட சித்தப்பா மக இருக்காள, அதான்பா திருச்சில கட்டிக் குடுத்துருக்கே, அவ மாப்பிள்ளயோட தங்கச்சிக்கு, நம்ம நத்தம் நாகராஜோட பையனுக்கு முடிச்சிருக்கு.அந்த பையனோட பெரியப்பா பையன் பவுன் ராஜு கூட கோவில் பட்டில இருக்கானே, அந்த பையனுக்கு மாமியாரோட தங்கச்சி நம்ம சச்சினுக்கு சொந்தம்.அந்த வகையில் எனக்கு சொந்தம். சச்சினு பையன் பொண்டாட்டிக்கு தம்பி பொண்டாட்டியோட அண்ணன் பையன் ஒருத்தன் அமெரிக்காவில இருக்கான் தெரியுமா..?
தெரியாட்டி சொல்லுங்க மறுக்கா வந்து சொல்றேன்.
அழைப்புக்கு நன்றி நண்பா.
வெங்கடேஷ் பிரசாத் குறும்பு ரசித்தேன் :)
@சங்கர்..& ராஜு.. முடியல..:))
@வரதராஜலு..:))
@ நிலா.. நன்றி நிலா நீங்களும், ஜ்.சுந்தரும் Buzz இல் டெஸ்ட் பார்த்ததை வைத்தே கூப்பிட்டேன்..:)
@வசந்த்..: ஓல்டஸ்ட்..:)
//மித்தாலி ராஜ்,.// எனக்கும் கூட ரொம்பப் புடிக்குங்க ! 2003 வேல்டு கப்புல என்னா அடி மறக்க முடியுமா ?
//அஃப்ரிடி, (திறமையை வீணாக்குவதால்)/// இருந்தா தான வேஸ்ட் பண்ண
//பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வெங்கடேஷ் பிரசாத்.. /// நெசந்தான் அந்தாள பாஸ்ட் பௌலர்னு சொன்னா பந்துக்கு கேவலம்
// தோனி (மச்சம்யா),// ம்க்கும்!
//பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர்
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : நானும் சேவாக்கும்.:)// துடுப்பாட்டறதுன்னா என்ன தலைவா ? எதுனா டபுள் மீனிங்கா ?
@♠ ராஜு ♠
ரொம்ப நெருங்கிட்டீங்களே, அஞ்சலியோட ரெண்டுவிட்ட பெரியப்பாவோட மாமியாரின் சின்ன நாத்தனார் மச்சினன் ராஜேந்திரன் இருக்காருல்லா, அவரோட மாமனார் தம்பி விஜயராகவன் என் பெரியப்பாவோட சகலை ரமேஷுக்கு மாப்ளை முறை வேணும்
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
@சங்கர்..& ராஜு.. முடியல..:))//
இப்போ முடியுதா :))
//பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வெங்கடேஷ் பிரசாத்.. //
சரியான நக்கல் போங்க
@சங்கர்
அட, நம்ம ரமேஷோட சகலையா நீங்க..?
சின்னவயசுல, கடலைமிட்டாய் வாங்கனுமுன்னு, மூக்கு ஒழுகிக்கிட்டு ஒத்த கையில டவுசரப் புடிச்சுக்கிட்டு, எங்க மச்சான் பின்னாடியே சுத்திட்டுருப்பாப்ல.அவரோட கொழுந்தியா மலர நம்ம சித்தநாதனுக்கு முடிச்சு வச்சு பெங்களூர்ல இருக்காங்க தெரியுமா..?
அந்த சித்தநாதன் எங்க பெரிய மாமா பையன்தான்.போன தடவை ஊருக்கு போயிருந்தப்போக்கூட,ஐயங்கார் பேக்கரில கேக் வாங்கிட்டு போயிருந்தேன்.
அப்ப,ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டோம்ன்னு சொல்லுங்க..!
என்னய்யா யாருமே என்னை கூப்பிட மாட்றீங்க :((
கார்க்கி சாரி,,
வாங்க ஆட்டத்துக்கு:)) இப்ப கூப்பிட்டுட்டேன்..:))
எல்லாம் சரி தான். ஆனா வாழ்நாள் சாதனையாளர் வரிசையில் கபிலா.. அதான் நெருடல். 431 விக்கெட் எடுக்க எத்தனை டெஸ்டை விரயம் பண்ணினார்.
//10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : சடகோபன் ரமேஷ்//
உங்களுக்கு தெரிஞ்ச மாதிரியே டீம் செலக்ட்டருங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்போல...
கிரிக்கெட்....எனக்கும் இதுக்கும் கொஞ்சம் தூரம்
அதிகம்....சோ நோ கமெண்ட்ஸ்...
மிதாலி ராஜுக்கு மட்டும் கலர் குடுத்துருகீங்க. வீட்டுல இதை பார்த்தாங்களா :))
நாராயணா இந்த ராஜு ரவுசு தாங்க முடியல நாராயணா
wow... cricketttttaaaaaaaaaaaa... =)) already escaped... =))
கிரிக்கெட்னா என்னங்ணா? சாரி! என்னங்கப்பா? இந்த டி.வில போடுவாங்களே.ஆம்பிளங்கல்லாம் டிவி முன்னாடியே உக்காந்திருப்பாங்களே (முக்கியமான வேலையக்கூடத் தள்ளி வச்சிட்டு)அதா? ஹி..ஹி...
கிரிக்கெட்ல எப்போ பந்தயம் கட்டுனாங்கன்னு தெரிஞ்சிதோ அப்பவே பார்ப்பதை விட்டுட்டேன் அண்ணா.. இப்போ வரை பார்ப்பது இல்லை..
நெஜமாலுமே மேட்ச் இங்க தாம்பா நடக்குது.. :)
ஆட்டைய தொடருங்கப்போய்..
@ ராஜன்: வாங்க..:) நன்றி.:)
@சங்கர்: இப்பயும் முடியல (உன்ன நேர்ல வெச்சிக்கிறேன்:-)
@மீன்ஸ்: நன்றி
@தமிழ் உதயம்: இருந்தாலும் அவர் ஹீரோதாங்க..:) நன்றி.:)
@க.பாலாசி : அதே..:)
@ஜெட்லி: அண்ணே ரைட்டு..:)
@மோகன் குமார்..: ஹி ஹி..:)
@ப்ரியா: ரைட்டு..:)
@க.நா.சாந்தி லெட்சுமணன்: அதானே ஒரு சீரியல் கூட பாக்கவிடாம நல்லா கேளுங்க..ஸிஸ்டர்.:)
@திவ்யாஹரி: கரண்ட் செலவு மிச்சம்மா..:))
@மணிகண்டன்: சரியா சொன்னீங்க..:))
@ஜெரி : வாங்க.. ரைட்டு..:)
உங்கள் ரசனையை ரசித்தேன்...
//அந்த வகையில் எனக்கு சொந்தம். சச்சினு பையன் பொண்டாட்டிக்கு தம்பி பொண்டாட்டியோட அண்ணன் பையன் ஒருத்தன் அமெரிக்காவில இருக்கான் தெரியுமா..?//
தெரியும்ங்க அவம்பேரு முகிலன், டெய்லி கண்ணாடியில பாப்பேன்.. :)
// தமிழ் உதயம் said...
எல்லாம் சரி தான். ஆனா வாழ்நாள் சாதனையாளர் வரிசையில் கபிலா.. அதான் நெருடல். 431 விக்கெட் எடுக்க எத்தனை டெஸ்டை விரயம் பண்ணினார்.
//
தமிழ் உதயம் - தனியா சிறந்த வேகப்பந்து வீச்சாளாரா யாருமே இருக்க முடியாது. நல்ல ஜோடி வேணும். இந்தப்பக்கம் ஒரு ஆள் ப்ரஸ்ஸர் குடுக்க அந்தப்பக்கம் ரன் அள்ளிக் குடுத்துக்கிட்டிருந்தா என்ன செய்யறது? கபிலுக்கு பின்னாட்கள்ல(இதை பின்னிக்கு அப்புறமான நாட்கள்னு கூட எடுத்துக்கலாம்) வேகப்பந்து வீச்சுக்கு நல்ல துணையா யாரு இருந்தா சொல்லுங்க?
\\சங்கர் said...
//@பிரபா..சச்சின் உங்க தம்பியாமில்ல..:)//
நன்றிங்க, (அவர் எனக்கு அண்ணன் முறை வேணும்)\\
ஏப்பா நீங்கதான் சச்சினோட தம்பியா..?
சச்சின் எனக்கும் கூட ஒறவுமொறதேன்..!
எப்பிடின்னு கேட்டீங்கன்னா,
எங்க அண்ணன் தங்ராஸோட சித்தப்பா மக இருக்காள, அதான்பா திருச்சில கட்டிக் குடுத்துருக்கே, அவ மாப்பிள்ளயோட தங்கச்சிக்கு, நம்ம நத்தம் நாகராஜோட பையனுக்கு முடிச்சிருக்கு.அந்த பையனோட பெரியப்பா பையன் பவுன் ராஜு கூட கோவில் பட்டில இருக்கானே, அந்த பையனுக்கு மாமியாரோட தங்கச்சி நம்ம சச்சினுக்கு சொந்தம்.அந்த வகையில் எனக்கு சொந்தம். சச்சினு பையன் பொண்டாட்டிக்கு தம்பி பொண்டாட்டியோட அண்ணன் பையன் ஒருத்தன் அமெரிக்காவில இருக்கான் தெரியுமா..?
தெரியாட்டி சொல்லுங்க மறுக்கா வந்து சொல்றேன்."
சிரிச்சு சிரிச்சு முடியல.... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே :) :) :) :) :) :) :) :) :)
// பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : நானும் சேவாக்கும்.:)//
இது சூப்பர்....
அந்த் அம்பயர் இவுருதாங்கோ.
//UMPIRING TOUCHES A NEW LOW: Professor R C Sharma made complete mockery of umpiring with his inconsistency and incompetency. Sharma took the cake when he lifted his index finger to signal Jadeja caught behind off Sajeewa. But on seeing the batsman rooted to the crease, Sharma took the raised finger further up to scratch his hat. The Lankans were understandably aghast//
http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19971229/36350963.html
ஆஹா தலைவரே.. கண்டுபிடிச்சி கொடுத்ததுக்கு மிக்க நன்றி..:)) ரணதுங்க கை வேற குடுத்துட்டு போவார் ஜடேஜாவுக்கு...கொடுமை.
களத்துல நல்லா இறங்கி ஆடி இருக்கீங்க.
சீரியலா?அதுக்கு
நா தற்கொலை பண்ணிக்கலாம்ப்பா! நிஜமா தனியார் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.
உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லை போல இருக்கு
தமிழ்மணத்திலே தலைப்பை காக்கா தூக்கிட்டு போயிட்டதா?
6,15 இந்த இரண்டும் செம நக்கல், ஜடேயா அர்ஜுனா கைகொடுக்கும்போது சிரிப்பார் பாருங்க ஒரு சிரிப்பு வெங்கிக்கு தூக்குவாரி போகும், இதுதான் இறுதியாக இலங்கை இந்தியா வெள்ளை நிற உடையோடு ஆடிய ஒருநாள் போட்டிதொடர் என்று நினைக்கிறேன், என்ன சொன்னாலும் வெங்கடேஷ் பிரசாத் சனத், இஜாஸ் தவிர மிகுதி அனைவருக்கும் சவாலான பந்துவீச்சாளர்:-)
எனக்கு ட்ராவிட்தான் பிடிக்கும் சங்கர்..
Post a Comment